PURUSHA SUKTHAM 2 J K SIVAN

புருஷ ஸூக்தம் 2 – நங்கநல்லூர் J K SIVAN

உலகத்தில் நமக்கு முதல் தெய்வம் அப்பா அம்மா. அவர்களிடமிருந்து நாம் எல்லாவற்றையும் கற்று உயிர் வாழ்கிறோம் பிள்ளைகள் வாழ, வளர, அவர்கள் தியாகிகளாக, தன்னலமின்றி முதலில் உதவுபவர்கள். அப்புறம் நாம் வளர்ந்த பின் கு அப்பா அம்மா எல்லாவற்றுக்கும் தேவைப்படவில்லை. நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள தெரிந்து கொள்கிறோம் . நமக்கு ஆசான்,ஆசிரியர், குரு , உத்யோகத்தில் எஜமானன் எல்லாம் உதவுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே அவனுக்கு பகவான் தான் முக்கியம் என்று புரிந்தபின் தான் மனிதன் முழுமை பெறுகிறான்.

புருஷ சூக்தம், உலகம் தோன்ற காரணமான விராட் புருஷனெனும் பரமாத்மாவின் இயல்பு மற்றும் அனைத்து படைப்புகளின் தோற்றம் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை அறிவிக்கிறது. இந்த ஸ்லோகங்களை உச்சரிப்பது ஆழ்ந்த ஆன்மீக புரிதலுக்கும் விழிப்புக்கும் வழிவகுக்கும். தவறாமல் பாராயணம் செய்வது நம்முடைய ஸ்ரிஷ்டி கர்த்தாவுடன் நம்மை இணைக்கிறது. பக்தி உணர்வை வளர்க்கிறது. உயர்ந்த நன்றி கலந்த மனத்தோடு இயற்கையை சரணடைய உதவுகிறது. மன அமைதியைத் தருகிறது. மன அழுத்தம், அவசரம், பதற்றம், எல்லாம் அகன்று , அமைதியாக வேத மந்திரங்களை உச்சரிப்பது நேர்மறை ஆற்றலை positive energy உள்ளத்துக்கும் உடலுக்கும் அளிக்கிறது. நம்மைச்சுற்றிலும் புனிதமான சூழ்நிலையை அளிக்கிறது. கோஷ்டியாக சேர்ந்து புருஷ சூக்தம் உச்சரிப்பதைக் கேட்பது ஆனந்தம். நானும் கோஷ்டியில் சேர்ந்து உச்சரிக்கும்போதும், என்னுள்ளே ஒரு புனித அதிர்வு தோன்றுவதை உணர்ந்திருக்கிறேன்.

புருஷ சூக்தம் விராட் புருஷனான பிரபஞ்ச நாயகனைப் போற்றி பாடும் பாடல்கள். விராட் புருஷனே தேவர்கள் வளர்க்கும் யாக நாயகன். யஞ புருஷன். பிரம்மாவின்மீது புனித நீர்களை ப்ரோக்ஷணம் பண்ணி வணங்கினார்கள். அதன்பிறகு சாத்தியர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தை சேர்ந்து நடத்தினார்கள். புருஷ ஸூக்தம் உலகில் தாவர ஜங்கம வளர்ச்சியை வர்ணிக்கிறது.

तस्माद्यज्ञात्सर्वहुतः सम्भृतं पृषदाज्यम् ।पशून्ताँश्चक्रे वायव्यानारण्यान् ग्राम्याश्च ये ॥8॥
Tasmaad-Yajnyaat-Sarvahutah Sambhrtam Prssadaajyam |Pashuun-Taashcakre Vaayavyaan-Aarannyaan Graamyaash-Ca Ye
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம் பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே”
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று. பறவைகளையும், மான், புலி போன்ற காட்டு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களையும் ஸ்ரிஷ்டி கர்த்தா பிரம்மா படைத்தார்.

तस्माद्यज्ञात्सर्वहुत ऋचः सामानि जज्ञिरे ।छन्दांसि जज्ञिरे तस्माद्यजुस्तस्मादजायत ॥९॥
Tasmaad-Yajnyaat-Sarvahuta Rcah Saamaani Jajnyire |Chandaamsi Jajnyire Tasmaad-Yajus-Tasmaad-Ajaayata ||9||
தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து ரிக் வேத மந்திரங்களும், சாம வேத மந்திரங்களும், காயத்ரீ முதலான சந்தஸ்களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர்வேதம் உண்டாயிற்று.

तस्मादश्वा अजायन्त ये के चोभयादतः ।गावोः ह जज्ञिरे तस्मात् तस्माज्जाता अजावयः ॥१०॥
Tasmaad-Ashvaa Ajaayanta Ye Ke Co[a-U]bhayaadatah |Gaavoh Ha Jajnyire Tasmaat Tasmaaj-Jaataa Ajaa-Vayah ||10||
தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய: 11

அப்புறம் அந்த பெரிய யாகத்தீயிலிருந்து குதிரைகளும், இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின. பிரபஞ்சம் வ்ருத்தியடையாக பல்வகை உயிரினங்கள் இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக உருவாயின.

यत्पुरुषं व्यदधुः कतिधा व्यकल्पयन् ।मुखं किमस्य कौ बाहू का ऊरू पादा उच्येते ॥११॥
Yat-Purussam Vya[i-A]dadhuh Katidhaa Vya[i-A]kalpayan |Mukham Kimasya Kau Baahuu Kaa Uuruu Paadaa Ucyete ||11||யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே 12

விராட் புருஷனான ப்ரம்மா தேவர்களின் யாகத்தில் தன் அங்கத்திலிருந்து எந்த விதமான தொழில் புரியும் வகுப்பினராக ஜீவர்களை உண்டாக்கினார். அவரது முகம் எதுவாக ஆயிற்று ? கைகளாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாகவும் பாதங்களாகவும் எது கூறப் படுகிறது ? என்பதற்கெல்லாம் விடை இனி கிடைக்கும்.

ब्राह्मणोऽस्य मुखमासीद् बाहू राजन्यः कृतः ।ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत ॥१२॥
Braahmanno-Asya Mukham-Aasiid Baahuu Raajanyah Krtah |Uuruu Tad-Asya Yad-Vaishyah Padbhyaam Shuudro Ajaayata ||12||
ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத 13

விராட் புருஷனின் முகம் வேதமோதும் வகுப்பினர் ப்ராமணர்களாயிற்று.. புஜங்கள்,கரங்கள் வலுமிக்க க்ஷத்ரியவகுப்பினராயிற்று. தொடைகள் வாணிபம் தொழிலில் ஈடுபடும் வகுப்பினர், வைசியராயிற்று. அவரது பாதங்களிலிருந்து இதர வகுப்பினர்கள் உருவானார்கள்.

चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत ।मुखादिन्द्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत ॥१३॥
Candramaa Manaso Jaatash-Cakssoh Suuryo Ajaayata |Mukhaad-Indrash-Ca-Agnish-Ca Praannaad-Vaayur-Ajaayata ||13||
சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயதமுகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத 14

தேவர்கள் யாகத்திலிருந்து தோன்றிய விராட்புருஷனின் மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான். கண்களிலிருந்து சூரியன் தோன்றினான். முகத்திலிருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர். மூச்சுக் காற்று பிராணனிலிருந்து வாயு உண்டாயிற்று.

नाभ्या आसीदन्तरिक्षं शीर्ष्णो द्यौः समवर्तत ।पद्भ्यां भूमिर्दिशः श्रोत्रात्तथा लोकाँ अकल्पयन् ॥१४॥
Naabhyaa Aasiid-Antarikssam Shiirssnno Dyauh Samavartata |Padbhyaam Bhuumir-Dishah Shrotraat-Tathaa Lokaa Akalpayan ||14||
நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்ததபத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்

விராட் புருஷனின் தொப்புள் பகுதியிலிருந்து விண்வெளி.சிரத்திலிருந்து ஸ்வர்கம் எனப்படும் விண்ணுலகம் உருவானது. பாதங்களிலிருந்து பூமியும் காதிலிருந்து திசைகளும் தோன்றின. இவ்வாறு பிரபஞ்சம் விராட் புருஷனிலிருந்து உருவாகியது.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *