TEMPLE TURNED TO BE A TOMB J K SIVAN

கருவறை கல்லறையான கதை   –    நங்கநல்லூர்  J K  SIVAN
என்னுடைய  25  வயதில்  ஸ்ரீ  P N  OAK  ஓக்   என்பவர்  சொன்னதை படித்ததை இப்பவும் 85ல்  படித்தாலும்  அந்த உண்மை மாறப்போவதில்லை.
உலகத்திலேயே  ஏமாந்தாங்குளி ஹிந்துக்கள் தான்  போல் இருக்கிறது.  உலகமும்  ஏமாற்றப்பட்டு  உண்மை என்று நம்புகிறது. ஏதோ நேற்றோ  இன்றோ  இல்லை. நூற்றுக்கணக்கான வருஷங்களாக  ஏமாற்றப்பட்ட ஒரு விஷயம்  ஒன்று  உண்டு  என்றால் அது  தாஜ்மஹால் தான்.  அடேயப்பா  உலகத்தில் இருந்து எத்தனை பேர் வந்து பார்த்து  அசந்து போய்  உலக அதிசயம்  என்கிறார்கள். நாம்  ஏமாந்தது தான் உலக அதிசயம்.
 ஸ்ரீ P .N . ஓக் . நிறைய ஆராய்ச்சி செய்து தடயங்களை கவனித்து, உண்மையை வெளிபடுத்திய சிறந்த கல்விமான்  மத வெறியரல்லர்.   தாஜ்மஹால் பற்றி  வெளியிடப்பட்ட  விஷயங்கள் ஒரு காலே அரைக்கால் வீசம் தான். எத்தனையோ உண்மைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடித்தவர்  ஓக் . இது தான் ஒரு உலக அதிசயத்தின் கண்ணீர் கதை .
முகலாய  ராஜா ஷாஜஹான்  ஜெய்ப்பூர் மஹாராஜா வின் கட்டுப்பாட்டில் இருந்த சிவாலயம் ஷாஜஹானால் அபகரிக்கப்பட்டது.   சிற்ப வேலைப்பாடுகள்   நிறைந்த தேஜோ மஹா  ஆலயம்,விஸ்தாரமானது.  கம்பீரமான மதில் சுவர்கள், நீர் தடாகங்கள், நந்தவனம், மரங்கள், அறைகள், நீண்ட கூடம், மச்சு, கோபுரங்கள், பாதாள அறைகள் கோபுரத்தின் மேல் திரிசூலம், ஓம் எனும் எழுத்து, கர்பகிரஹ சுவர்கள்.
”மஹால்” என்ற வார்த்தை முகலாய தஸ்தாவேஜுகளில் இல்லை. அவுரங்கசீப் காலத்திலும் இல்லை. உலகத்தில் எந்த இஸ்லாமிய தேசத்திலும் தெரியாத வார்த்தை.  மும்தாஸ் மஹால் என்பவளை புதைத்ததால் என்பதும் அபத்தம். அவள் பெயர் மும்தாஸ் மஹால் அல்ல. மும்தாஸ் உல் ஜமானி .  அப்படி ”மும்தாஜ் மஹால் அவள் பெயராக இருந்தால் எந்த முட்டாள் ராஜாவும் அவளது பாதி பெயரை அந்த ஞாபகார்த்த கட்டிடத்துக்கு வைக்க மாட்டான். (மும் ) விட்டு விட்டு ”தாஜ் மஹால்” என்றா ஒரு ஞாபகார்த்தம் வைப்பானா?
வெள்ளைக்காரர்கள்  ஆவணங்களில்    இதை   ”தாஜ்- இ- மஹால்” என்று தான்  காண்கிறது.  கோவிலாக  இருந்த ”தேஜோ மஹாலய’ த்துக்கும்  இந்த பெயருக்கும்  நெருக்கம் தெரிகிறது.
நமது துரதிர்ஷ்டம் ஹுமாயுன், அக்பர், மும்தாஸ், இத்மத்தவுலா, சப் தார்ஜங் போன்றோர் ஹிந்து மாளிகைகளிலும் கோவில்களிலும்  புதைக்கப்பட்டவர்கள்.   புதைக்கப்பட்ட கல்லறை எப்படி ”மஹால்” ஆகும்? அரண்மனை கட்டிடம், அல்லது ஆலயம் தானே மஹால் ஆகும். அங்கே இருந்த  தேஜோ மஹாலய சிவன் கோவிலில்  பரமேஸ்வரனுக்கு   அக்ரேஸ்வர மஹாதேவர். அதனால் தான்  அந்த ஊரே  ”ஆக்ரா”   தேஜோமஹாலய கோவிலாக இருந்த காலத்தில் காலில் செருப்பை  போடாமல் தான் உள்ளே செல்லும் பழக்கம்.  இன்றும்   தாஜ்மஹாலில்  அந்த பழக்கம் தொடர்கிறது. சலவைக்கல் பீடத்தில் சிவன் இருந்த இடம். சமாதியின் பளிங்கு பீடமாக  மாறிவிட்டது.
தாஜ் மஹால் ரிப்பேர் வேலைகள் செய்தவர்கள் சுவர்களுக்குள் சிவலிங்கம் மற்ற விக்ரஹங் கள் மறைத்து சுவர் எழுப்பி யிருப்பதை அறிந்தவர்கள்.  சமாதியின் அஸ்திவாரத்தின் அடியில் உள்ள அறைகளின் சிவப்பு கற்கள் ஆலயத்தில் இருந்தவை. ஏனோ இந்த ரகசியங்களை புதை பொருள் ஆராய்ச்சி துறை இன்னும்  வெளியிடவில்லை.பாரத தேசத்தில் 12 ஜோதிர்லிங்கங்கள் உண்டு. அதில் இந்த தேஜோமஹாலயம் ஒன்றாக இருந்திருக்கிறது. நாகநா தேஸ்வரர் என்றும்  சிவனுக்கு பெயர் அங்கு. ஷாஜஹான் எல்லாவற்றையும் அழித்து விட்டான்.
சிற்ப சாஸ்திரத்தில் விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று.  அதில் தேஜோ  லிங்கம்  சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஒரு தேஜோ லிங்கம் இங்கே ஆக்ராவில்  ‘அக்ர சிவ ஸ்தலம்” இங்கு முதலில் சிவனை தரிசித்து விட்டு மற்ற ஐந்து சிவாலயங்களுக்கு  செல்வார்கள். அப்புறம் தான் இரவு உணவு உண்பார்கள்.  ஷாஜஹானால்  தேஜோமஹாலய அக்ர  ஸ்தலம்  தாஜ் மஹாலாக மறைந்தபிறகு மீதி நான்கு சிவாலயங்கள் செல்லும் பழக்கம்   ஹிந்துக்களுக்கு  நடை முறையில் வந்தது. பாலகேஸ்வர், ப்ரித்விநாத், மானகாமேஸ்வர், ராஜ ராஜேஸ்வரர் என்ற பெயர் கொண்டவை மற்ற நான்கு சிவாலயங்கள்.  பிரதானமான அக்ரேஸ்வர மஹாதேவ நாகநாதேஸ்வர தேஜோமய சிவலிங்கம்  பளிங்கு கல்லறையாகிவிட்டது.
ஆக்ராவில் பெரும்பாலோர் ஜாத் குலத்தினர்.  சிவபெருமானை இன்றும் தேஜாஜி என வணங்குபவர்கள்.  தேஜோ மந்திர் என்று சிவலிங்கம் கட்டியவர்கள். பிரதான தேஜ லிங்கம் இருந்த இடம் தேஜோமஹால் என்கிற  தற்போதைய தாஜ் மஹால்
”பாத்ஷா நாமா” (பக்கம் 403 பாகம் 1) ” ஒரு பெரிய விஸ்தாரமான அழகிய மாளிகை விமானத்தோடு (Imaarat-a-Alishan wa Gumbaze) ஜெய்பூர் மஹாராஜா ராஜா மான்ஸிங் இடமிருந்து பெறப்பட்டு மும்தாஸ் புதைக்கப்பட்டாள் ” என்கிறது. இதற்கு மேல் என்ன தடயம் ஆதாரம் வேண்டும்?.
தாஜ் மஹால் வாசலில் வைக்கப்பட்டுள்ள விபர பலகை,   ஷாஜஹான் மனைவி மும்தாஸ்மஹால் கல்லறையாக தாஜ் மஹால் 1631-1653 (22 வருஷங்கள் ) கட்டப்பட்டதை சொல்கிறது. சரித்திரத்தை மாற்றிய சான்று இந்த அரசு அறிவிப்பு பலகை. மும்தாஸ் உல்ஜாமானி யை மும்தாஸ் மஹால் ஆக்கிய கதை. அவுரங்கசீப் தனது அப்பா ஷாஜஹானுக்கு 1652ல் எழுதிய கடிதங்கள் `Aadaab-e-Alamgiri’, `Yadgarnama’, `Muruqqa-i-Akbarabadi’ என்ற தலைப்புகளில் இன்றும் பதிவில் உள்ளன. ஒரு கடிதத்தில்: ”அப்பா,  மும்தாஸ் புதைக் கப்பட்ட ஏழு நிலை கோபுரம்,( அது கோவில் கோபுரம்) சிதிலமான ஸ்திதியில் இருக்கிறது. பழைய கட்டிடங்கள். ஒழுகுகிறது. வடக்கு பக்கம் நிறைய விரிசல் வேறு. இதெல்லாம் உடனே ரிப்பேர் செய்ய வேண்டும். என் செலவில் செய்கிறேன். பிறகு சாஸ்வத ரிப்பேர் செய்யவேண்டும். ”என்கிறான் ஒளரங்கசீப் .புராதன  பெரிய 7 நிலை  சிவாலயத்துக்கு  சமாதி கட்டி தாஜ்மஹாலாக்கி விட்டான்  ஷாஜஹான்.
ஜெய்ப்பூர் மஹாராஜாவின்  காப்பகத்தில் (KAPADWARAA) . டிசம்பர் 18, 1633ல் எழுதப்பட்ட ரெண்டு   ஆவணங்கள்.  ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார்கள் .  ஒன்று தாஜ்மஹால் கட்ட  தேஜோமஹாலய த்தை கேட்டது. அப்போதைய  மஹாராஜா இதை வெளியே தெரிவிக்கவில்லை. யாரிடம் போய் நீதி கேட்க முடியும்?
ரெண்டாவது, ஜெய்ப்பூர் மஹாராஜா ஜெய்சிங்கிடம் மும்தாஸ் கல்லறை கட்ட பளிங்கு கற்கள் அனுப்ப கட்டளையிட்டது.  ஆவணமாக இருக்கிறது. பளிங்கு கல் வேலை செய்யும் சிற்பிகளை கேட்டது.  ஜெயப்பூர் ராஜாவுக்கு கோபம். தேஜோமஹாலயத்தை தாஜ்மஹாலாக்க  இடித்துக் கட்ட  கேட்டதோடு இல்லாமல் அதைப்  பளிங்கு கல்லறையாக்க  பளிங்கு வேண்டுமாம், அதை கல்லறையாக்க  பளிங்கு செதுக்கும்  சிற்பிகள் வேறு வேண்டுமாம்?    ராஜா பதில்  சொல்லவில்லை.
பீட்டர் மண்டி என்ற வெள்ளையன், தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே ஆக்ராவில் தாஜ் மஹால் இருந்த இடத்தில் அழகிய தோட்டங்கள், கடை வீதிகள், சூழ்ந்த தேஜோ மஹாலய கட்டிடத்தை பார்த்து எழுதி இருக்கிறான்.
டீ லேட் என்கிற டச்சுக்காரன், ஜெய்பூர் மஹாராஜா மான்சிங் மாளிகை ஆக்ரா கோட்டையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்தது. அழகிய கட்டிடம் என்று சொல்லி இருக்கிறான். மும்தாஜ் இந்த மாளிகையில் தான் புதைக்கப்பட்டாள் என்று சொல்லி இருக்கிறான்.
பெர்னியர் என்கிற பிரெஞ்சு யாத்ரீகன், தாஜ் மஹால் இருந்த அஸ்திவார அறையில் வெளிச்ச மயமாக இருந்ததுமுஸ்லீம் அல்லாதோர் அங்கே அனுமதிக்கப்படவில்லை என்கிறான்.
தேஜோமஹாலயம் என்றாலே பளிச்சென்று தானே இருக்கும்? வெளிச்ச மில்லாமலாஇருக்கும்?. வெள்ளி கதவுகள், தங்க படிகள், தங்க கைப்பிடி சட்டங்கள், நவரானங்கள் பதித்த வாசல், உத்தரம், சுவர்கள் .சிவலிங்கத்தின் மேல் முத்து விமானம்.
இதெல்லாம் பார்த்த ஷாஜஹான் அந்த கட்டிடத்தை அபகரித்ததில் வியப்பென்ன?.
கோட்டை விடுவதில் நாம் சமர்த்தர்கள்.  இது தான் சுருக்கமாக  தேஜோமஹாலய அக்ரேஸ்வர நாக நாதசுவாமி ஆலயம் ஒரு முஸ்லீம் பெண்  கல்லறையாகிய    ஆக்ராவில் நடந்த அக்ரமம்..
ஒரு  வருத்தமான  விஷயம். உலகத்தின்  ஏழு அதிசயங்களில்  தாஜ்மஹால் ஒன்று என  உலகளவில் பறைசாற்றப் பட்டு எண்ணற்றோர்  உலகின் பல பாகங்களில் இருந்து  வந்து அதை  கண்டு கழிக்கும்போது  மீண்டும்  அதிலிருந்து  தேஜோமஹாலயம்  மீண்டு வருவது துர்லபம்.  நமது எத்தனையோ  பெரிய  பெரிய நஷ்டங்களில் அதுவும் ஒன்றாக  போகவேண்டும்  என்பது அந்த  சிவனின் சங்கல்பம் என்றால்  கண்ணீரோடு அதை ஏற்றுக் கொள்வது தான் நம்மால் முடிந்தது.  தாஜ்மஹாலுக்கு செல்லவேண்டாம்.   அதை  தேஜோமஹாலய அக்ர சிவஸ்தலமாக மனதில் பூஜித்து மகிழ்வோம்.
  அடுத்தது   ஆங்கிலத்தில்  ஓக்   எழுதிய 110 விஷயங்கள்  தமிழில் தெரிந்து கொள்வோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *