SRI SRINGERI SAARADHAA PEETAM – J K SIVAN

ஸ்ரீங்கேரி சாரதா பீட மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN

வெள்ளிக்கிழமைக்கு சொந்தக்காரி ஸ்ரீ அம்பாள். அம்பாள் என்றவுடன் கண் முன்னே தோன்றுவது ஸ்ரீ ஆதிசங்கரரும் அவர் உபாசித்த ஸௌந்தர்ய பரமேஸ்வரி, சிருங்கேரியில் உறையும் ஸ்ரீ சாரதாம்பாளும் மட்டுமா. மஹா பெரியவா எனும் காமாக்ஷி அம்பாள் திருவுருவமும் தான்.

ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம். திரிசூர் வடக்கு நாத சுவாமி யை வேண்டி சிவகுருவும் ஆர்யாம்பாளும் தியானம் செய் வடக்குநாத ஈஸ்வரனே சங்கரனாக அவதரித்தவர்.

எட்டாவது வயசில் வித்யாப்பியாசம் பூர்த்தி பண்ணி காலடியில் தனது வீட்டுக்கு ஆதி சங்கரர் திரும்பினார். அப்பா சிவகுரு கைலாச பதவி அடைந்தாகிவிட்டது.. அம்மாவுடன் சிறிது காலம் காலடியில் இருந்தார். அவருடையய மாத்ரு பக்தியை புரிந்து கொள்ள மாத்ரு பஞ்சகம் படியுங்கள். பலமுறை எழுதி இருக்கிறேனே.

வயசாகி அதிக நடமாட்டம் இல்லாத ஆர்யாம்பாளுக்கு பணிவிடைகள் பண்ணின ஆதி சங்கரர் அம்மாவால் இப்போதெல்லாம் தினமும் ஆலவாய்ப்புழைக்கு போய் ஸ்னானம் பண்ண முடியவில்லை. அது அவளுக் கு ரொம்ப வருத்தம். புண்ணிய தீர்த்தம் என்பதால் அந்த அம்மாள் அங்கே போய்த்தான் தினமும் ஸ்நானம் செய்வாள் .
“சங்கரா நான் என்னடா பண்ணுவேன், இன்னிக்குப் புண்ய காலம். புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ண முடியலியே”
“நான் பகவான் கிட்டே பிரார்த்தனை பண்றேன் மா”.

அம்மாவுக்கு மட்டும் இல்லை . எல்லோருக்குமே பயன் படட்டுமே . காலடியிலேயே ஒரு நதி ஓடட்டுமே” பகவானை சங்கரர் ஸ்தோத்ரம் பண்ணினார். காலடியில் வீட்டுக்கு பின்னாலேயே அது ஓடினாள் அம்மாவாலும் ஸ்னானம் பண்ண முடியுமே என்று பிரார்த்தித்தார். நதி குபுகுபு என்று ஓடிவந்தது. வரும் வழியில் ஒரு கிருஷ்ணன் கோயில். காலடியில் ஆதி சங்கரர் வீட்டருகே இன்றும் பார்க்கலாம். காட்டாறு வேகமாக தடம் மாற்றி வந்ததில் கோயிலுக்கு கொஞ்சம் ஹீனம் ஏற்பட்டுவிட்டது. புனருத்தாரணம் பண்ணவேண்டும். எந்த நல்ல தானாலும் கஷ்டமாகவும் கொஞ்சம் கலந்துதானே வருவதாயிருக்கிறது?

காலடியில் நதி ஓடி வந்ததில் எல்லோருக்கும் ஆனந்தம். விஷயம் ராஜாவின் காதுக்கும் எட்டியது. யார் அந்த பிராம்மண சிறுவன்?. அவன் பிரார்த்தனைக்கு இப்படி ஒரு சக்தியா? ஆச்சர்யத்தோடு ராஜா ஓடிவந்தான்.
சங்கரர் ராஜாவிடம் கிருஷ்ணன் கோவிலை ஜீர்ணோத் தாரணம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொண் டார். ஆதி சங்கரரின் விருப்பம் நிறைவேறியது.
காலடியில் இன்றும் கிருஷ்ணன் கோயில் ஆற்றுப் படுகையிலிருந்து கொஞ்சம் மேடான பூமியிலி ருக் கிறது.

இன்னொரு அற்புத சம்பவம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் ஆதி சங்கரர் தெற்கே விஜயம் செய்தபோது துங்கபத்ரா நதி தீரத்திற்கு வந்து வந்துவிட்டார். அங்கே உள்ள ஒரு மலை பிரதேசத்தில் உள்ளது சிருங்கேரி க்ஷேத்திரம். ஒரு பீடத்தை அங்கே நிர்மாணிக்க வேண்டும் எங்கே அமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆதி சங்கரர் கண் எதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது… என்ன ஆச்சர்யம்.! நிறை மாத கர்ப்பத்தோடு ஒரு பெண் தவளை ப்ரஸவிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக் கிறது. உச்சி வேளை வெய்யில் கொளுத்துகிறது. ஆஸ்வாசத்தோடு தவளை முனகுகிறது. அந்த தவளைக்கு வெயில் படாமல் ஒரு நாகப்பாட்டு படம் விரித்து குடை பிடித்துக் கொண்டிருக்கிறதே.. பாம்புக்கு பிடித்த உணவு தவளை. ஆனால் இங்கு நடப்பதோ விசித்திரம்.. வெகுநேரம் அங்கே நின்று ஆசார்யாள் தியானம் பண்ணிக்கொண்டிருந்தார்.

ஆஹா இங்கே நடப்பதற்கு காரணம் இந்த பிரதேச மஹிமை. தூய்மை. புனிதம். பாம்புக்கும் தவளைக்கு த்வேஷம் தெரியாத இங்கே அல்லவோ காருண்ய சீலி ஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஒரு கோவில் அமைய வேண்டும்.. ஒருவிஷயம் சொல்ல மறந்து விட்டேன். ஆச்சார்யாள் பீட ஸ்தாபனம் பண்ண புறப்படும்போது அவர் பின்னால் மஹேஸ்வரி நானும் உன்னோடு பின்னாலே யே வருவேன். நீ திரும்பி என்னைப் பார்க்கக்கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். ”

”சரி அம்மா, நீ என் பின்னாலேயே வருகிறாய் என்பதை நான் திரும்பிப் பார்க்காமல் எப்படி தெரிந்து கொள் வது?”
”அதற்காக தான் என் கால் கொலுசு சப்தம் உன் காதுக்கு கேட்டுக்கொண்டே இருக்குமே” என்றாள் அம்பாள்.
இது தான் அம்பாள் ஆச்சார்யாள் ரெண்டுபேருக்கு மான ஒப்பந்தம்.

சிருங்கேரியில் ஆசார்யாள் துங்கபத்ரா நதிக்கரையில் போய்க்கொண்டிருந்த்தபோது இந்த பாம்பு தவளை அதிசயத்தை பார்த்தவுடன் அவருக்கு ஒரு சந்தேகம். ஏன் கொலுசு சப்தம் கேட்கவில்லை? ஆற்றங்கரை வரும் வரை கேட்டதே? திரும்பி பார்த்தார். சட்டென்று ‘ஜல் ஜல்’ கொலுசு சப்தமும் நின்றது.

‘அடடா என்ன ஆச்சு?’ துங்கபத்ரா ஆற்றின் மணலில் அவர் பின்னாலேயே நடந்து வந்துகொண்டிருந்த அம்பாளின் பாதம் மணலில் ஆழமாக புதைந்து, புதைந்து அவள் நடந்து வந்ததால் கொலுசு ஓசை எழுப்பவில்லை.. ஆச்சாரியாள் திரும்பிப் பார்த்ததால் ஒப்பந்தப்படி அம்பாள் அங்கேயே சிலையாக நின்றுவிட்டாள்.

‘எல்லாம் நல்லதற்கே. நாம் நினைத்ததற்கே அவளு டைய நிபந்தனையும் சாதகமாயிடுத்து!’ என்று ஆசார்யாள் சந்தோஷித்து அங்கேயே சாரதாம்பாளை பீடப் பிரதிஷ்டை பண்ணி அமர்த்திவிட்டார்.
அந்த இடம் அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே மடம் ஸ்தாபித்து பல காலம் வாசம் பண்ணி அவளை உபாசித்துக்கொண்டிருந்தார். புத்தகங்கள் எல்லாம் முதல் பதினாறு வயசில் எழுதி முடித்த ஆசார்யாள், அப்புறம் இரண்டாம் பதினாறு வயசில் தான் – பதினாறே வருஷத்தில்தான் – தேசம் முழுக்க சஞ்சாரம் செய்து, அநேக காரியங்கள் பண்ணினது.

சிருங்கேரி மடத்துக்குத் தனி விசேஷம் என்ன தெரியுமா? மற்ற மடங்கள் ஆசார்யாள் உத்தேசித்து ஸ்தாபனம் பண்ணிது. வித்யாதி தேவதை சாரதாம் பாளே சிருங்கேரியில் சாரதா பீடம் ஏற்படும்படியாகப் பண்ணிவிட்டாள். சிருங்கேரிக்கு பிறகு காஞ்சீபுரம். அங்கே காமகோடி பீடத்தில் காமாட்சியாக குடி கொண்டாள் . முக்கியமான இந்த ரெண்டை மட்டுமே சொன்னேன்.. இன்னும் எத்தனையோ

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *