MAYA PANCHAKAM. ADHI SANKARA J K SIVAN

மாயா பஞ்சகம் – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

முப்பத்தைந்து வயதுக்குள் இந்த உலகத்தில் சகல வேலைகளையும் முடித்துக் கொண்டு, இனி ஒன்றும் பாக்கி இல்லை என்று புறப்பட்டு விட்ட ரெண்டு பேரைப் பற்றி நூறு வயதானாலும் நம்மால் முழுதும் சொல்
லவோ எழுதவோ, முடியாது. அப்படி யார் அந்த ரெண்டு பேர் என்றால் அவர்களைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒருவர் ஆதி சங்கரர், இன்னொருவர் சுவாமி விவேகாநந்தர். நான் முடிந்தவரை என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவர்களை மறக்காமல் தினந்தோறும் நினைத்து ஏதோ எழுதி வருகிறேன். ஆதிசங்கரரின் மாயா பஞ்சகம் ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் கொண்டது. அதை இன்று தெரிந்து கொள்வோமே..

எப்படி ஆதி சங்கரரால் மட்டும் 32 வயதுக்குள்ளேயே இத்தனை ஞானத்தோடு வாழ முடிந்தது? உலகத்தில் ஒன்று விடாமல் அனைத்தையும் தெரிந்து கொண்டு அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களை நமக்கு நீதியாக, உபதேசமாக, அறிவுரை யாக வழங்க முடிந்தது? காரணம் வேறொன்றுமில்லை, அவர் நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்திருந்தால் யாருக்குமே அவரைத் தெரிந்திருக்காது. ஸாக்ஷாத் பரமேஸ்வரனே, நம்மைப் போல் உலகத்தில் நூறோடு நூற்றி ஒன்றாக மனித ஜென்மம் எடுத்து நம்மோடு வாழ்ந்து எடுத்துச் சொன்னால் தான் நாம் கேட்போம் என்று உணர்ந்து அவதரித்ததால் தான் நமக்கு ஆதி சங்கரர் கிடைத்தார்.

அவர் எழுதிய ஸ்லோகங்கள் ஸ்தோத்திரங்கள், பாஷ்யங்கள் அநேகம். அதில் சில ஸ்லோகங்களை மட்டுமே என்னால் முடிந்தவரை நானும் படித்து புரிந்து கொண்டு உங்களுக்கும் பரிமாறி வருகிறேன். அற்புதமான ஐந்து ஸ்லோகங்கள் மாயா பஞ்சகம் எனும் அஞ்ஜே அஞ்ஜு பொன்னெழுத்துக்கள் கொண்ட ஸ்லோகத்தை அளிக்கிறேன். அர்த்தம் சொல்வதில் தப்பிருந்தால் அது சங்கரருடையது இல்லை, என்னுடையது தான்.

1. निरुपमनित्यनिरंशकेऽप्यखण्डे मयि चिति सर्वविकल्पनादिशून्ये ।घटयति जगदीशजीवभेदं त्वघटितघटनापटीयसी माया ॥ १॥
nirupama nityaniramshake api akhande mayi citi sarvavikalpanádishünye ghatayati jagadèshajèva bhedam tvaghatita ghatanápatiyasè máyá.(1)
நிருபமாநித்யநிரந்ஶகேப்ய খண்◌ேদ மயி சிதி ஸர்வகல்பநாநாদிஶூந்யே ॥ ঘடயதி ஜগদிஷ்ஜிவ்பேதம் த்வগধாப்ঘாதநபதியஸி மயா ॥ 1

இந்த உலகம் என்று எதை நாம் பார்த்து, கேட்டு, முகர்ந்து தொட்டு, ருசித்து ஐம்புலன்களால் உணர்கி றோமோ, அனு பவிக்கிறோமோ அது சுத்தமாக பொய் , மாயை. ஆனால் அது நமக்கு புரியவில்லை. மாறிக் கொண்டே வருவது அது. பொய்யை நிஜமாக்கி காட்டுவது. அநியாயத்தை நியாயமாக திரித்து காட்டுவது. ஜீவன் ஈஸ்வரனை அணுகாமல் தடுப்பது இது தான் அதன் வேலை.

2. श्रुतिशतनिगमान्तशोधकान- प्यहह धनादिनिदर्शनेन सद्यः ।कलुषयति चतुष्पदाद्यभिन्ना- नघटितघटनापटीयसी माया ॥ २॥
srutishatanigamánta sodhakán apyahaha dhanádinidarshanena sadyah kaluúayati catuúpadádyabhinnán aghatitaghatanápatiyasè máyá.(2)
ஸ்ருதிஷதனிகமண்ட சோதகன் அப்யஹஹ தானதி நிதர்ஷனேன சத்யஹ் கலுஅயதி சதுஉபதாத்யா பின்னன் அகாதிதகதாநபதியாஸே மாயா.(2)

மாயை பலே கில்லாடி. அசத்தியமான , சாஸ்வத மில்லாத செல்வத்தை நிஜம், ஸாஸ்வதம் என்று நம் எல்லோரையும் கண்கட்டு வித்தையில் நம்ப வைத்து ஏமாற்றுவது. இதற்காக பலர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று உயிரை விடச் செய்கிறது. கோடிக்கணக் கானவர்கள் இப்படி அதை நம்பி வாழ்க்கையை பாழடித்துக் கொண்டவர்கள். கணக்கற்றவர்கள் நியாயம் கேட்டு அலைவதால், தப்பான ஆசாமிகள் பெரிய ஒஸ்தி வக்கீல் வைத்து பொய்யை மெய்யாய் ஜோடித்து வாய் ஜாலத்தால் வெற்றி தேடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும்போது…….கோர்ட்டுகள் நிரம்பி இருக்கிறது. வேதம் அறிந்தவர்களும், கற்றோர்கள், சான்றோர்களும் , நியாயம் தெரிந்த வர்களும் கூட, மாயை வசப்பட்டு பல சமயங்களில் அந்தர் பல்டி அடித்தவர்கள் தான். அப்போதே ஆதி சங்கரருக்கு இதெல்லாம் நடக்கப்போவது தெரிந்தி ருக்கிறதே.

3. सुखचिदखण्डविबोधमद्वितीयं वियदनलादिविनिर्मिते नियोज्य ।भ्रमयति भवसागरे नितान्तं त्वघटितघटनापटीयसी माया ॥ ३॥
sukhacidakhanãavibodhamadvitèyam viyadaniládivinirmitau niyojya bhramayati bhavaságare nitántam tvaghatitaghatanápatiyasi máyá.(3)
சுகசிதகண விபோதமத்விதேயம் வியாதநிலாதிவிநிர்மிதௌ நியோஜ்யப்ரமயதி பவஸாகரே நிதாந்தம் த்வகாதிதகதாநபதியஸி மாயா.(3)

மாயா எனும் மந்திரவாதி, முடியாததை முடியும் என்று வறுபடுத்திக் காட்டுவதில் வல்லவன். நம் வீட்டுக்குள் ளேயே கங்கையை ஓடச்செயது, கொல்லைப் பக்கத் தில் தாஜ்மஹாலை காட்டும் சக்தி கொண்டது. சம்சார சாகரத்தில் நைசாக நம்மை ஆழ்த்தி நாம் தத்தளித்து நீர் குடித்து முழுகி தவிப்பதைக் கண்டு சிரிப்பது. பஞ்ச பூதங்களை பஞ்சேந்திரியங் களை தன் வசமாகும் சாமர்த்தியசாலி.

4.अपगतगुणवर्णजातिभेदे सुखचिति विप्रविडाद्यहंकृतिं च । स्फुटयति सुतदारगेहमोहं त्वघटितघटनापटीयसी माया ॥ ४॥
apagatagunavarna játibhede sukhaciti vipraviãa dyahamkrutim ca sphutayati sutadáraqgehamoham tvaghatitaghatanápatèyasi máyá(4)
அபகதகுணவர்ண ஜாதிபேதே சுகசிதி விப்ரவியா த்யஹம்க்ருதிம் சஸ்பூதயதி ஸுததாரக்கேஹமோஹம் த்வகாதிதகதாநபதேயஸி மாயா(4)

நிறம் மாறும் பச்சோந்தியை பார்த்ததுண்டா? வீட்டில் கொல்லைப் புறத்தில் செடிகளுக்கு நடுவே தலையைத் தூக்கித் தூக்கி பச்சையாக இருக்கும். கொஞ்ச நேரத் தில் வெவ்வேறு கலராக மரம் செடி காய், இலை நிறத்துக்கு தக்கபடி உடம்பின் நிறத்தை மாற்றிக் கொள்ளும் வினோத பிராணி. மாயை அதைவிட வேகமாக நிறம் மாறும் பச்சோந்தி. பல விதமான காரியங்களை செய்யத் தூண்டும். அதில் பாதிக்கு மேலே நல்ல காரியங்களாகவே இருக்காது என்பது தான் உண்மை.

5. विधिहरिहरविभेदमप्यखण्डे बत विरचय्य बुधानपि प्रकामम् । भ्रमयति हरिहरभेदभावा- नघटितघटनापटीयसी माया ॥ ५॥
vidhiharihara vibhedámapyakhande bata viracayya budhánapi prakámam bhramnayati hariharavibhedabháván aghatitaghatanápatèyasè máyá.(5)
விதிஹரிஹர விபேதாமப்யகண்டே பட விரசய்ய புதனாபி ப்ரகாமம் ப்ரம்மநயதி ஹரிஹர விபேதபாவான் அகாதிதகதாநபதேயஸே மாயா.(5)

இந்த மாயையின் உச்ச பக்ஷ வேலை ஒன்றை சொல் கிறேன் கேளுங்கள். நமக்கு தெய்வங்களையே வேறுபடுத்திக் காட்டும். எல்லாம் ஒன்றேயான பிரம்மத்தை ப்ரம்மா, ஹரி, ஹரன் மற்ற எண்ணற்ற ஆண் பெண் உபதேவதைகளாக கூட தன்னுடைய சக்தியால் நமக்கு காட்டி வேறுபடுத்தி நம்மை திணற அடிக்கும். இதனால் எத்தனை சண்டைகள் நாம் போடுகி
றோம், உன் தெய்வம் பெரியதா, என் தெய்வம் பெரிய தா என்று? ரொம்ப டேஞ்சர் ஸார் இந்த மாயை. நம்பாதீர்கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *