SAMUDRIKA LAKSHANAM. J K SIVAN

அங்க சாஸ்திரம் – சாமுத்ரிகா லக்ஷணம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN

இந்த  பரந்த உலகில் அடேயப்பா  எத்தனை விஷயங்கள் இருக்கிறது.  அநேகமாக  நமக்கு  தெரியாதவை தான்  ரொம்ப  ஜாஸ்தி.  நம்ம எல்லோருக்கும்  தேகம் இருக்கிறது.  அது ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு  மாதிரியாக  இருக்கிறது.  அதே போல தான்  அவரவர் குணமும் மாறு பட்டது.  அதை  அந்த உடம்பே  காட்டிக் கொடுக்குமாம்.  அந்த விஷயத்துக்கு ஒரு சாஸ்திரம் இருக்கிறது.அதற்குப் பெயர்  சாமுத்ரிகா லக்ஷ்ணம்.  அங்க  ஸாஸ்த்ரம்.  இதன் உட்பிரிவாகி,  கைரேகை சாஸ்திரம் போன்ற  இன்னும் பல  அற்புத சுரங்கங்கள்  உள்ளது.

 
சிறு வயதில் ஒரு முறை  தஞ்சாவூர்  சரஸ்வதி மஹால் லைப்ரரியில் ஒரு புத்தகம்  கண்ணில் பட்டது. அதில் கண்டதை  இன்னும்  மறக்கமுடியவில்லை.  அநேக  மிருகங்கள் பறவைகள் முகங்களை படமாக காட்டி அதன் அருகில்  சில மனிதர்களின்  முகங்கள்.  அந்த பறவை, மிருகங்களின்  சாயல்  அதில் இருப்பதை கண்டு அதிசயித்தேன். இதற்கெல்லாம் என்ன காரணம்,?  ஏன் இப்படிப்பட்டவர்கள்  உருவாக்குகிறார்கள்?  அவர்கள் குணம் எப்படி அவர்கள் உருவத்துக்கேற்றாற்போல் அமைகிறது. இதெல்லாம்  சொல்வது தான் சாமுத்ரிகா லக்ஷணம்.

சாமுத்ரிகா லக்ஷணம் என்ற பெயர் மட்டும் தான் அநேகமாக நமக்குத் தெரியுமே தவிர  அந்த சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று எவரும்  அறிய முயற்சிக்க வில்லை.  நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. இதோ கொஞ்ச விஷயம்சொல்கிறேன். .ரொம்ப ஸ்வாரஸ்யமாக  இருக்கிறது படியுங்கள்.

நமது உடல் ஒரு அற்புத  அதிசய சுரங்கம் என்றால் அது தப்பில்லை.  எவ்வளவோ விஷயங்கள் அதில் இருக்கிறது. அதை அறியாமலேயே, நாம் முடிந்து விடுகிறோம் .  அரைகுறையாக அதை தெரிந்து கொண்ட டாக்டர்கள் ஆஸ்பத்திரிகள்  நம்மை இன்னும் சீக்கிரமே முடித்து விடுகிறார்கள்.

 
சாமுத்ரிகா லக்ஷணம்  பற்றி அறிபவர்கள்   ஆண்களை விட  பெண்கள் பற்றி தான் ரொம்ப  தெரிந்து கொள்ள  விரும்புகிறார்கள். பெண்கள் குணத்தை அறிய எவ்வளவு ஆர்வம்??
 

சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றிக்கு  மிக முக்கிய பங்கு இருக்கிறது.   மோட்டு  நெற்றிக்காரன் என்கிறோம். உண்மையில் அகலமாக  உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.  ரொம்ப அகலமாக மேலே போய் கொண்டிருந்தால் அது வழுக்கை சார்.  சரியாக பார்த்து சொல்லுங்கள்.

நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத் தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் இருப்பது நல்லதற்கல்ல.

காது இப்படித்தான் பரந்து விரிந்து இருக்க வேண்டும்.   காது சின்னதாக ஆக அந்த ஆசாமியின் மனநிலையும் எண்ணங்களும் கூட குறுகலாக இருக்குமாம்.

சாமுத்ரிகா லட்சணம் சும்மா விருதாவாக  சொல்வதல்ல.  மரத்தடியில் எவன் கையோ பார்த்து  இன்னும்  மூன்று நாளில் வெளியூரிலிருந்து உனக்கு ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று சொல்பவர்களை நம்புகிறோம். ஐந்து ரூபாய் கொடுத்து  அமெரிக்காவில் உத்யோகம் கிடைக்குமா என்று  கை  ரேகை சாஸ்திர  வியாபாரியிடம் ஏமாறுகிறோம்.  அதேபோல் கிளி ஜோஸ்யம் அதை பற்றி ஒரு பெரிய  திண்டு புஸ்தகமே  எழுதலாம்.

 
ஜாக்கிரதையாக ஒரு  கிளி ஜோஸ்யக்காரன் என்னுடைய  எதிர்காலத்தை  பற்றி  கிளி  பொறுக்கி எடுத்த  ஒரு பழைய  கலர் அட்டையை பார்த்துவிட்டு  ”உனக்கு  வடக்கே இருந்து அதிர்ஷ்டம் வரப்போகிறது தம்பி”  என்றான் 
”வடக்கே என்றால் எங்கே?
அவன் தெற்கே கையைக்காட்டி , ”அமெரிக்காவிலிருந்து” என்றான்.
”ஓஹோ அப்படியா?  என்ன அதிர்ஷ்டம்  வரும்? எப்படி வரும்?” என்று ஆவலாக கேட்டேன். ரெண்டு ரூபாய்  சில்லறையாக ஏற்கனவே வாங்கி கொண்டான்.
”என்ன தம்பி இப்படி கேக்கறே. யானை மேலேயா வரும்.   யாரோ ஒருவர் மூலம் வரும். நீ அதற்கு முன்  என்னைப் போல் ஒருவருக்கு ஒரு வேஷ்டி துண்டு நூறு ரூபா தக்ஷிணை அரை டஜன் பழங்களோடு போய் வாங்கிக்கொண்டு ஓடி வா ?
சரி என்று  ஓடியவன் திரும்பி அவனை  நான் பார்க்கவில்லை.

அதிர்ஷ்டம் தேடியவனுக்கு  கடைசியில் செலவு தான் மிச்சம்.  ஜோசியன் மறைந்து போவான்.  நான்கு நாள் கழித்து   யாரையோ நம்பி காரண்டி  surety  போட்டதால் அந்த ஆள் பணம் கட்டாததால் பாங்கிலிருந்து  நோட்டீஸ் தான்  வரும். அது தான் வடக்கே  மைலாப்பூரிலிருந்து  ஒரு போஸ்ட்மன்  மூலம் வருவது தான் அதிர்ஷ்டம்.
 

 சாமுத்திரிகா லக்ஷணம் வேறே மாதிரி.  ஆச்சர்யமாக சாஸ்த்ர பூர்வமானது.  காசு வாங்கிக்கொண்டு யாரோ ஒருவருக்காக சொல்லப்பட்டதல்ல. பொதுவாக மனிதர்களுக்கு அங்க அவயங்களை வைத்து அவரின் குணநலன்களைப் பற்றிய விபரங்களைக் கண்டறிவது. இந்தியாவில் காலம் காலமாக  இருந்து வரும் பாரம்பரிய சாஸ்திர முறைகளில் ஒன்று.

இதில் பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண பலாபலன்களை  இலக்கியங்கள், புராணங்கள், மற்றும் சாமுத்ரிகா லட்சண குறிப்புகளில் காணலாம்.   அதில் காணப்படுவது  எல்லோருக்கும் அமையாது. அமைந்துவிட்டால்  அவள் தெய்வம்.  பெண் பார்க்க போகும்போது அந்த காலத்தில் பெரியவர்கள்  அங்க லட்சணங்கள் (சாமுத்ரிகா லட்சணம்) பார்க்கும்போது மாப்பிள்ளைக்காரன்  பெண்ணின்  அழகை பார்ப்பதில்  கவனமாக இருப்பான்.
ஆகம சாஸ்திரத்தில் ஆண், பெண் தெய்வங்களின் சொரூபம் எல்லாம் சாமுத்ரிகா லட்சணம் பொருந்தியவையாக சிலை வடிக்கிறார்கள்.   நாம் அடிக்கடி  யாரையாவது  பார்த்தல்   ”ஆஹா  அந்த  பெண்ணை பார்த்தாயா  மஹா லக்ஷ்மி  மாதிரி, சரஸ்வதி மாதிரி இருக்கிறாள்” என்கிறோம்.

முகத்தில்  பிரதானமாக அமைவது மூக்கும் கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லக்ஷணம் சொல்கிறது. கண்களில் எத்தனையோ ரகம் . உரு

ண்டையான கண்கள் உள்வாங்கிய கண்கள் அகண்டு விரிந்த கண்கள் ,கமலாய தாக்ஷி, நீலாயதாக்ஷி, விசாலாக்ஷி, பத்மாக்ஷி, மீனலோசனி…  அடேயப்பா அம்பாளுக்கு எத்தனை பெயர்கள் கொண்ட கண்கள்.

இதுபோன்றுதான் மூக்கின் அமைப்பு பற்றி நிறைய விஷயங்கள்.   கை விரல் அமைப்பு பற்றி ரொம்ப விஷய இருக்கிறது.
நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம்.  இந்த மாதிரி விறல் உள்ள பெண்கள் மேலும் அறிவாளிகளாகவும் சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது. காமராஜர்  நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல் வார்கள்.    ‘ஆஜானு பாஹு  என்று சமஸ்க்ரிதத்தில் இதை தான் சொல்வோம்.  நமது தமிழ்  பொல்லாதது.  ”அந்த ஆளுக்கு கை  நீளம்”  என்றால் வேறு அர்த்தம்.  உண்மையில் அப்படிப் பட்ட நிறைய பேரை நாம் அரசியலிலிருந்து ஆபிஸ் வரை பார்த்துக் கொண்டு தானே   இருக்கிறோம்.  கண் பார்த்ததை கை  எடுத்துவிடும்  அபேஸ் பேர்வழிகள்.
 
இன்னும் நிறைய  சொல்கிறேன்.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *