ATHMA VIDHYA VILASA -1 J K SIVAN

அறிந்துகொள்ளாத ஒரு ப்ரம்ம ஞானி – நங்கநல்லூர் J K SIVAN
சதாசிவ ப்ரம்மேந்த்ரா.

ஆத்ம வித்யா விலாசம் 1-5

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த ஒரு அவதூதர்/(முற்றும் துறந்தவர், ஆடை உட்பட), ப்ரம்ம ஞானி மௌன குரு சதாசிவ ப்ரம்மேந்த்ரர்.
”பிபரே ராம ரசம், ப்ருஹி முகுந்தேதி, காயதி வனமாலி, சர்வம் பிரம்ம மயம்” போன்ற அருமையான பாடல்களைக் கேட்கும் போதும், பாடும்போதும் என்னால் மறக்கமுடியாதவர். அவற்றையும் இன்னும் எத்தனையோ ஸ்லோகங்களை, ஸ்தோத்திரங்களை இயற்றியவர். பல அற்புதங்களை நிகழ்த்திய சித்தர். ஒரு அற்புத நிகழ்ச்சி மட்டும் சொல்கிறேன்:

அவருக்கு நல்ல பசி. ஒரு நாளைக்கு ஒரு கவளம் உணவு மட்டுமே எப்போது கிடைக்கிறதோ அப்போது உண்பவர். ருசி பார்க்காதவர். திகம்பர சாமியாராக ஆடையின்றி சதாசிவ ப்ரம்மேந்திரா ஒருநாளைக்கு பசி வேளையில் பிக்ஷை கேட்க ஒரு முஸ்லிம் அந்தப்புரத்திற்குள் விடுவிடுவென்று நுழைந்தார். அவருக்கு ஆண், பெண், ஜாதி மதம் எந்த வித்தியாசமுமே கிடையாதே. யாரோ ஒரு ஆசாமி துணியில்லாமல் முஸ்லீம் அந்தப்புரம் உள்ளே நுழைந்து ஆகாரம் கேட்டது அந்த வீட்டு முஸ்லீம் பெண்களுக்கு கோபம் உண்டாக்கி விரட்டினார்கள்.
அவர் ஒன்றும் நடக்காதது போல் பேசாமல் உணவின்றி சென்றுவிட்டார். அன்று அவருக்கு உணவு காற்றும், காவேரி நீரும் தான். வேறு எங்கும் பிக்ஷை எடுக்க மாட்டாரே.
ஆகாரம் ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அந்த பெண்கள் முறையிட்டதால் கோபம் கொண்ட அந்த வீட்டுகார முஸ்லீம் சதாசிவ ப்ரம்மேந்த்ராளை தண்டிக்க கூரிய வாளோடு ஓடி வந்து அவரைத் தேடினான். அவர் எந்த சிந்தனையு மில்லாமல் காவிரிக்கரை நோக்கி நீர் பருக நடந்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு புது நாமாவளி அவர் வாயினின்றும் வெளி வந்து கொண்டிருந்தது. முஸ்லீம் அவரைப் பார்த்து விட்டு கடும்கோபத்துடன் கொண்டுவந்த கூர் வாளால் அவர் தோளை வெட்டி ஒரு கையை துண்டாக்கினான். தனது ஒரு கை வெட்டப்பட்டதையோ அது துண்டாகி கீழே ரத்த ஆற்றில் மிதந்த தையோ ஸ்வாமிகள் அறியவில்லை.
வலியோ பசியோ எதுவுமே இன்றி அவர் தானாக நடந்து சென்று கொண்டிருந்தார். முஸ்லீம் ஆச்சர்யத்தில் நடுங்கி விட்டான்.
”என்ன ஆச்சர்யம், இந்த மகான், என்னைப் பார்த்தார்,புன்னகைத்தார். நான் தோளை வெட்டினதை அறிந்தார், கை துண்டானது, கீழே ரத்தம் சொட்ட சொட்ட அவர் எதுவுமே நடக்காதது போல் பேசாமல் நடந்து போகிறாரே. இவர் மனிதனல்ல யாரோ ஒரு பெரிய மஹான்” என புரிந்து கொண்டு அவர் முன்னே ஓடிவந்தான். வணங்கினான்.
”சுவாமி என்னை மன்னியுங்கள், உங்கள் கரத்தை வெட்டின இந்த பாவிக்கு தண்டனை கொடுங்கள்”
அவர் காலில் விழுந்தான். அவர் அவனைப் புதிதாக பார்ப்பது போல் பார்த்து புன்னகைத்தார். கீழே விழுந்திருந்த வெட்டப்பட்ட கையை எடுத்து மரியாதையோடு அவரிடம் முஸ்லீம் கொடுத்தபொது அதை ஏதோ புதிய வஸ்து ஒன்றை பார்ப்பது போல் கவனித்தார். தனது தோளைத் தடவினார். ஓஹோ கை கீழே விழுந்ததோ என்று அதை எடுத்து தோளில் பொருத்தினார். கை மீண்டும் தானாகவே உடலோடு ஒன்று சேர்ந்துவிட்டது. இயங்கியது.

இந்த நிகழ்ச்ச்சியைப் படித்தபோது சுவாமி சிவானந்தாவை அது உலுக்கி ஆத்ம விசாரத்துக்கு இட்டுச் சென்றது என்று அவரே எழுதிஇருக்கிறதை படித்தேன்.
பிரம்ம ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராவின் ஒரு சிறந்த நூல் ஆத்ம வித்யா விலாச ஸ்லோகங்கள். அத்தனையும் தன்னை உணர்ந்தவன் பற்றியவையே. அதை எழுதி அதன் அர்த்தத்தையும் கொஞ்சம் சுருக்கி தர விரும்பினேன். ஐந்து ஐந்தாக தருகிறேன்.

श्रीसदाशिवेन्द्रसरस्वतीविरचितः अथ आत्मविद्याविलासः ।
चिन्मुद्रितकरकमलं चिन्तितभक्तेष्टदं विमलम् ।गुरुवरमाद्यं कञ्चन निरवधिकानन्दनिर्भरं वन्दे ॥
वटतरुनिकटनिवासं पटुतरविज्ञानमुद्रितकराब्जम् । कञ्चन देशिकमाद्यं कैवल्यानन्दकन्दलं वन्दे ॥ १॥
சிந்முத்³ரிதகரகமலம் சிந்திதப⁴க்தேஷ்டத³ம் விமலம் । கு³ருவரமாத்³யம் கஞ்சந நிரவதி⁴காநந்த³நிர்ப⁴ரம் வந்தே³ ॥ வடதருநிகடநிவாஸம் படுதரவிஜ்ஞாநமுத்³ரிதகராப்³ஜம் । கஞ்சந தே³ஶிகமாத்³யம் கைவல்யாநந்த³கந்த³லம் வந்தே³ ॥ 1॥

ஸ்ரீ சதாசிவ காமேஸ்வர தக்ஷிணாமூர்த்தி மௌனகுருவே . கல்லால மரத்தடி நிழலில் கொலுவுற்றிருப்பவரே, உன்னதமான மெய்ஞ்ஞான முத்திரை காட்டும் தாமரைக் கரங்களை கொண்ட பரமேஸ்வரா, மாசறு பொன்னே, ஆதி குருதேசிகரே, இரண்டற்ற கைவல்ய ஆனந்தத்தின் சிகரமே, நமஸ்கரிக்கிறேன். காய் விரல்களால் சின் முத்ரை அளிப்பவரே, பக்தர்கள் வேண்டுபவைகளை நிறைவேற்றுபவரே, பொன்னார்மேனியனே, எல்லையற்ற சத் சித்தானந்த ப்ரவாஹமே, உங்களை ஸாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.

निरवधिसंसृतिनीरधिनिपतितजनतारणस्फुरन्नौकाम् ।परमतभेदनघुटिकां परमशिवेन्द्रार्यपादुकां नौमि ॥ २॥
நிரவதி⁴ஸம்ஸ்ரு’திநீரதி⁴நிபதிதஜநதாரணஸ்பு²ரந்நௌகாம் । பரமதபே⁴த³நகு⁴டிகாம் பரமஶிவேந்த்³ரார்யபாது³காம் நௌமி ॥ 2॥

ஆதி குரு பரமேஸ்வரனை நமஸ்கரித்து உடனே தன்னுடைய குரு பரமசிவேந்திரரின் திருவடிகளுக்கு குருவந்தனம் செய்கிறார் சதாசிவ ப்ரம்மேந்த்ரா.
எல்லையில்லா, கரைகாணா, ஸம்ஸார சாகரத்தில் வீழ்ந்து அல்லல்படும் ஜனங்களைக் கரையேற்றும் பிரகாசமான படகாகவும் நற்கதிக்கு மாறான வீண்கருத்துக்களை அஞ்ஞானத்தை விலக்குபவருமான எனது குருநாதர் பரமசிவேந்திரரின் பாதுகைகளை நமஸ்கரிக்கின்றேன்.

देशिकपरमशिवेन्द्रादेशवशोद्बुद्धदिव्यमहिमाऽहम् । स्वात्मनि विश्रान्तिकृते सरसं प्रस्तौमि किञ्चिदिदम् ॥ ३॥
தே³ஶிகபரமஶிவேந்த்³ராதே³ஶவஶோத்³பு³த்³த⁴தி³வ்யமஹிமாऽஹம் । ஸ்வாத்மநி விஶ்ராந்திக்ரு’தே ஸரஸம் ப்ரஸ்தௌமி கிஞ்சிதி³த³ம் ॥ 3॥
என் அகக்கண்ணை திறந்து ஞானம் பெற பரமசிவேந்திர குருதேசிகரின் ஆக்ஞையால் விழிப்புணர்வுற்று தெய்வீக மகிமை பெற்ற நான், சுயம்பிரகாச ஆன்மாவான என்னுள் அமைதியாக ஆரவாரமின்றி ஆனந்தம் பெற உதவிய குருநாதர் அருளால் ஒருசில ஆனந்தமாக பயன் தரும் சில வார்த்தைகளை சொல்கிறேன்.

निरुपमनित्यनिरीहो निष्कलनिर्मायनिर्गुणाकारः । विगलितसर्वविकल्पः शुद्धो बुद्धश्चकास्ति परमात्मा ॥ ४॥
நிருபமநித்யநிரீஹோ நிஷ்கலநிர்மாயநிர்கு³ணாகார: । விக³லிதஸர்வவிகல்ப: ஶுத்³தோ⁴ பு³த்³த⁴ஶ்சகாஸ்தி பரமாத்மா 4.
4. தனக்கு நிகர் எதுவும் இல்லாததும், சாஸ்வதமானதும் நித்தியமானதும், காரியங்களற்றதும், பிளவுபடாததும், மாயைக் கலப்பற்றதும், (முக்)குணங்களற்றதும், வடிவமற்றதும், கற்பனைகள் முற்றிலும் அறவே நீங்கியதும், பரிசுத்தமானதும், அறிவாகவுமாக மேலான பரமாத்மா என்றும் பிரகாசமானது.

स्वाविद्यैकनिबद्धः कुर्वन्कर्माणि मुह्यमानः सन् ।दैवाद्विधूतबन्धः स्वात्मज्ञानान्मुनिर्जयति ॥ ५॥
ஸ்வாவித்³யைகநிப³த்³த:⁴ குர்வந்கர்மாணி முஹ்யமாந: ஸந் । தை³வாத்³விதூ⁴தப³ந்த:⁴ ஸ்வாத்மஜ்ஞாநாந்முநிர்ஜயதி ॥5॥
5. நாம் நம்மை யாரென்றே அறியாமல் நீண்டகாலம் அஞ்ஞானத்தில் வாழ்ந்து வீட்டில் பூச்சி போல் மறைபவர்கள். நம் ஸ்வரூபம் என்ன என அறியமுடியாமல் மாயை எனும் இருளில் துவள்கிறோம். அஞ்ஞானதால் பொய்யை ,மெய்யென நம்பி ஞானம் இருளில் மூழ்கி, மோகக் குழப்பத்தினால் பலவித தவறான காரியங்களில் ஈடுபடுபவரை தெய்வத்தின் அருளால் பந்தங்களிலிருந்து விடுபடச் செய்து உள்ளிருக்கும் ஆன்மஞான ஒளியில் பொலிவு பெற்று ஒளி பெற்றவர்கள் வாழ்வில் வெற்றி கண்டவர்கள்.
தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *