BAJAGOVINDAM SLOKAS 31 -32 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -31-32

31 अर्थमनर्थं भावय नित्यं नास्तिततः सुखलेशः सत्यम् । पुत्रादपि धन भाजां भीतिः सर्वत्रैषा विहिता रीतिः
arthamanarthaM bhaavaya nityaM naastitataH sukhaleshaH satyam. putraadapi dhana bhaajaaM bhiitiH sarvatraishhaa vihiaa riitiH ..
அர்த்தமனர்த்தம் பாவய நித்யம் நாஸ்திதத: சுகலேஸ: சத்யம் புத்ராதபி தன பாஜாம் பீதி: சர்வத்ரைஷா விஹித ரீதி :

‘ஹே ஞாபகமில்லாத மனிதா ஒளவைக் கிழவி கூழைக் குடித்துவிட்டு கூவிக் கூவி உன்னைக்கூப்பிட்டு காதில் ஓதியதை நினைத்துப்பார்;

‘’ பாடு பட்டு பணத்தைத் தேடி புதைத்து வைத்த
கேடு கேட்ட மானிடரே கேளுங்கள். கூடுவிட்டு
ஆவி தான் போனபின்னே யார் தான் அனுபவிப்பார்
பாவிகளே அந்தப் பணம்”.

பணம் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தல்ல. அதை அதிகரிக்கும் விஷம். அடிக்கடி இதை நினைவூட்டிக்கொள் . பணத்தை தானே எங்கோ வைத்துவிட்டு பணக்காரன் தனது பிள்ளையைக்கூட சந்தேகிப்பான்.

ஒரு பெரிய பரம்பரை தனவான், வளர்த்த பிள்ளையோடு தகராறில் சந்தி சிரித்து பல வருஷங்கள் கோர்ட் படி ஏறி அவதிப் பட்டானாம். பல வருஷங்களுக்கு முன்பு பேப்பரில் வந்த விஷயம் இது.

பணம் அதிகமாக உள்ளவனுக்கு பிள்ளையால் பெண்ணால் ஏன் மனைவியால் கூட அவனது உயிருக்கு ஆபத்து வரும் தீங்கு நேரும் என்று இரவு பகல் தூங்கமாட்டான். பணம் பத்தும் செய்யும் அல்ல. பலதும் செய்யும். விடாதே தேடு அந்த கோவிந்தனை அவன் தான் உனக்கு மருந்து.

32. प्राणायामं प्रत्याहारं नित्यानित्य विवेकविचारम् । जाप्यसमेत समाधिविधानं कुर्ववधानं महदवधानम् ॥ ३०॥

praaNaayaamaM pratyaahaaraM nityaanitya vivekavichaaram.jaapyasameta samaadhividhaanaM kurvavadhaanaM mahadavadhaanam

பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் நித்யாநித்ய விவேகவிசாரம்ஜா�ப்ய சமேத சமாதி விதானம் குர்வவதானம் மஹதவ தானம்

Regulate the pranas, remain unaffected by external influences and discriminate between the real and the fleeting. Chant the holy name of God and silence the turbulent mind. Perform these with care, with extreme care.

யோகம் முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி தான். மூச்சைக் கட்டுப் படுத்தி சுவாச பந்தனம் பண்ணுபவன் தான் புலன்களின் எஜமானன். மூச்சுக்கு இங்கிலீஷில் BREATH என்று பெயர். ஒரு மனிதன் இறந்து போனால் வெள்ளைக்காரன் HE BREATHED HIS LAST என்று சொல்கிறோம் . ஒவ்வொருவனுக்கும் இத்தனை மூச்சுகள் என்று ஒரு அளவோடு நாம் இந்த உலகத்துக்கு அனுப்பப்படுகிறோம். அந்த மூச்சுக்களை எப்படி செலவழிக் கிறோம்? சீக்கிரம் காலி பண்ணுபவன் சீக்கிரம் மறைகிறான். மூச்சை அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக காசு மாதிரி பார்த்து பார்த்து செலவழிப்பவன் நீண்ட காலம் வாழ்கிறான். ஸ்வாஸ பந்தனம் எனும் மூச்சைக் கட்டுப்படுத்துவது தான் யோகம். அது தான் புலன்களை அடக்கி ஆள்பது. இதை கடைப்பிடிப்பவன் ஜிதேந்
த்ரியன். இந்திரியங்களை ஜெயித்தவன். எது இருப்பது, எது பறப்பது என்று நன்றாக அறிபவன். எதை பிடிக்க வேண்டும் எதை விடுக்க வேண்டும் என்ற ஞானம் உள்ளவன். கோவிந்தனை உள்ளே இருத்தி, அவன் நாமம் பஜித்தால் உன் மனம் ‘ஆடாது, அசங்காது, வா கண்ணா’ என்று அவனைத் தேடும். மூச்சைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று மூச்சை ஒரே அடியாக விட்டு விடாதே. முழுதுக்குமே மோசமாகிவிடும். விஷயம் தெரியாமல் பிராணாயாமம் பண்ணுவது ஆழம் தெரியாமல், நீந்தத் தெரியாமல் பாசி பிடித்த குளத்தில் மூழ்குவது போல.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் மனதை அடக் காததால் தான் எல்லாவித கஷ்டங்களும் உண்டாகின்றன,மற்றும், பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனதுதான் காரணம் என்று அறிகிறோம்.

ப்ராணாயாமம், ப்ரத்யாஹாரம், ஸமாதி – யோகம் என்பது எட்டு அங்கத்தை உடையது. மேற்கூறியவை அந்த எட்டில் மூன்று அங்கமாகும். யோகம் என்றால் மனதை நிறுத்துதல் என்று பதஞ்சலி யோக சூத்திரத்தில் சொல்லுகிறார். நமக்கு மனதை அடக்க முடியாததால் எல்லாவித கஷ்டங்களும் உண்டாகின்றன. பந்தத்திற் கும் மோக்ஷத்திற்கும் மனதுதான் காரணம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1403

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *