VIVEKA CHUDAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 121-130

121 सर्वप्रकारप्रमितिप्रशान्तिः बीजात्मनावस्थितिरेव बुद्धेः । सुषुप्तिरेतस्य किल प्रतीतिः var सुषुप्तिरत्रास्य किञ्चिन्न वेद्मीति जगत्प्रसिद्धेः ॥ १२१॥

sarvaprakārapramitipraśāntiḥ bījātmanāvasthitirēva buddhēḥ । suṣuptirētasya kila pratītiḥ (pāṭhabhēdaḥ – suṣuptiratrāsya)
kiñchinna vēdmīti jagatprasiddhēḥ ॥ 121॥

ஸர்வப்ரகாரப்ரமிதிப்ரஶாந்தி: பீ³ஜாத்மநாவஸ்தி²திரேவ பு³த்³தே:⁴ । ஸுஷுப்திரேதஸ்ய கில ப்ரதீதி: ஸுஷுப்திரத்ராஸ்ய கிஞ்சிந்ந வேத்³மீதி ஜக³த்ப்ரஸித்³தே:⁴ ॥ 121॥

மானுட வாழ்வில் மூன்று நிலைகள் நமக்கு உள்ளது. விழிப்பு, தூக்கம், கனவு. இதில் விழிப்பு கனவு ரெண்டு நிலைகளிலும் மனது மாயா பிம்பங்களை தோற்றுவிக்கிறது. ஐம்புலன்களின், பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் பல வித அனுபவங்களை பெறுகிறோம். பொய் நிஜமாக தோன்றுகிறது. இல்லாதது இருப்பது போல காண்கிறது. ஆத்மா உணரப்படவில்லை. மரக்கட்டை போல எந்த உணர்வும் இல்லாத தூக்க நிலையில் கனவு இல்லை, விழிப்பு இல்லை, உடல் இல்லை, உணர்வு இல்லை ஆத்மா மட்டுமே இயங்குகிறது. அது கொடுக்கும் ஆனந்தம் மற்ற ரெண்டு நிலைகளில் எப்போதும் பெறமுடியவில்லை. ஆஹா நான் ஆனந்தமாக தூங்கினேன் ஸார் என்று அப்புறம் சந்தோஷமாக சொல்கிறோம்.ஏனென்றால் நமக்கு அப்போது மனதின் ஆட்டம் இல்லை.

122 देहेन्द्रियप्राणमनोऽहमादयः सर्वे विकारा विषयाः सुखादयः । व्योमादिभूतान्यखिलं च विश्वं अव्यक्तपर्यन्तमिदं ह्यनात्मा ॥ १२२॥

dēhēndriyaprāṇamanō’hamādayaḥ sarvē vikārā viṣayāḥ sukhādayaḥ । vyōmādibhūtānyakhilaṃ cha viśvaṃ avyaktaparyan
tamidaṃ hyanātmā ॥ 122॥

தே³ஹேந்த்³ரியப்ராணமநோऽஹமாத³ய: ஸர்வே விகாரா விஷயா: ஸுகா²த³ய: । வ்யோமாதி³பூ⁴தாந்யகி²லம் ச விஶ்வம் அவ்யக்தபர்யந்தமித³ம் ஹ்யநாத்மா ॥ 122॥

122 இந்த உடம்பு, அங்கங்கள், பஞ்ச பிராணன், மனது, அஹம்பாவம் , புலனுணர்வு, சுக துக்கம் பஞ்ச பூதம் இதெல்லாம் ஆத்மாவில் இருந்து வேறுபட்டவை, மாறுபவை, மாறாத நித்தியமான ஆத்மா இவை அல்ல. .

123. माया मायाकार्यं सर्वंमहदादिदेहपर्यन्तम् असदिदमनात्मतत्त्वं विद्धि त्वं मरुमरीचिकाकल्पम्॥ १२३॥

māyā māyākāryaṃ sarvaṃ mahadādidēhaparyantam । asadidamanātmatattvaṃ viddhi tvaṃ marumarīchikākalpam ॥ 123॥

மாயா மாயாகார்யம் ஸர்வம் மஹதா³தி³தே³ஹபர்யந்தம் । அஸதி³த³மநாத்மதத்த்வம் வித்³தி⁴ த்வம் மருமரீசிகாகல்பம் ॥ 123॥

123. காணும் யாவையும் மாயையின் தோற்றம் தான். சர்வம் மாயாமயமாக இருக்கும் பிரபஞ்சம் இது. அகண்டம் முதல் பிண்டம் வரை எல்லாம் மாயை தானா? கானல் நீர் பிம்பங்கள். அனாத்மா என்ற ஒரே வார்த்தையில் முடிக்கிறார் சங்கரர்.

124. अथ तेसम्प्रवक्ष्यामि स्वरूपं परमात्मनः । यद्विज्ञाय नरो बन्धान्मुक्तः कैवल्यमश्नुते॥ १२४॥

atha tē sampravakṣyāmi svarūpaṃ paramātmanaḥ । yadvijñāya narō bandhānmuktaḥ kaivalyamaśnutē ॥ 124॥

அத² தே ஸம்ப்ரவக்ஷ்யாமி ஸ்வரூபம் பரமாத்மந: । யத்³விஜ்ஞாய நரோ ப³ந்தா⁴ந்முக்த: கைவல்யமஶ்நுதே ॥ 124॥

124. இனிமேல் தான் பரமாத்மாவை, அதன் தன்மையை, கொஞ்சம் கொஞ்சமாக அறியவேண்டும். அது ஒன்றே நமமை சம்ஹார பந்தத்திலிருந்து விடுவிக்கும். நம்முள் ஆத்மாவாக பரிமளிக்கும் பரமாத்வை அறிவோம். முக்தி பெறுவோம்.

125. अस्ति कश्चित्स्वयं नित्यमहम्प्रत्ययलम्बनः । अवस्थात्रयसाक्षी सन्पञ्चकोशविलक्षणः ॥ १२५॥

asti kaśchitsvayaṃ nityamahampratyayalambanaḥ । avasthātrayasākṣī sanpañchakōśavilakṣaṇaḥ ॥ 125॥

அஸ்தி கஶ்சித்ஸ்வயம் நித்யமஹம்ப்ரத்யயலம்ப³ந: ।அவஸ்தா²த்ரயஸாக்ஷீ ஸந்பஞ்சகோஶவிலக்ஷண: ॥ 125॥

125. காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா. பஞ்ச கோசங்கள் ஆத்மாவை சுற்றி மறைப்பவை. ஆத்மா இந்த கோஷங்கள், மூன்று நிலைகள், சகலத்துக்கு அப்பாற்பட்டது. சாஸ்வதமானது.

126. यो विजानाति सकलं जाग्रत्स्वप्नसुषुप्तिषु। बुद्धितद्वृत्तिसद्भावमभावमहमित्ययम् ॥ १२६॥

yō vijānāti sakalaṃ jāgratsvapnasuṣuptiṣu । buddhitadvṛttisadbhāvamabhāvamahamityayam ॥ 126॥

யோ விஜாநாதி ஸகலம் ஜாக்³ரத்ஸ்வப்நஸுஷுப்திஷு । பு³த்³தி⁴தத்³வ்ரு’த்திஸத்³பா⁴வமபா⁴வமஹமித்யயம் ॥ 126॥

126. அமைதியாக பேதமில்லாமல் இந்த உடம்பின் சேஷ்டைகள், புலன்களின் ஆட்டம் பாடம், மூன்று நிலைகளிலும் நடப்பது, மனதின் குரங்காட்டம் சகலத்தையும் ஸாக்ஷி யாக ப்ரம்மம் எனும் ஆத்மா பார்த்துக் கொண்டிருக்கிறது.

127. यः पश्यति स्वयं सर्वंयं न पश्यति कश्चन । किञ्चन यश्चेतयति बुद्ध्यादि न तद्यं चेतयत्ययम्॥ १२७॥

yaḥ paśyati svayaṃ sarvaṃ yaṃ na paśyati kaśchana । (pāṭhabhēdaḥ – kiñchana) yaśchētayati buddhyādi na tadyaṃ chētayatyayam ॥ 127॥

ய: பஶ்யதி ஸ்வயம் ஸர்வம் யம் ந பஶ்யதி கஶ்சந । கிஞ்சந யஶ்சேதயதி பு³த்³த்⁴யாதி³ ந தத்³யம் சேதயத்யயம் ॥ 127॥

127. ஆத்மா சகலத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்க்கவில்லை, இயலவில்லை. நமது புத்தியை தெரிவிக்கும் சக்தி கொண்ட ஆத்மாவை நாம் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதன் ஞானப்ரகாசத்தில் திளைக்க வேண்டும்.

128. येन विश्वमिदं व्याप्तं यं न व्याप्नोति किञ्चन । आभारूपमिदं सर्वंयं भान्तमनुभात्ययम्॥ १२८॥

yēna viśvamidaṃ vyāptaṃ yaṃ na vyāpnōti kiñchana । ābhārūpamidaṃ sarvaṃ yaṃ bhāntamanubhātyayam ॥ 128॥

யேந விஶ்வமித³ம் வ்யாப்தம் யம் ந வ்யாப்நோதி கிஞ்சந । ஆபா⁴ரூபமித³ம் ஸர்வம் யம் பா⁴ந்தமநுபா⁴த்யயம் ॥ 128॥

128. இந்த லோகத்தில் இதெல்லாம் எங்கும் பரவி இருக்கிறதோ, எது அப்படி பரவி இருப்பதாக எ அறியப்படாமல் இருக்கிறதோ, எது பட்டொளி வீசி திகழ்கிறது என்றாலும் அதனொளி அறியப்படாமல் இருக்கிறதோ அதுவே ப்ரம்மம்.

129. यस्य सन्निधिमात्रेण देहेन्द्रियमनोधियः । विषयेषुस्वकीयेषुवर्तन्तेप्रेरिता इव ॥ १२९॥
Yasya sannidhimātrēṇa dēhēndriyamanōdhiyaḥ । viṣayēṣu svakīyēṣu vartantē prēritā iva ॥ 129॥

யஸ்ய ஸந்நிதி⁴மாத்ரேண தே³ஹேந்த்³ரியமநோதி⁴ய: । விஷயேஷு ஸ்வகீயேஷு வர்தந்தே ப்ரேரிதா இவ ॥ 129॥

129. எதை நாம் ஆத்மா என அறியவேண்டும் தெரியுமா? எதனால் இந்த உடம்பு, அங்கங்களின் பாகங்கள், மனது, புத்தி எல்லாம் தத்தம் வேலையை விடாமல் செய்து இயங்குகிறதோ, அந்த ஜீவ சக்தி தான் ஆத்மா எனும் எஜமானன். . மற்றதெல்லாம் அதன் பணியாட்கள்.

130. अहङ्कारादिदेहान्ता विषयाश्च सुखादयः । वेद्यन्ते घटवद्येन नित्यबोधस्वरूपिणा ॥ १३०॥

ahaṅkārādidēhāntā viṣayāścha sukhādayaḥ । vēdyantē ghaṭavadyēna nityabōdhasvarūpiṇā ॥ 130॥

அஹங்காராதி³தே³ஹாந்தா விஷயாஶ்ச ஸுகா²த³ய: । வேத்³யந்தே க⁴டவத்³யேந நித்யபோ³த⁴ஸ்வரூபிணா ॥ 130॥

130.அஹங்காரம் தான் நான் எனது என்ற பேதத்தை மனதில் பாதிக்கிறது. உச்சியிலிருந்து உங்கள் வரை, இந்த அஹங்காரம் தான் ஐம்புலன்களை ஆட்டிவைக் கிறது. மாயையின் வழியில் கடத்திச் செல்கிறது. அல்ப சுகத்தை சாஸ்வதம் என நம்பி அதை தேடி ஓடச் செய் கிறது. இதை அறிந்துகொண்டால் ஆத்ம விசாரம் படிப்படியாக முன்னேற உதவும். முக்தி மார்க்கத்துக்கு படிக்கட்டு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *