SHALL WE CHANGE? J K SIVAN

நாம்  திருந்துவோமா?           நங்கநல்லூர் J K  SIVAN 

என் தலைப்பை பாருங்கள்.   நீங்கள் திருந்துவார்களா என்றா  கேட்கிறேன். ”நாம்” … இதை எழுதும் நான் உட்பட  எல்லோருமே..
தனிமனிதன் திருந்தினால் தான் அவன் குடும்பம் திருந்தும்.  சமுதாயம் திருந்தும். நாடு முன்னேறும்.
நாம்  என்ன செய்யக்கூடாது என்பது தான் பெரிய  லிஸ்ட். அதில் சிலவற்றை முதலில் வரியிட்டு விட்டு அப்புறம் எதை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.  இதற்கே  இந்த ஜென்மம் போதாது போல் தோன்றுகிறதே.
1. சாலையில் எச்சில் துப்புதல். DONT SPIT  பலகையை காணோம். போட்டு  படித்து விட்டு அதன் மேலே துப்பும் ஆட்கள் நாம் என்று தெரியும்.  ஐநூறு ரூபாய் அபராதம் போட்டால் அரசாங்கத்தை  முதலில் தூக்கி விடுபவர்கள்.
2 கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல். எங்கள் காலத்தை விட  எவ்வளவோ இப்போது குறைந்திருக்கிறது. பட்டணத்தில் நிச்சயம் அதற்கு வழியில்லை. கிராமத்தில் ஒவொருவரும் தனிக்காட்டு ராஜா. எங்கே வேண்டுமானாலும்  இறக்குமதி செய்ய முடிகிறது.
3.. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது .எங்கள் நங்கநல்லூரில்  சர்வ சாதாரணம்.  தப்பான  ஒரு வழிப்பாதையி செல்லும் நாலு  சக்கர மூன்று சக்கற்  ரெண்டு சக்கரவண்டிகளுக்குள்  போட்டி வேறே.  தப்பாக  போனாலும் அதில் ஓவர்டேக் பண்ணுவது இன்னும்  கேவலம்.
3. குப்பைகளை கொட்டுவது : இப்போதெல்லாம்   கார்பொரேஷன் ஆட்கள்  யூனிபார்ம் போட்டுக்கொண்டு ஆணும் பெண்ணுமாக  வண்டியில் வருகிறார்கள்.குப்பைகளை நாள்தோறும்  எடுத்துக் கொண்டு போகிறார்கள்.தெருவில்  பெருக்குகிறார்கள். ஆனால்  குப்பைகளை தெருவில் போடும் பழக்கம் நமக்கு நிற்கவில்லை. இதைப் படித்ததும் இனிமேல் குப்பையை தனியாக சேர்த்து வைத்து வீட்டுக்குளேயுயே ஒரு குப்பை கூடையில் போட்டு வையுங்கள். அவர்கள் வந்து எடுத்துச் செல்கிறார்களே.
4. வரிசையை முந்தியடித்தல் :    ரயிலில்,  பஸ்ஸில்,  லிப்ட்டில் , பொதுஇடங்களில்,கடைகளில்,ஓட்டல்களில், ஏன் கோவில்களில் கூட  வரிசையில்…. அதுவும் இலவசம் தரும் ரேஷன் கடைகளில்,  இது சர்வ சாதாரணம்.   ஒழுக்கமே  இல்லை. இதில்  வீரத்தை சிலர் காட்டுகிறார்கள் . அவசரம் எதற்கு என்று புரியவே இல்லை?  யாருக்குமே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை  இல்லாமல் போய்விட்டதே.
ஆம்புலன்ஸ் எவ்வளவு குய்யோ முறையோ என்று  கீச் கீச் என்று  சப்தம் செய்தாலும் மெதுவாக லாரியின் பின்னால் தான் செல்ல முடிகிறது..  அதன் உள்ளே இருக்கும்  உயிரின் அவசரத்தைப்பற்றி  யாருக்கு என்ன கவலை?
6. ஏமாற்றுவது.   தனது பொருள் விற்பனை ஆகவேண்டும் என்று மற்ற பொருளைகளை குறைகூறுவது.  தன்னிடம் இருக்கும் மருந்து பெயரை மட்டும் எழுதி கொடுப்பது. வேறு எங்கும் கிடைக்காது… அலைந்து பிரயோஜனம் இல்லை…ஒன்றும் இல்லாத  உடல் பாகத்தை  ஸ்கேன் பண்ணச்சொல்வது..   நாலு டெஸ்ட் எடுத்துக் கொண்டால் ரெண்டு டெஸ்ட்  FREE. இந்த குணம் விலகவேண்டும் இல்லையா?.    7. பணத்துக்காக  பொய்சொல்லுதல்.   ஆளைக்  கொள்ளுவதற்கு சமம் இது. பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc… Etc…. Etc…..எல்லா இடத்திலும் புற்று நோய் மாதிரி  பரவி இருக்கிறது.   யார் வீட்டில் எத்தனைகோடி  கக்கூஸில், பிண  அறையில் கழிவு நீர்  தொட்டியில், சுவற்றுக்குள், ரஹஸ்ய அறைகளில்…..ஒளித்து வைப்பது  மனதை விட்டு அகல வேண்டிய எண்ணம்.  பணம் தேவைக்குமட்டும் தான். தேவையான பொருள்களை வாங்குவதற்கு தான்.
8.அரசியல்….  இதைப் பற்றி சொல்ல வாழ்நாள் போதாது என்பதால் தொடாமல் விடுகிறேன்.  மக்கள்  தங்களை ஆளுபவர்களை தாங்களே  தேர்ந்தெடுக்கும் ஏற்பாடு  இப்படி குட்டிச்சுவராக போய்விட்டதே. மக்களை ஆள  அரும்பாடு படுபவர்கள்  உண்மையில் மக்கள் நலனில்  அக்கறை  கொண்டவர்களாக இருந்தால்  ரொம்ப அதிர்ஷ்டம்.. மாதம் மும்மாரி பொழியும்.   அரசியல் வியாதிகளை விட  வாக்குகளை விற்பவன் தண்டிக்கப்படவேண்டிய  கடைநிலை  மனிதன்.
7.  ஜாதி வெறி – மத வெறி – இன வெறி: ஒன்றுமே  சொல்ல தேவையில்லை.  நம் நாட்டின் சாபக்கேடு. நம் தலையில் நாமே  மண்ணை வாரி போட்டுக் கொள்வது எனலாம்.
8. கோவிலில் தரிசனத்துக்கு காசு….  பகவான் எல்லோருக்கும் பொது.எங்குமிருப்பவனை கோவிலில் சென்று காண்பது அங்குள்ள சாந்நித்யத்தில்  உணர்வு பெற.  மனதை ஒரு நிலைப்படுத்த.  நாலு பேருக்கு நல்லது செய்ய நல்ல மனம் பெற வேண்டுவதற்கு.  அதில் VIP  சிபாரிசு எதற்கு,ஸ்பெஷல் வரிசை, டிக்கெட்  எதற்கு?  பகவான் எல்லோருக்கும் பொதுவானவன். அவன் கருணை எல்லோருக்கும்  சரி சமம் அல்லவா?  இனியாவது இதை விலக்குவோமா?
9. நடை பாதை எங்கே?   நடக்க இடமே இல்லை.  நடைபாதைகள் கடைகளாக  கடைகள், கண்டா முண்டா சாமான்கள் போடும் இடமாக, வண்டிகள் நிறுத்தும் இடமாக  மாறிவிட்டதா.  நடைபாதைகள் செப்பனிடப்படுவதே இல்லை.குண்டும் குழிஹ்யுமாக நடக்கவே முடியாதபடி  குழாய்கள், வயர்கள், கம்பிகள் என்று உயிர் கொல்லிகளால்  நிரம்பி  வயதானவர்கள் நடுத்தெருவில் நடந்து வாகனங்கள் முட்டி  ஆஸ்பத்திரிக்கு போகிறார்கள்…
10.  மாடுகள் நாய்கள்   இல்லாத  நடுத்தெருவே கிடையாது….  அவற்றை வளர்ப்பவர்கள்  பாலக் கறந்து கொண்டு மாடுகளை தெருவில் விட்டு விட்டுவிடுகிறார்கள்.   நங்கநல்லூரில் அந்தப்பசுக்களுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது  திண்பதற்குக்கொடுப்பதால், தண்ணீர் கொடுப்பதால்  அங்கேயே  நடுத்தெரு நாயகர்களாக படுத்து எப்போதாவது யாரையாவது முட்டி சாய்க்கிறது. என் லிஸ்ட்  ரொம்ப பெரிசு….. வேண்டாம் இன்று இது போதுமே.

இதெல்லாம்  யோசித்து  நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதற்காக இதை எழுதவில்லை.  ஒரு குடும்பத்தில் ஒருவர் இருவர்  திருந்தினால் கூட போதும்… நாடு மெதுவாக  முன்னேற நகரும்.