VIVEKA CHOODAMANI SLOKAS 111-120 J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 111-120

111. विक्षेपशक्ती रजसः क्रियात्मिका यतः प्रवृत्तिः प्रसृता पुराणी । रागादयोऽस्याः प्रभवन्ति नित्यं दुःखादयो येमनसो विकाराः ॥ १११॥

vikṣēpaśaktī rajasaḥ kriyātmikā yataḥ pravṛttiḥ prasṛtā purāṇī । rāgādayō’syāḥ prabhavanti nityaṃduḥkhādayō yē manasō vikārāḥ ॥ 111॥

விக்ஷேபஶக்தீ ரஜஸ: க்ரியாத்மிகா யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ । ராகா³த³யோஸ்யா: ப்ரப⁴வன்தி நித்யம்
து³:கா²த³யோ யே மனஸோ விகாரா: ॥ 111॥

111. மனித குணங்கள் மூவகைப் படும். சத்வ ரஜோ, தமோ குணங்கள். இதில் உயர்ந்தது சத்வம். ரஜோ குணம் விருப்பு வெறுப்பு, பார பக்ஷ குணங்களை கட்டுப்படுத்தமுடியாத நிலை கொண்டது. உணர்ச்சி வசப்படுவது. அதை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் உரிமை கொண்டது. செயல்பாடு மிக்கது. பற்று,துக்கம் விடாமல் ஆக்கிரமிக்க இடம் கொடுப்பது. அதை சீர்படுத்தினால் மேன்மை பெற வாய்ப்பு உண்டு.

112 कामः क्रोधो लोभदम्भाद्यसूया var लोभदम्भाभ्यसूया अहङ्कारेर्ष्यामत्सराद्यास्तुघोराः । धर्माएतेराजसाः पुम्प्रवृत्तिर्यस्मादेषा तद्रजो बन्धहेतुः ॥ ११२॥

kāmaḥ krōdhō lōbhadambhādyasūyā (pāṭhabhēdaḥ – lōbhadambhābhyasūyā) ahaṅkārērṣyāmatsarādyāstu ghōrāḥ । dharmā ētē rājasāḥ pumpravṛtti- ryasmādēṣā tadrajō bandhahētuḥ ॥ 112॥ (pāṭhabhēdaḥ – yasmādētattadrajō)

காம: க்ரோதோ⁴ லோப⁴த³ம்பா⁴த்³யஸூயா (பாட²பே⁴த:³ – லோப⁴த³ம்பா⁴ப்⁴யஸூயா) அஹங்காரேர்ஷ்யாமத்ஸராத்³யாஸ்து கோ⁴ரா: । த⁴ர்மா ஏதே ராஜஸா: பும்ப்ரவ்ருத்தி- ர்யஸ்மாதே³ஷா தத்³ரஜோ ப³ன்த⁴ஹேது: ॥ 112॥ (பாட²பே⁴த:³ – யஸ்மாதே³தத்தத்³ரஜோ)

112. ஆசை,கோபம், கர்வம், பொறாமை, சுய நலம் ஆத்திரம் இதற்கெல்லாம் காரணம் ரஜோகுணம். உலகவாழ்க்கையில் மனிதன் பிரதிபலிக்கும் தன்மைகள் இவை தானே. உலக வாழ்வில் பிடிப்புக்கு ரஜோகுணம் இன்றியமையாததாக உள்ளது.
இதில் ஆசை,கோபம், பேராசை, பொறாமை, ஏமாற்றும் குணம் இதெல்லாம் ரஜோகுணத்தில் விலக்க வேண்டியவை. நமது சுக துக்க வாழ்வுக்கு ஆதி காரணம் ரஜோகுணம்.

113 यस्मादेतत्तद्रजो एषाऽऽवृतिर्नाम तमोगुणस्य शक्तिर्मया वस्त्ववभासतेऽन्यथा । शक्तिर्यया सैषा निदानं पुरुषस्य संसृतेः विक्षेपशक्तेः प्रवणस्य हेतुः ॥ ११३॥

ēṣā”vṛtirnāma tamōguṇasya śaktirmayā vastvavabhāsatē’nyathā । śaktiryayā saiṣā nidānaṃ puruṣasya saṃsṛtēḥ
vikṣēpaśaktēḥ pravaṇasya hētuḥ ॥ 113॥ (pāṭhabhēdaḥ – prasarasya)

ஏஷாவ்ருதிர்னாம தமோகு³ணஸ்ய ஶக்திர்மயா வஸ்த்வவபா⁴ஸதேன்யதா² । ஶக்திர்யயா ஸைஷா நிதா³னம் புருஷஸ்ய ஸம்ஸ்ருதே: விக்ஷேபஶக்தே: ப்ரவணஸ்ய ஹேது: ॥ 113॥ (பாட²பே⁴த:³ – ப்ரஸரஸ்ய)

113. தமோ குணம் என்பது திரை போட்டு மறைக்கும் சமாச்சாரம். அறியாமை, இருள், அஞ்ஞானம் என்று பெயர் கொண்ட குணம். யோசிக்க வைக்காமல் அப்படியே நம்புவது. செய்த தவறுகளை நிறுத்திக்கொள்ளாமல் மேலும்மேலும் அவற்றை தொடர செய்வது. முன்னேற்ற பாதை, நல்வழியாய் சிந்திக்காதது. மூன்று குளங்களிலும் மிகவும் தாழ்ந்தது.இதுவே.

114. प्रसरस्य प्रज्ञावानपि पण्डितोऽपि चतुरोऽप्यत्यन्तसूक्ष्मात्मदृग्- var सूक्ष्मार्थदृग् व्यालीढस्तमसा न वेत्ति बहुधा सम्बोधितोऽपि स्फुटम् । भ्रान्त्यारोपितमेव साधुकलयत्यालम्बतेतद्गुणान् हन्तासौ प्रबला दुरन्ततमसः शक्तिर्महत्यावृतिः ॥ ११४॥

prajñāvānapi paṇḍitō’pi chaturō’pyatyantasūkṣmātmadṛg- (pāṭhabhēdaḥ – sūkṣmārthadṛg) vyālīḍhastamasā na vētti bahudhā sambōdhitō’pi sphuṭam । bhrāntyārōpitamēva sādhu kalayatyālambatē tadguṇān hantāsau prabalā durantatamasaḥ śaktirmahatyāvṛtiḥ ॥ 114॥

ப்ரஜ்ஞாவானபி பண்டி³தோபி சதுரோப்யத்யன்தஸூக்ஷ்மாத்மத்³ருக்³- (பாட²பே⁴த:³ – ஸூக்ஷ்மார்த²த்³ருக்³)
வ்யாலீட⁴ஸ்தமஸா ந வேத்தி ப³ஹுதா⁴ ஸம்போ³தி⁴தோபி ஸ்பு²டம் । ப்⁴ரான்த்யாரோபிதமேவ ஸாது⁴ கலயத்யாலம்ப³தே தத்³கு³ணான் ஹன்தாஸௌ ப்ரப³லா து³ரன்ததமஸ: ஶக்திர்மஹத்யாவ்ருதி: ॥ 114॥

114. மிக்க அறிவாளிகள், கற்றோர், சிந்திப்போர், ஆத்ம ஞானம் தேடுவோர், அகியோரைக் கூட தமோ குணம் வென்றுவிடும் சக்திகொண்டது. ஆத்மாவை அறியாதது அது. மாயை வசப்பட்டது. பற்று, அதன் விளைவு எல்லாவற்றையும் தன்னுள் கொண்டது. அறியாமை, தூக்கம், சோம்பேறித்தனம், முட்டாள்தனம், இதெல்லாம் தமோகுணத்தின் வெளிப்பாடுகள். இதில் சிக்கிக் கொண்டவன் தூக்கத்தில் ஆழ்ந்தவன் போல் காண்கிறான். மரக்கட்டை, பாறைக்கல் இவற்றுக்கு சமமாவனன். சத்வ குணம் தெளிந்த நீரோடை, ரஜோ தமோ குணங்களோடு கலந்து அது கறை படுகிறது. சத்வ குணம், ஆத்மஞானத்தோடு கலந்தால் ஒளிவிடும் தீபமாக சூரியன் மாதிரி ஜொலிக்கிறது.

115. अभावना वा विपरीतभावनाऽ- var विपरीतभावना सम्भावना विप्रतिपत्तिरस्याः । संसर्गयुक्तं न विमुञ्चति ध्रुवं विक्षेपशक्तिः क्षपयत्यजस्रम्॥ ११५॥

115. அபா⁴வநா வா விபரீதபா⁴வநாऽ- var விபரீதபா⁴வநா ஸம்பா⁴வநா விப்ரதிபத்திரஸ்யா: । ஸம்ஸர்க³யுக்தம் ந விமுஞ்சதி த்⁴ருவம் விக்ஷேபஶக்தி: க்ஷபயத்யஜஸ்ரம் ॥ 115॥

115 நேர்மையான சரியான நியாய தீர்ப்பு இன்மை, நன்னம்பிக்கை இன்மை, சந்தேகம், இதெல்லாம் தமோகுணத்தோடு ஒட்டிய தொடர்பு கொண்டவை. மன ஸாக்ஷியை மறைப்பவை, எல்லையற்ற தொடர்ந்த துன்பம் விளைப்பவை .ரஜோ, தமோ குணத்தோடு கலக்கும்போது சத்வ குணம் பலம் இழக்கிறது. சக்தி குறைகிறது.

116. अज्ञानमालस्यजडत्वनिद्रा प्रमादमूढत्वमुखास्तमोगुणाः । एतैः प्रयुक्तो न हि वेत्ति किञ्चित् निद्रालुवत्स्तम्भवदेव तिष्ठति ॥

116. அஜ்ஞாநமாலஸ்யஜட³த்வநித்³ராப்ரமாத³மூட⁴த்வமுகா²ஸ்தமோகு³ணா: । ஏதை: ப்ரயுக்தோ ந ஹி வேத்தி கிஞ்சித் நித்³ராலுவத்ஸ்தம்ப⁴வதே³வ திஷ்ட²தி ॥ 116॥

116.அஞ்ஞானம் எனும் அறியாமை, சோர்வு, மன உளைச்சல், சோம்பேறித்தன்மை, தூக்கம், எதிலும் கவனிப்பு இன்மை, முட்டாள்தனம், இதெல்லாம் தமோ குண சாயல்கள் என்று முந்தைய ஸ்லோகங்களில் குறிப்பிட்டிருக்கிறது. தண்டமாக வீண் வாழ்க்கையை ஒரு மண்சுவர் போல் வாழ்பவன் தமோகுணம் உள்ளவன்.

117 सत्त्वं विशुद्धं जलवत्तथापि ताभ्यां मिलित्वा सरणाय कल्पते। यत्रात्मबिम्बः प्रतिबिम्बितः सन् प्रकाशयत्यर्क इवाखिलं जडम् ॥

ஸத்த்வம் விஶுத்³த⁴ம் ஜலவத்ததா²பி தாப்⁴யாம் மிலித்வா ஸரணாய கல்பதே । யத்ராத்மபி³ம்ப:³ ப்ரதிபி³ம்பி³த: ஸன்
ப்ரகாஶயத்யர்க இவாகி²லம் ஜட³ம் ॥ 117॥

117.சத்வ குணம் மற்ற ரெண்டு குணங்களான தமோ ரஜோ குணங்களின் கலப்படமாக மாறினால்தான் அதன் ஆத்ம ஞான,ஆத்ம விசார தன்மையை இழக்கிறது. பசு பன்றியாகிறது.

118. मिश्रस्य सत्त्वस्य भवन्ति धर्माः त्वमानिताद्या नियमा यमाद्याः । श्रद्धा च भक्तिश्च मुमुक्षुता च दैवी च सम्पत्तिरसन्निवृत्तिः ॥ ११८॥

118. மிஶ்ரஸ்ய ஸத்த்வஸ்ய ப⁴வந்தி த⁴ர்மா: த்வமாநிதாத்³யா நியமா யமாத்³யா: । ஶ்ரத்³தா⁴ ச ப⁴க்திஶ்ச முமுக்ஷுதா ச தை³வீ ச ஸம்பத்திரஸந்நிவ்ரு’த்தி: ॥ 118॥

118. நியமம், யமம், பக்தி நம்பிக்கை, முக்தி, ஞானம் தேடல், போன்றவற்றை இந்த இரு சக்தி வாய்ந்த குணங்கள் திரை போட்டு மறைத்துவிடுவதால் சத்வம் வலுவிழக்கிறது.

119. विशुद्धसत्त्वस्य गुणाः प्रसादः स्वात्मानुभूतिः परमा प्रशान्तिः । तृप्तिः प्रहर्षः परमात्मनिष्ठा यया सदानन्दरसं समृच्छति ॥ ११९॥

119. விஶுத்³த⁴ஸத்த்வஸ்ய கு³ணா: ப்ரஸாத:³ ஸ்வாத்மானுபூ⁴தி: பரமா ப்ரஶான்தி: । த்ருப்தி: ப்ரஹர்ஷ: பரமாத்மனிஷ்டா²
யயா ஸதா³னந்த³ரஸம் ஸம்ருச்ச²தி ॥ 119॥

119. சத்வ குணசாலி, சந்தோஷமாக, உற்சாகமாக இருப்பவன், உண்மை, நியாயம், நீதி,நேர்மை அறிந்தவன், அமைதியானவன், எல்லோரையும் எல்லாவற்றையும் மதித்து அன்போடு பழகுபவன். வித்யாசம் இல்லாதவன்.

120 .अव्यक्तमेतत्त्रिगुणैर्निरुक्तं तत्कारणं नाम शरीरमात्मनः । सुषुप्तिरेतस्य विभक्त्यवस्था प्रलीनसर्वेन्द्रियबुद्धिवृत्तिः ॥ १२०॥

அவ்யக்தமேதத்த்ரிகு³ணைர்னிருக்தம் தத்காரணம் நாம ஶரீரமாத்மன: । ஸுஷுப்திரேதஸ்ய விப⁴க்த்யவஸ்தா²
ப்ரலீனஸர்வேன்த்³ரியபு³த்³தி⁴வ்ருத்தி: ॥ 12௦॥

120. மூன்று குணங்களும் கலவையாக ஆத்மாவை காரணசரீரமாக்குகிறது. அதன் உண்மைத் தன்மையை திரை போட்டு மறைக்கிறது. இதையே மாயையின் வசப்பட்டது என்கிறோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *