BAJAGOVINDAM J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 25-26

कस्त्वं कोऽहं कुत आयातः,का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम्, विश्वं त्यक्त्वा स्वप्न विचारम् ॥२३॥

‘kastvaM ko.ahaM kuta aayaataH kaa me jananii ko me taataH iti paribhaavaya sarvamasaaram. vishvaM tyaktvaa svapna vichaaram..

கஸ்த்வம் கோஹம் குத ஆயாது காமே ஜனனீ கோ மே தாத; இதத் பரி பாவய சர்வமசாரம் விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்னவிசாரம்

இந்த அசாத்தியமான ஸ்லோகத்தின் சிருஷ்டி கர்த்தா ஆதிசங்கரரின் சிஷ்யர் சுரேந்த்ரர்.
”அப்பனே, யாரப்பா நீ? உன்னை யாரென்று கேட்கும் நானே யார் என்று எனக்கு தெரியவில்லையே! நாம் இருவருமே எங்கிருந்து வந்தவர்கள்? அம்மா யார்? அப்பா தான் யார்? இந்த கேள்விகளை மூச்சு விடாமல் கேட்டுக்கொண்டே வருவோம்? எதுவுமே சாரமற்றது! ”உலகே மாயம், வாழ்வே மாயம், நிலையாக நாம் காணும் சுகமே மாயம்.” கண்டசாலா இந்த தத்து வத்தை உணர்ந்து தான் ஒருவேளை அப்படி இருமிக்கொண்டே பாடினாரோ?

உலகும் அதைச் சார்ந்ததும் நொடியில் மறையும் கனவு. இந்த எண்ணம் தோன்றினால் தான் வழி பிறக்கும். அதற்கு துணையாக அவனை, அந்த கோவிந்தனை பாடு. பஜி. நல்வழி உனக்கு தெரியுமே.

26. शत्रौ मित्रे पुत्रे बन्धौ मा कुरु यत्नं विग्रहसन्धौ । सर्वस्मिन्नपि पश्यात्मानं सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ॥

shatrau mitre putre bandhau maa kuru yatnaM vigrahasandhau sarvasminnapi pashyaatmaanaM sarvatrotsRija bhedaaGYaanam.

சத்ரொவ் மித்ரே புத்ரே பந்து மாகுரு யத்னம் விக்ரஹசந்தொவ் சர்வஸ் மின்னபி பஸ்யாத் மானம் சர்வத்ரோத் ச்ரிஜ பேதாஞானம்

மேதாதி தீரர் என்கிற ஆதி சங்கரரின் சிஷ்யர் இயற்றிய ஒரு பஜகோவிந்த ஸ்லோகம் இதற்கு முன்பு பார்த்தோம்,இன்று அவரது மற்றுமொரு ஸ்லோகம் ரசிப்போம் ருசிப்போம். அதி வேதாவி. அதி தீரராக இருக்கிறார் இந்த சிஷ்யர். இது உலக நீதி அறிய உதவும் சிறந்த ஒரு ஸ்லோகம்.

உறவினர், நண்பர், சொந்தம், பந்தம், குழந்தைகள், பெரியோர் என்று நிறைய பேர் நம் எல்லாருக்குமே நம்மை சுற்றி இருக்கிறார்கள். கூடவே நம்மைப் பிடிக்காத, நமக்குப் பிடிக்காத, என்று சிலரை வேறு எதிரிகளாக காண்கிறோமே. அவர்களும் நம்மை சுற்றி உள்ளவர்கள் தான். நாம் எல்லோரையுமே சமமாகவே பார்க்க முயற்சிப்போம். அவர்கள் எல்லோரும் வேறு யாருமில்லை நாமே என்றால் அப்புறம் ரெண்டாவது ஆள் எங்கே? நாமே எப்போதும் ஒரே மாதிரி இல்லையே, சில சமயம் சிலரிடம் நல்லவர்களாக இருக்கிறோம், அடுத்தகணம் குணம் மாறிவிடுகிறதே, வள்ளென்று சிலர் மேல் விழுகிறோம். இரக்க மில்லா மல் சிலரை விரட்டி அடிக்கிறோம். ஏன்? நம்முள் வளரும் அகம்பாவம்.
நாமே அனைவரும் என்ற எண்ணம் நிலைத்துவிட்டால், ஒருவரே அனைவரும் ஆகிவிட்டால் பேதம் எங்கிருந்து வரும். கோவிந்தா உன் நாமம் நல் வழி காட்டட்டும். மனம் இனிக்க வாய் விட்டு சொல்வோம் ”ஹே கோவிந்தா”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *