சாமியார் விஜயம்- நங்கநல்லூர் J K SIVAN
நிறைய பேருக்கு தெரிந்திருக்காத கதை இது என்று அடித்து சொல்லலாம்.
கோகுலத்தில் யாதவ குடும்பங்கள் அனைத்துமே சந்தோஷத்தில் திளைத்திருந்தன. நந்தகோபன் யசோதைக்கு ஒரு அழகான பிள்ளை குழந்தை பிறந்ததே அதைப் பார்த்திருக்கிறாயா. ரொம்ப அழகின் அவன். இன்று பெயர் வைக்கிறார்கள். வா போகலாம்” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டு எல்லோரும் நந்தகோபன் மாளிகையில் கூடி விட்டார்கள். என்றுமில்லாத பெரிய “ஜே ஜே” என்று கூட்டம். வாயிலில் எல்லா வீட்டிலும் தோரணம். தெருவெல்லாம் பெரிய பெரிய கோலங்கள். எந்த வீட்டில் என்ன விசேஷம் என்று தெரியாதபடி எல்லார் வீட்டிலும் மகிழ்சிக் கோலம். ஊரே சந்தோஷ வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கிறது. மேள தாளங்கள் வாண வேடிக்கைகள், பெண்கள் சேர்ந்து இசை கோலாட்டம், கும்மி, கேளிக்கைகள். ஆண்களில் பலர் கூட்டம் கூட்டமாக பாடிக்கொண்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார்களே. இன்று என்ன விசேஷம்? என்று ஊன்றி கவனித்தால் நந்தகோபன் வீட்டில் தான் கூட்டம் அதிகமாகவே காண்கிறது. காரணம் என்னவென்றால் நந்த கோபன் வீட்டில் பிறந்த அழகிய கருப்பு குட்டிப்பயளுக்கு இன்று பெயர் வைக்கிறார்கள். கருப்பன் என்று தான் பெயராம்.”கிருஷ்ணன்” நிறத்திற்கேற்ற பெயர். அவன் கோகுலம் பிரிந்தாவனம் ஊருக்கே செல்லம். அவனுக்கு பெயர் சூட்டு விழா என்பதால் வேத கோஷங்களும் மந்திர ஒலியும் வானை பிளக்கிறது. மந்த மாருதம், மெல்லிய பனிச்சாரல் போன்ற மெல்லிய மழை தூற்றல், இடையிடையே சுகமான சூரிய வெப்பம், பறவை பசுக்கள் கன்றுகளின் இடைவிடாத ”அம்மா” என்ற இனிமையான ஒலி. காற்றில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வரும் இனிப்பு பலகாரங்களின் மூக்கை துளைக்கும் வாசம். “இது கைலாசமா வைகுண்டமா” என்று நம்மை நாமே கிள்ளி பார்க்க தோன்றும் ஆனந்த நிலை. எண்ணற்ற பேர் காத்திருக்கிறார்கள் குழந்தையை காண.
அது கோவம் வந்து ஏதாவது பண்ணிடுமோ?”
“குழந்தை பயந்து போய்ட்டான்னா?”
“யாரோ ஒரு ரிஷியோ முனிவரோ யோகியோ ஒரு பெரியவர் நிற்கிறார் அவரிடம் விபூதி வாங்கி தடவு” என்றாள் ஒரு பாட்டி.
குழந்தையை இரு கைகளிலும் வாங்கி இடி இடியென்று சிரித்தார் ஆனந்த சிவ தாண்டவமாடினார். சாமியாரைப் பார்த்ததும் கிருஷ்ணன் அழுகையைச் சட்டென்று நிறுத்தினான். பொக்கைவாய் சிரிப்பு அனைவரையும் மயக்கியது. தனது சிறு கைகளால் சாமியாரின் ஜடையை,தாடியை எல்லாம் பிடித்திழுத்தான். இன்னும் கொஞ்ச நாளில் வளர்ந்து பிருந்தாவனத்தில் கோபியரின் பின்னலைப் பின்னின்று இழுக்கப்போகிறானே, அதற்கு ஒத்திகை இப்போதே பார்க்கிறானோ?
ரெண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள்!!. ஒருத்தர் தன்னை பக்தியுடன் புகழ்ந்து வேண்டினால் யோசிக்காமல் வரங்களை வாரி வழங்குபவர். எத்தனை அசுரர்கள் ராக்ஷசர்கள் அப்படி தவமிருந்து சிவனிடமிருந்து வேண்டிய எல்லா வரங்களையும் பெற்று அவற்றை துஷ் ப்ரயோகம் செய்தவர்கள். மற்றவர் அப்படி தவறாக அந்த வரங்களை பயன்படுத்துவோரை சாமர்த்தியமாக தண்டித்து, அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவராச்சே !!