WEDDINGS NOW – J K SIVAN

கல்யாணமாம் கல்யாணம்   –   நங்கநல்லூர்  J K   SIVAN 

சித்திரை, ஆவணி, தை  என்று எத்தனையோ கல்யாண மாதங்கள் … நிறைய பத்திரிகைகள், பலவித மண்டபங் கள், வித விதமான உணவு வகைகள் … எல்லாம் கிட்டத் தட்ட  ஒரே மாதிரியாகிவிட்டது.

கொஞ்சம்  திரும்பி பார்த்தால், இந்த  84+ வருஷங்களில் எத்தனை கல்யாணங்கள்  பார்த்தாகி விட்டது. ஒவ் வொன் றும் ஒரு விதம். சிலவற்றின்  சொந்த  பந்தங்கள்  முகம் அதிகம் தெரிந்தவை.சில  உயர்மட்ட வகை. சிலது ரொம்ப தாழ்ந்த  பணவசதி கொண்டவை. சில படாடோ பமானவை. சில பட்டவர்த்தனமான  சாஸ்த்ர பூர்வமா னவை. சில கிராமத்து மோஸ்தர், சில  மேனாட்டு பாணி. மேடையிலிருந்து இறங்கி  பெண், பிள்ளை, அப்பா அம்மா சொந்தம் எல்லாம்    டப்பாங்குத்து ஆடி  பலர்  விசில் அடிப்பது..

அப்போதெல்லாம்  கல்யாண மேடைகளில் வாத்யார்  கோஷ்டி மந்திரம் சொல்வது மட்டும் தான்.இப்போது  வீடியோ போட்டோகிராபர்கள் தான் அதிகம் மேடை யில் காண்கிறார்கள். அது தவிர  கையை தலைக்கு மேல் தூக்கி மொபைல் வீடியோ படம் எடுக்கும் கும்பல்  மேடையில் இருப்பவர்களை மறைக்கிறது.

”என்னடா சௌக்யமா?” என்று கேட்டு  மாமிகள் மாமாக்கள் குசலம் விசாரிப்பது மறைந்து போய் விட்டது.  யூனிபார்ம் அணிந்த பெண்கள் முகத்தில் அன்னியத்தோடு தட்டை நீட்டி அதில் ஜூஸ் டம்ளரை  காட்டு கிறார்கள். வாசலில்  மேஜைக்கு பின்னால் அதே மாதிரி இன்னொரு கோஷ்டி. சிரிப்பு, அறிமுகமில்லாத இயந்திர வரவேற்பு.

கல்யாணம்  உறவுக்குள் நடப்பது நின்று விட்டது.  பணம், அமெரிக்காவில் உத்யோகம்  என்பது கட்டா யமாகி  விட்டது.  சில கல்யாணங்கள்  ஏற்கனவே  அமெரிக்காவிலோ  ஆஸ்திரேலியாவிலோ நடந்து போனதன் பிறகு , அல்லது முடிவான பிறகு, இங்கே  ‘சும்மனாங் காட்டியும்’  பெற்றோர் மற்றோர்  பூ இதழ், அக்ஷதை போட மட்டும் நடத்தப்படுகிறது.  தெருவை யே மடக்கி பந்தல் போட்டு, ஊரெல்லாம் கூடிகொண்டா
டிய  ஐந்து நாள்  ஆறுநாள்  கிராம கல்யா ணம்  பழைய புத்தகங்களில் தான் காணப்ப டுகிறது. ஒருநாள் ஒன்றரை  நாள்  கல்யாணத்தில் உற்சாகமே காணோம். ரோபோக்கள் மாதிரி காலை  டிபன், கொஞ்ச நேரம்  மொபைல் பார்ப்பது,  மொய் எழுதி, மலர் தூவிவிட்டு சாப்பாடை முடித்துக் கொள்வது மேடையில் வரிசையில் சென்று  போட்டோ எடுத்டுக கொண்டு  சாத்துக்குடி பையை வாசலில் அவுட்பாஸ் மாதிரி வாங்கிக்கொண்டு  ஓலா,  ஊபர்  ஆட்டோ தேடுவதோடு நின்று போகிறது.  ஒரே மண்டபத்தில் ரெண்டு மூணு கல்யாணம் நடந்து நான் யார் கல்யாணத்திற்கோ போகவேண்டியவன் இன்னொரு  கல்யாணத்துக்கு  கூப்பிடாமலேயே சென்று யாருக்கோ கொண்டுவந்த  பரிசை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டு   வாழைப்பட்டை தட்டில் தயிர் சாதம்   எலுமிச்சங்கா ஊர்கா சாப்பிட்டது நினைவிருக்கிறது.

இப்போது கல்யாணமானவுடன் வாசுகி  வள்ளுவர்களை தேடவேண்டாம்.  எத்தனையோ கல்யாணங்கள் ஏதோ நடக்கவேண்டும் என்று நடப்பவையாக தான் இருக்கிறது.  முறியாமல் தொடர்ந்தால் பேரதிர்ஷ்டம்.  மிலிட்டரி காரனை கல்யாணம் பண்ணிக்கொண்டால் கட்டளைக்கு கீழ்ப்படுவான்,தானே சமைத்துக் கொள் வான், துணி துவைப்பான். படுக்கையை போட்டு சரியாக மடித்து வைப்பான்.

யார் சொன்னது இது? ”கல்யாணம் என்பது ஒரு வயலின் மாதிரி.  பாட்டு முடிந்தாலும் கம்பிகள் மிடுக்காக தான் இருக்கும் ” கொஞ்சம் நிதானமாக தான் யோசிக்க வேண்டும். இதை சொன்னவர்  எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி சொன்னார் என்று அப்போது தான் கொஞ்சம் புரியும்.   கல்யாணம் என்றாலே சேர்ந்து வாழ்வது என்று தொடருமானால் நூறாண்டு வாழ்த் துக்கள்.   பிள்ளையின் அப்பா அம்மா உண்டா என்று கேட்காதீர்கள்.  பதில் சொன்னால் வருத்தமாக இருக்கலாம்.

கல்யாணம் ஆனபின்னும் அது இனிக்காமல்  போவது ஏன்? இனிப்பை விட்டு உப்பை தேடி அலைவதால் தான்.
சில பெண்கள்  கல்யாணம் ஆனபின் கொள்ள சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.  ”அப்பாடா, நமக்கு என்று இனி ஒரு காசு கொடுக்காமலேயே  சதா சொன்னவண்ணம் செய்யும் பெருமாளாக   எடுபிடி வேலைக்கு  ஒரு ஆள்  கிடைத்து விட்டான்”.

யாரோ  ஒரு கலி கால  ரிஷி சொன்ன வாக்கியம் இது:    ”கல்யாணம் என்பது  ஒரு  வினோத  யுத்தம். அதில் ஒன்றில் தான் எதிரி பக்கத்திலேயே  படுத்து குறட்டை விட்டு  தூங்குவான் ”

சில அனுபவசாலியான  ஆண்களின்  பொன்மொழி:   ”கல்யாணம் என்பது  சுடச்சுட  வெந்நீரில் குளிப்பது போல.  பழக்கமாகிவிட்டால்  வழக்கமாகிவிடும்”
கல்யாணம் என்பது  இருவரை ஒருவராக்குவது என்று சொல்வது சரி என்கிறார்கள் சிலர்.  பின்னே என்ன. கல்யாணம் ஆன பிறகு ஆண்  காணாமல் போய்  பெண்ணில் ஐக்யமாகிவிடுகிறானே.

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”  என்று ஒரு அருமையான பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.   மனைவி  யார்?  பிரம்மச்சாரியாக  நீ இருந்த போது  நீ படாத கஷ்டங்களை கல்யாணமாகி நீ படும்போது உனக்கு அவற்றை வழங்கி உன்னோடு இருப்பவள்” என்று உபதேசித்தவர் ஒரு அனுபவ கல்யாண கிருஷ்ணன்.

மேலே சொன்னதெல்லாம்  காதில் விழுபவை.  என் வாழ்வில் நான் ஆனந்தமாக இருக்கிறேன் என் மனைவி மிகவும் சந்தோஷமாக என்னை வைத்துக் கொண்டி ருக்கிறாள். நல்ல சாப்பாடு போடுகிறாள்  (என் மனைவி என் கட்டுரைகளை படிக்கிறாள் என்பது நினைவிருக் கட்டும்)

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *