RASA AASWAADHA THARANGINI – J K SIVAN

ரஸ ஆஸ்வாத தரங்கிணி (ரஸ நிஷ்யந்தினி) – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ C. சுந்தரராமமூர்த்தி.

11. एतस्मै कुलशीलादिभिरुपेता काचिदन्वेष्टव्या कन्येति भवान्; एनमनन्यसाधारणगुणा काचित् अयोनिजा दिव्यकन्या अन्विष्यति इत्यहम् ॥
யேதஸ்மை குலசிலாதிபி ரூபேதா காசிதன்வேஷ்டவ்யா கன்யேதி பவான்: ஏனமனன்ய சாதாரண குணா காசித் அயோனிஜா திவ்யகன்யா அன்விஷ்யதி இத்யஹம்

தசரதா, உன் மனதை நான் அறிவேன். உன் மகன் ராமனுக்கு ஒரு நல்ல குடும்ப பெண்ணாக , உயர்ந்த உன்னத குணங்கள் உள்ளவளாக தேடி பிடித்து கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுகிறாய். உலகத்தில் எல்லா அப்பாக்கள் மனத்திலும் இந்த ஒரு ஆசை தோன்றுவது தான் மரபு. உன்னைப் பொறுத்தவரையில் ஒரு அழகான ராஜ குடும்பத்து பெண் வேண்டும் என்று தான் உன் எண்ணம். ராமன் யார், அவனுக்கு மனைவியாக போகிறவள் பற்றி உனக்குத் தெரியாது ஆனால் எனக்கு அவனைப் பற்றியும் அவளைப் பற்றியும் ரொம்ப நன்றாக தெரியும். அவள் பிரபஞ்சத்திலேயே பேரழகி, தெய்வீகமானவள், சகல சௌபாக் கியங்கள், கல்யாண குணங்களும் கொண்டவள் , எந்த உடலிலும் பிறக்காத தெய்வம், மஹா லக்ஷ்மி அவனுடைய மனைவியாவதற்கு காத்துக்கொண்டிருக்கிறாள். இதன் நான் அறிவேன்.

12. एतमस्मद्राज्य प्रापयिष्यामाति त्वम् एतद। दत्तमहाराज्या ब्रह्मेन्द्रादय इत्यहम् ।
ஏத மஸ்மத்ராஜ்யம் ப்ராபயிஷ்யாமிதி த்வம்; ஏதத் தத்த மஹாராஜ்யா பிரம்மேந்திராத்ய இத்யஹம் :

இப்போது உன் வம்சத்தில் நீ தான் இந்த அயோத்தி ராஜா. ”என்னுடைய இந்த அயோத்யா ராஜ்யத்துக்கு அடுத்த ராஜா என் மகன் ராமன். அவனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி மன்னனாக முடிசூட்டுவேன்” என்கிறாயே? உனக்கு ஒரு உண்மை தெரியுமா? பிரம்மன் இந்திராதி தேவர்கள் எல்லாருக்குமே அவர்களுடைய ராஜ்ய ங்களை அவர்களுக்கு அளித்தவனே இந்த ராமன் தான். இப்போது ராமன் என்று உன் மகன் போல் வந்திருக்கும் பிரபஞ்ச காரணன் மஹா விஷ்ணு அவன்.

13. एतेन देवानुद्दिश्य यज्ञाः करणीयाः इति त्वम् एनमुद्दिश्य ‘यज्ञं यज्ञेनायजन्त देवाः’ इत्यहम्।
ஏதேன தேவானுதிஷ்ய யஞா : கரணியா: இதித்வம் ஏனமுதிஷ்ய யஞம் யக்னேநாயஜந்த தேவா:இத்யஹம்.

தசரதா , உன் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது தெரியுமா? சொல்கிறேன் கேள். ”என் ராமனை நிறைய யாக யஞங்கள் செய்ய வைத்து தெய்வங்களை, தேவர்களை எல்லாம் திருப்திப் படுத்தி அவனை சக்தி பெறச்செய்யவேண்டும் என்பதே”. ஆனால் உண்மை என்ன தெரியுமா உனக்கு? சகல தெய்வங்களும், தேவதைகளும் மனதில் நாராயணனாகிய ராமனை சங்கல்பித்து அவன் மீதுள்ள பக்தியால் யாக யஞங்கள் புரிந்து உய்கி றார்கள். சக்தி பெருகிறார்கள். அது அவன் புரியும் அனுக்ரஹம்.

14. एतस्मै दिव्यज्ञानं देयमिति त्वम् एषः दिव्य ज्ञानेनापि ज्ञातुमशक्य इत्यहम्”
யேதஸ்மை திவ்யஞானம் தேயமிதித்வ யேஷ: திவ்ய ஞானேனாபி ஞாது மஷக்ய இத்யஹம்.

என் ராமன் எல்லா ஞானங்களும் பெறவேண்டும் என்று நீ ஒரு நியாயமான அப்பாவின் ஆசையை மனதில் கொண்டிருக்கிறாய். ஆசைப்படுகிறாய்.
தசரதா , சகல சாஸ்திரங்கள், வேதங்களால் அறியப்பட முடியாதவன் பரமாத்மாவான ஸ்ரீ ராமன். நல்ல ஆசார்யர்களைக் கொண்டு உன் மகன் ராமனுக்கு தெய்வீகமான ஞானம் பெற வைக்கவேண்டும் என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மை என்ன என்று உனக்குத் தெரியாது எனக்குத் தெரியும். உன் ராமன் ஞானிகளால் மஹ ரிஷிகளால் உணரமுடியாத, வேத சாஸ்த்ர ஞானங்களை எல்லாம் கடந்தவன். இதை நான் அறிவேன்.

15. अयं ज्ञातेति त्वम् अयं ज्ञेय इत्यहम् ।
அயம் ஞாதேதி த்வம் அயம் க்னேய இத்யஹம்.

15. தசரதா, ராமன் தக்க ஆசிரியரிடம் கல்வி கற்றதாக சொல்கிறாயே. ஒரு உண்மை தெரியுமா உனக்கு? சகல சாஸ்திரங்கள் வேதங்கள் ஞானங்கள் அனைத்திற்கும் ஆதாரம் உன் மகன் ராமனே. நீ நினைப்பது போல் ராமன் யாரிடமாவது எதையாவது கற்றுக் கொள்ளவேண்டியவன் அல்ல. அவனிடமிருந்து தான் சகல ஞானமும் வெளிப்ப டுகிறது. அறியப்படவேண்டியவன் அவனே. இதை நான் அறிவேன் நீ அறியமாட்டாய்.

ரஸ நிஷ்யந்தினி” என்ற ராமாவதார 100 காரணங்களை ”அஹம் வேத்மி” என்ற வார்த்தையின் அர்த்தமாக விஸ்வாமித்ரர் தசரதனுக்கு சொல்வது போல் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் வெகு அற்புதமாக இயற்றி பிரசங்கங்கள் செய்தவர்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *