SURUTTAPALLI EESWARAN J K SIVAN

பள்ளிகொண்ட ஈஸ்வரன் – நங்கநல்லூர் J K SIVAN

கால் நீட்டி தலைக்கு நெல்லை அளக்கும் மரக்காலை தலையணையாக கொண்டு படுத்திருக்கும் ஒரு ரங்கநாதரை தேவதானம் எனும் ஊரில் பொன்னேரி அருகே வயல் நடுவே அமைதியாக பார்த்திருக் கிறேன். அதே போல் இன்னொரு ஸ்ரீ ரங்கநாதரை க்யூவில் நின்று ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன். ஏன் பள்ளிக்கொண்டீரய்யா பாடி இருக்கிறேன். பள்ளி கொண்ட இன்னொருவரை அதிகம் பேர் அறியாதவ ர்கள். அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள சுருட்டப்பள்ளி எனும் சிற்றூரில் பள்ளிகொண்டீஸ்வரராக தரிசனம் தருகிறார். பரமேஸ்வரன் இப்படி படுத்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு கோவிலில் மட்டுமே. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றது சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம். இங்கே அதிகமான ர்த்திகள் குடும்ப சமேதராக காட்சி தருவது ஒரு அதிசயம். ஈஸ்வரன் ஸர்வ மங்களாம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்த ஸ்தல விசேஷம் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு கதை மீண்டும் இங்கே சொல்ல வேண் டும்.இந்திரன் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டான். திருமாலின் உதவியோடு தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமும் நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். இருபுறமும் பிடித்து இழுத்ததால், வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அஞ்சிய தேவர்க ளும், அசுரர்களும் கயிலை நாதனான சிவனிடம் தஞ்சம் அடைந்து அனைவரையும் காக்க வேண்டினர்.
ஈஸ்வரன் தன் அருகில் இருந்த சுந்தர மூர்த்தி நாயனா ரை அனுப்பி, விஷத்தை திரட்டி எடுத்து வரச் செய்தார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய மொத்த விஷத்தை யும் ஒன்று திரட்டி, ஒரு கரு நாவல்பழம் போல செய்து சிவபெருமானிடம் கொடுத்தார். பரமேஸ்வரன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் இறங்காமல் இருக்க, ஈசனின் கண்டத்தை (கழுத்தை) பிடித்தாள் உமாதேவி. இதனால் விஷம் கண்டத்திலேயே நின்று விட்டது. அதனால் தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்கிறோம்.
விஷத்தை அருந்திய பின், உமையவளுடன் சிவபெரு மான் கயிலாயம் புறப்பட்டார். வழியில் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் அவர் ஓரிடத்தில் ஓய்வெடுத்தார். பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க சயனித்தார். அந்த இடம் தான் சுருட்டப்பள்ளி என்று சொல்லப்படுகிறது.
பள்ளிகொண்டீஸ்வரருக்கு தனி சன்னிதி. இந்த ஆலயத்தில் தான், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங் களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
பள்ளிகொண்டீஸ்வரரை சுற்றி பிருகு முனிவர், பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கௌதமர், தும்புரு, வசிஷ்டர், விசுவாமித்திரர், வால்மீகி, தேவேந் திரனோடு விநாயகர், வள்ளி- தெய்வானையு டன் முருகன் ஆகியோரும் அருட்காட்சி புரிகிறார்கள்.
மூன்று நிலை ராஜகோபுரத்தின் எதிரே, சுமார் 5 அடி உயர பீடத்தில் 5 அடி உயர நந்தீஸ்வரர் ஜம்மென்று ராயஸமாக ஒரு உயரமான மேடையில் அமர்ந்துள்ளார். இந்த கோவிலில் துவாரபாலகர்கள் கிடையாது. அதற்கு பதிலாக சங்கநிதி வசுந்தராவுடனும், பத்மநிதி வசுமதி யுடனும் காட்சி தருகிறார்கள். உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் அன்னை மரகதாம்பிகை சிம்ம வாகினி யாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தில் வலது பக்கத்தில் கற்பக விருட்சம், இடது பக்கத்தில் காமதேனு.
மரகதாம்பிகை சன்னிதி முன்பாக சாளக்கிராம கணபதியும், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியரும், இடது புறம் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளும், வால்மீகி மகரிஷியின் சிலையும் உள்ளது. அதற்கு அடுத்து ஏகபாத திரிமூர்த்தி காட்சி அளிப்பது அரிய ஒன்றாகும். தான் ஒருவராய் படைத்தல், காத்தல் தொழில் புரிபவராக பிரம்மா, விஷ்ணுவை தன்னிடத்தே கொண்ட சிவவடிவமே ‘ஏகபாத திரிமூர்த்தி’ ஆவார். பிரம்மா நான்கு முகங்களுடன் அன்ன வாகனத்துடனும், சிவன் நந்தியுடனும், விஷ்ணு கருடாழ்வாருடனும் ஒரே கல்லில் மிக அழகான சிற்பமாக காட்சி அளிக்கி றார் கள்.
வரசித்தி விநாயகர் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். தேவர்களுக்கு ஏற்பட்ட வெப்ப நோயை தணிப்பதற்காக, சிவன் தனது கையில் அக்னியுடனும், மூன்று தலை, மூன்று கால்கள், மூன்று கைகளுடன் எடுத்த அவதாரமே ஜுரஹரமூர்த்தி. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட் டுள்ளது.
மரகதாம்பிகை சன்னிதி அருகில் ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தேவிகளின் சிலைகள் உள்ளன. கையில் கிளியுடன் அழகிய வடிவில் ஞானதுர்க்கை காட்சி தருகிறார். வடக்கு பிரகாரத்தில் சுப்பிரமணியர் தனது இரு தேவியர்களுடன் தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். ராஜ யோகத் தை தரும் ராஜமாதங்கி சிலை இங்கே இருக்கிறது. இதற்கு கீழே ஒரு சுரங்கப்பாதை காணப்படுகிறது.
பிரம்மாவுக்கு கீழே தனி சன்னிதியில் சண்டிகேஸ் வரரை தரிசிக்கலாம். சப்த கன்னிமார்கள் 7 பேரும் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர். இங்கு பிரதோஷ மூர்த்தி வண்ணப்படமாக தனி சன்னிதியில் உள்ளார். இந்த சன்னிதியின் வெளிப்புறத்தில் புல்லாங்குழலோடு வேணுகோபாலஸ்வாமி . இங்கே அதிசயம் ஒன்று இருக்கிறது. நந்தீஸ்வரர் கைகூப்பிய நிலையில் அதிகார நந்தியாக அருள் கிறார்.கிழக்கு பக்க சன்னிதியில் சீதாதேவி, ராமர், லட்சுமணன் அருள் பாலிக்கிறார்கள். அருகில் பரதன், சத்ருக்னர், ஆஞ்ச நேயர் உள்ளனர். கொஞ்ச தூரத்தில் ராமலிங்கேஸ் வரர், பர்வத வர்த்தினியுடன் தனி சன்னிதி யில் தரிசனம் தருகிறார். அங்கே வால்மீகிஸ்வரர் சிலையும் உள்ளது.
இங்கே இன்னொரு அதிசயமும் காணலாம். தக்ஷிணாமூர்த்தி இங்கே தெற்கே பார்த்து தனியாக இல்லை. மனைவி தாராவோடு காண்கிறார். வணங்குவோர்க்கு ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை. தக்ஷிணா மூர்த்திக்கு எதிரே வீணை ஏந்திய சரஸ்வதி அமர்ந்திருக்கிறாள்.
சுருட்ட பள்ளி பிரதோஷ கால வழிபாடு பிரசித்தியா னது. திருவாதிரை, மகா சிவராத்திரி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு வருடப் பிறப்பு நாட்கள், நவராத்திரி தினங்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜை உண்டு.
சுருட்டப்பள்ளிக்கு கோயம்பேட்டிலிருந்து பஸ் ஓடுகி றது. புத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் சுருட்ட ப்பள்ளி யில் நிற்கும். எதிரே பள்ளிகொண் டீஸ்வரர் கோவில் கோபுரம்கண்ணில் படும்…
மூன்று மூலஸ்தானங்கள் உள்ள கோவில், ஒன்று வால்மீகீஸ்வர். சுயம்பு லிங்க கருவறை. வால்மீகி முனிவர் பூஜித்தது. அடுத்த கருவறையில் ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி பிரதிஷ்டை செய்து பூஜித்த ராமலிங்கேஸ்வரர்.
மூன்றாவது, புடவையணிந்து, புன்னகை தவழ காட்சிதரும் மரகதாம்பிகையின் கருவறை.
10. கோயிலின் சனிப்பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். திருமணத் தடைகள் விலகும். தம்பதியர் ஒற்றுமை நிலவும்.
ஒரு தசமி திதியன்று பாற்கடல் கடையப்பட்டது. மறுநாள் ஏகாதசி அன்றுதான் ஈசன் விஷம் அருந்தி னார். அதற்கு மறுநாள் துவாதசி அன்று ஈசன் அயர்ந்து பள்ளி கொண்டார். மறுநாள் திரயோதசியன்று விஷ மயக்கத்திலிருந்து விழித்து எழுந்த ஈஸ்வரன் நந்தியின் கொம்பிடையே நடனமாடினார். அன்று சனிக்கிழமை வேறு. அதனால்தான் இந்தப் பிரதோஷ நாளை சனிப் பிரதோஷம் என்பர். இங்கே ரொம்ப விசேஷம். ஹாலஹால விஷம் உண்ட ஈஸ்வரன் பள்ளி கொண்ட ஸ்தலம்.
சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் ஊத்துக் கோட்டைக்கு அருகே சுருட்டப்பள்ளி இருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *