AMBAL DHARSANAM J K SIVAN

ஸ்ரீ லலிதாம்பா தியான ஸ்லோகம்.

இன்று ஆவணி வெள்ளிக்கிழமை முதல் நாள். அம்பாளை ஒரு சில நிமிஷங்கள் மனதில் நினைப்போம்.

ஸ்ரீலலிதாம்பிகையை ஸஹஸ்ர நாமங்களால் ஸ்தோத்ரிக்கும் முன்னால் அவளை மனதில் நிறுத்தி த்யானம் பண்ணவேண்டும் ஒரு நாலு அற்புதமான ஸ்லோகங்கள் அதற்காக இருக்கிறதே. அதைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि स्फुरत् तारा नायक शेखरां स्मितमुखी मापीन वक्षोरुहाम् ।वक्षोरुहाम्
पाणिभ्यामलिपूर्ण रत्न चषकं रक्तोत्पलं बिभ्रतीं सौम्यां रत्न घटस्थ रक्तचरणां ध्यायेत् परामम्बिकाम् ध्यायेत् ॥परामम्बिकाम्

Sindhuraruna vigraham trinayanam manikya mouli spurath Thara Nayaga sekaram smitha mukhi mapina vakshoruham,
Panibhayam alipoorna ratna chashakam rakthothpalam vibhrathim, Soumyam ratna gatastha raktha charanam, dhyayeth paramambikam.

ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத் தாராநாயக ஷேகராம் ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் ||

தேவர்கள் பண்டாசுரனின் கொடுமைகளால் அவதியுற்று பார்வதி தேவியிடம் சென்று வேண்டுகிறார்கள். எவ்வளவு தான் அப்பா சக்தி உள்ளவராக இருந்தாலும், துன்பத்திலோ இன்பத்திலோ நாம் உச்சரிக்கும் முதல் வார்த்தை ”அம்மா ” தானே. அவள் இந்த லோக நாயகி. அவளிடம் அல்லவோ நம் குறைகளை சொல்லவேண்டும். குழந்தைகள் தாயிடம் தானே முறையிடும்..

அவள் அக்னியில் உதயமாகி அணிமா ,மஹிமா முதலான சக்திகள் உருவம் பெற்று, ப்ராஹ்மி,கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மஹேந்திரி ,சாமுண்டி, மஹாலக்ஷ்மி என பலவாகிறாள். தேவர்கள் குறை தவிர்க்கிறாள். பண்டாசுரன் பாசுபதாஸ்திரத்தால் வதம் செய்யப்படுகிறான் என்கிறது புராணம். ஸ்ரீ ,மஹா திரிபுரசுந்தரி, உனது ஸ்ரீ லலிதா யந்த்ரம் எனும் சக்ரமஹிமை தியானம் செய்பவர்களுக்கு உலகறிந்த உண்மை ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் எல்லையில்லாமல் இதை விவரிக்கிறார். லலிதா த்ரிசதி எனும் முன்னூறு நாமங்களும் ,லலிதா சஹஸ்ரநாமம் எனும் ஆயிர நாமங்களை ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு எடுத்துச் சொல்வது போல் அமைந்தவை.

अरुणां करुणातरङ्गिताक्षीं धृतपाशाङ्कुशपुष्पबाणचापाम् । अणिमादिभिरावृतां मयुखैः अहमित्येव विभावये भवानीम् ॥

Arunam Karuna Tarangitaksim Dhrta Pasankusa Puspa banacapam Animadibhiravrtam Mayukhairahamityeva Vibhavaye bhavanim

அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் | அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||

உன்னை நினைக்கையில் அம்பா, பவானி , உன் உருவம் உதய சூரியனின் தக தக வென ஜொலிக்கும் பொன் வண்ணமாக அல்லவோ தோன்றுகிறது. உனது நேத்ரங்கள், கண்களா கருணை நிறைந்த கடலா? காருண்ய சாகரம் என்பதை இதைத்தானோ? அடடா, உன் வில் உன்னைப்போல் கரும்பால் ஆன ‘இனிய’ தண்டனை வழங்கும் ஆயுதமா? மலர்கள் தான் கூரான அம்புகளா? பாச அங்குசம் தரித்தவளே . புண்ய புருஷர்கள் பக்தர்களாக புடை சூழ அருள்பவளே ”எல்லாம் நான் ” என்பது நீ தானோ?.

ध्यायेत्पद्मासनस्थां विकसितवदनां पद्मपत्रायताक्षीं, हेमाभां पीतवस्त्रां करकलितलसद्धेमपद्मां वराङ्गीम् । सर्वालङ्कारयुक्तां सततमभयदां भक्तनम्रां भवानीं, श्रीविद्यां शान्तमूर्तिं सकलसुरनुतां सर्वसम्पत्प्रदात्रीम् ॥

Dhyayet Padmasanastham vikasitavadanam Padmapatrayataksheem Hemabhaam peetavastram Karakalitalasaddhemapadmam varangeem.

த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம் ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம பத்மாம் வராங்கீம் |
ஸர்வாலங்கார – யுக்தாம் ஸததமபய தாம் பக்தநம்ராம் பவாநீம் ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம் ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

அம்பா என்று சொல்லட்டுமா, அம்மா என்று சொல்லட்டுமா? அம்மா என்று சொன்னாலே நாவுக்கு இனிமையாக இருக்கிறது. அப்படியே சொல்கிறேன். உன்னை நான் தெய்வமாக தியானிக்க நீ உகந்தவள். தாமரை மலர்மேல் அமர்ந்தவள். உன் கண்களும் தாமரை இதழ்கள் என்பதால் தாமரை மலர் தான் உட்கார்ந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. பொன்மயமான ஒளி வீசுபவள். கையில் தாமரை மலர்கள் .. நீ செந்தாமரை.. உன்னை சரணடைந்தால் மனதில் தோன்றும் பயம் அகற்றுகிறாய். அமைதியின் உருவமான நீ அறிவின் சிகரமாகவும் திகழ்கிறாயே. ஞானாம்பிகை. அதனால் அல்லவோ தேவாதி தேவர்கள் உன் திருவடி சரணம் என்று வணங்குகிறார்கள். வேண்டும் வரம் அளிப்பவள் நீ.

அம்மா ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும் ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே , தாமரை ஆசனத்தில் அமர்ந்த மாதா, தாமரை போல் மலர்ந்த உருண்ட கருணை விழி கொண்ட ஜகன்மாதா, தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே, பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி, சகல லோக ரக்ஷகி, பக்தர்களை கனிவோடு காப்பவளே, சர்வ தேவாதி தேவர்களும் தொழும் தாயே, தயாளு, செல்வங்களை வளங்களை, வாரி வழங்கும் உன்னை மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன்

सकुङ्कुमविलेपनामलिकचुम्बिकस्तूरिकां, समन्दहसितेक्षणां सशरचापपाशाङ्कुशाम् । अशेषजनमोहिनीमरुणमाल्यभूषाम्बरां, जपाकुसुमभासुरां जपविधौ स्मरेदम्बिकाम् ॥

Sakumkuma vilepanam malikachumbikastoorikam Samandahasitekshanam sasharachapa pashankusham.
Ashesha jana mohineem arunamalya bhooshambaram Japakusumabhasuram japavidhou smaredambikam.

ஸகுங்குமவிலேபநா – மளிகசும்பி – கஸ்தூரிகாம் ஸமந்த – ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாஸாங்குஸாம் | அசேஷஜநமோஹிநீ – மருணமால்ய பூஷாம்பராம் ஜபாகுஸும – பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||

நாம் யாரை விடாமல் தொழவேண்டும் தெரியுமா? யார் தனது தேகத்தில் குங்குமத்தை குழைத்து பூசியிருப்பவளோ, வண்டுகள் சுற்றி வாசம் பெரும் கஸ்தூரியை கமகமவென தரித்திருப்பவளோ, எல்லாவற்றையும் மிஞ்சும் காந்த புன்னகை கொண்டவளோ, கரும்பு வில்லை, மலரம்புகளையும், பாசாங்குசமும் ஏந்தியவளோ, சகல ஜீவன்களையும் கவர்ந்தவளோ, செம்மலர்மாலை அணிந்தவளோ, ஈடிணையற்ற ஆபரணதாரியோ, செவ்விதழ் மலரை ஒத்த நிறத்தவளோ,அம்மா, லலிதாம்பிகே உன்னை சரணடைந்து அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

”யோகிகள், முனிவர்கள் ரிஷிகள் ஏன் காவி வஸ்திரம் அணிகிறார்கள்? அது ஸ்ரீ லலிதாம்பி கையின் மேனியின் நிறம். சர்வ சக்தி வாய்ந்ததல்லவா? சிவனோடு ஐக்யமானவள் முக்கண்ணியாக காட்சியளிப்பதில் என்ன ஆச்சர்யம்? நவரத்ன மகுடம் தரித்தவள். பிறைச் சந்திரன் சூடியவள். சிவை அல்லவா? சதாகாலமும் அனைத்து உள்ளங்களையும் காந்தமென கவரும் புன்னகை முகத்தாள் . பெண்மையின் இலக்கணம். சிவந்த மலர்களை ஏந்திய கரமுடையாள். சாந்த ஸ்வரூபி; கருணைக்கடல். சிவந்த பாதங்களை நவரத்ன பீடத்தில் இருத்தி தரிசனம் தருபவள். ஸ்ரீ லலிதா உனக்கு நமஸ்காரம் தேவி.

பராசக்தி எவ்வளவு அழகாக குங்குமம் தரித்துக் கொண்டிருக்கிறாள். நெற்றிக்கு கும்குமம் ஒரு தனி அழகு. எத்தனையோ குங்கும நெற்றிகள் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. நெற்றியில் பெரிய விக்டோரியா ராணி கால வெள்ளி ரூபாய் மாதிரி குங்கும பொட்டு ,மஞ்சள் பூசிய முகம், வகிட்டில் குங்குமம் தொங்க தொங்க தாலி, மடிசார், மூக்குத்தி, காதில் ரெண்டுபக்கமும் பெரிய தோடு வயதான சுமங்கலி மாமிகள் நிறைய பேரை பார்த்து வணங்கி இருக்கிறேன். அவர்கள் கையால் சாப்பிட்டிருக்கிறேன். அந்த உணவுக்கே ஒரு தெய்வீக ருசி. லலிதாம்பிகை அப்படித்தான் நெற்றியில் பளிச்சென்று குங்குமம் தரித்தவள். இனிய முகத்திற்கு எடுப்பான சிவப்பு. அதற்கு அழகு மெருகேற்றும் புன்சிரிப்பு. நெற்றி புருவத்தில் வளைந்த அழகிய வில், கையிலும் கரும்பு வில் புஷ்ப அஸ்திரங்கள். செந்நிற மலர் மாலைகள் மாணிக்கம் ஒளிவீசும் ஆபரணங்கள். அவள் ஒரு அழகிய செவ்வந்திப்பூ. கண்டாலே கண்மூடி ஜபம் செய்ய தூண்டுபவள். ஜபத்தால் கண்முன் நிறைபவள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *