GARUDA PURANAM J K SIVAN

கருட புராணம் – நங்கநல்லூர் J K SIVAN
கருடனுக்கு நாராயணன் கூறியவை பின்னர் கருடனால் மற்றவர்களுக்கு ரிஷிகள் அதைச் சொல்லி விஷயம் பரவி இன்று நாம் கருட புராணத்தை அறிகிறோம்.
ஒரு சில விஷயங்கள் அதில் அதிர வைக்கிறது. நாராயணன் இதெல்லாம் கூடவா விளக்கமாக கருடனுக்கு சொல்லி இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே எதுவும் இல்லையோ. ஆமாம். உலகத்தையே ஸ்ரிஷ்டித்தவருக்கு மனித வாழ்க்கை சம்பவங்கள் அக்கு வேறு ஆணி வேறாக தெரியாமலா இருக்கும்?
இதோ ஒரு மனிதன் இறந்த பின் அவன் மகன் என்னென்ன செய்யவேண்டும் என்று லிஸ்ட் போடுகிறார் நாராயணன்.
கருடன்: ”ஸ்ரீமன் நாராயணா, எனக்கு மனிதர்கள் உடலை எரிக்கும் விஷயம், அஸ்தி கரைக்கும் விஷயம் பற்றி விளக்கிச் சொல்லு?
நாராயணன். ”கருடா சொல்கிறேன் கேள்:
மனிதன் ஒருவன் இறந்தபிறகு அவனுடைய உடலை எரிப்பதாலும் , அதற்கான சடங்குகளை செய்வதாலும் பிள்ளைகள், பேரர்கள் பாரம்பரிய கடனிலிருந்து விடுபடுகிறார்கள்.அப்பன் இறந்தபின் பிள்ளை,மிகவும் உற்றவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டிய கடமை இது. இதனால் அக்னிஷ்ட ஹோமம் செய்த பலன் கிடைக்கிறது. தலை முகத்தில் உள்ள முடியை நீக்கிட வேண்டும். பாபங்களை போக்குகிறது இது.
நதி நீர் கொண்டுவந்து இறந்த உடலை குளிப்பாட் டவேண்டும். சந்தனம் ,கங்கை நதி மண் இவற்றை பூசவேண்டும். மாலைகள், புது வஸ்திரம் சார்த்த வேண்டும். பூணலை வலது பக்கம் மாற்றிக்கொண்டு குடும்ப விபரம் சொல்லி சாதத்தை பிண்டமாக்கி இறந்த இடத்தில் இறந்தவன் பெயரைச் சொல்லி அர்ப்பணிக்க வேண்டும்.இதனால் பூமி மற்றும் இதர சம்பந்தப்பட்ட தேவதைகள் திருப்தி அடைவார்கள். இறந்தவன் இப்போது ஒரு பிரயாணி, தொலை தூரம் போக வேண்டியவன். இறந்தவன் உடலை சுற்றி வந்து மரியாதையோடு பிள்ளைகள்,மனைவி, மருமகள் போன்றோர் அவனை வணங்கவேண்டும்.மற்ற உறவினர்களோடு பிள்ளை அப்பன் உடலை தோளில் மயான பூமிக்கு சுமந்து போகவேண்டும்.இது அஸ்வ மேத யாக பலனை பிள்ளைக்கு கொடுக்கும். மயானத் தில் எரிக்கும் முன் உடலுக்கு சில சடங்குகள் செய்ய வேண்டும் இதன் மூலம் மற்ற துஷ்ட தேவதைகளின் தொந்தரவு இறந்தவனுக்கு இருக்காது.வடக்கு பார்த்து உடலை இறக்கி வைக்கவேண்டும்.நன்றாக பெருக்கி, பசுஞ்சாணம் போட்டு சுத்தமாக்கி மண்ணைக் குவித்து மேடாக்கி புனிதஜலம் தெளித்து உடல் வைக்கப்பட வேண்டும். புஷ்பங்கள் மஞ்சள் அரிசி அர்ப்பணித்து அக்னியை நோக்கி மந்த்ரங்கள் சொல்லவேண்டும். அதன்மூலம் இறந்தவனை ஸ்வர்கத்துக்கு செல்ல உதவி வேண்டுகிறோம். அக்னியை வணங்கியபின் சந்தனக்கட்டை, அல்லது பலாச மரக்கட்டை, அஸ்வத்த மரக்கட்டைகளை அடுக்கி.அக்னி வளர்க்க வேண்டும். இரண்டு சாத பிண்டங்களை இறந்தவன் கைகளில் வைக்கவேண்டும். இனி அவன் பிரயாணம் துவங்கு கிறது.இறந்தவனுக்கு ஐந்து பிண்டங்கள் உதவுகிறது. தர்ப்பையோடு அவை அக்னியில் கலக்கிறது. பூரட்டாதி, அவிட்டம் போன்ற ஐந்து நக்ஷத்ரங்களில் இறந்தவ னுக்கு பரிகார சாந்தி மந்த்ர சடங்குகள் செய்யாவிட் டால் வீட்டில் தொடர்ந்து மரணம் நேரும், ஆகவே தர்ப்பை யால் உருவம் செயது ரிக்ஷா மந்த்ரம் உச்ச ரித்து . அதில் தங்கம், இலை பாத்திரத்தில் வைத்து (தொன்னை போல) பிரேத ஜாயதா மந்திரம் சொல்வது வழக்கம். அந்த உருவத்தை இறந்த உடலோடு சேர்த்து எரிக்க வேண்டும். சாந்தி, ப்ரீதிக்காக தங்கமோ, வெள்ளியோ வெங்கலமோ ஏதோ ஒரு பாத்திரத்தில் எள், நெய் நிறைத்து, தானம் செய்ய வேண்டும். முழுதும், அல்லது பாதி எரியும்போது மண்டை
யோட்டை மரக்கட்டையால் உடைக்க வேண்டும். துறவிகள் மண்டையை தேங்காயால் உடைக்க வேண்டும். ப்ரம்ம ரந்தரத்தை இப்படி நெய் அர்ப்ப ணித்து இறப்பதால் இறந்தஉடலில் இருந்து உயிர் பிரம்மலோகம் செல்கிறது.
”அக்னிதேவா, உன்னிடமிருந்து வந்தது, உன்னிடமிருந்து மீண்டும் உருவாவது ஸ்வர்கத்தை அடையட்டும்” என்று வேண்டும் மந்த்ரம் இது.தகனம் ஆனபின் அனைவரும் குளிக்கவேண்டும். குடும்பத்தார் பெயர்கள் சொல்லி எள்ளும் நீரும் இரைக்கவேண்டும்.வேப்பிலை சாப்பிட்டு இறந்தவன் மஹாத்ம்யம் பேசவேண்டும். நடந்து செல்லவேண்டும். பெண்கள் முன்னால், ஆண்கள் பின்னால் நடக்க வேண்டும்.
வீட்டிற்கு வந்து மீண்டும் குளிக்கவேண்டும். பசுவுக்கு ஆகாரம் கொடுக்கவேண்டும். இலையில் சாப்பிட வேண்டும். வீட்டில் ஏற்கனவே இருந்த உணவு எதையும் சாப்பிடக்கூடாது.
இறந்தவன் இருந்த இடத்தை பசுஞ்சாணத்தால் சுத்தம் செய்யவேண்டும்.தெற்கு பார்த்து விளக்கு 13 நாள் எரியவேண்டும் .
மூன்று நாள் அஸ்தமன நேரத்தில் முச்சந்தியில், அல்லது மாயணத்திலோ,பால் நீர் ஒரு மண் கலயத்தில் அர்ப்பணிக்கவேண்டும். மூன்று குச்சிகள் இணைத்த தூக்கில் பானையை,கலயத்தை வைத்து தூக்கிக் கொண்டு போகவேண்டும்.
”இறந்தவரே , அக்னி உங்களை எரித்துவிட்டது. உறவு சுற்றம் அனைத்தும் விலகி விட்டது. இந்தாருங்கள் பாலும் நீரும் உங்களுக்கு பருகுவதற்கு ‘
என்று அந்த மந்த்ரம் பொருள் தரும்.நான்காவது நாள் தான் முன்பெல்லாம் ஹஸ்தி எலும்பு பொறுக்கி எடுப்பார்கள். இரண்டாவது நாளும் அதை செய்ய லாம்.மயானம் சென்று,குளித்துவிட்டு, கம்பளி தரித்து, கையில் மோதிரத்தோடு, தான்ய அர்ப்பணிப்பு நடக்கும். மயானத்தில் வாழ்பவர்களுக்கு தானம் அளிக்கவேண்டும். மூன்று முறை சுற்றி வரவேண்டும். ”யமாயத்வா ” மந்த்ரம் சொல்லவேண்டும்.பால் தெளித்தபின் எலும்புகள் பொறுக்க வேண்டும். பலாச இலைமேல் வைத்து பாலும் நீரும் அளிக்கவேண்டும். மண் கலயத்தில் அதைப் போட்டு ச்ராத்தம் செய்ய வேண்டும். முக்கோணமாக நிலத்தில் பசுஞ்சாணம் சுத்தம் செய்து தெற்கு பார்த்து மூன்று சாத பிண்டங் கள் மூன்று திசை நோக்கி வைக்கவேண்டும். சாம்பல் எடுத்ததை கலயத்தில் நீரோடு கலக்க வேண்டும், இறந்தவனுக்கு சாதம், தயிர், ணெய், நீர், இனிப்பு அளிக்க வேண்டும்.வடக்கு நோக்கி 15 காலடிகள நடந்து சின்ன குழி தோண்டி,அதில் எலும்புகள் அஸ்தி கலயத்தை வைக்கவும். அதன் மேல் ஒரு சாத பிண்டம் வைத்து சந்தனம் பிறகு அந்த அஸ்தி எலும்பு கலயத்திற்கு பால் ஜலம் தெளித்து, சந்தனம் குங்குமப்பூ இடவேண்டும். பிறகு அந்த கலயத்தில் இருப்பதை இலையில் கட்டி இதயம் தலைமேல் வைத்து வலம் வந்து வணங்கி கங்கையில் கலக்கவேண்டும். எலும்புகள் கங்கையில் அடிபாகத்துக்கு சென்றுவிட்டால் இறந்தவன் பிரம்மலோகம் பத்துநாளில் சென்றுவிடுவான். எலும்புகள் மிதந்தால் பல காலம் ஸ்வர்கத்தில் வாழ்ந்து திரும்புவான். கங்கை அலையின்மேல் வீசும் காற்று அவனை புனிதப்படுத்தும்.அப்புறம் தான் 10 நாள் காரியம்.
கர்ப்பிணி பெண் இறந்தால் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து விட்டு அவளை எரிக்கவேண்டும் .ரெண்டேகால் வயது வரை குழந்தைகள் இறந்தால் புதைக்க வேண் டும். அதற்கு மேல் வயதானால் எரித்து, சாம்பல் எலும்பை கங்கையில் சேர்க்கவேண்டும். தீர்த்த பாத்திரம் தானம் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும். கரு கலந்திருந்தால் சடங்கு எதுவுமில்லை. சிறு சிசுவாக இருந்து இருந்தால் பால் தானம் செய்யவேண்டும். கஞ்சி, பால் பாத்திரத் தோடு தானம் செய்யவேண்டும்.ஐந்து வயதுக்கு மேல் இருந்தால் பத்து சாத பிண்டங்கள்,சர்க்கரை பாலோடு அர்ப்பணிக்க வேண்டும்.கோ தானம் ரொம்ப விசேஷம்.