BAJAGOVINDAM SLOKAS 31-32

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
(இந்த பதிவோடு, ஸ்ரீ ஆதி சங்கரரின்/ அவர் சிஷ்யர் களின் ”பஜகோவிந்தம் ”ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. இனி அடுத்து இது ஒரு சிறிய புத்தகமாக இலவசமாக உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளை சேரவேண்டியது உங்கள் பொறுப்பு. ஒருவரோ, பலரோ, சிலரோ ஒன்று சேர்ந்து 1000 பிரதிகள் அச்சடிக்க தேவையான அச்சுக் கூலியை வசூலித்து இதை விலை இல்லாத இலவச புத்தகமாக்கி பரிசளிக்க உத்தேசம். இது போல் தான் ஆதித்ய ஹ்ருதயம் ( ”சூர்யா இதோ உனக்கு நமஸ்காரம்”) அச்சேறி விட்டது. இன்னும் சில நாட்களில் புத்தகம் 1000 பிரதிகள் வந்ததும் உங்கள் மூலமாக விநியோகிக்கப்படும்.) ஒரு பிரதி கூட வீணாக்கக்கூடாது என்பது தான் வேண்டுகோள்.
31. भजगोविन्दं भजगोविन्दं गोविन्दं भजमूढमते । नामस्मरणादन्यमुपायं नहि पश्यामो भवतरणे ॥
bhajagovindaM bhajagovindaM govindaM bhajamuuDhamate naamasmaraNaadanyamupaayaM nahi pashyaamo bhavataraNe ..
பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே, நாமஸ்மரணாதன்ய முபாயம் நஹி பஸ்யாமோ பவதரணே
”ஏ முட்டாளே! நீ எதில் சிக்கிக்கொண்டிருக்கிறாய் என்பது கூட தெரியாமல் அல்லல்பட்டு உழல்பவனே! இந்த மீளமுடியாத சம்சார சாகரத்தில் மூழ்கிக் கொண்டு தவிக்கிறாயே உனக்கு இருக்கும் ஒரே வழி இதிலிருந்து தப்ப, அதோ அந்த நீல நிற புல்லாங்குழல் காரனை பிடித்துக் கொள்வது தான்.
”ஹே கோவிந்தா, ஹே கோவிந்தா ஹே கோவிந்தா’ என்று அவன் பேரைச் சொன்னால் போதும் அவன் உன்னைக் கரை சேர்ப்பான். நீ கூப்பிட மாட்டாயா என்று தானே காத்துக் கொண்டிருக்கிறான்.
32 गुरुचरणाम्बुज निर्भर भक्तः संसारादचिराद्भव मुक्तः । सेन्द्रियमानस नियमादेवं द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥
gurucharaNaambuja nirbhara bhakataH saMsaaraadachiraadbhava muktaH . sendriyamaanasa niyamaadevaM drakshyasi nija hR^idayasthaM devam. ..
குரு சரணாம்புஜ நிற்பர பக்த: சம்சாரா தச்சிராத் பவ முக்தா ஸேந்த்ரிய மானச நியமாதேவம் திராக்ஷ்யசி நிஜ ஹ்ரித யஸ்தம் தேவம்
இத்தனை ஸ்லோகங்களை சொல்லியதன் பலன் இதோ.
ஆதி சங்கரரும் அவரது அருமைச் சீடர்களும் கை நிறைய மனம் நிறைய வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கிக் கூறியதன் பலனாக மனம் தெளிவடைந்து விட்டது.
குருவின் தாமரைத் திருவடிகளில் பணிந்து வணங்கிய பக்த கோடிகளே! உங்கள் மனதில் உள்ளே குரு வழி காட்ட இருக்கும்போது இந்த சம்சார சாகரத்தை பற்றிய கவலை வேண்டாம். அவர் தான் வழி காட்டி விட்டாரே. கோவிந்தனை, அவன் நாமத்தை, துணையாக கொண்டு சுலபமாக கடக்க முடியுமே. இந்திரியங்களின் ஈர்ப்புக்கு அடிபணியாமல், மனம் திடப்பட வழி கிடைத்து விட்டது. பவசாகரம் இனி ஒரு சிறிய குட்டை. எளிதில் அதை டபக் என்று தாண்டமுடியும். புதிதாக ஏதாவது சிந்தனை செய்து சொல்ல நான் சங்கரர் இல்லை. சங்கரர் சொன்ன சில அருமையான எளிய சிந்தனைகள் தான் மேலே சொன்னவை எல்லாமே.
பஜகோவிந்தத்தை ரசித்து அர்த்தம் தெரிந்து சொல்லும் போது, பாடும்போது, ஒரு புதிய சக்தி, சந்தோஷம் மனம் நிரம்பி வழிகிறது. அதை உங்கள் பக்கம் அனுப்புவது பலருக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் போது மேலும் இது போல் நிறைய இருக்கிறதே அதை யெல்லாம் கூட சேர்ந்து அனுபவிக்கலாமே. காசா பணமா என்ற எண்ணம் கூடுகிறது. முடிந்தவரை நிறைய எழுதுகிறேன்.
கிருஷ்ணன் சொல்கிறதை கொஞ்சம் கேளுங்களேன்:
”கண்ணாடி பளிச்சென்று இருந்தால் தானே முகம் தெரியும். மனதை அதுபோல் சுத்தமாக அழுக்குகளை நீக்கி விட்டுப் பார். ஞானம் தெரியும். நான் எந்த மாறு பாடும் இல்லாதவன். எனக்கு உருவமே கிடையாதே. எனக்கு பழியோ பாவமோ, அழிவோ இல்லை. நீ நினைக்கிறபடி நான் உன் உடல் அல்ல, உடல் தான் அழிவுள்ளதாயிற்றே. உன்னைக் கேட்காமலேயே நீ போற்றி வளர்த்த உடலை யாரோ ஒருநாள் கொளுத்தி விடுவார்களே. ”
இது தான் சதா காலமும் நினைவில் இருக்கவேண்டிய ஆத்மா பற்றிய அறிவு ஞானம் எல்லாமே.”
”எப்படி இருட்டில் ஒரு கயிறு காற்றில் அசையும்போது அது பாம்பு நகர்வதாக தோன்றி உடல் வியர்த்து பயம் கொள்கிறோமோ, எப்படி ஒரு சிப்பி பள பளவென்று வெள்ளியாக தோன்றுகிறதோ, தூரத்தில் ஒரு கான்க்ரீட் போஸ்ட் பேயாக தோன்றி பயமுறுத்துகிறதோ அது போலதான் அறியாதவனுக்கு ஆத்மா உடலாக தெரிகி றது.”
”விஷ்ணு ஒருவரே உன்னுள், என்னுள், எவற்றிலும் உள்ளவர். உன் கோபமோ, பொறுமை இன்மையோ, பலனற்றவை. உன்னை எவரிலும் எதிலும் காண் . பேதம் உன்னை விட்டு அகலும் ”
”எனக்கு மரணமும் இல்லை, பயமும் இல்லை. ஜாதி வேறுபாடு என்னை நெருங்காது. தாய் தந்தை உறவெல் லாம் இல்லை. எனக்கு பிறப்பே இல்லையே. நண்பனோ பகையோ யாருமில்லை. எனக்கு குருவும் கிடையாது சிஷ்யனும் இல்லை. நான் சாஸ்வதன், ஆனந்தன், சகலமும். ”
”கோவிந்தா, நான் சரியான பாதையில் தானே செல்கி றேன்” என்று கேட்டு பதிலுக்கு திரும்பி உள்ளே பார்த் தால் ”அட ! இந்த கோவிந்தன் எப்போது உள்ளே போய் என் மனதில் ஸ்வஸ்தமாக அமர்ந்தான்? ” என்று அதிச யிப் பீர்கள்.
குருவின் மகிமையைப்பற்றி அதிகம் கூறவேண்டியது இல்லை. நமது வேதமானது ‘குருவை தெய்வமாகக் கொள் என்று உபதேசித்திருக்கிறது. குருவே பரப்ரும்ம ஸ்வரூபம். ஆசார்ய பக்தி. ஈச்வரபக்தியைவிட அதிக மானது. குருபக்தியிருந்தால் மனது தானாக சாந்தத்தை அடையும். மனதானது குருபக்தியில் நனைந்தால், உடனே பலன் உண்டாகும். குருமூலமாகத் தான் சிவ ஸ்வரூபத்தை அறிந்து கொள்ள வேண்டும். சிவனை விட குகு சிரேஷ்டமானவர். குருவுக்கு அப்புறம் தான் தெய்வம். (மாதா, பிதா, குரு தெய்வம்)
பஜ கோவிந்தத்தை ரசித்து அர்த்தம் தெரிந்து சொல் லும்போது, பாடும்போது, ஒரு புதிய சக்தி, ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் மனம் நிரம்பி வழிகிறது. மேலும் இது போல் நிறைய விஷயங்கள் அநேகம் இருக்கிறதே அதையெல்லாம் கூட சேர்ந்து அனுபவிக் கலாமே. காசா பணமா என்ற எண்ணம் கூடுகிறது. முடிந்தவரை நிறைய எழுதுகிறேன். சிவனுக்கு அப சாரம் செய்தால், அந்த அபசாரத்தை குரு மன்னிப்பார். ஆனால் குருவுக்குச் செய்த அபசாரத்தை (சிவன் உள்பட) யாரும் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் எந்தக் காரியத்தைச் செய்தாலும் “ஸ்ரீ குருப்யோ நம:” என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். அதனாலே தான் ஸ்ரீ ருத்ரத்தில் ”நம: சங்கராய ச” என்று குரு வந்தனம் சொல்லி, அப்புறம் பஞ்சாக்ஷரம் சொல்லப்பட்டு இருக் கிறது. நம்முடைய மனது சுத்தமாக இருப்ப தற்காக, நித்ய சிரேயஸை அடைவதற்காக, பகவத் பாதத்தை, அதாவது, ஆசார்யரூபமான சரணத்தை , தியா னம் பண்ணவேண்டும். மனது அதற்குத் தான் பகவானால் கொடுக்கப் பட்டுள்ளது.
கோவிந்த பகவத்பாதர்கள் ஸ்ரீ ஆதி ஆசார்யர்களு டைய குரு. அவர் தன்னுடைய குருவைத் தியானம் செய்யும் பொருட்டு கொடுத்த தலைப்பு தான் ”பஜ ”கோவிந் தம்”. மஹாவிஷ்ணுவின் பெயரும்குருவின் பெயரும் ஒன்றாக இருக்கிறது.
ஆதி சங்கரர் ஒரு அபூர்வ பிறவி. சிறிதுநேரமே பூத்து மணந்த அமர மலர். ஏழு வயசிலேயே சன்யாசி.
”சங்கரா, நீ பிறவி எடுத்த காரணம், செய்யவேண்டிய பணி அனைத்தும் அறிவுறுத்துகிறேன் கேள்.” என்று குரு கோவிந்த பாதர் சங்கரருக்கு உபதேசிக்கிறார். அவரை சங்கரர் குருவாக ஏற்று, அவரிடம் உபதேசங்கள் பெற்று, கல்வி கேள்விகளில் மேலும் சிறப்படைந்து அத்வைத வேதாந்தத்தை உலகில் பரப்ப காசி செல்கிறார். ஆதி சங்கரர் வாரணாசி எனும் காசி க்ஷேத்ரத்துக்கு நடந்து அங்கே பௌத்தர்களை வாதத்தில் வென்று அவர்களே அவரது சீடர்களாகின்றனர். சனந்தனர் என்கிற பத்ம பாதர் முதல் சிஷ்யராகிறார். அப்புறம் பத்ரிநாத், பிரயாகை, ஹரித்வார், ரிஷிகேஷ், ஸ்ரீநகர், ருத்ர பிரயாகை, நந்தபிரயாகை, காமரூபம், கோமுகி, என்று பல க்ஷேத்ரங்களை தரிசிக்கிறார். போகுமிடமெல்லாம் அத்வைதம் காட்டுத்தீயாக மக்களை சென்றடைகிறது. சகுண பிரம்ம வழிபாடு நிர்குண பிரம்மத்தை அடைய வைக்கும் என உபதேசிக்கிறார். பிரஸ்தான த்ரயம் எனப்படும் உபநிஷத், கீதை, பிரம்ம சூத்ரம் எல்லாவற் றுக்கும் உரை எழுதுகிறார். ஹிந்து சனாதன தர்மம் க்ஷீண தசையில் தக்க குருமார்கள் இன்றி தவித்துக் கொண்டிருந்தபோது ஜைனமும் பௌத்தமும் தலை தூக்கி நமது சமயத்தை மேலும் பலவீனமாக்கும் நேரம். வடக்கே அரசாண்ட மன்னர்கள் பௌத்தத்தை பின் பற்றி அதை பரவ உதவினார்கள். இந்த நிலையை மாற்ற பரமேஸ்வ ரனே காலடியில் சங்கரனாக அவதரித்தார் என்பது சங்கரர் சரித்திரம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1404

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *