DURGA PANCHARATHNAM composed by MAHA PERIYAVA J K SIVAN

மஹா பெரியவா அருளிய
துர்கா பஞ்சரத்னம். நங்கநல்லூர் J K SIVAN

இன்று வெள்ளிக்கிழமை. அம்பாளுக்கு உகந்த நாள். மஹா பெரியவா காமாக்ஷி ஸ்வரூபம். அவர் ஸ்வேதஸ்வதார உபநிஷத்தை உள்ளடக்கி துர்கா தேவி மேல் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் தான் துர்கா பஞ்சரத்னம். இதை எப்படி எந்த சந்தர்ப்பத்தில் மஹா பெரியவா உடனே இயற்றினார் என்பதை இதற்கு முந்தைய பதிவில் வெளியிட்டிருந்தேன். ஞாபகம் இருக்கிறதா?

ते ध्यानयोगानुगत अपश्यन् त्वामेव देवीं स्वगुणैर्निगूढाम् । त्वामेव शक्तिः परमेश्वरस्य माम् पाहि सर्वेश्वरी मोक्षदात्री ।।1।।

Thwameva Devim swagunir nekutam Thwameva Sakthi Parameshwarisya Mam pahi sarveshwari Moksha datri. 1

தே த்⁴யானயோகா³னுக³த அபஶ்யன்-த்வாமேவ தே³வீம்ʼ ஸ்வகு³ணைர்னிகூ³டா⁴ம் | த்வாமேவ ஶக்தி: பரமேஶ்வரஸ்ய மாம் பாஹி ஸர்வேஶ்வரீ மோக்ஷதா³த்ரீ || 1

1. அம்பா, த்யானத்தில் ஈடுபடுவோருக்கு, யோகத்தை அனுஷ்டிப்போருக்கும் நீ ஒருவளே லக்ஷியம். இந்த பிரபஞ்சத்தையே இயக்க்கும் நாயகரையே அசைப்பவள் நீ .சர்வசக்தி. உன்னை சரணடைந்த என்னை ரக்ஷிக்க வேண்டும். மோக்ஷம் அளிக்க வேண்டும்.

देवात्म शक्तिः श्रुति वाक्य गीता महर्षिलोकस्य पुरः प्रसन्ना । गुहा परम् व्योम सद प्रतिष्ठा माम् पाहि सर्वेश्वरी मोक्षदात्री ।।2।।
Devatma sakthi sruthivakya gita Maharshilokasya pura prasanna Guha param vyoma sada prathista Mam pahi sarveshwari Moksha datri. 2

தே³வாத்ம ஶக்தி: ஶ்ருதி வாக்ய கீ³தா மஹர்ஷிலோகஸ்ய புர: ப்ரஸன்னா | கு³ஹா பரம் வ்யோம ஸத³ ப்ரதிஷ்டா² மாம் பாஹி ஸர்வேஶ்வரீ மோக்ஷதா³த்ரீ || 2||

அம்பா, நீ தான் வேதங்கள் முழங்கும் தெய்வீக ஞான காரணி, சகல ரிஷிகளும் போற்றிப்பாடும் வேதஸ்வரூபிணி, அவர்கள் ஹ்ருதயத்தில் ஒளி வீசும் சத்யஸ்வரூபிணி, நீ என்னையும் ஏற்று ரக்ஷிக்க வேண்டும் அம்மா.

3.परास्य शक्तिहि विविधैव सूर्यसे श्वेताश्व वाक्योथितदेवि दुर्गे । स्वाभाविकी ज्ञान बल क्रीया ते माम् पाहि सर्वेश्वरी मोक्षदात्री ।।3।।
Paraasyasakthi vividaiga sruyasay Swethashwa vakyothitha devi durge Swabavikii gyana palakriya Mam pahi sarveshwari Moksha datri. 3

பராஸ்ய ஶக்திஹி விவிதை⁴வ ஸூர்யஸே ஶ்வேதாஶ்வ வாக்யோதி²ததே³வி து³ர்கே³ | ஸ்வாபா⁴விகீ ஜ்ஞான ப³ல க்ரீயா தே மாம் பாஹி ஸர்வேஶ்வரீ மோக்ஷதா³த்ரீ || 3||

அம்பா நீ தான் பரமேஸ்வரனின் சர்வ சக்தியே. பரா சக்தியில் பரா நீ தானே. உன்னைத்தானே அம்மா எல்லா பக்தர்களும் விதவிதமான நாம ரூபங்களில் போற்றி வணங்குகிறார்கள். ஸ்வேதாஸ்வர உபநிஷத்தின் நாயகி நீ தானே. சகல வேத சாஸ்திர ஞானத்தின் உட்பொருள் நீ தானே. என்னை ரக்ஷித்து மோக்ஷம் அருள்வாயாக.

4. देवात्म शब्देन शिवात्म भूता यत् कूर्म वायव्य वचो विवृत्य त्वम् पाश विच्छेद करि प्रसिद्धा माम् पाहि सर्वेश्वरी मोक्षदात्री ।।4।।
Devatma Sabdena shivatma putha Yathkoorma vayavya vacho vivruthya Thwam pasa vichhethakari prasidda Mam pahi sarveshwari Moksha datri. 4

தே³வாத்ம ஶப்³தே³ன ஶிவாத்ம பூ⁴தா யத் கூர்ம வாயவ்ய வசோ விவ்ருʼத்ய த்வம் பாஶ விச்சே²த³ கரி ப்ரஸித்³தா⁴ மாம் பாஹி ஸர்வேஶ்வரீ மோக்ஷதா³த்ரீ || 4||

சர்வேஸ்வரனின் ஆத்ம சப்தம் நீ தான் அம்மா. வேதங்கள் உன்னை தான் குண்டலினி சக்ரங்களில் அனாஹத சக்ரத்தின் ஆதார சப்தமாக சக்தியாக போற்றுகிறது. உலக ஈர்ப்புகளின், பிடிப்புகளிலிருந்து கட்டுக்களிலிருந்து விடுபட செய்கிறது. ரக்ஷித்து மோக்ஷமளிப்பாயாக.

त्वम् ब्रह्म पुच्छा विविधा मयूरी ब्रह्मा प्रतिष्ठासि उपदिष्ट गीता ज्ञान स्वरूपा आत्मतया किलानाम् माम् पाहि सर्वेश्वरी मोक्षदात्री ।।5।।

Thwam brahmma puchha vivetha mayuri Brahmma prathishtasupathishta gita Gyna swarupatmathaya kilanaam Mam pahi sarveshwari moksha datri. 5

த்வம் ப்³ரஹ்ம புச்சா² விவிதா⁴ மயூரீ ப்³ரஹ்மா ப்ரதிஷ்டா²ஸி உபதி³ஷ்ட கீ³தா ஜ்ஞான ஸ்வரூபா ஆத்மதயா கிலானாம் மாம் பாஹி ஸர்வேஶ்வரீ மோக்ஷதா³த்ரீ || 5||

அம்பாள் மயில் வடிவானவள். கற்பகாம்பாளாக அவள் உறையும் கபாலீஸ்வரத்தின் பெயரே மயிலார்ப்பூர் தானே. மயூரி. பிரம்ம சக்தி. சக்தி சக்திமதோ அபேதத். “Shakti Shaktimatoh Abhedat” சக்தியும் சக்தி உடையவனும் ஒன்றே தானே. நீயே அது, அதுவே நீ. தத் த்வம் அஸி. சர்வேஸ்வரி உண்ணப்படும் என்னை ரக்ஷி, மோக்ஷம் அளி .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *