ஹே கோவிந்தா

ஹே கோவிந்தா – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரரின் பஜகோவிந்தம்

29 .गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम् ।
नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥ २७॥

geyaM giitaa naama sahasraM dhyeyaM shriipati ruupamajasram .
neyaM sajjana saNge chittaM deyaM diinajanaaya cha vittam

கேயம் கீதா நாமசஹஸ்ரம் தேயம் ஸ்ரீபதி ரூமஜஸ்ரம்
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம் தேயம் தீன ஜனாயச வித்தம்

Regularly recite from the Gita, meditate on Vishnu in your heart, and chant His thousand glories. Take delight to be with
the noble and the holy. Distribute your wealth in charity to the poor and the needy.

இதை இயற்றிய சிஷ்யர் சுமதிரர்.
விஷ்ணு சஹஸ்ரநாம பாரயணம் கேட்பதிலும், அதை கோஷ்டியாக கோவில்களில் உச்சரிப்பதிலும் பங்குகொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்கிறது. ஒரு விஷயம் புரிந்துகொள்வோம். ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் நாமமும் தெரியவில்லையே என்று ஏங்கவேண்டாம். ஆயிரம் நாமங்களையும் ஒரு தரம் சொல்வதைப் போலவே ஒரே நாமத்தை ஆயிரம் தடவையும் சொல்லலாம். அதே ஆனந்தம், அதே பலன் தான். சுமத்ரர் இந்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார்:

”அப்பா, நல்ல பையனாக நீ தினமும் விடாமல் கீதையைப் படி, முக்கியமாக விஷ்ணுவை மனதில் த்யானம் செய். அவரை இதயத்தில் கட்டிப்போடு. விஷ்ணு சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய். கஷடமே இல்லை. நிறைய தடவை கேட்டுக் கொண்டே வந்தால் தங்கு தடங்கல் இன்றி மனதில் பதிந்து விடக்கூடிய அற்புத வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம். அதுவும் MS சுப்புலக்ஷ்மி அம்மா ஸ்பஷ்டமாக ஸ்லோகம் சொல்வதற்கான இனிய ராகத்தோடு உச்சரித்திருக்கிறார். கேட்டாலே மனதில் இடம் பிடிக்கிறது.

பரந்த மனது, பரிசுத்த மனது வாய்த்தோரைச் சேர். இதற்கு பெயர் தான் சத் சங்கம். செல்வத்தை தேவையா னோர்க்கும் ஏழைகளுக்கும் வினியோகி. தானம் செய். இதனால் உனக்கு என்ன ஆகும் என்று சொல்ல வில்லையே என்று யோசிக்கிறாயா? நீயே விஷ்ணு ஆனபிறகு வேறு என்ன சொல்லத் தேவை? கோவிந்த நாம பஜனையிலிருந்து உயரே போக ஆரம்பிப்போம். ஆதார ஸ்ருதியாக நீ சொல்லவேண்டியது ” ஹே கோவிந்தா! என்ற ஒன்றையே தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *