ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமாயண மஹா ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 
ராமாயண மஹா சமுத்திரம் கண்ணுக்கெட்டாத,   எல்லையில்லாத  பெரும் கடல்.   நடுவே  ஆங்காங்கே  பெரிதும் சிறிதுமாக  சில  தீவுகள்,   திட்டுகள்  தெரிகிறதே, அவை  தான்  ராமாயண கதா  பாத்திரங்கள்.   சில பெரியவை, சில சிறியன. சில முக்கியமானவை. சில அதி  முக்யமானவை.  அவற்றைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாமா?சிலது  ஒன்றோடொன்று இணைந்தும் எதிர்த்தும், வழி காட்டியும், உதவுபவை  சில  ஆசிர்வதிக்கிறது. சிலது சபிக்கிறதே.
ராமன் –   அயோத்தி இளவரசன்.  அவன்  மஹாவிஷ்ணுவின் அவதாரம். பெரிய தீவு.
ஹனுமான்:   வானர வீரன்  – சுக்ரீவனின் மந்திரி.   உண்மையில்  அது சிவ பெருமானின் அவதாரம். முக்கிய தீவு.
ராவணன் :  –  எவராலும் அழிக்கமுடியாத  லங்கையை  ஆண்ட  ராக்ஷஸ மன்னன் –  மூன்று ஜென்மங்களில்  உனக்கு எதிரியாகவே நான் இறந்து உன்னால் சம்ஹரிக்கப்பட்டு மோக்ஷம் செல்லவேண்டும், உன்னை மீண்டும் அடையவேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வரம் வாங்கிய அவருடைய வாயிற் காப்போர்கள்  ஜெய விஜயர்களில்  ஒருவன்.  ராவணன் ராமாயணத்தில் சிவபக்தனாக வருகிறான்.   ராமனைப் போலவே  இவனும்  ஒரு பெரிய தீவு.
சீதை –  ஜனகரின் பெண். அவள் ராமாயணத்தின் முக்கிய பாத்திரம்.  மஹா லட்சுமியே சீதையாக அவதரிக்கிறாள். முக்கிய தீவு.
லக்ஷ்மணன் –  ராமனின் நிழல் போன்ற சகோதரன்.   ஆதிசேஷன் அவதாரம்.  ராமாயணத்தில் தசரதனுக்கு சுமித்ரைக்கும் மகனாக பிறந்தவன்.  அவன் சகோதரன்  சத்ருக்னன்  முக்கியமான தீவுகள்.மற்ற முக்கிய தீவுகள் திட்டுகள் பெரிதும் சிறிதுமானவை.  தசரதன் – அயோத்தி மன்னன்.  அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டவன் என்று சொல்வார்கள்.  மூன்று மனைவிகள், கௌசல்யா, கைகேயி, சுமித்ரா
ஜனகன் –  மிதிலையின் அரசன் – சீதையின் தந்தை –
சுநயனா .  இவளைப்பற்றி அநேகருக்கு தெரியாது.  சீதையின் அம்மா.  ஜனகராஜாவின் மனைவி..
மாண்டவி  –  பரதன் மனைவி.  ஜனக ராஜா சகோதரன்  குஷத்வஜன்  பெண்ஊர்மிளா:   காரணமே இல்லாமல்  கணவன் லக்ஷ்மணனை 14 வருஷம் பிரிந்தும் ராமாயணத்தில் ஒரு வார்த்தையும் பேசாத  லக்ஷ்மணன் மனைவி.  சீதையின் தங்கை, ஜனக ராஜா பெண்.ஸ்ருத கீர்த்தி  – இன்னொரு  அபலைப் பெண். சத்ருக்கனன் மனைவி. இவளும் சீதையின் சகோதரி.
பரதன்-  தனக்கு தானே  தண்டனை கொடுத்துக் கொண்டு  மர உரி தரித்து  14 வருஷம் அயோத்தியை விட்டு விலகி ராமர் பாதுகையை அரசாள வைத்து  ராமன் வருகைக்கு காத்திருந்தவன்.  ராமனைப் போலவே  இவனும்  ஒரு  பெரிய  முக்ய தீவு.பரதனுக்கு ரெண்டு புத்ரர்கள். தக்ஷன், புஷ்களன்.சத்ருக்னன்-   ராமன்  சகோதரன்.   தசரதன்  சுமித்ரைக்கு பிறந்த  லக்ஷ்மணன் உடன் பிறப்பு.   பரதனோடு  இணைந்திருந்தவன். ஸ்ருத கீர்த்தி அவன் மனைவி.கைகேயி.   மிக  முக்கிய தீவு  இவள்.  ராமாயணத்தின்  காரண ஸ்த்ரீ  . தசரதனின் மூன்றாம் மனைவி. பரதனின் தாய்.  மந்தரை சொல் கேட்டு ராமனை 14 வருஷம் காட்டுக்கு அனுப்பியவள் .
மந்தரை  – கைகேயியின்  தாதி. கிழவி. கைகேயியை இயக்கிய  ராமனை வெறுத்த, கொடியவள்.சுமித்ரா –  தசரதனின்  ரெண்டாம் மனைவி.  லக்ஷ்மணன் சத்ருக்னன் தாய்.கௌசல்யா; –  ராமனின் தாய்.  தசரதனின் பட்டத்து மகிஷி. அருமையான பெண். முற்பிறவியில்  மனுஷத்தரூபா என்ற பக்தை. விஷ்ணுவை தனது தியாகத்தால்  மகிழ்வித்தவள்.மஹரிஷி  விஸ்வாமித்ரர் –  அருந்தவத்தால்  ப்ரம்ம ரிஷியானவர்.  இன்னும் அநேக தீவுகள் கண்ணில் படுகிறது.  அதையெல்லாம்  அடுத்த பதிவில் அறிவோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *