SUR DAS – J K SIVAN

ஸூர்தாஸ்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
கிருஷ்ணா  என்ன சொல்வேன் எப்படி சொல்வேன் ..  

கிருஷ்ணன் கோபியர்கள் கண்ணீர்  வெள்ளத்தில் மிதந்து கொண்டு தான்  மதுராவுக்கு சென்றான்.  எங்கும் சோகம். துயரம்.
நிம்மதியின்மை.  கண்ணன்  மதுராவிற்கு சென்ற நிமிஷத்திலிருந்து  எத்தனையோ புதிய அனுபவங்களை   சந்திக்க நேர்ந்தது. அவன் இனி புதிய கிருஷ்ணன். ஆயர்பாடி, பிருந்தாவன கோகுல கிருஷ்ணன் இல்லை.  கொடிய கம்சனை அழிக்க வந்த  காலன். கம்சன் அவனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழிக்கப் பட்டார்கள்.  சிறையிலிருந்த  கம்சனின் தந்தை பழைய ராஜா, வசுதேவர் தேவகி ஆகியோர்  மீட்கப்பட்டார்கள்.  கம்சனின்  ஆதரவாளர்களை, உறவினர்களை எதிர்த்து  வெல்ல, கொல்ல  வேண்டியிருந்தது. அடுத்ததாக  மதுராபுரி அரசனாக முடி சூட்டிக்கொள்ள வேண்டும். அதற்கிடையில் பழைய ராஜாவையே மீண்டும்  அரசனாக்கி  கிருஷ்ணன்  பலராமன் கல்வி கற்க சென்றுவிட்டார்கள்.  அதுவும் முடிந்து மீண்டும் துவாரகைக்கு ராஜ்ய அரண்மனையை மாற்றினார்கள்.  இதற்கெல்லாம் நடுவே  கிருஷ்ணனுக்கு பிருந்தாவன நினைவும்  இருந்தது. தனது உறவினனும் சீடனுமான உத்தவ ரிஷியை  அழைத்து விவரமாக  அவர்  எப்படி  பிரிந்தா வனத்துக்குப்  போகவேண்டும், யார்  யாரை எல்லாம் சந்தித்து கோபியர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி  கிருஷ்ணன் எவ்வளவு முக்கியமான ராஜ்ய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான், இருந்தாலும் உங்கள் யாரையும் அவன் மறக்கவில்லை, மறக்கவே முடியாது, மீண்டும் ஒருநாள் அவர்களை வந்து நேரில் சந்திப்பான். கண்ணன் சௌகர்யமாக இருக்கிறான், சந்தோஷமாக இருக்கிறான், உங்களோடு  சேர்ந்திருக்க இயலாமை ஒன்று தான் அவனுக்கு பெரிய வருத்தம் என்று சொல்லுங்கள்” என்று  ஆறுதல் சொல்லுமாறு கூறி அனுப்பினான். உத்தவர் பிருந்தாவனம் சென்றார். ராதை, யசோதை, நந்தகோபன், மற்றும் கண்ணன் நண்பர்கள், கோப கோபியர்கள் அனைவரையும் சந்தித்து கண்ணன் சொல்லியவாறே அவர்களுக்கு  ஆறுதல் சொல்லி கண்ணன் சொன்ன சேதியையும் கூறினார்.
ஒட்டுமொத்தமாக  கோபியர் அனைவரும் கண்ணன் கல்நெஞ்சன் என்று கருதினார்கள், தங்களது அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் அறவே  மறந்துவிட்டான், என்று வருந்தினார்கள்.  எங்களையும்  எங்கள் நலத்தையும் எப்போதும் மனதில்கொண்டவன் என்று நினைத்தோம். ஏமாந்தோம், இரும்புக்கு  தங்க போலிஷ் போட்டால் அது அழுத்தி தேய்த்தல் இரும்பு தன்னுடைய  கருப்பு கலரை காட்டுமோ அது போல் நடந்து கொண்டான்.  கிருஷ்ணன் பிரிந்தாவனத்தையே  தனது இதயத்திலிருந்து அகற்றி விட்டான்.  எங்கள் நினைவே, பிருந்தாவன நினைவே இல்லாமல் போகிவிட்டது அவனுக்கு. வஞ்சகன் கண்ணன். யாதவ குலத்தவன் அல்லவா, பாலைக்  கறந்து தானே  பழக்கம்.  எங்கள் அன்பை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டவன், திருப்பிக் கொடுப்பானா?  ராதை இவ்வாறு பித்து பிடித்தவள் போல் கதறினாள். கைகளை உதறினாள். ஆனால் கண்ணனை  நாங்கள்  விடவில்லை   எங்கும் இங்கே கண்ணனை காண்கிறோம், அவனோடு  ஆனந்தமாக இருக்கிறோம் என்று சொல் அவனிடம்.  அவன் வரவேண்டாம். அவன் தான் இங்கிருந்தே போகவில்லையே, எப்படி வரமுடியும்?  என்கிறார்கள் கோபியர்கள்.
உத்தவருக்கு பிருந்தாவன விஜயம் ஒரு பாடம் கற்பித்தது. எப்படி ஒரு மனிதன் அனைவரின் இதயத்திலும் இடம் பெற முடியும் என்று புரிந்தது. எப்படி அளவற்ற பாசம் நேசம் எல்லாம் ஒரு ஊரே திரண்டு ஒருவன் மேல் வைத்தது என்று அடிநெஹார். வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும்  அவரவர்கள் விரும்பிய வகையில் எப்படி கண்ணனால்   சந்தோஷப்படுத்த முடிந்தது என்று புரியாத புதிராக இருந்தது.
”ப்ரபோ, மாதவா,  உங்கள் சொற்படி பிருந்தாவனம் சென்றேன்.அனைவரையும் பார்த்தேன், உங்கள் சேதி சொன்னேன். என்ன  சொல்வேன், எப்படி சொல்வேன், எனக்கு இப்படி ஒரு அருமையான அனுபவத்தை உபதேசத்தை அருளிய கிருஷ்ணா  உன்னடிமை நான் என்றும். உன்னிடம் உபதேசம் வேண்டும் என்று கேட்டபோது நீ முதலில் பிருந்தாவன் சென்று வா என்று சொன்னாயே அதுவே எனக்கு உபதேசம் பெறவே  என்று இப்போது தான் உணர்கிறேன்.பரம  திருப்தி எனக்கு.
கோபர்களும் கோபியர்களும்  கிருஷ்ணா  எனக்கு சொல்லிக்கொடுத்தார்களே  அது தான் சிறந்த வேதாந்த உபதேசம். தெய்வத்தோடு வாழ்ந்தவர்கள் தெய்வத்தை பூஜித்தவர்கள் எப்படி நேசம் கொண்டவர்கள் பாசம் கொண்டவர்கள் என்று உணர்ந்தேன். உன்பிரிவாற்றாமை  அவர்களை எப்படி   வாடச்  செய்கிறது என்ற  உண்மை அறிந்தேன். சகல புராணங்களையும் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள் என்று தான் தோன்றுகிறது.  நீ அகலவில்லை அவர்களை விட்டு அங்கேயே அப்போதும் அவர்களுடன் வாழ்வதாக தான் அவர்கள் மனதை தேற்றிக்கொண்டு அந்த சந்தோஷத்தில் வாழ்கிறார்கள்.. நீ அமரன் கிருஷ்ணா, எங்கும் இருப்பவன், சர்வ வியாபி”
ஸூர்தாஸ் இந்த கவிதையில் நேரில் இருந்து பார்த்தது போல் இந்த காட்சியை எளிய வார்த்தைகளில் சொல்கிறார். அவர் முடிக்கும்போது  இப்படி  உத்தவ ரிஷி சொன்ன வார்த்தைகளைக் கண்ணன்   குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தான். அவனையறியாமல் அவன் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் விழியோரங்களில் வழிந்தது என்று அற்புதமாக பாடலை நிறைவு செய்கிறார்.  ஒரிஜினல் ஹிந்தி பாடல் கிடைக்கவில்லை, யாரோ எழுதியிருந்த  ஆங்கில வார்த்தைகளை பின்னலிட்டேன்.
Look, look at the love of Madhu’s Foe
Like rubbed off golden polish
his deception becomes apparent.
We thought Hari had
our welfare in his heart.
The real truth was something else.
Completely forgetting the memory of
Braj.
How cruelly, how heartlessly does he tarry.
He is really a milksellerby caste
Can he know how to love?
The woman, separated from Hari
deranged in mind
Laments, wringing her hands.

0 Madhava, I am satiated.
You contrived to send me to Braj
with your message.
Pardon my words.
1 do entreat you,
to hear about gopxs’ condition
the essence of Vedas and Puranas
they told me, in easy graspable words.
Neither Shruti, nor Shesh, nor Shiva or Creator
of the Universe: Brahma,
has sung the way as the gopis sang about you.
Sur says, hearing this, Shyam’s beautiful eyes
overflowed with tears.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *