OM NAMASIVAYA J K SIVAN

ஓம் நமசிவாய – நங்கநல்லூர் J K SIVAN

பல வருஷங்கள் நான் ஸ்ரீ ருத்ர பாராயணம் கோஷ்டியில் சேர்ந்து பல சிவாலயங்களுக்குச் சென்று மூலவர்
சந்நிதி எதிரே அமர்ந்து மஹா ருத்ரம், அதிருத்ரம் பாராயணம் செய்யும் ரித்விக்குகளில் ஒருவனாக இருந்து சிவன் மேல் பல பாடல்கள் பாடி இருக்கிறேன். உடம்பு முடியாமல், உட்கார முடியாமல் தனித்து விட்டேன்.

ஓம் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரமந்திரம் கிருஷ்ண யஜுர்வேதத்தில் வருகிறது. ஸ்ரீ ருத்ரம் ஸ்லோகங்களில் 8வது அனுவாகம் மிக முக்கியமானது. வேதகாலத்தில் உருவானது.தைத்ரீய ஸம்ஹிதையில் 4வது அத்யாயம் நம : என்று தொடர்ந்து வருவது நமகம். ‘சமே சமே” என்று முடிவது சமகம். 7வது அத்யாயம். நமகம் சமக மந்த்ரங்கள் கேட்க செவிக்கினிமையானவை. அர்த்தம் தெரிந்துகொண்டால் இன்னும் அற்புதமாக ரசிக்கலாம். மிக சக்தி வாய்ந்தது சிவ பஞ்சாக்ஷர மந்த்ரம். ருத்ரனாக இருக்கும்போது சக்தி ஸ்வரூபமாக ரௌத்ரம் கொண்டவன். சிவனாக இருக்கும்போது அமைதியான மௌன தியானக் கோல சாந்த ஸ்வரூபன்.
ருத்ரன் என்றால் பிரபஞ்ச வாழ்க்கையில் துக்கங்களை நாசம் செய்பவன் என்று ஒரு அர்த்தம். Rtam (dam)
மேலே சொன்ன முக்கியமான எட்டாவது அனுவாகம் பற்றி மட்டும் இப்போது அறிவோம்.

नमस्सोमाय च रुद्राय च । नमस्ताम्राय चारुणाय च । नमश्शङ्गाय च पशुपतये च । नम उग्राय च भीमाय च ।
नमो अग्रेवधाय च दूरेवधाय च । नमो हन्त्रे च हनीयसे च । नमो वृक्षेभ्यो हरिकेशेभ्यः । नमस्ताराय । नमश्शंभवे च मयोभवे च
नमश्शङ्कराय च मयस्कराय च ।नमश्शिवाय च शिवतराय च, नमस्तीर्थ्याय च कूल्याय च । नमः पार्याय चावार्याय च ।
नमः प्रतरणाय चोत्तरणाय च । नम आतार्याय चालाद्याय च । नमः शष्प्याय च फेन्याय च । नमस्सिकत्याय च प्रवाह्याय च ।

Namah somaya cha Rudraya cha, Namastamraya charunaya cha, Nama shangaya cha pashupataye cha,
Nama ugraya cha bhimaya cha, Namo Agrevadhaya cha dure vadhaya cha, Namo hantre cha haniyase cha Namo vrukshebhyo harikeshebhyo, Namastharaya Namah shambhave cha mayo bhave cha, Namah shankaraya cha mayaskaraya cha
Namah Shivaya cha shivataraya cha ,Nama stheerththayacha, kulyaya cha,Namah paryaya chavaryaya cha
Namah prataranaya chottaranaya cha, Nama ataryaya chaladyaya cha, Namah shaspyaya cha, phenyaya cha
Namah sikatya ya cha pravahyaya cha.

நம:॒ ஸோமா॑ய ச ரு॒த்³ராய॑ ச॒, நம॑ஸ்தா॒ம்ராய॑ சாரு॒ணாய॑ ச॒, நம:॑ ஶ॒ங்கா³ய॑ ச பஶு॒பத॑யே ச॒
நம॑ உ॒க்³ராய॑ ச பீ॒⁴மாய॑ ச॒, நமோ॑ அக்³ரேவ॒தா⁴ய॑ ச தூ³ரேவ॒தா⁴ய॑ ச॒.நமோ॑ ஹ॒ன்த்ரே ச॒ ஹனீ॑யஸே ச॒
நமோ॑ வ்ரு॒க்ஷேப்⁴யோ॒ ஹரி॑கேஶேப்⁴யோ॒,நம॑ஸ்தா॒ராய॒,நம॑ஶ்ஶ॒ம்ப⁴வே॑ ச மயோ॒ப⁴வே॑ ச॒
நம:॑ ஶங்க॒ராய॑ ச மயஸ்க॒ராய॑ ச॒,நம:॑ ஶி॒வாய॑ ச ஶி॒வத॑ராய ச॒,நம॒ஸ்தீர்த்²யா॑ய ச॒ கூல்யா॑ய ச॒
நம:॑ பா॒ர்யா॑ய சாவா॒ர்யா॑ய ச॒,நம:॑ ப்ர॒தர॑ணாய சோ॒த்தர॑ணாய ச॒,நம॑ ஆதா॒ர்யா॑ய சாலா॒த்³யா॑ய ச॒
நம:॒ ஶஷ்ப்யா॑ய ச॒ பே²ன்யா॑ய ச॒,நம:॑ ஸிக॒த்யா॑ய ச ப்ரவா॒ஹ்யா॑ய ச ॥ 8 ॥

பரமேஸ்வரா, நீ ஸம்ஸார துக்கக் கடலிலிருந்து எம்மை மீட்பவன். சாஷ்டாங்கமாக உன்னை வணங்குகிறேன் சகல ஜீவனிலும் ஒளியாய் மிளிர்பவன் நீ. ருத்ர ஸ்வரூபத்தில் துங்கங்களை,துயர்களைக் களைபவன் நீ. தாமிர வர்ணன் நீ. சூரியன் உன்னைப்போலவே விடிகாலை உதயத்தில் காண்கிறான். அப்புறம் சிவப்பாக உன்னைப் போல் மாறுகிறான். நீ தானே ஸூர்யனாகவும் ஒளியும் உயிர் சக்தியும், ஞானமும் தருபவன்.
சர்வ சக்தியும் கொண்ட உலக நாயகன் நீ. தேவாதி தேவனாக ரக்ஷிப்பவன். சர்வ சத்ரு விநாசகன்.
துஷ்டர்களுக்கு காலனாகவும், சிஷ்டர்களுக்கு போஷகனாகவும் அருள் பாலிப்பவன். பச்சைப் பசேலென்ற வில்வ தளம் அணிபவன். பார்ப்பதற்கு நீயே வில்வ விருக்ஷமாக காண்கிறாய். மலை போல் காணப்பட்டால் நீ வில்வாத்ரி. வேதத்தின் உருவமே. ருத்ரன் தான் ப்ரணவம் என்கிறது வேதம். சகல ஜீவன்களுக்கும் முக்தி அளிப்பவன். ப்ரபஞ்சமே இன்புற்றிருக்க காரணன். சங்கரன் என்றால் சுகம் அருள்பவன் என்று தானே அர்த்தம். வேதம் நடுவில் நடுநாயக தெய்வீக ஆபரணமாக காணப்படுவது ஸ்ரீ ருத்ரம் எனும் ருத்ரோபநிஷத்.
11 அணுவாகங்களை கொண்டது ஸ்ரீ ருத்ரம். அதில் எட்டாவது அனுவாகம் தான் நமசிவாய மந்திரத்தை நமக்கு அருள்வது. அதி முக்கியமானது.மேலே சொல்லப்பட்ட ருத்ர ஜபமந்திரம். இந்த மந்திரம் தான் கர்மபலனை நல்லதாக ஆக்கி அனுபவிக்க உதவுவது. ஞானாநுபவம் அளிப்பது. பச்சை பாவாடையாக கண்ணைப் பறிக்கும் பசும் புல்லாகவும், ஓய்வற்ற சமுத்திர வெண்ணிற நுரை கொண்ட அலையாகவும் காணப்படும் ருத்ரன் நீ. மணலாகவும், மலையாகவும் தோற்றம் அளிப்பவன். கோபிஷ்டனாகவும் பயங்கரமானவனாகவும் எதிரிகளுக்கு காட்சி தருபவன். எவ்வளவு தூரத்திலிருந்தாலும் உன்குரல் எமக்கு கேட்கும்.பக்தர்கள் குரல் உனக்கு கேட்கும். நதியாகவும் காற்றாகவும் சுகம் தருபவன். ஓம்காரமான ப்ரணவ மந்த்ர ஸ்வரூபன் நீ.

முடிவாக அதன் விவரமான உட்பொருளுக்குள் செல்லாமல் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம் எதைக் குறிக்கிறது என்று மட்டும் அறிவோம்.

ந – திரோத மலம்
ம – ஆணவ மலம்
சி – சிவமயம்
வா – திருவருள் சக்தி
ய – ஆன்மா

பஞ்சாக்ஷரம் பற்றி இன்னும் நிறைய சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1400

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *