SUR SAAGAR – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN 

உனை விடமாட்டேன் 

உலகத்திலேயே  ஆனந்தமான இடம்  எது என்றால் ராதா மட்டுமா  பிருந்தாவனம் என்று சொல்வாள்?  நாமும் தான்.  ஒவ்வொரு கணமும் அங்கே இருக்கும்போது   என் மனது அடைந்த இன்பத்தை வேறெங்கு காணமுடியும். பெறமுடியும் ? 

பிருந்தாவனத்தில் ஒவ்வொரு அடி  மண்ணும் கண்ணன் நடந்த இடம்.   நிறைய  ”குண்ட்” என்று குளங்கள் இருக்கிறது. ஒவ்வொரு   குளமும்  கண்ணன் குதித்து விளையாடி நீந்திய  நீர்நிலை.  காற்று  கண்ணன் சுவாசித்தது. மரமும் செடியும்  கண்ணனுக்கு நிழல் தந்தவை.. கனிகள் கண்ணன் ருசித்தவை.  கேட்கும்  ஒலி  எல்லாம்  அவன் குழல் நாதம்.  என்னைவிட கோடி மடங்கு  கண்ணில்லாமலேயே   கற்பனையில் ரசித்த வாறு  ஸூர் ரதாஸ். அவர் பாடல் காட்சி ஒன்று:

இதோ  கண்ணன்  ராதவைப் பார்த்து விட்டான். 

”ஆஹா  இதோ தனியாக  நிற்கிறாள்.  நான் வருவதைப்  பார்க்கவில்லை. என்னை எங்கோ  தேடுகிறாள்.  அவள் கண்ணில் படக்கூடாது.” 

கண்ணன் பூனைபோல் மெதுவாக சத்தமில்லாமல் அவள் பின்னால் சென்று இரு கைகளாலும் அவள் கண்களை மூடினான்.அவனது சிறு கைகள்  அந்த விசாலாக்ஷி கண்ணை மூட முடியுமா? எவ்வளவு கூர்மை யான பார்வை கொண்ட கண்கள் அவை.  நாகம் தனது மணியை  படம் விரித்து  அதில் பளிச்சென்று காட்டு வதைப் போல  கண்ணன் கை விரல்களுக்கிடையே அவள் கண்கள்  பளிச்சென்று ஒளி வீசின.  இரு கண்களும்  ராகு கண்ட  சூரியன் சந்திரன்  போல கை விரல்களை கண்கள்  மீறி ஒளி வீசின.  ராகுவால்  முழுசாக  சந்திரனை சூரியனை விழுங்க முடியாமல்  உடனே விட்டு  விட்டது போல் கண்ணன் விரல்கள் ராதையின் கண்களை முழுதும் மூட முடியவில்லையே.
கிருஷ்ணனுக்கு எதுவும் தேவையில்லை, வேண்டாம். அவனுக்கு என்று ஒன்றுமே வேண்டாமே. அவனிடம் எது இல்லை, வெளியே  தேட?   அவன் கோபியருடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தான். அவர்கள் அவனிடம் காட்டிய  அன்பை பல மடங்காக  அவர்க ளுக்கு திருப்பி தந்தவன். 

 ராதை திரும்பி கண்ணனைப் பார்த்தாள் . இரு கண்க ளும்  சந்தித்தன. அவனைப் பிரிந்த சில கணங்கள் கூட  அவளை துன்புறுத்தியதால்  ‘இவனை விடக்கூடாது’  என்று இறுக்கிப் பிடித்தாள் . இரு தாமரை  மலர்கள்   இணைந்தது போல் ஒரு தோற்றம்.  அவள் மனம் ஆனந் தித்து.  ”அப்பாடா  இவனைப் பிரிந்தால் எவ்வளவு துன்பமாக இருக்கிறது,இனி விடமாட்டேன். பிரிய மாட்டேன்”   என்ற ஆச்சர் யம் அவள் பெருமூச்சில் தெரிந்தது. 

ஸூர்தாஸ்  ஹிந்தியில்  என்ன எழுதினார்  என்று தெரியவில்லை, யாரோ அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது மட்டும் எனக்கு கிடைத்தது. 

”Seeing Radha stand alone, Krishna came from behind and blindfolded her with his hands. But his hands could not fully cover her large and elongated vivacious eyes. They shone out from within his fingers as a serpent’s gem which it had disgorged and hid between its fangs;” or as Rahu finding the sun and Mars together, had pounced and held them fast. Krishna does not have any self-interest, for there is nothing for him to desire or achieve. But he removes the grief of separation of those whom he loves. His eyes came close to Radha’s, and his lips were on hers. It was as though the lotuses forgetting their opposition to the moon had opened their petals to be kissed by the moon rays. Says Surdas, Krishna’s loving embrace removed from Radha. the sorrow of her parting.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *