VEMANA SATHAKAM – J K SIVAN

தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN

“Annam ad`ugani atanik Annambu pet`t`ina Paara veeyu daana phalitam eemi?
Dhaniku nakun osamgu Daanambun at`u vale Vis`vada abhi raama Vinura Veema!”

” தொப்புளுக்கு மேல் கஞ்சி இருக்கும் ஆசாமிக்கு ஏன், எதற்கு உனது அன்ன தானம்?. அது வீண்? . பசித்தவனுக்கு அது சேராமல், அதை வெளியே கொட்டி பாழாக்கியதற்கு அல்லவோ இது சமம் இல்லையாடா வேமா? – வேமனா .

Cheppulona rayi chevilona joriga……………….చెప్పులోన రాయి చెవిలోన జోరీగ
kantilona nalusu kali mullu………………………..కంటిలొన నలుసు కాలి ముల్లు
intilona poru intinta gadaya……………………….ఇంటిలోన పోరు ఇంతింత గాదయ
Viswadhaabhiraama, Vinura Vema……………. విశ్వధాభిరామ, వినుర వేమ

செப்புலோனி ராயி செவிலோனி ஜோரீக³ கண்டிலோனி நலுஸு காலி முல்லு
இண்டிலோனி போரு நின்தின்த கா³த³யா விஶ்வதா³பி⁴ராம வினுர வேம!

அன்றாட வாழ்வில் எது துன்புறுத்தும்? செருப்புக்குள் மாட்டிக்கொண்டு காலை உறுத்தும் ஒரு துண்டு கல். காதைச் சுற்றி சுற்றி பறந்துகொண்டு கத்தும் கொசுவோ ஈயோ வேறு படாத பாடு படுத்தும். கண்ணில் நுழைந்து நெருடி உறுத்தும் தூசி, காலுக்குள் குத்தி உள்ளே உடைந்து போன ஒரு முள், ரொம்ப கஷ்டப்பட்டு SAFETY PIN முனையால் குத்தி வெளியே எடுப்பதே பெரிய ஆபரேஷன் மாதிரி. வீட்டில் மனைவியோடும் குழந்தைகளோடும் மற்றவரோடும் நீ போட்ட சண்டை. உன்னால் இதையே தாங்கமுடியவில்லையே, நீ எப்படி மற்றவர்கள் துன்பத்தைத் தீர்க்கபோகிறாய் ? சொல்லடா வேமா? என்கிறார்

Tappulennuvaru Tandopatandambu……………….తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu……………………….లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru…………….తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema………………. విశ్వధాభిరామ, వినుర వేమ

தப்பு லென்னுவாரு தம்டோப தம்டம்பு லுர்வி ஜனுலகெல்ல னும்டு தப்பு
தப்பு லென்னுவாரு தம தப்புலெருகரு விஶ்வதாபிராம வினுர வேம! || 142

உன்னைச் சுற்றிப்பார். எங்கே எதில், எதால் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று அலைவோரையே தான் பார்க்கிறோம். அவர்கள் நண்பர்களாகவோ, உறவாகவோ, இருந்தால் என்ன? தப்பில்லாதவன் யாரேனும் ஒருவன் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன் தன்னிடம் உள்ள கூடை தப்புகளை ஏன் முதலில் எண்ணிப்பார்ப்பதில்லை? ஆஹா இது என்ன வேடிக்கை! யோசித்து பாரடா வேமா என்று தன்னை கேட்டுக்கொள்கிறார் வேமனா..

Inumu virigeneni irumaaru mummaaru……………….ఇనుము విరిగెనేని ఇరుమారు ముమ్మారు
kaachi yatakavachu kramamu gaanu………………….కాచి యతకవచ్చు క్రమము గాను
manasu virigeneni mari chercharaadaya……………..మనసు విరిగెనేని మరి చేర్చరాదయ
Viswadaabhiraama, Vinura Vema…………………….. విశ్వధాభిరామ, వినుర వేమ

கனமான பலமுள்ள இரும்பை ரெண்டாக மூன்றாக உடைத்தாய். பிறகு அதை நெருப்பிலிட்டு காய்ச்சி ஒன்று சேர்த்து மீண்டும் ஓட்டவைத்தாய். அட, பழையபடி அது ஒன்றாக பலமாக சேர்ந்துகொண்டதே. ஆனால் ஒரு மனிதனின் மென்மையான மனத்தை உடைத்தாயே, உன்னால் எவ்வளவு முயன்றும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடிந்ததா?ஓட்ட முடிந்ததா? ஒட்டாமல் அவன் வேறே திசை நோக்கி செல்கிறான்.. வேமா இதை முதலில் புரிந்து கொள்ளடா?

Medi pandu chooda melimaiyundu……………….మేడి పండు చూడ మేలిమైయుండు
Potta vippi chooda purugulundu………………….పొట్ట విప్పి చూడ పురుగులుండు
Pirikivani madibinkamilagura……………………..పిరికి వాని మదిని బింకమీలాగురా
Viswadhaabhirama vinura Vema………………… విశ్వధాభిరామ, వినుర వేమ

ஒரு சில பழங்களை உனக்குத் தெரியும். பார்க்க அழகாக பள பளவென்று நாக்கில் ஜலம் ஊறும் . தின்பதற்கு ஆசையாக இருக்குமே உள்ளே பிரித்துப் பார்த்தால் கூடைப் புழு நெளியுமே. அதைத் தூக்கித்தான் எறியவேண்டும். நீ பார்க்கும் மனிதர்களும் அப்படித்தான். வீரனாக காட்டிக் கொள்பவன் உள்ளே அவன் கோழையாக இருக்கலாம். . தர்மிஷ்டனாக தெரிவான். ஆனால் சொந்தக் காசு ஒரு தம்படி கூட தர மாட்டான். படு கஞ்சன். பக்திமான் வேஷத்தில் இருந்தும் உள்ளே அவன் ஒரு கிராதகன். வெளிப்பகட்டில் மயங்காதேடா வேமா. நான் சொல்வது சரிதானே வேமா? – வேமனா

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *