வள்ளலார் போட்ட பாப லிஸ்ட்.. – #நங்கநல்லூர்_J_K_SIVAN
வடலூரில் வள்ளலார் மறைந்த அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். ஒவ்வொரு தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த அறையை பார்க்க சாயந்திரம் 6 மணி வரை பக்த கோடிகளுக்கு அனுமதி.
வள்ளலார் ஒரு அருமையான மனிதர், மனித தெய்வம். நல்லவர் என்கிறோமே, நாம் நல்லவர்களா? தயை, காருண்யம் இரக்கம், நேர்மை, நியாய, மனசாட்சி இதில் ஏதாவது நமக்கு உண்டா? இதெல்லாம் பற்றி எப்போதாவது சுய பரிசோதனை செய்து கொள்கிறோமா? இல்லை என்பது தான் எல்லோரின் பதிலும்.
ஒரு ராஜாவுக்கு இந்த எண்ணம் மனதில் தோன்றியது. அவன் பெரிய ராஜாவாக இருந்தாலும் அவனது மகன் வேகமாக தேரை ஒட்டி ஒரு பசுவின் கன்றைக் கொன்றுவிட்டதால் தாய்ப்பசு கண்ணீர் மல்க பேச இயலாமல் அரசனின் அரண்மனை அருகே பொது இடத்தில் கட்டி இருந்த நீதி கேட்க வருபவர்கள் அறிவிக்கும் ஆராய்ச்சி மணிக்கயிறை வாயால் கவ்வி ”டாங் டாங்” என்று மணி அடித்தது. அரசன் வெளியே ஓடி வந்து யார் நீதி கேட்டு வந்தது என்று பார்க்கிறான். திருவாரூர் சென்றால் இந்த மண்டபத்தை இன்னும் பார்க்கலாம்.
ஓடுகின்ற தேரை நமது காரைப்போல உடனே SUDDEN பிரேக் போட்டு நிறுத்த முடியாது. குதிரையின் இஷ்டம் போல் தான் தேர் நிற்கும். ஆகவே கன்றுக்குட்டி தேர்ச்சக்கரத்தில் மாட்டிக்கொண்டு அடிபட்டு அரைபட்டு இறந்துவிட்டது. தாய்ப் பசுவுக்கு அதன் குட்டியின் உயிரை திருப்பி தரமுடியாதே .
”நான் அதைக் கொன்றதால் என் மகன் உயிரை பலியாக தருகிறேன்” என்று மகனைத் தேர்க்காலில் இட்டு மனுநீதி சோழன் கொன்றான். அப்போது அவன் மனம் வாடியது. நான் என்னென்ன பாவங்கள் செய்தேனோ அதன் பயனாக குட்டியை இழந்த பசுவைப் போல என் மகனை இழந்து தவிக்கிறேன்” என்று சில பாபங்களை லிஸ்ட் போடுகிறான்:
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!– நல்லவர் மனதை கஷ்டப்படுத்தினேனோ.
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!– பொய்க் கேசு போட்டு நீதி மன்ற நேரத்தை கெடுக்காதே. இப்போது அது தான் நியாயமாக நடக்கிறது.
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!– தான் கொடுக்காவிட்டாலும் கொடுப்பதை தடுக்காதே.
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!–நண்பர்களுக்கிடையே துரோகம் செய்யக்கூடாது.
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!– நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ.
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! – பொதுமக்களுக்கு அடிக்கடி வரி விதிக்கக்கூடாது. அது இப்போது விலைவாசி என்கிற பெயரில் பேயாக தின்கிறது .ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!– ஏழைகள் மனம் வாடி, வயிறு பற்றி திகுதிகு வென எரியும்படியாக என் ஆட்சி இருந்ததோ ?
மன்றோறம் பேசி வாழ்வழித்தேனோ! — பொய் சாட்சி பூதலிங்கமாக இருந்தேனோ”
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!– வெட்டுபவனுக்கு கத்தி தீட்டிக் கொடுத்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! – யார் வீட்டில் பணம் திருடலாம் என்று ஐடியா கொடுத்தேனோ?
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! — வேண்டாத, மற்றவர்களின், பொருளுக்கு ஆசைப்பட்டேனோ?
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! — ஏமாற்றுவதில் நான் கில்லாடியோ?
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ! — பொது வழியை தடுத்து ஆக்கிரமித்தேனோ?
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!– நிறைய வேலை வாங்கி கொஞ்சம் சம்பளம் கொடுத்தவனோ? சம்பளமே கொடுக்காதவனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! — ஐயா பசி என்றபோது என் காது ஒரு போதும் கேட்ட்டதில்லையோ?
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! — சோறு கீறு கிடையாது. போய் எங்காவது வேலை செய் என்றவனோ?
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!- கோள் மூட்டி குப்புசாமியோ?
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ! – நம்பினவனை கை விட்டவனோ”
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! – எட்டப்பனோ?
குருவை வணங்கக் கூசிநின்றேனோ! – வாத்யார் மேல் மதிப்பின்றி வணங்காதவனோ?
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!- பீஸ் கொடுக்காமல் வாத்யாருக்கு நாமம் போட்டவனோ?
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! – படித்தவர்களை பிடிக்காதவனோ?
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ! உன் பாடலில் தப்பு என்று வேண்டுமென்றே சொன்னவனோ?
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! பறக்கும் பறவையை பிடித்து கூண்டிலிட்டவனோ?
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ! பசுவின் பாலை விற்று அதன் கன்றை பட்டினி போட்டவனோ?
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! சாப்பாட்டு பிரியனோ?
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! – நான் கலப்படப் புலியோ?அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!- அன்பாக இருந்தவர்களுக்கு துன்பம் தந்தவனோ?
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ! குளத்தை மூடிவிட்டு அதன் மேல் மாடி வீடு கட்டியவனோ?
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!– மரங்களை வெட்டி பிளாட் போட்டவனோ?
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! அடுத்தவன் வயலுக்கு தீ வைத்தவனோ?
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! பொதுக் கட்டிடத்தை சொந்தமாக்கிக்கொண்டவனோ?
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! பக்தர்கள் உள்ளே புக முடியாது ஆலய கதவை மூடியவனோ?
சிவனடியாரைச் சீறி வைதேனோ! சிவனடியாரை இழிவாக பேசுபவனோ?
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! தவசிகளை ஏளனம் பண்ணுபவனோ?
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ! ஞானிகளை வாய்க்கு வந்தபடி பேசுபவனோ?
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தாய் மொழி வேண்டாதவனோ?
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ! சாமி இல்லை போடா என்ற கர்வம் கொண்டவனோ?
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே! நான் எப்படிப்பட்டவன் என்னென்ன பாவம் செய்தென் என்று தெரியவில்லையே என்று மனுநீதி சோழன் அழுகிறான். மனு நீதி சோழன் என்னென்ன செயதேனோ என்று கேட்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இப்போது நம்மில் சிலர், இல்லை , நமது அரசாங்கமே செய்கிறதோ என்று அல்லவோ தோன்றுகிறது.
வள்ளலார் போட்ட பாவங்களின் லிஸ்ட் ”மனு முறை கண்ட வாசகம்” மேலே சொன்னது. நான் போட்ட தில்லை. இன்றுள்ள நிலையில் இந்த பாபங்களை நாம் தவறாமல் செயது வருகிறோமோ என்று தான் படிக்கும்போது உங்களுக்கும் தோன்றும். .
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *