KAMBA RAMAYANAM J K SIVAN

கம்ப ராமாயணம்      –    நங்கநல்லூர் J K  SIVAN

நாட்டுப்‌ படலம்‌

32. வாங்க அரும்பாதம்‌ நான்கும் வகுத்த வான்மீகி அன்பான்‌.
தம்‌ கவி. செவிகள்‌ ஆரத் தேவரும்‌ பருகச்‌ செய்தான்‌;
ஆங்கு. அவன்புகழ்நத நாட்டை அன்பு எனும்‌ நறவம்‌ மாந்தி,
மூங்கையான்‌ பேசலுற்றான்‌ என்னை யான்‌ மொழிய லுற்றேன்‌.

ஆஹா, அந்த  ஆதி கவி வால்மீகி என்பவன் எவ்வளவு அற்புதமாக ஸமஸ்க்ரித  வரிகளில் ராமாயணத்தை படைத்துள்ளான். ஒரு   எழுத்தை, ஒரு வரியை மாற்ற முடியுமா?வான்மீகி பாடிய சுலோகத்தில்‌ எந்த வரியையும்‌ எடுத்துவிட முடியாது. தேவர்களே கேட்டு மகிழும் கவி அமுதம் அது.  கோசல நாட்டை அவன் புகழ்வது போல்  நான்  வர்ணிக்க முடியுமா? ஊமை பேசுவது போல் அல்லவோ இருக்கும் நான் அதை வர்ணிக்க முற்பட்டால்!  என்று வாலமீகியை புகழ்கிறார் கம்பர். 

 33. வரம்பு எலாம்‌ முத்தம்‌; தத்தும்‌ மடை எலாம்‌ பணிலம்‌; மா நீரக
குரம்பு எலாம்‌ செம்‌ பொன்‌; மேதிக  குழி எலாம்‌ கழுநீர்க கொள்ளை;
பரம்பு எலாம்‌ பவளம்‌; சாலிம்‌ பரப்பு எலாம்‌ அன்னம்‌; பாங்கர்க
கரம்பு எலாம்‌ செந்‌ தேன்‌; சந்தக கா எலாம்‌ களி வண்டு ஈட்டம்‌.

கோசல நாட்டில் எங்கு வேண்டுமானாலும்  பாருங்கள்… வயல் வரப்புகளில் முத்துக்கள்.  வாய்க்கால் மடை நீர் பயம் இடத்திலெல்லாம்  சங்குகள்.  கரையில் எல்லாம் செந்நிற பொன்.  எருமை படுக்கும் குட்டைகளில் சென்குழுநீர் பூக்கள்.  நெல்லை பரம் படிக்கும் மேடுகளில் எல்லாம்  பவளங்கள்.  அறுவடை செய்த பயிர்  கிடக்கும் களத்து மேடுகளில்  எங்கும்  வெண்ணிற  அன்ன பக்ஷிகள். பயிர் செய்யாத கரும்பு நிலங்களில் செந்தேன் ஊறுகிறது. அவற்றை உண்டு மகிழும் வண்டுகள் கூட்டம். சிறந்த போட்டோ பிடிப்பவனால் கூட  இந்த காட்சியை கண்ணுக்கு தரமுடியாது. கம்பன் எழுத்தில் தருகிறான்.

34. ஆறு பாய்‌ அரவம்‌. மள்ளர்‌ ஆலை பாய்‌ அமலை. ஆலைச
சாறு பாய்‌ ஓதை. வேலைச்‌ சாங்க்‌ வாய்ப்‌ பொங்கும்‌ ஒசை.
ஏறு பாய்‌ தமரம்‌. நீரில்‌  எருமை பாய்‌ துழனி. இன்ன
மாறு மாறு ஆகி. தம்மில்‌ மயங்கும்‌- மா மருத வேலி,

கோசலத்தில் ஆற்று நீர் பாயும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.  உழவர்களின் பாடல்களின் இனிமை.  கரும்பாலை களில் கருப்பஞ்சாறு பெருகி ஓடும் சப்தம்.  நீர்நிலைகளின்  கரைகளில்  காணும் சங்குகளில் காற்று புகுந்து பலவித சங்கீத  ஓசை.  எருதுகள்  ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்போது எழும்  ஓசை.   குட்டைகளில் எருமைகள் சந்தோஷமாக படுத்து கத்தும் சப்தம். இப்படி வெவேறு  ராக  இசை அலைகள் எங்கும் செவிக்கு இன்பமாக கேட்கும்.

35. தண்டலை மயில்கள்‌ ஆட.தாமரை விளக்கம்‌ தாங்க.
கொண்டல்கள்‌ முழவின்‌ ஏங்க குவளை கண்‌ விழித்து நோக்க.
தெண்‌ திரை எழினி காட்ட. தேம்‌ பிழி மகர யாழின்‌
வண்டுகள்‌ இனிது பாட.மருதம்‌ வீற்றிருக்கும்‌ மாதோ.

குளிர்ந்த  சோலைகளில் மயில்கள் ஆடும்.  மலர்கள்  விளக்குகளை  ஏந்தி ஒளிவீசும். மேகங்கள்  மத்தள ஓசை ஒலிக்கும். குவளை மலர்கள் குளங்களில் கண் விழித்து மலங்க மலங்க பார்க்கும்.  அருவிகளில் அலைகளில் திரை போல  ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக  எழும். தேன் குடித்த  வண்டுகளின் ரீங்காரம்  யாழிசை  போல் காதில் பாயும்.  கோசலத்தில் எங்கு பார்த்தாலும் மருத நில  ராணி மருத நாயகி சாம்ராஜ்யம் தான். அவர் அரியாசனத்தில் அமர்ந்து அவள் முன்னே இந்த காட்சிகள் நிறைவேறும்.

நீரிடை உறங்கும்‌ சங்கம்‌, நிழலிடை உறங்கும்‌ மேதி;
தாரிடை உறங்கும்‌ வண்டு தாமரை உறங்கும்‌ செய்யாள்‌;
தூரிடை உறங்கும்‌ ஆமை துறையிடை உறங்கும்‌ இப்பி;
போரிடை உறங்கும்‌ அன்னம்‌ பொழிலிடை உறங்கும்‌ தோகை.

குளிர்ந்தநீரில்  சங்குகள் சுகமாக  தூங்கும்.   எருமைகள்  அரைக்கண் மூடி சுகமாக  மர  நிழல்களில் அசை  போட்டுக்கொண்டு  தூங்கும்.  மலர்களில் அமர்ந்த வண்டுகள் வயிறு மூட்ட  தேன்  குடித்த  களைப்பில்  மலர்கள் மேல்மேல் படுத்து தூங்கும்.   திருமகள்  செந்தாமரை மலர்களில் உறங்குவாள்.  சேற்றில் புகுந்த  ஆமைகள் பயமின்றி நித்திரை பயிலும். முத்துச் சிப்பிகள்  நீரில் ஆழத்தில்  குறட்டை விட்டு தூங்கும். நெற்போர்கள் மேல் அன்னங்கள்  ஏறி நெல்லை உண்டு அங்கேயே படுக்கும்.  கோசல நாட்டில் யாருக்கும் பயமே இல்லை. கவலையும் இல்லை. 

38. படை உழ எழுந்த பொன்னும்‌.பனிலங்கள்‌ உயிர்த்த முத்தும்‌.
இடறிய பரம்பில்‌ காந்தும்‌ இன மணித்தொகையும்‌. நெல்லின்‌
மிடை பசுங கதிரும்‌. மீனும்‌ மென்தழைக கரும்பும்‌. வண்டும்‌
கடைசியர்‌ முகமும்‌. போதும்‌. கண்‌ மலர்ந்து ஒவிரும்‌ மாதோ.

வளமையான மண்ணில் கலப்பைகள் உழும்போது பொன்  மேலே எழும்.  சங்குகள்  முத்துக்களை உதிர்க்கும். பரம்படித்த  மேடுகளில்  நெற்கதிர்கள்  ரத்னங்களைக்   கக்கும்.  நெற்  கதிர்கள் கண்ணைக் கவரும்.கரும்பும், வண்டுகளும் இணைபிரியாத ஜோடி.  உழவு செய்யும்  கிராமப் பெண்கள் முகம்  தாமரை போல் அழகாக  ஒளிவீசும்.  கம்பரே  உமது கற்பனையும் சொல்லலங்காரமும் ஈடு இணை இல்லாதது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *