KALA BAIRAVAR – J K SIVAN

காலபைரவர்  –   நங்கநல்லூர் . J K  SIVAN
64 பைரவர்கள்                    

ஆதி சங்கரரின்  கால பைரவாஷ்டகம்  எழுதுவதற்கு முன்  நீருய  பைரவ  விஷயங்கள்  பரிமாறுகிறேன்.  அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள உதவும். பரமேஸ்வரன் அம்சம்  காலபைரவர். ஒரு பைரவர் மட்டும் அல்ல. அவர் 64 வித பைரவர்.  இதோ  லிஸ்ட்  கீழே 64 பைரவர்கள் பட்டியல் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு பைரவரைப் பற்றியும் சொன்னாலே  ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ரெடிமேட் தலைகாணி தயாராகிவிடும்.நமது பாரத தேசத்தில்  வடக்கேயும்  தெற்கேயும் பைரவ பக்தர்கள் அதிகம்.  ப்ரத்யக்ஷ தெய்வம் என்று போற்றப்படுபவர்  பைரவர்.  பயம் போக்கிடுபவர்.  எண்ணிக்கொள்ளுங்கள்  64  பெயர்களை:

நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சுவர்ண கால பைரவர்
திருவண்ணாமலையில் தரிசனம் தருகிறார். செல்வத்திற்கு அதிபதியான பைரவர் என்பதால் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர். இடது கையில் கபாலம் காணோம். ஆனால் அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தருபவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்வது வழக்கம். இவரை வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்.   இரண்டு நாய் வாகனங்கள்.
 அழிவிடைதாங்கி பைரவர் கோவில் எனும் பெரிய கோவில்  பைரவ புறம் எனும் கிராமத்தில் இருக்கிறது. 6 நிலை  ராஜகோபுரம். நிச்சயம் 600-700 வருஷ  ஆலயம்.விஜயநகர ராயர்கள் காலத்து கோவில்.  மூலவர்  சொர்ண பைரவரை ஸ்தம்பித்தது  ஆதி சங்கரர். பைரவர்  ஆலயங்களில் நிறைய  நாய்கள் வந்து போகும் படுத்து தூங்கும். யாரும் விரட்டும்  வழக்கமில்லை.  திருப்பனங்காட்டிலிருந்து  8 கி.மீ.  ஐயங்கார்  குளத்திலிருந்து 12 கி.மீ.  காஞ்சியிலிருந்து 21 கி.மீ. வந்தவாசியிலிருந்து 41 கி.மீ. நம் ஊர்  சென்னையிலிருந்து 99 கி.மீ.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *