TIRUPUR SIVALAYAM J K SIVAN

திருப்பூரில் ஒரு அதிசயம். – நங்கநல்லூர் J K SIVAN
நான் என் உறவினர் ஒருவர் வசித்த காலத்தில் திருப்பூர் அடிக்கடி சென்றிருக்கிறேன். அங்கேயும் அடுத்த சில ஊர்களிலும் உள்ள சிவன் பெருமாள் முருகன் கோவில்களை அவர்களோடு சென்று தரிசித்திருக் கிறேன்.
ஆனால் சமீபத்தில் நான் அறிந்த ஒரு ஆலயம் பற்றி எவரும் எனக்கு தெரிவிக்க வில்லை, நானும் அறிய வில்லை. இனி திருப்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நேரில் சென்று தரிசிக்க ஆவல்.
அந்த ஆலயம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பழைய கோவில். அதி நவீன விஞ்ஞான தொடர்பு கொண்ட பனியன் தொழிற்சாலைகள் நிரம்பிய திருப்பூரில் பழங்கால சிவாலயம் ஒன்று இருப்பதை ஏனோ மறந் திருக்கிறோம். எது கண்ணை மறைத்தது.? ஒரு காலத்தில் சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் இருந்த ஊர் இது.
சுக்ரீஸ்வரர் இந்த 10ம் நூற்றாண்டு சிவாலயத்தில் மூலவர். அம்பாள் ஆவுடை நாயகி. இந்த பழங்காலத்
து சிவாலயம் உள்ளூர்காரர்களிலேயே பலருக்கு தெரி யாது போல் இருக்கிறதே. சர்க்கார் பெரியபாளையம் என்ற ஊரில் இருக்கிறதாமே . அந்த பேரே நான் இத்த னை வருஷமாக அங்கே சென்றபோது எவரும் என் காதுபட பேசவில்லை என்பது எனது துர்ப்பாக்கியமே. திருப்பூர் -ஈரோடு ஊத்துக்குளி சாலையில் பல தடவை காரில் போயிருக்கிறேன். திருப்பூரிலிலுருந்து 8 கி.மீ. தூரம். நான்கு கொங்கு நாட்டு சிற்ப ஸ்தலங்களில் ஒன்றாம் இந்த ஆலயம்.
தொல்பொருள் ஆராய்ச்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த ஆலயத்தை பாண்டியர்கள் கட்டியிருக் கிறார்கள். புராதன சின்னமாக இதை பாதுகாத்து வருகிறது மத்ய அரசாங்கம். அருமையான சிற்பக் கலை நிறைந்த ஆலயம். பாண்டிய வம்ச அடையாளம் தெரிகிறது. ஆலயத்திற்கு ரெண்டு விமானம். சிவனுக்கு ஒன்று அம்பாளுக்கு ஒன்று. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி. மூலவர் சந்நிதி மேல் கோபுரம் இருந்தால் அது சோழர்கள் கட்டியது என்று சொல்ல லாம்.சிவன் சந்நிதிக்கு எதிரே ரெண்டு நந்திகள் இங்கே. ஒன்றன் பின் ஒன்றாக. இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் இருக்கிறது. மூன்று வெளியில். ஒன்று சந்நிதியில். இன்னொன்று கண்ணுக்கு தெரியாமல் எங்கோ என்கிறார்கள். வழக்கமாக கிழக்கு வாசல், பார்த்திருக்கும் சிவாலயங்கள் போல் இல்லாமல் இது தெற்கு பார்த்த வாசல் கோவில்.
இங்கே தீபஸ்தம்பம் இல்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.
கோவிலுக்கு வடக்கு சுவற்றில் ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டு எழுத்துகள் புரியாமல் காணப்படுகிறது. அக்காலத்து காட்டுவாசிகள் வழிபட்ட ஆலயம் போல இருக்கிறது.
இந்த கோவில் தலபுராணம் என்ன சொல்கிறது என் றால், இந்த கோவில் நந்தி ராத்திரி வேளையில் எழுந்து வெளியே ஊருக்குள் இருக்கும் வயல்களில் உள்ள பயிர்களை மேயுமாம்.
ஒரு இரவில், ஒரு விவசாயி தூங்காமல் யார் தனது பயிரை அழிப்பது என்று காத்துக்கொண்டிருந்தவன் கண்ணில் நந்தி பட்டுவிட்டதாம். ”ஆஹா இந்த திருட்டு மாடு அல்லவோ நான் பாடுபட்டு விளைத்த பயிரை இன்று விடிகாலையிலோ நேற்று ராத்திரியோ மேய்ந் திருக்கிறது” என்று அந்த மாட்டைப் பிடித்து, அதன் வலது கொம்பையும் வலது காதையும் கூரான கத்தி யால் வெட்டி விட்டான். மாடு ரத்தம் சொட்ட ஓடிவிட் டது.அவன் மற்ற விவசாயிகளிடமும் ஊர் மக்களிடமும் தான் திருட்டு மாடு ஒன்றை கையும் களவுமாக பிடித்த தாகவும் அதன் ஒரு கொம்பு, காதை வெட்டிவிட்டேன், அது ஓடிவிட்டது” என்று சொன்னான். அதை யாரும் அப்புறம் ஊரில் எங்கும் பார்க்கவில்லை.
அந்த ஊர் மக்களில் விவசாயிகளில் அநேகர் சிவபக்தர் கள். அவர்கள் சிலர் மறுநாள் கோயிலுக்கு சென்ற போது சிவன் முன்னால் அமர்ந்துள்ள நந்திக்கு ஒரு காதும்,கொம்பும் காணோம், உடலில் ரத்தம் வழிந்தது என்று சொன்னபோது ஊரே திரண்டது. காதை கொம்பை வெட்டிய விவசாயிக்கு திடுக்கிட்டது. என்ன அபராதம் செய்து விட்டேன் என்று அலறினான். கையிலிருந்த பணம்,கடன் வாங்கியது என்று சேர்த்து ஒரு நந்தி ஒன்று புதிதாக கல்லில் செதுக்கச் செய்து அதை பழைய நந்தியை எடுத்துவிட்டு அங்கே புதிய நந்தியை பிரதிஷ்டை செய்ய ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள். பழைய நந்தியையும் புதிய நந்தியை யும் இருக்கும் இடம் விட்டு எவராலும் அசைக்கவே முடியவில்லை.
அன்று கனவில் அர்ச்சகருக்கு ஈஸ்வரன் கட்டளை யிட்டார்:”பழைய நந்தியோடு புதிய நந்தியும் இருக்கட் டும்”அன்று முதல் இன்றுவரை இந்த கோவிலில் ரெண்டு நந்தி, முதல் நந்திக்கு ஒரு காது,. கொம்பு இல்லை .அதற்கு மேல் காரணம் கேட்காதீர்கள். பொய் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கும். எனக்கு தெரியாதே.
கோவிலை சுற்றி மதில் சுவர் உயரமாக எழும்பி இருக் கிறது. பெரிய அரசமரம். நுழைந்தவுடன் விநாயகர் சந்நிதி. அப்புறம் அம்பாள் அப்புறம் சிவன். நிறைய காலி இடம் இருக்கிற விஸ்தாரமான ஆலயம். இப்போது கிழக்கு தெற்கு ரெண்டு வாசல்கள். கர்பகிரஹம் இருட்டாக இல்லை. பளிச்சென்று வெளிச்சத்தோடு இருக்கிறது. தெற்கு வாசல் புராதனமானது. சுக்ரீவன், ஐராவதம் பூஜை பண்ணிய ஸ்தலம். என்பதால் சிவனுக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர்.வெளிச்சுவர்களில் அற்புத சுதை சிற்பங்கள். தக்ஷிணாமூர்த்தி சந்நிதி. மயில் சிற்பங்கள். அழகான சிற்ப தூண்கள். கல்வெட்டு எழுத்துக்கள் கன்னடமா தெலுங்கா, பழைய தமிழா, ஈஸ்வரனுக்கு தான் வெளிச்சம். எழுத்துக்கள் சிதைந் துள் ளன. நம் ஆட்கள் எப்போது என்ன பண்ணினார் களோ?அம்பாள் எதிரிலும் ஒரு நந்தி.குட்டி குட்டியாக வாயு லிங்கம், குபேர லிங்கம், துர்கை , சூர்யன், கால பைரவர், பத்ரகாளி சந்நிதிகள், கோஷ்டத்தில்.
அடுத்த முறை திருப்பூர் சென்றால் கட்டாயம் சென்று பார்ப்பேன். உங்களில் யாராவது கூட்டிச் சென்றாலும் சந்தோஷமாக வருவேன். சேர்ந்து சுக்ரீஸ்வரரையும், அம்பாளையும் இரு நந்திகளோடு சேர்ந்து கண்குளிர தரிசிப்போம்.எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்.
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *