WHO IS RAMAN DO YOU KNOW? J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி — நங்கநல்லூர் J K SIVAN

யாரிந்த ராமன் தெரியுமா உனக்கு ?

இது எண்ணற்ற மஹான்கள் வாழ்ந்த,. வாழும் பூமி. சத்தியத்தையும் தர்மத்தையும் மதித்து இரு கண்ணாக போற்றி வாழ்ந்தவர்கள்.

ஒரு முறை மதுராந்தகத்தை சேர்ந்த குடியானவர்கள் கூட்டமாக பருத்தியூர் சாஸ்திரிகள் வீட்டை நோக்கி வந்தனர்.

” நீங்கள் எல்லாம் யார்? எதற்கு என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?”

” சாமி, நாங்க இந்த ஊர் விவசாய ஜனங்க. வானம் பொய்த்து விட்டது. மழையே காணோம். குளம் வற்றியிருக்கிறது. விவசாயம் நடைபெறாமல் பஞ்சம். இனி மரணம் ஒன்று தான் எங்களை எதிர்நோக்கி இருக்கிறது. உங்களை தரிசித்து சிறந்த ராம பக்தர் நீங்கள். அந்த ராமன் வாழும் ஊர் எங்கள் மதுராந்தகம், ஏரி காத்தவன் அவன். வெள்ளைக்கார கலெக்டர் ப்ளேஸ் கண்ணால் பார்த்து ராமலக்ஷ்மணர்களால் ஏரி உடையாமல் காக்கப்பட்ட ஊர். எங்களுக்கு ஏதாவது செய்யுங்கள்”

உள்ளே சென்று தன்னிடமிருந்த துணிமணி, பணம் பொருள்கள் எல்லாம் அவர்களுக்கு தானமாக கொடுத்தார் சாஸ்திரி.
” நான் உங்கள் ஊருக்கு வருகிறேன். என் ராமனை வேண்டி அங்கே சில மாதங்களுக்கு தங்கி ராமாயண ப்ரவசனம் செய்கிறேன். பிரவசனம் முடிவதற்குள் மழை வராமல் தொடர்ந்தால் இனி சன்யாசம் மேற் கொள்கிறேன்…”

சாஸ்திரிகள் குடும்பம் அவரோடு மதுராந்தகத்தில். தினமும் பிரவசனம். நாட்கள் சென்றது. ஒரு மாறுதலும் இல்லை. இன்னும் சில நாளில் உபன்யாசம் முடியப்போகிறது. அன்று புதன் கிழமை. வழக்கம்போல் நல்ல கூட்டம். சாஸ்திரிகள் குரல் கணீரென்று உச்சரிக்கிறது. மைக் இல்லாத காலம். கூட்டத்தில் கடைசி மனிதன் காதிலும் ஸ்பஷ்டமாக விழுகிறது.

वैदेहीसहितं सुरद्रुमतले हेमे महामण्डपे
मध्ये पुष्पकमासने मणिमये वीरासने सुस्थितम् ।
अग्रे वाचयति प्रभञ्जनसुते तत्त्वं मुनिभ्यः परं
व्याख्यान्तं भरतादिभिः परिवृतं रामं भजे श्यामलम् ॥ Sछ्Oऊण्ट्॥
वामे भूमिसुता पुरश्च हनुमान् पश्चात् सुमित्रासुतः
शत्रुघ्नो भरतश्च पार्श्वदलयो वाय्वाधिकोणेषु च ।
सुग्रीवश्च विभीषणश्च युवराज् तारासुतो जाम्बवान्
मध्ये नील सरोज कोमलरुचिं रामं भजे श्यामलम् ॥

”வாமே பூமிசுதா புரஸ்சாத் ஹனுமான் பஸ்சாத் சுமித்ரா சுதஹா
சத்ருக்னோ பரதஸ்ச பார்ஸ்வதளயோஹோ
வாய் வாதி கோணேசு சா………..

ராம பட்டாபிஷேகத்தில் யார் யார் எங்கே நிற்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்ற அற்புதமாக காட்சி ஸ்தோத்ரம்..
ராமன் நீலத்தாமரையாக வீற்றிருக்கிறான். ….. காட்சி அற்புதமாக தொடர்கிறது. பிரவசனம் முடியுமுன் வானம் இருட்டியது. இடி இடித்தது. ஜோ என்று வானம் பொத்துக்கொண்டு அடை மழை. நல்லார் ஒருவர் பொருட்டு மதுராந்தகம் பூரா எங்கும் குளம் குட்டை எல்லாம் நிரம்பி ஜலப்ரவாஹம்……

இதை எதற்கு சொன்னேன் என்றால் ராமநாம மஹிமையை கொஞ்சம் உணர்த்த. மகரிஷி விஸ்வாமித்ரர் தசரதனிடம் சொல்கிறார்.

अहं वेद्मि महात्मानं रामं सत्यपराक्रमम् । वसिष्ठोऽपि महातेजाः ये चेमे तपसि स्थिताः ॥
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம் வசிஷ்டோ அபி மஹாதேஜா: ஏ சேமே தபசி ஸ்திதா:

”தசரதா, நீ அறியாத ராமனை நான் அறிவேன், அவன் மஹாத்மா, ஆனந்தத்தை வாரி வழங்கும் ஸ்வரூபத்தை கொண் டவன். அவன் வீரம் சாமான்யமானது அல்ல. துஷ்ட நிக்ரஹம் செய்வதற்கே இங்கு அவதரித்தவன். காக்கும் கரங்கள் கொண்ட அவனுக்கு எவரை அழிக்கவேண்டும் என்று தெரியும். கொடுத்த வாக்கை மீறாதவன் ராமன். ”
சந்திரனின் ஒளி சந்திரனை நீங்கலாம், ஹிமாலய மலை பனியை இழக்கலாம். கடல் கரையை கடக்கலாம், என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்கு ஒரு இம்மியும் மீறமாட்டேன்.”என்று சொன்னவன் ராமன். என் உயிரையே திரணமாக்கி தியாகம் செய்வேன். நான் கொடுத்த வாக்கு எக்காரணம் கொண்டும் மாறாது. மீறாது’ என்றவன் ராமன்.

தசரதா, ராமனைப் பற்றி நான் சொன்னதெல்லாம் உனக்கு ஏற்றுக்கொள்ளமுடியாமல் ”அவர்கள் சிறுவர்கள், பாலகர்கள், எப்படி ராக்ஷஸர்களை சமாளிக்க இந்த ரிஷியோடு அனுப்புவது என்று சஞ்சலம் மனதில் ஏற்பட்டால் இதோ நிற்கும் வசிஷ்டரை, உன் குல குருவை கேள்..ஒருவேளை ஒரு ரிஷி இன்னொரு ரிஷியை விட்டுக்கொடுக்கமாட்டார் என்று எண்ணினால் புரிந்துகொள். எங்காவது துளியாவது அசத்தியம், பொய் இருந்தால் ஒரு ரிஷியின் தவ வலிமை, சக்தி, அவன் இதுகாறும் பெற்ற புண்ய பழங்கள் அவனை விட்டு நீங்கும். வசிஷ்டர் உண்மைக்கு மாறாமல் பேசமாட்டார். கேள் அவரை. ராமன் மஹிமை என்ன, அவன் யார் என்று அவர் அறிவார். அப்புறம் என்னோடு ராம லக்ஷ்மணர்களை அனுப்பு.”

தசரதனுக்கு உலகமே இருண்டது. ஏதோ சினிமா பார்க்க அழைத்து போகட்டுமா? என்று கேட்பது போல அல்லவா என் உயிரான ராமனை காட்டுக்கு ராக்ஷஸர்களோடு யுத்தம் பண்ண வா என்று கூப்பிடுகிறார் இந்த கோபக்கார
ரிஷி. கொடிய ரக்ஷ்சர்கள் உலவும் அரண்யத்தில் ரிஷிகள் தவத்தை கலைக்க கோபமாக வரும் பலமிகுந்த ராக்ஷஸர்களை 16 வயது சிறுவன் ராமன் தம்பி லக்ஷ்மணனோடு சேர்ந்து எதிர்த்து தடுக்கவேண்டுமாம்…..!! போர் அனுபவம் பெறாத பாலகன்…. தவமிருந்து பெற்ற பிள்ளை… கேட்பவரோ தவ சிரேஷ்டர். அவருடன் ராமனை அனுப்பவோ துளியும் நெஞ்சில் எண்ணமில்லை. வேறு யாராவதாக இருந்தால் அவர் தலை சீவப்பட்டு கோட்டை வாசலில் சிதறி இருக்கும். என்ன செய்வது? பரிதாபமாக கன்று தாய்ப்பசுவை நோக்குவது போல் தசரதன் வசிஷ்ட மஹரிஷியை கண்கலங்க பார்க்கிறான்.

விஸ்வாமித்திரரின் தவ வலிமை, அவரது ஞானம் சகலமும் அறிந்தவர் வசிஷ்டர். .ப்ரம்ம ரிஷி.
தசரதா, மஹா யோகீஸ்வரர் விஸ்வாமித்ர மகரிஷி. தலைசிறந்த தவயோகி. மஹா வீரர். சக்தி ஸ்வரூபம். அவரை விட சிறந்த பாதுகாப்பு உன் மக்கள் ராம லக்ஷ்மணர்களுக்கு எங்கும் கிடைக்காது. மறு யோசனை இல்லாமல் அவர்களை மஹரிஷியோடு அனுப்பு. இதனால் அவர்களுக்கு சிறந்த ஞானம், பலம், சக்தி, பெருமை கிட்டப்போகிறது. அரிய சந்தர்ப்பம் இது நழுவ விடாதே.

‘ரஸ நிஷ்யந்தினி” என்ற ராமாவதார 100 காரணங்களை ”அஹம் வேத்மி” என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் எழுதி இருக்கிறார் ப்ரவசனம் எண்ணற்ற முறைகள் நிகழ்த்தி இருக்கிறார். அவரது வம்சாவழி வந்தவர்கள் புத்தகமாக்கி பல பக்தர்கள் படித்துமகிழ வெளியிட்டிருக்கிறார்கள். அவர் கொள்ளுப்பேரன் சுந்தர ராம மூர்த்தி எனக்கு அனுப்பி அதை படித்து கொஞ்சம் சொல்கிறேன்.

1. इमं श्रीरामभद्रम् अस्मत्पुत्र इति त्वम्; अयं
जगत्पितेत्यहं वेद्मि।
இமம் ஸ்ரீ ராம பத்ரம் அஸ்மத் புத்ர இதித்வம் : அயம் ஜகத்பிதே த்யஹம் வேத்மி.
”தசரதா, ”என்” மகன் என்று நீ அறியும் உன் மகனாக கருதும் இந்த ராமன் யார் தெரியுமா? அவன் யாருடைய ”மகனும்” இல்லை. இந்த பிரபஞ்சத்துக்கே ”அப்பன்” என்பது எனக்கு தெரியும்.

2. अयं बाल इति त्वम् अयं वृद्धः इत्यहं वेद्मि।
அயம் பாலா இதித்வம் அயம் வ்ருத்த: இத்யஹம் வேத்மி:
நீ அவனை ” சிறு வயது” குழந்தையாக, சிறுவனாக பார்க்கிறாய். எனக்கு அவன் காலமே காணமுடியாத அனாதி பரமன் என்று தெரியும். அவனுக்கு வயதெது? வயதேது?”

3. अयं मत्तपसा जनित इति त्वम् अयं सर्वेषां देवर्षीणां तपसा जनित इत्यहम् ।
அயம் மத்யஸா ஜனித இதித்வம் அயம் ஸர்வேஷாம் தேவர்ஷிணாம் தபஸா ஜனித இத்யஹம்
”என் பிரார்த்தனையால், யோகத்தால், வேண்டுதலால் , விரதத்தால் பிறந்த மகன் என் மகன் ராமன் என்று நினைக்கிறாய், தசரதா, எனக்கு அவன் இந்திராதி தேவர்களின் பிரார்த்தனையால் , அவர்கள் தவத்தால், மஹான்கள், யோகிகள் வேண்டுதலால் உனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்று காரணார்த்தமாக தீர்மானித்து ஜனித்தவன் என்பது தெரியும்.

4. . अयं कौसल्यास्तनरसवर्धित इति त्वम्; अयं । सकलयज्ञहव्यकव्यैर्वर्धित इत्यहम् ।
அயம் கௌசல்யா ஸ்தன ரசவர்த்தித இதித்வம் : அயம் சகலயஞ ஹவ்ய கவ்யை வர்தித்த இத்யஹம்
”ஏதோ கௌசலையிடம் பால் குடித்து, போஷாக்குடன் உணவளிக்கப்பட்டு வளர்ந்தவன் ராமன் என்று நீ நினைக்கிறாய். எண்ணற்ற முன்னோர்கள் விரதமிருந்து தவப்பயனாக, தேவர்களின் யாக பலனாக, விரத பயனாக பிறந்தவன் ராமன் என்பது எனக்கு தெரியும்.

5. अयं कौसल्याकुक्षौ कश्चित्कालं स्थित इति त्वम् अस्य कुक्षी सर्व जगत् सदा वर्तत इत्यहम् ।
அயம் கௌசல்யா குக்ஷோவ் கஸ்ச்சித் காலம் ஸ்தித இதித்வம் அஸ்ய குக்ஷி ஸர்வ ஜகத் சதா வர்தத இத்யஹம்.
”கோசலையின் மணி வயிற்றில் ராமன் பிறந்ததாக நீ எண்ணுகிறாய். அவள் கருவில் அவள் சுமந்தது இந்த பிரபஞ்ச ஜீவன்களை எல்லாம் ” என்று நீ அறிவாயா ?
பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் மஹா பெரியவாளால் பருத்தியூர் பெரியவா என்று மரியாதையோடு அழைக்கப்பட்டவர். ஒரு யுக புருஷர். மேற்கொண்டு அனுபவிப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *