ஹே கோவிந்தா 28

ஹே கோவிந்தா  –  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆதிசங்கரரின்  பஜகோவிந்தம் 

28. कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम्
आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥ 
 
kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h .
aatmaGYaana vihiinaa muuDhaaH te pachyante narakaniguuDhaaH ..

காமம் குரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா த்மானம் பச்யதி ஸோஹம் (or )பாவய கோ ஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடாஹ் தே பச்யந்தே நரகநிகூடா
மனிதனை  என்று சொல்வதை விட  மனதை என்று சொன்னால்  தான்  ரொம்ப பொருத்தம். மனது தானே  மனிதன். இந்த மனதை ஆக்கிரமித்து நம்மை அல்லல் பட வைக்கும்  காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் ஆகியவை எங்கிருந்து  வந்தவை?  
யாராவது பிடித்து  நம் வாயைப் பிளந்து உள்ளே  தள்ளியதா? 
யாரிடமிருந்தாவது நாம்  கற்றுக் கொண்டதா?   
கொரோனா போல் நாம் தேடாமலேயே நம்மை வந்து ஒட்டிக்கொண்டதா?  
எங்கேயாவது உள்ளூரிலோ வெளியூரிலோ போய்  காசு கொடுத்து வாங்கி வந்ததா?  
 
இதெல்லாம் ஒன்றுமே இல்லை.  நமது மனதை  நாம் காணும்,கேட்கும், பேசும், உணரும், முகரும் உலக விஷயங்கள் கெட்டியாக,  தானே,  நம்  கவனத்தை ஈர்த்து, ஏகபோகமாக நமது மனதில் இடம் பெற்று நம்மை ஆட்டி வைப்பவை. அதற்கு அடிமையாகி நாம் கடைசியில் பெறுவது  நிம்மதியின்மை, அளவற்ற துன்பம், பாப மூட்டை முதுகில் பெரிய சுமையாக.    இதெல்லாம் தொலைத்து விட்டு  உண்மையில் இது சம்பந்தமில்லாத நாம் யார்  என்று உணரவைப்பது  பஜகோவிந்தம் போன்ற  அற்புத  அறிவுரைகள்.
 
 ஆத்ம ஞானம் இல்லாத  அறியாத, மூடர்களாக  இனியாவது இருக்க வேண்டாம்.  ஞானம் பெறுவோம்.
ஸம்ஸார நரகத்தில் வெகுகாலம் சிக்கி அவஸ்தைப்பட்டது போதும். ஞானமில்லாதவர்கள் ஸம்ஸார சாகரத்தை தாண்ட வழி இல்லையே. 
ஆசை,  பொறாமை,  அனாவசிய பேச்சு, அகம்பாவம்  நீங்க முயல்வோம்.
ஆசை  தவறான வழியில் முயற்சி செய்ய வைக்கிறது. அது பாபம். ஆசையை தான் ‘காமம்’ என்கிறோம். கிடைக்காதபோது ஏமாற்றம்,கோபமாக மாறுகிறது. கோபம் நமக்கு ஒரு சத்ரு. க்ரோதம் தான் கோபம். 
 
இந்த  பஜகோவிந்த  ஸ்லோகம்  இயற்றியவர் பாரதி வம்சர் என்று ஆதி சங்கரரின் சிஷ்யர்.இவர் முத்துப் போல சொல்வது என்னவென்றால் ”ஹே மூடனே, உன்னை நரகத்தில் இருந்து வெளியே கொண்டுவர நீ தான் பாடுபட வேண்டும். அதற்கு நீ செய்யவேண்டியது என்ன? உன்னை நரகில் விடாமல் ஆழ்த்திக் கொண்டி ருக்கும் , காமம், மோகம், கோபம், பேராசை, பொறாமை இவை எல்லாவற்றிலிருந்தும் தப்பி விடுபட்டு உடனே உன்னை மெதுவாக கழட்டிக் கொள். அடுத்த கணமே உன் ஆத்ம ஒளி உனக்கே தெரியும். இதற்கு ஊன்று கோல் ”கோவிந்தா கோவிந்தா”   என்று நீ பஜிக்கும் அவன் நாமமே. விடாதே அவனை. அவன் நாமத்தை.”
 
அடேடே, ரொம்ப சுலபமான  வழியாக இருக்கிறதே. கெட்டியாக  பிடித்துக் கொள்வோமா?
 
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *