SAMUDRIKA LAKSHANAM J K SIVAN

சாமுத்ரிகா லக்ஷணம்  –         நங்கநல்லூர்  J K  SIVAN அங்க ஸாஸ்த்ரம் 

இன்றைக்கு  இன்னும் கொஞ்சம்  விசித்திர  விஷயங்கள்  சொல்ல விருப்பம்.நீங்கள்  சந்திக்கும்  நண்பர்கள் உறவினர்களை  சந்திக்கும்போது உடனே   அவர்கள் காதுகளை கவனியுங்கள். உங்கள் காதுகளையும் கண்ணாடியில் பரிசோதியுங்கள். சிறிய காதுகளாக இருந்தால்  ஆசாமிகள்  மிகுந்த சிக்கனமானவர்கள். தமக்குத் தேவை என்று தோன்றுபவைகளைக்  கூட  காசு செலவழித்து வாங்கமாட்டார்கள்.  காதுகள்  பெரிசாக இருந்தால் கேள்வி ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். நியாயத்திற்கு குரல் கொடுப்பார்கள். வாய்   சொப்பு  மாதிரி  சின்னதாக உள்ளவர்கள் ஆணோ பெண்ணோ எதையும் கொஞ்சம் நிதானமாகதான்  செய்வார்கள். பேச்சைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  எதையும் ஒரு  பத்து தடவை யோசித்து விட்டு தான்  வாயை  திறப்பார்கள். வாய் பெரிதானவர்களைப்  பற்றி என்ன சொல்வது.  OVM . ஓட்டை வாய்  மாரிமுத்து.  யோசிக்கும் முன்னாலேயே  வார்த்தைகள் வாயிலிருந்து உதிரும்.  நான் சொல்றது தான் கரெக்ட் என்பவர்கள்.
முகவாய்கட்டை, தாடையில்  குழி இருக்கும்.  அல்லது  MGR  மாதிரி ரெட்டை தாடை இருந்தால். பப்ளிக், பொதுநல ஈடுபாடு . பதவிகள் தேடிவரும். வருமானம் குவியும் . நான் சொல்லவில்லை. சாஸ்திரம் சொல்கிறது ஸார் .
எப்படித்தான் முன்னோர்கள் இதெல்லாம்  கண்டுபிடித்து சொன்னார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
சாஸ்திர, சம்பிரதாயங்கள்  நமது பாரத தேசத்தில்  எந்தெந்த மொழியில்   பேசினாலும்  நிறைய இருக்கிறது. ”கிட்டுவுக்கு  மச்சம் டா,மச்சக்காரன் ”  எனும்போது  நாம்  அவனுக்கு கிடைத்த  அதிர்ஷ்டத்தை அப்படி மெச்சுகிறோம்.
எல்லோர்  உடம்பிலும்  மச்சங்கள்,கருப்பாகவும், கொஞ்சம்  பிரவுன் ஆகவும் இருக்கும்.  உங்கள் உடம்பில் எங்கெங்கே மச்சம், எத்தனை மொத்தம்  என்று தெரியுமா?அடுத்த  பாத்ரூமில் இருக்கும்போது தேடி டயரியில் எழுதி வைத்துங்கள்.மச்சம்  சிறிய  விஷயங்களை  குறிக்கிறது.
ஒரேயடியாக சிலருக்கு  திடீரென்று  அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்வது, ஆடம்பர வாழ்க்கை எப்படி ஸார்  கிடைக்கிறது? மச்சங்கள் பிறக்கும்போதே மட்டும் அல்ல, நடுவில் கூட  தோன்றுகிறது. பிறக்கும்போது  குழந்தை உடம்பில் மச்சம் தேடுவோம் ஞாபகம் இருக்கிறதா? சின்னதாக கடுகு,மிளகு போல் இருக்கும். இன்னும் கொஞ்சம்  பெரிசாக கூட  சிலருக்கு இருக்கும்.  மச்சம் மறையாது என்பதால் அங்க அடையாளம். என்  SSLC   புஸ்தகத்தில்   என் இடது கட்டை விறல் இடுக்கில் உள்ள கருப்பு மச்சம்  அசிஸ்டன்ட் ஹெட்மாஸ்டர் லக்ஷமணய்யர் கண்டுபிடித்து  எழுதியது எத்தனையோ ஆவணங்களில் என் வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது. மச்சங்கள் சில ஆரம்ப ககாலம் முதலாக   நல்ல பலன்கொடுக்குமாம். ஆணுக்கு ஒருமாதிரி, பெண்ணுக்கு வேறே மாதிரி யோகம் .

ஆண்களுக்கான மச்ச பலன்:
புருவங்களுக்கு மத்தியில்: நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம்: தனயோகம்
வலது புருவம்: மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி): திடீர் அதிர்ஷ்டம்
வலது கண்: நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம்: புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம்: ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல்: சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம்: நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம்: கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி : ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள்: அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்): செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம்: வசீகரம், தயாள குணம்
இடது கன்னம்: ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி: சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி: தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே : பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை: திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம்: சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு :ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு: பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு: பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு: திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார,ஆடம்பர வாழ்க்கை
புட்டம்: அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்:
நெற்றி நடுவே: புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம்: தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம்: அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல்: செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம்: கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி: வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள்: ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி: அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம்: வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம்: படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து: பிள்ளைகளால் யோகம்
நாக்கு: வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் : கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள்: சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை: பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல்: யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ்: மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள்: ஆடம்பரம், படாடோபம்
வயிறு: நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு : ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை: தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை: ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள்: சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமைஇதோடு ஏன்  நிறுத்துகிறேன். நீங்கள் தான் உடனே  பாத்ரூம் கண்ணாடியில்  மச்சம்  எங்கெல்லாம் இருக்கிறது என்று தேட ஓடிவிட்டீர்களே.  பார்த்து விட்டு  மேலே சொன்னது சரிதானா என்று  அலசுங்கள். எனக்கும் சொல்லுங்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *