krishnashtakam j k sivan

கிருஷ்ணாஷ்டகம் நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

वसुदॆव सुतं दॆवं कंस चाणूर मर्दनम् । दॆवकी परमानन्दं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥१॥
Vasudeva Sutham Devam Kamsa Chaanoora Mardhanam Devaki Paramaanandham Krishnam Vande’ Jagathgurum ||
‘வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் | தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

” என்ன சொல்கிறார் ஆதி சங்கரர்? எல்லா லோகங்களிலும் கிருஷ்ணன் தான் ஜகத்குரு. ஏனென்றால் அவன் தானே ஜகத் காரணன்! ஹே! கிருஷ்ணா, தேவகி வசுதேவருக்கு மட்டுமே கண்ணுக்கு கண்ணாகப் பிறந்தவனா நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை நெருங்கும் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் அல்லவோ நீ சொந்தம்! தேவகிக்கு மட்டுமா நீ பரம ஆனந்தம் ? எங்கள் சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால் தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர் நிறுத்திக் கொண்டிருக்கிறார். கம்சன், சாணூரன் என்று வெளியே உலவிய அரக்கர்களை கொன்றது போதாது. அவர்களைக் காட்டிலும் பலம் வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம், மோகம், மதம் என்றெல்லாம் பெயரோடு எங்களுக்குள்ளே மறைந்திருக்கிறார்களே. அவர்களையும் மர்த்தனம் செய்யேன்? ஏன் இன்னும் டிலே DELAY பண்ணுகிறாய்?’

2 अतसी पुष्प सङ्काशं हार नूपुर शॊभितम् ।रत्न कङ्कण कॆयूरं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥२॥
Adhasee Pushpa Sankaasam Haara Noopura Sobhitham |Rathna Kangana keyooram Krishnam Vandhe’ Jagathgurum ||
அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார னூபுர ஶோபிதம் |ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

‘அழகுக்கு அழகாய், மலர்களைத் தூவி, மாலை கட்டி , சூட்டி, கையில் காலில் எல்லாம் பளபளக்கும் தங்க வைர நவமணியாலான நகைகள் பூட்டி, மரகத, மாணிக்க வைர வைடூர்ய கற்கள் பதித்த கைவளைகள் குலுங்க ஒரு அழகான கஷ்க் முஷ்க் குழந்தையைக் கண்டு விட்டால் எந்த மனம் தான் கொள்ளை போகாது? எங்கள் மனம் மட்டும் என்ன கல்லோ? கிருஷ்ணா, உன்னை நாங்கள் எங்கள் இதயத்தில் பூட்டி வைத்துள்ளோம் — சிக்கெனப் பிடித்தோம்.நீ இனி தப்பியோட முடியாது!’

कुटिलालक संयुक्तं पूर्णचन्द्र निभाननम् ।विलसत् कुण्डलधरं कृष्णं वन्दॆ जगद्गुरम् ॥३॥
Kutilaalaka Samyuktham Poorna Chandra Nibhaananam |Vilasath Kundala tharam Krishnam Vandhe’ Jagathgurum ||
‘குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்தர னிபானனம் |விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

”குட்டி கிருஷ்ணா, மூர்த்தி சிறிதானாலும் உன் கீர்த்தி பெரிது, நீ ஜகத் குரு , உன் கரிய, சுருண்ட, கேசத்தை, வர்ணிப்பதா, காதில் ஆடும் குண்டலத்தை மெச்சவா? பூரண சந்திரன் தோற்கும் பிரசன்ன முக மண்டலத்தைப் பாடுவதா? ஒன்றுமே தெரியாததால் பேசாமல் இருந்து வெறுமே கை கூப்பி உன் காலடியில் விழுந்து என்னை உனக்கு அர்ப்பணிக்கிறேன்.

मन्दार गन्ध संयुक्तं चारुहासं चतुर्भुजम् ।बर्हि पिञ्छाव चूडाङ्गं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ४ ॥
Mandhara Gandha Samyuktham Chaaru-haasam Chathur-bhujam; |Parhipinjaa Vasoodaangam Krishnam Vandhe’ Jagathgurum ||
மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் |பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

‘ஹே, லோக சம்ரக்ஷண மூர்த்தி, ஜகத்குரு, எங்கிருந்து கற்றாய், உன் அழகிய மயில் பீலியை சூட? அதனால் உன் புன்சிரிப்பின் அழகு கூடியதா? அல்லது உன்னைச் சுற்றி கமகமக்கும் நீ சூடிக் கொண்டிருக்கும் மந்தார புஷ்பம் தான் எங்களது மனத்தைக் கொள்ளை கொண்டதா? யாருக்கையா விடை தெரியும் ? சந்தோஷத்தை அனுபவிக்க தான் தெரியுமே தவிர காரணம் யாருக்கு வேண்டும்?

उत्फुल्ल पद्मपत्राक्षं नील जीमूत सन्निभम् ।यादवानां शिरॊरत्नं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥५॥
Utphulla padma patraksham Neelajeemuta sannibham Yadavaanaam siro-ratnam krishnam vande jagadgurum (5)
உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிபம் | யாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்||

ஆதி சங்கரரால் தான் இப்படி யெல்லாம் வர்ணிக்கமுடியும். சாதாரணன் எடுத்துச் சொல்ல முடியுமா? கிருஷ்ணா, உன் கண்களோ அன்றலர்ந்த தாமரை மொட்டுக்கள், உனது தேஹ நிறமோ, நீலமேகஸ்யாமம். யாதவ குல திலகமே ! நீ பக்தர் குலத்திற்கும் ஜகத்திற்கும் தலைவன், தெய்வம், குரு அல்லவா?

रुक्मिणी कॆलि संयुक्तं पीताम्बर सुशॊभितम् । अवाप्त तुलसी गन्धं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥६॥
Rukminikeli samyuktam peetambhara susobbhitam Avaapta tulasi gandham krisham vande jagadgurum (6)
ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |அவாப்த துளஸீ கந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

சங்கரர் துவாரகை கிருஷ்ணனை நினைவு கூறுகிறார். அவர் கண்களில் யார் படுகிறார்கள்? ருக்மணியுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் மாய க்ரிஷ்ணன். அவனது மஞ்சள் நிற பட்டாடை கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறதே. அவர்கள் இருக்கும் அந்த பகுதியே துளசியின் ஈடற்ற நறுமணத்தை காற்றில் பரப்பி நெஞ்சை நிரப்புகிறதே. கிருஷ்ணா உனக்கு நமஸ்காரம்)

गॊपिकानां कुचद्वन्द कुङ्कुमाङ्कित वक्षसम् । श्रीनिकॆतं महॆष्वासं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥७॥
Gopikaanam kuchadwandwa kumkumamkita vakshasam
Sri niketham maheshvasam krisham vande jagadgurum (7)
கோபிகானாம் குசத்வந்த குங்குமாங்கித வக்ஷஸம் ஶ்ரீநிகேதம் மஹேஷ்வஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

கோபி கிருஷ்ணா,உன்னைச் சுற்றிலும் எங்கும் உபநிஷத்துக்களே உருவெடுத்த கோபிகள், மார்பில் ஸ்ரீ (லக்ஷ்மி)யை குடிகொண்ட ஸ்ரீ நிவாசா, உன் கையில் என்ன ஒரு வில், அதற்குப் பெயர் தான் சார்ங்கமா? அதனால் தான் உலகை ரக்ஷிக்கும் நீ சாரங்கபாணியா ?

श्रीवत्साङ्कं महॊरस्कं वनमाला विराजितम् ।शङ्खचक्र धरं दॆवं कृष्णं वन्दॆ जगद्गुरुम् ॥८॥
Srivatsankam mahoraskam vanamala virajitam Sankhachakra-dharam devam krisham vande jagadgurum (8)
ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |ஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

லோகநாயகா, சாஷ்டாங்க நமஸ்காரம் உனக்கு. அதென்ன உன் மார்பில் ஏதோ பளிச்சிடுகிறது? ஒ, அது ஸ்ரீ வத்ஸம் அல்லவோ, இப்போது புரிகிறது. ஆம் அதுவே தான், வண்ண மலர் மாலை களுக்கிடையே கண்ணில் தோன்றி மறைகிறது. . உன்னுடைய காம்பீர்யம், அழகு, நேர்த்திக் கெல்லாம் ஒரு விதத்தில் உன் கரங்களில் மிளிரும் பாஞ்சஜன்யம் என்கிற நாமம் கொண்ட சங்கமும், சுதர்சனம் என்கிற சக்ரமும் கூட என்று யார் வேண்டுமானாலும் யோசிக்காமல் சொல்ல முடியும்.

कृष्णाष्टक मिदं पुण्यंप्रातरुत्थाय यः पठेत्। कोटिजन्म कृतं पापंस्मरणेन विनश्यति॥
கிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||

ஆதி சங்கரர் இந்த கிருஷ்ணாஷ்டகத்தை சும்மா விருதாவாக எழுதிவிட்டு அதோடு விடவில்லை. டாக்டர் மருந்து பெயர் மட்டும் எழுதி கொடுக்காமல் அதை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்வது போல இந்த கிருஷ்ணாஷ்டகம் எட்டையும், காலை பொழுது விடிந்தவுடன், எவன் விடாமல் சொல்கிறானோ, பஜிக்கிரானோ அவனுடைய சொல்லொணா ஜன்மங்களில் எல்லாம் செய்து சேர்த்து வைத்திருக்கும் சகல பாபங்களும் ”சட்” எனத் தீரும் என்கிறார். நினைத்தால் போய்விடும் என்கிறார்.
ஆதி சங்கரரே அடித்துச் சொன்ன பிறகு நமக்கேன் தயக்கம்? எங்கே க்ரிஷ்ணாஷ்டகம்? என்று தேடி, பிடித்து படித்து மனப்பாடம் பண்ணவேண்டாமா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *