KUNTHI PRAYER – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN

கிருஷ்ணன் ஒரு கணம் சிந்தித்தான். அவன் தோன்றிய துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது.இனி அவனுக்கு இந்த யுகத்தில் ஒரு வேலையும் இல்லை.அதற்கு தான் கல்கியாக மீண்டும் வரப்போகிறானே. அசுர சக்திகளை ஒழித்தாகிவிட்டது. தர்மத்தை நியாயத்தை நேர்மையை, நீதியை எல்லாம் மக்களுக்கு அர்ஜுனன் மூலம் போதித்தாகி விட்டது.
இனி துவாரகைக்கு செல்லவேண்டும். அங்கே சில விஷமிகள் நிர்மூலமாக்கப்பட வேண்டும். யாராக இருந்தால் என்ன. தான் தோன்றிய வ்ருஷ்ணி குலம் , யாதவர்கள் என்றால் உசத்தியா? தனது வம்சம் என்றால் அக்கிரமம் பண்ண விடலாமா? தண்டனை குற்றத்துக்கு தான் சுற்றம் அதற்கு விதிவிலக்கு அல்ல. இன்னும் சில நாட்களில் நான் மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டும். தேவர்கள் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. இன்னும் எத்தனை காலம் அங்கேயே இருப்பீர்கள், உங்கள் அவதார கார்யம் முடிந்தபின் இன்னும் ஏன் டிலே DELAY பண்ணுகிறீர்கள். நாங்கள் உங்களுக்காக இங்கே துடைத்துக்கொண்டு காத்திருக்கிறோம்…..” ஆகவே கண்ணன் ஹஸ்தினாபுரம், துவாரகை இந்த பூலோகம் எல்லாவற்றிலிருந்தும் விடை பெறும் நேரம் வந்து விட்டதே.

குந்தி வாசலுக்கு ஓடுகிறாள். தாருகன் தயாராக தேரில் குதிரைகளைப்பூட்டி கிருஷ்ணன் ஏறி அமர காத்திருக்கிறான். சுற்றிலும் மக்கள் வெள்ளம். நேராக குதிரைகள் துவாரகையை நோக்கி பறக்கப்போகின்றன. கிருஷ்ணன் ஏன் இன்னும் ஹஸ்தினாபுரஅரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. விடை பெற இவ்வளவு நேரமா? என்று தாருகன் அதிசயித்தான். குதிரைகள் கனைத்தன.

”போகாதே கிருஷ்ணா, போகாதே, இங்கேயே ஹஸ்தினாபுரத்தில் எங்களோடு இரு” என்று வேண்டுகிறாள் குந்தி.
கிருஷ்ணன் குந்தியின் மனை வாயிலில் தேரில் அமர்ந்து விட்டான். அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்தாள் குந்தி. கண்களில் கங்கையும் காவிரியும் சேர்ந்து வெள்ளத்தை உருவாக்கின. நாக்கு தழுதழுக்க பிரார்த்திக்கிறாள்.

கிருஷ்ணன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். இதழில் புன்னகை.
”அத்தை, உன் மனம் புரிகிறது” என்றான்.

நமது பாரத தேசம் ஒரு ஆன்மீக பூமி, எத்தனையோ ஜென்மங்களில் செய்த கர்மங்களின் பலனை அனுபவிக்க பிறவி எடுக்க படைக்கப்பட்ட கர்மபூமி. புண்யம் அடைய உதவும் புண்யபூமி. கடவுள்களே அவதாரம் எடுத்த அற்புதபூமி. எப்போதும் பல ஞானசுடர்கள் எரிந்துகொண்டே இருக்கும், காலத்தால் சில அணைந்தால் இன்னொன்று உருவாகி வந்து ஒளிவீசும், இந்த வழமை எக்காலத்துக்கும் உண்டு. அப்படி தவசீலர்களாக, ஞானச்சுடர்களாக ஏகபட்ட மகான்களும் ரிஷிகளும் இங்கே வருவார்கள் , வந்து கொண்டே இருப்பார்கள் அப்படி வந்த ஒருவர்தான் பரணூர் பிரமி அண்ணா எனும் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள். அவருக்கு வயது 90+ , இந்த நீண்ட வாழ்வின் ஒவ்வொரு நொடியும் கிருஷ்ண பக்திக்கே செலவிட்டவர். சமீபத்தில் முக்தியடைந்தவர். , பகவான் கிருஷ்ணன் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவுகளும் பேசிய உபன்யாசங்களும் ஏற்படுத்திய பெரும் பக்தி முயற்சிகளும் காலத்தால் நிலைபெற்றவை. எவ்வளவோ மகக்ளுக்கு ஞான தெளிவை பக்தி தெளிவினை கொடுத்தவை. நான் நிறையே கேட்டு அனுபவித்தவன்.

நாம சங்கீர்த்தனம் மூலம் பெரும் பக்தியினை வளர்க்கமுடியும் என செய்துகாட்டியவர் அவர், பரனூரில் கிருஷ்ணனுக்கு கோவில்கட்டி “பிரேமிகா சம்பிரதாயா” என அமைப்பையே ஏற்படுத்தி ஆன்மீக பக்தியினை பரப்பியவர்
நாம போதேந்திராளை தன் குருவாக கொண்ட து அண்ணாவின் நீண்ட ஆன்மீக பயணம். ஆயிரக்கணக்கான ஸ்தோத்திரங்களை இயற்றி கிருஷ்ணனுக்கு சமர்ப்பித்தவர். மறக்கமுடியாத ஒரு அற்புதர். எண்ணற்ற பழங்கோவில் களை புனருத்தாரணம்,ஜீர்ணோத்தாரணம் செய்ய காரணமானவர். அண்ணாவை வணங்கிவிட்டு துவாபர யுகம் செல்வோம். வியாசர் பாகவதத்தில் அதைச் சொல்ல ஆரம்பித்து விட்டார் பாருங்கள்:

1. नमस्ये पुरुषं त्वद्यमीश्वरं प्रकृते: परम् । अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवास्थितम् ॥१॥
namasye puruùaü tvà.a.adyamã÷varaü prakçteþ param | alakùyaü marvabhåtànàmantarbahiravasthitam || 1 ||

”ஹே பரிபூர்ண பரமாத்மா, தேவாதி தேவா, சர்வ பிரபஞ்ச காரணா, எங்கும் நிறை மனமோஹனா, உள்ளும் புறமும் வியாபித்தருளும் வாசுதேவா, உன்னை கையெடுத்து கும்பிடும் பாக்யம் பெற்றதற்காகவே உன்னை வணங்குகிறேன் கிருஷ்ணா” என்று ஆரம்பிக்கிறாள் குந்தி தேவி.

2. मायाजवनिकाच्छन्नमज्ञाधोक्षमव्ययम् । न लक्ष्यसे मूढदृशा नटो नाटयधरो यथा ॥२॥
màyàjavanikàcchannamaj¤àdhokùajamavyayam |na lakùyase måóhadç÷à naño nàñyadharo yathà || 2 ||

நானோ எழுத்து வாசனை அற்ற, அஞ்ஞானி, கல்விஅறிவற்றவள், மாயத்தோற்றம் கொண்டு மதி மயக்கும் கண்ணா, கபட நாடக சூத்ரதாரி, உன்னை அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவள் நான். எளிதில் மாயையின் வலையில் விழுந்து அவஸ்தை படுபவள்.

3. तथा परमहंसानां मुनीनाममलात्मनाम् । भक्तियोगविधानार्थं कथं पश्येम हि स्त्रिय: ॥३॥
tathà paramahaüsànàü munãnàmamalàtmanàm | bhaktiyogavidhànàrthaü kathaü pa÷yema striyaþ || 3 ||
”என் அப்பனே, ஜெகன்னாதா, உன்னை சகலமும் உணர்ந்த ஞானிகளே கண்டறியமுடியாதபோது. மறையோதும் ஞானியர் கண்ணுக்கே மறைந்து இருப்பவனான நீ, என் போன்ற எளிய பேதை, அறிவற்ற ஜீவனுக்கு, புரிபடுவாயா ? உன்னை அறியும் சக்தி எனக்கு ஏது?. உன் மீது பக்தி ஒன்றையே எப்போதும் செலுத்தி உன் அருள் கிடைப்பதற்கே பெரும் பாக்கியம் செயதிருக்கவேண்டும் நான்.

4. कृष्णाय वासुदेवाय हरये परमात्मने॥प्रणत: क्लेशनाशाय गोविंदाय नमो नम:॥
kçùõàya vàsudevàya devakãnandanàya ca | nandagopakumàràya govindàya namo namaþ || 4 ||

தேவகி மைந்தா வாசுதேவா, யசோத நந்தனா, நந்தகுமாரா, கோவிந்தா, உன்னை திரும்ப திரும்ப விழுந்து வணங்குவதே நான் செய்ய முடிந்தது கண்ணா. பசுக்களை ரக்ஷிப்பதால் தானே நீ கோ விந்தன் என்ற பெயர் கொண்டவன். அதற்கு தானே பிருந்தாவனத்தில் நந்தகோப குமாரனாக தோன்றியவன்.

5. नम: पङ्कजनाभाय नम: पङ्कजमालिने । नम: पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये ॥५॥
5.Nama Pankhaja nabhaya, nama Panjkaja maline, Nama Pankaja nethraya, namaSthe pankajangraye.

இந்த ஸ்லோகத்தை நான் சிறுவயதில் என் அப்பா தினமும் காலையில் சொல்லும் ஸ்லோகங்களில் ஒன்று. நினைவிலிருக்கிறது. அர்த்தம் தெரியாமலேயே ரசித்தேன். ”கிருஷ்ணா உன் வயிற்றில் தாமரை மலர் அதன் கொடி போன்ற உருவத்தை பார்த்திருக்கிறேன். நீ பத்மநாபன் மகா விஷ்ணு என்று அப்போது தெரியவில்லை. உன் கண்களும் இப்போது தான் மொட்டவிழ்ந்த தாமரை மலர்கள் என்று பலமுறை வியந்ததுண்டு. அதனால் தான் உன் பார்வை குளிர்ச்சியை தருகிறது. உன் திருவடிகளும் தாமரை மலர் போன்ற மென்மையானவை என்றும் அறிவேன். உன் கழுத்திலும் மணம்கமழ் தாமரை மலர்கள். எப்படிப்பார்த்தாலும் நீ தாமரையின் மொத்த உரு. உன்னை மனமார நமஸ்கரிக்கிறேன் கிருஷ்ணா.பத்மநாபா, எண்ணற்ற எனது நமஸ்காரங்கள், தாமரை வனமாலி வாசுதேவா பத்மலோசனா, தாமரைதிருவடிகளை தொழுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *