THREE NARASIMMAR DARSANAM IN A DAY – J K SIVAN

ஒரே நாளில் மூணு  நரசிம்மர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

29.9.2023  காலை  6 மணிக்கே  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  வாசலில் வந்துவிட்டது. தயாராக இருந்த  என்னை  ஏற்றிக்கொண்டு கார் புறப்பட்டது. எத்தனை கோவில்களை பார்க்கமுடியுமா  பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தோடு கிளம்பினோம்.
கூவத்தூர், முகையூர், வில்லியனூர்,  அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம், பரிக்கல் பார்த்து முடிக்கும் போதே  இரவும் மழையும்  குறுக்கே நின்றதால்  சென்னை திரும்பி நள்ளிரவில் வீடு திரும்பினோம்.  கிட்டத்தட்ட  500 கி.மீ. தூரம்  பிரயாணம்  ஒரே நாளில் செல்வது  வயதானவர்களுக்கு  கடினம் தான்.  பகவத் தர்சனம் பெரும் ஆர்வம் அதை வென்றுவிட்டது.     முக்யமாக பரிக்கல், அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம் என்று மூன்று இடங்களில் உள்ள நரசிம்மரை ஒரே நாளில் பார்க்க பல பக்தர்கள் திட்டமிடுகிறார்கள்.   விரும்புகிறார்கள்.  ஒன்றிரண்டு முறை நண்பர்களோடு  ஏற்கனவே  நானும் சென்றதுண்டு.     இந்த பதிவுவில் மூன்று  நரசிம்மர் தரிசனம் மட்டும்  சொல்கிறேன்.

 நரசிம்ம  அவதாரம்,  ஹிரண்யகசிபு எனும் ராக்ஷஸனின் வரத்தை முறிக்க மஹா விஷ்ணு  எடுத்த ஒரு முக்ய  அவதாரம். பாதி நரன்  பாதி சிம்மம்.  அளவற்ற  தவ வலிமையால்  அசுரர்கள் பெறும்  வரங்களை மீறாமல் அதற்குள்ளேயே ஏதோ ஒரு வழி கண்டுபிடித்து தர்மத்தை நிலைநாட்ட  பகவான் எத்தனை விதங்களில் தன்னை கஷ்டப்  படுத்திக்கொண்டு தான் நம்மை பாதுகாக்கிறார் என்று அறியும்போது  இரு கரங்களை  சிரம் மேல் கூப்பி  நண்றியோடு நாம் அவரை வணங்கவேண்டும். நரசிம்மன் பல  உணர்ச்சிகளோடு நமக்கு  காட்சி தருகிறார். பல க்ஷேத்ரங்களில் அவரை சென்று தரிசிக்கிறோம். உலகமுழுதும் வாழும்  ஹிந்துக்களில்   முக்கியமாக  பல வைஷ்ணவர்கள் நரசிம்மரை வணங்குபவர்கள்.
விஷ்ணு அவதாரமாக இருந்தாலும்  சிவனைப் போல் நரசிம்மனுக்கும் மூன்று  கண்கள். நெற்றிக் கண்ணை திறந்து பட்டாச்சாரியார் காட்ட  சென்னையை அடுத்த  சிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்மர் தரிசனம்  பெற்றிருக்கிறேன்.

நரசிம்மன்  ஹிரண்ய கசிபு மேல் இருந்த   கோபத்தை காட்டும் சிவந்த விழிகள், அவனை  ஆயுதம் இன்றி கொல்ல கூரிய   நகம்,  பல்.   இரவும் பகலுமற்ற  அந்தி நேரத்தில்,  வீட்டுக்கு உள்ளும் வெளியும் இல்லாமல் வாசல் படியில், பூமியிலும் ஆகாயத்திலுமில்லாமல் தனது மடியில் ஒரு துளி ரத்தம்  தரையில் சிந்தாமல்,  மனிதனும் இல்லாமல்  மிருகமும் இல்லாமல்  ரெண்டுமான ஒன்றான  நரசிம்மராக,  அவன் குடலைக் கிழித்துக் கொன்ற  விஷ்ணுவின்  கோபத்தைத்  தணிக்க பரமேஸ்வரன் எடுத்த அவதாரம் தான்  ஸரபேஸ்வரர்.  சரபேஸ்வரனிடமிருந்து வெளிப்பட்டவர்கள்  ப்ரத்யங்கிராவும்  ஷூலினி  சக்தி தேவிகள்.

நரசிம்மன் பல வித ரூபங்களில் காட்சி தருகிறார்.
ப்ரஹ்லாதனிடம் அருள் பாலிக்கும்  ப்ரஹ்லாத வரத நரசிம்மர்
அமைதியான யோகம் உபதேசிக்கும்  யோகானந்த நரசிம்மர்.
தனிமையில் ரஹஸ்யமாக உள்ள குகைநரசிம்மர்.
கோபம் கொண்ட  க்ரோத நரசிம்மர்.
வீர நரசிம்மர்.
பத்னி லக்ஷ்மியோடு இணைந்த  மாலோல  நரசிம்மர்
கோபாக்னி  பொங்கும்  ஜ்வாலா  நரசிம்மர்
பன்முகம் கொண்டம்  சர்வதோமுக நரசிம்மர்
உக்ரமான பீஷண நரசிம்மர்.
பத்ர நரசிம்மர்.
ஒரே நாளில்  மூன்று நரசிம்மர்களை தமிழகத்தில் பார்க்க எண்ணற்ற  பக்தர்கள்  திட்டமிட்டு வெற்றி கரமாக  அதை நிறைவேற்றுகிறார்கள்.
பக்தியை விட  பயம் பக்தர்களுக்கு அதிகம் உள்ள விஷ்ணு அவதாரம்  நரசிம்மன். நிறைய வீடுகளில் விக்ரஹமோ படமோ வைத்து பூஜை செய்வதில்லை.

 அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் சிங்கிரிக்குடி என்ற கோவிலில் மேற்கு பார்த்த உக்கிர நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அற்புதமான பல்லவர் கால  ஆயிரம் வருஷத்து கோவில் இது. பதினாறு கரங்கள்  ஷோடஸ  ஹஸ்த  நரசிம்மன்  ரொம்ப உக்ரமானவர்.  பிரகலாதனுக்கு தரிசனம் கொடுத்தவர். இங்கே மூலவர் உக்ர  நரசிம்மர். தாயார்  கனகவல்லி. இந்த ஆலயம் செல்ல புதுச்சேரி- கடலூர் மார்கத்தில் தவள குப்பம் என்ற கிராமத்திலிருந்து 2 கி.மீ. பாண்டி வழியாக வந்தால் 10 கி.மீ.  உக்ர நரசிம்மன்  இடப்பக்கம், ஹிரண்யன் மனைவி நீலாவதி, மூன்று ராக்ஷஸர்கள். வலப்பக்கம் ப்ரஹ் லாதன், சுக்ராச்சாரியார்,  வசிஷ்டர்.  இன்னொரு இடத்தில் யோக நரசிம்மர், பால நரசிம்மர். பல வித உணர்ச்சிகளோடு, மனோபாவத்தோடு நரசிம்மர்களை காண்பது இங்கே மட்டும். ராஜஸ்தானிலும் எங்கோ இருக்கிறதாம். நான் இன்னும் பார்க்கவில்லை.  உக்ர நர சிம்மனின் 16 கரங்களிலும் ஆயுதங்கள். பாதகஹஸ்தம், பிரயோக சக்ரம், க்ஷீரிக வாள் , வில் அம்பு, சங்கு சக்ரம் கதாயுதம், ஒரு வெட்டிய தலை  …. மற்ற கரங்களால் ஹிரண்யனை  தனது கூரிய நகங்களை  பிரயோகித்து  வயிறு கிழித்து  குடலை மாலையாக போட்டுக்கொண்டிருக்கிறார். நாங்கள் சென்றபோது அபிஷேக பாக்கம்  தாயாருக்கும்  நரசிம்மருக்கும்  பால்   அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேக பால் பிரசாதம் உண்டது  எங்கள் பாக்யம்.

பூவரசங்குப்பத்துக்கு   தென் அஹோபிலம் என்று பெயர். இரணியனால் பாதிக்கப்பட்ட முனிவர்களுக்கு நரசிம்மன் அருள்பாலித்த க்ஷேத்ரம்.  விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டிக்கான தேசிய நெடுஞ்சாலை யில்  18 கி,மீ. தூரம்.  பூவரசன்குப்ப ஸ்ரீ லட்சுமி நரசிம்மன் கோவில் உள்ளது. சப்தரிஷிகளான அத்ரி, பரத்வாஜர், ஜமதக்னி, வசிஷ்டர், கௌதமர், கௌசிகர், காச்யபர் ஆகியவர்கள் இரணியவதத்தை காண விரும்பி இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் பூவரசன்குப்பம். கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவராஜா கட்டிய  ஆலயம்.   நமது தமிழகத்தில் முக்கியமாக  8  நரசிம்ம க்ஷேத்ரங்களில்  நடுவே  இருப்பது. சோளிங்கர், நாமக்கல் , அந்திலி , சிங்கப் பெருமாள் கோவில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி குடி, சித்தனைவாடி நரசிம்மர் ஆகியவை மற்றவை. இங்கே  லட்சுமி நரசிம்மருக்கு சதுர் புஜம்.  மூலவர் சன்னதி முன்னால் கொடிமரமும் அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் முன்னே கருடாழ்வார் சன்னதி மூலவரை நோக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த தலத்தின் விசேஷம்.மற்ற நரசிம்மர் கோபக்காரர்கள்.  ஆனால்  இங்கே  நரசிம்மர் தம்பதியர்  ரொம்ப  சாந்தஸ்வரூபிகள்.  தாயாரின் ஒரு கண் நரசிம்மரையும், மற்றோர் கண் பக்தர்களையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
. ஏன்  பூவரசன்குப்பம்  என்று பெயர் என்பதற்கு ஒரு கதை.  பல்லவ ராஜ  சமண மதத்தை பின் பற்றினான். நரஹரி என்பவர் ஹிந்து மத மேன்மையை உபதேசித்து அதற்கே  திரும்பி வா என்று ராஜாவுக்கு உபதேசித்தார்.  கோபம் கொண்ட  பல்லவன்  நரஹரியைக் கொல்ல  ஆணையிட்டான்.  அதன் பலன் பல்லவனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்து, உடல் வேதனையால் அவதிப்பட்டான்.  நாட்டை விட்டே வெளியேறி  தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் படுத்த  பல்லவன்  ஆணவம் அழிந்து  அதிகார  வெறியில் தான் செய்த  தவறை உணர்ந்தபோது  அவன் மேல்  பூவரச மலையின் ஒரு இலை விழுந்தாது.  அந்த  இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியாமல் அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் கருணையோடு புன் முறுவலித்த  தாயார்  அம்ருதவல்லி சமேத  லட்சுமி நரசிம்மர் தெரிந்தார். அப்போதே தன் பாபத்துக்கு பரிகாரமாக  அந்த பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு  ஒரு கோவில் கட்ட வேண்டும் என நினைத்தான். அந்த கணமே  அவன்  வியாதி நிவாரணமாயிற்று.  பாபம் விலகியது. ஆலயம் பூவரசன்குப்பத்தில் நரசிம்மரை நமக்கு அளித்தது. நாங்கள் புதுச்சேரி சாலையில் உள்ள சிறுவந்தாடு என்னும் ஊரில்  2 கிமீ பயணம் செயது.ஆலயம் அடைந்தோம்.
பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார்.  திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.

 பரிக்கல்லுக்கு  புராணப்பெயர்  பரிகலா  க்ஷேத்ரம். விழுப்புரம் – திருச்சி மார்கத்தில் 21 கி.மீ. தூரத்தில் பரிக்கல் உள்ளது. பரிக்கல்லில்  கனகவல்லி தாயார்  சமேத  லக்ஷ்மி நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பை யெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோ பயங் களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளு கிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.  நேற்று நாங்கள்  சென்றபோது அங்கே பாலாலயம் நடப்பதால்  உத்சவரை மட்டும் தரிசிக்க முடிந்தது.  பரிக்கல் நரசிம்மர், 2000 வருஷம் வயதானவர். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திரு வதிகைப் புராணம். இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண் யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம்.   பரிக்கல் ஆலய கருவறைக்குள் ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.  உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி பரிக்கல்லில் தான்  உள்ளது. பரிக்கல்லில் மட்டுமே நரசிம்மரும் லட்சுமி தாயாரும் ஆலிங்கனம் செய்தபடி உள்ளனர். திருமண தடை இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்தில் வழிபட உடனடி பலன் கிடைக்கிறது.

பரிக்கல்   பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி  நரசிம்மன்கோவில் மூன்றுமே ஒரே நேர்கோட்டில் அமைந்த 3 நரசிம்மர் ஸ்தலங்கள் என்பது தான் விசேஷம். ஒரே நாளில்  இந்த 3 நரசிம்ம   க்ஷேத்ரங்களை தரிசிப்பது மிக விசேஷம்.

காலையில் சிங்கிரிக்குடி உக்ர நரசிம்மர்,(தனிநரசிம்மர் ) நண்பகலில் பூவரசன்குப்பம்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மாலையில் பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்  என்பது சம்ப்ரதாயம்.

பரிக்கல் நரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் எதிர்ப்பை யெல்லாம் நீக்கி அருளுகிறார். மனோபயங்களையும் மனக்கிலேசங்களையும் போக்கி அருளுகிறார். தடைப்பட்ட காரியங்களையும் நடத்தி அருளுகிறார். இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சத்துடன் திகழச் செய்து, சகல ஐஸ்வரியங்களையும் தந்து அருள்பாலிப்பார் லக்ஷ்மி நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருத்தலம்… பரிக்கல். இங்கே உள்ள ஸ்ரீநரசிம்மர், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புறங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் மக்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார். இந்தத் திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம்.

இந்த மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்வின் போது தப்பித்துச் சென்ற இந்த பரிகலாசூரன், கிருஷ்ணாரண் யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலம் பகுதிக்குள் மறைந்து கொண்டான் என்கிறது ஸ்தல புராணம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *