VITTAL DEVOTEES J K SIVAN

பக்தி வழிகாட்டும் மைல் கல்கள் . –
நங்கநல்லூர் J K SIVAN
நமது பாரத பூமிக்கு உலகத்திலேயே ஒரு தனிச்சிறப்பு. எண்ணற்ற மஹான்கள் இங்கே அவ்வப்போது அவதாரம் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து இனிமேலும் அவதரிப்பார். இது பகவானின் அனுக்ரஹம். நம்மை விடாமல் நல்வழிப் படுத்த, நல்வழியைப் பின்பற்றி வாழ அவர்களை அடிக்கடி இப்படி ஸ்ரீமன் நாராயணன் அனுப்பி வைக்கிறான். நம் மீது அத்தனை அக்கறை அவனுக்கு. பக்த வத்சலன் இல்லையா அவன்?
எப்படி நமக்கு சில மஹான்கள் கிடைத்தனர் என்று ஒரு சின்ன பட்டியல் தருகிறேன்.
ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாக அவதரித்தபோது அவருடைய பரம சிஷ்யன் உத்தவ மகரிஷி. அவரை பூமியில் கலியுகத்தில் நாமதேவராக உருவெடுக்க அனுப்பி நமக்கு மஹாராஷ்ட்ர தேசத்தில் சிறந்த பாண்டுரங்க பக்தனாக நாமதேவர் கிடைத்தார். ஒரு சாதாரண துணி தைக்கும் ஹிந்து பக்தருக்கு மகனாக நாமதேவர் பிறந்தார். அவருடைய அபங்கங்கள் செவியினிக்க எல்லோராலும் பாடப்பட்டு அனுபவிக்கிறோம்.
சுகப்ரம்ம ரிஷியை அப்படித்தான் ஒரு முகம்மதிய வம்சத்தில் கபீர் தாசராக அவதரிக்க வைத்தார் ஸ்ரீமன் நாரயணன். கபீர் தாஸரின் பக்தி பாவம் மிகுந்த இரண்டடி தோஹேக்கள் உலகப்புகழ் பெற்றவை. அவ்வப்போது அதை எல்லாம் எழுதுகிறேன்.
வாலமீகி முனிவர் அப்படித்தான் துளசிதாசராக பிறந்தார். துளசி தாஸ் ராமாயணம் வாலமீகி ராமாயணம் போல் புகழ் பெற்று பாராயணம் செய்யப்படுகிறது. கிருஷ்ணனுக்கு தேரோட்டியாக சேவைசெய்த தாருகன் தான் பக்தர் ராமதாசராக தெலுங்கு தேசத்தில் பிறந்தார். பக்த ராமதாஸ் பாடல்கள் அற்புதமானவை. பத்ராசல ராமதாஸ் என்று அவருக்கு அழியாத பெயர்.
சிவ பெருமான் நார்சி மேதாவாக குஜராத்தில் ஜூனாகத்தில் பிறந்த சிறந்த பாண்டுரங்க விட்டல பக்தர்.மஹாத்மா காந்திக்கு பிடித்த, பாரத ரத்னா MSS அம்மா பாடிய வைஷ்ணவஜனதோ நார்ஸி மேத்தா எழுதியது தான்.
நாரதர் கன்னட தேசத்தில் புரந்தர தாசராக பிறந்தவர்.
மஹாவிஷ்ணு நாராயணனே ஞானேஸ்வர் எனப்படும் ஞானதேவராக அவதரித்தார். சிறந்த பாண்டுரங்க பக்தர். ஞானேஸ்வரி என்பது அவர் இயற்றிய தெய்வீக நூல்.ப்ரம்மா ஞானதேவரின் சகோதரர் சோபன் என்பவராக பிறந்தவர்.சதாசிவன் ஞானதேவரின் சகோதரர் நிவிருத்தியாக பிறந்தவர் என்று பக்த விஜயம் நூல் சொல்கிறது. அதே குடும்பத்தில் முக்தாபாயாக ஞானதேவர் சகோதரியாக பிறந்த ஆதிமாயா. எல்லாம் தெய்வ சங்கல்பம்,. இது ஒரு சின்ன லிஸ்ட். இன்னும் எத்தனையோ தெய்வங்கள் தேவதைகள் பூமியில் நமக்கு அருள்புரிய அவதரித்த மஹான்கள். அத்தனை பெயர்களும் இப்போது அவ்வப்போது நேரம் வரும்போது சொல்கிறேன்.மஹா பக்த விஜயம் நூலிலிருந்து பாண்டுரங்க பக்தர்களுக்கு ரெண்டு புத்தகங்கள் நான் வெளியிட்டிருந்தேன். ஒன்று தமிழில் தெவிட்டாத விட்டலா ஆங்கிலத்தில் VITOBA THE NECTAR . இனி சில அற்புத கட்டுரைகளை மஹா பக்த விஜயத்திலிருந்து அளிக்க உத்தேசம். அதுவும் தெய்வ சங்கல்பமே.
PS. NO COPY AVAILABLE FOR TAMIL BOOK ”THEVITTADHA VITTALA”
A FEW COPIES OF THE ENGLISH BOOK ”VITOBA THE NECTAR” (270 pages in art paper with color pictures) ARE AVAILABLE FOR DONATION OF RS. 200+50 FOR REGD POSTAGE. IT CONTAINS 100 STORIES FOR CHILDREN AND EACH CHAPTER ADDRESSED ”Dear children ending with a moral advice for them” interested may contact me at 9840279080 whatsapp. for details and bank account partculars. Our publications are not priced and sold anywhere. They are distributed to donors only and freely given to libraries, oldage homes and as prizes for chidlren winning competitions.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *