CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN
அப்பட்டமான உண்மை

कस्य दोषः कुले नास्ति व्याधिना को न पीडितः ।व्यसनं केन न प्राप्तं कस्य सौख्यं निरन्तरम् ॥ ०३-०१
kasya doṣaḥ kule nāsti vyādhinā ko na pīḍitaḥ ।vyasanaṃ kena na prāptaṃ kasya saukhyaṃ nirantaram ॥ 03-01
கஸ்ய தோ³ஷ: குலே நாஸ்தி வ்யாதி⁴நா கோ ந பீடி³த: । வ்யஸநம் கேந ந ப்ராப்தம் கஸ்ய ஸௌக்²யம் நிரந்தரம் ॥ 03-01
ஐயா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இந்த உலகத்தில் எந்த வீட்டில் குற்றம் குறை இல்லை? யாருக்கு வியாதியோ, நோய் நொடியோ ,துன்பமோ இல்லை? ஒருவரைக் காட்ட முடியுமா? எவன் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறான்? சாணக்யரின் ‘பளிச்’ கேள்வி இது.

3.2 आचारः कुलमाख्याति देशमाख्याति भाषणम् ।सम्भ्रमः स्नेहमाख्याति वपुराख्याति भोजनम् ॥
ācāraḥ kulamākhyāti deśamākhyāti bhāṣaṇam ।sambhramaḥ snehamākhyāti vapurākhyāti bhojanam ॥ 03-02
ஆசார: குலமாக்²யாதி தே³ஶமாக்²யாதி பா⁴ஷணம் । ஸம்ப்⁴ரம: ஸ்நேஹமாக்²யாதி வபுராக்²யாதி போ⁴ஜநம் ॥ 03-02
ஒருவன் எப்படிப்பட்ட குணம், நடத்தை, கொண்டவன், அவன் எங்கிருந்து வருகிறவன் என்பதை அவன் பேசும் மொழி, பாஷை காட்டிக்கொடுக்கும். அவன் சகவாசம் எப்படிப்பட்டது என்பதை அவனது பண்பு, முக விலாசம், பிரகாசம், எடுத்துக் கூறும். அவன் தேக ஆரோக்யத்தை அவன் சாப்பிடுவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

3.3 सुकुले योजयेत्कन्यां पुत्रं विद्यासु योजयेत् ।व्यसने योजयेच्छत्रुं मित्रं धर्मेण योजयेत् ॥
ஸுகுலே யோஜயேரூபயௌவநஸம்பந்நா விஶாலகுலஸம்ப⁴வா: । வித்³யாஹீநா ந ஶோப⁴ந்தே நிர்க³ந்தா:⁴ கிம்ஶுகா யதா²
sukule yojayetkanyāṃ putraṃ vidyāsu yojayet ।vyasane yojayecchatruṃ mitraṃ dharmeṇa yojayet ॥ 03-03
ஐயா பெண்ணைப் பெற்றவர்களே, நன்றாக இசுயிங்க, பணத்தின் மேல்கொண்ட மோகத்தால் பெண்ணின் வாழ்வை நரகமாக்காதீர்கள். நல்ல குடும்பத்தில் சம்பந்தம் செய்யுங்கள். நல்ல இடத்து சம்பந்தம் என்று ஒரு சினிமா படம் கூட ரொம்ப காலத்துக்கு முன்பு வந்து பார்த்திருக்கிறேன். பிள்ளையை நன்றாக படிக்க வையுங்கள். நீங்கள் கஷ்டப்படும் காலத்திலுங்கள் எதிரி கூட உங்களுக்கு உதவ வரும்படி நடந்து கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் நண்பர்களும், தர்மம் காரியங்களில் கொஞ்சமாவது ஈடுபடுங்கள். இதெல்லாம் நானல்ல, கௌடில்யர் சொல்கிறார்.

4 दुर्जनस्य च सर्पस्य वरं सर्पो न दुर्जनः ।सर्पो दंशति काले तु दुर्जनस्तु पदे पदे ॥
durjanasya ca sarpasya varaṃ sarpo na durjanaḥ ।sarpo daṃśati kāle tu durjanastu pade pade ॥ 03-04
து³ர்ஜநஸ்ய ச ஸர்பஸ்ய வரம் ஸர்போ ந து³ர்ஜந: । ஸர்போ த³ம்ஶதி காலே து து³ர்ஜநஸ்து பதே³ பதே³ ॥ 03-04
ஒரு கொடியவன் ஒரு விஷ நாகம் ரெண்டையும் பார்க்கும்போது எது நல்லது? பாம்பு நம் மரண காலம், நேரம் வந்தால் தான் நம்மை கடித்துக் கொல்லும் . சாதாரணமாக நம் வழியில் அது வராது. கொடியவன், துரோகி அப்படி இல்லை. எந்த நேரமும் கூட இருந்தே துளியும் ஈவு இரக்கம் பார்க்காமல் நம்மை கொன்றுவிடுவான். நாம் தான் யூட்யூபில் நிறைய செய்
திகளை படங்களாக பார்க்கிறோமே.

3.5. एतदर्थे कुलीनानां नृपाः कुर्वन्ति सङ्ग्रहम् ।आदिमध्यावसानेषु न ते गच्छन्ति विक्रियाम् ॥
ஏதத³ர்தே² குலீநாநாம் ந்ரு’பா: குர்வந்தி ஸங்க்³ரஹம் । ஆதி³மத்⁴யாவஸாநேஷு ந தே க³ச்ச²ந்தி விக்ரியாம் ॥ 03-05
etadarthe kulīnānāṃ nṛpāḥ kurvanti saṅgraham ।ādimadhyāvasāneṣu na te gacchanti vikriyām ॥ 03-05
அந்தக்கால ராஜாக்கள் சாணக்கியன் போன்ற நல்ல அறிவாளிகளை, நியாயம், நேர்மை, சாஸ்திரம் தெரிந்தவர்களை எப்போதும் அருகில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் குடும்பத்தோடு ஆதரித்தார்கள். ஒருபோதும் அவர்களை விலக்க வில்லை.

3.6 प्रलये भिन्नमर्यादा भवन्ति किल सागराः ।सागरा भेदमिच्छन्ति प्रलयेऽपि न साधवः ॥
ப்ரலயே பி⁴ந்நமர்யாதா³ ப⁴வந்தி கில ஸாக³ரா: । ஸாக³ரா பே⁴த³மிச்ச²ந்தி ப்ரலயேऽபி ந ஸாத⁴வ: ॥ 03-06
pralaye bhinnamaryādā bhavanti kila sāgarāḥ।sāgarā bhedamicchanti pralaye’pi na sādhavaḥ॥ 03-06
பிரளயம்,ஊழிக்காலம் வந்துவிட்டால் கடல் கட்டுக்கடங்காமல் பொங்கும். பிரம்மாண்டமாக எழும்பும் அலைகளைக் காட்டி பிரமிக்க வைக்கும். அதற்கு இருபக்கமும் கரை இருந்தாலும் அதை உடைத்து வெளிவரும். கட்டுப்பாடு மீறிவிடும். வானத்துக்கும் பூமிக்குமாக பூதாகார பிரவாகமாக ஓவென்று படுவேகமாக பரவும். அது தான் பிரளயம். எங்கும் நீர். சாணக்யனுக்கு சுனாமி ஒரு விதத்தில் தெரிந்திருக்கிறது.
ஞானி அப்படியில்லை. என்றும் எல்லை மீறாதவன். நிதானத்தில், நியாய நேர்மை நீதியில் பிறழாதவன். மாறாதவன். சகல சக்திகள் கொண்டவனாக இருந்தும் அவனுடைய நிதானத்தில், அமைதியில் எந்த மாறுபாடும் எப்போதும் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.

3.7. मूर्खस्तु प्रहर्तव्यः प्रत्यक्षो द्विपदः पशुः ।भिद्यते वाक्य-शल्येन अदृशं कण्टकं यथा ॥
mūrkhastu prahartavyaḥ pratyakṣo dvipadaḥ paśuḥ ।bhidyate vākya-śalyena adṛśaṃ kaṇṭakaṃ yathā ॥ 03-07
மூர்க²ஸ்து ப்ரஹர்தவ்ய: ப்ரத்யக்ஷோ த்³விபத:³ பஶு: । பி⁴த்³யதே வாக்ய-ஶல்யேந அத்³ரு’ஶம் கண்டகம் யதா² ॥ 03-07 ॥
துரோக சிந்தனை உள்ள, நன்றிக்குணம் இல்லாத, சுயநலவாதியாக மூடனோடு நட்பு, சகவாசம் வேண்டாம். அவன் ரெண்டு கால் பயங்கர கொடிய மிருகம். கண்ணுக்கு தெரியாத கூரான விஷ முள் போல, கொடிய வார்த்தைகளால் இதயத்தை சுக்கு நூறாக பிளந்துவிடுவான். யூட்யூபில் இப்படிப்பட்டவர்களை செய்திகளில் பார்க்கலாம்.

3.8 रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः । विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा ॥
rūpayauvanasampannā viśālakulasambhavāḥ। vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08
இளமை, அழகு, பணம், அந்தஸ்துள்ள குடும்பம் என்று ஊரே போற்றினாலும் படிப்பு வாசனையே இல்லாமல் எங்கோ எளிதில் பட்டத்தை வாங்கி பேருக்கு பின்னால் அடுக்கிக் கொண்டவன் சாயம் எளிதில் வெளுத்து விடும். துடைப்பத்துக்கு பட்டு குஞ்சலம்! ஊமத்தம்பூவுக்கு மணம் எங்கிருந்து வரும்? என்கிறார் சாணக்கியர்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *