CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி  — நங்கநல்லூர் J K SIVAN

நான்   உலக சரித்ரம்  ஆர்வமாக படித்திருக்கிறேன்.  இருந்தாலும் சரித்ரம் இங்கே  எழுதப் போவதில்லை. அநேகர் விரும்ப மாட் டார்கள். ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி  கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும்  பாரத தேசம் காணவில்லை.  தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா,  நீதிபதியா,  சாஸ்திரங்கள்  கற்ற  வேத ப்ராமணனா, ராஜகுருவா. யார் இந்த கௌடில்யன்? கிங் மேக்கர்  KING MAKER  என்கிறோமே  கௌடில்யன் உண்மையில்  EMPEROR  MAKER   விஷ்ணு குப்தன், கௌடில்யன்  என்ற  அவனது  இயற்  பெயர்கள்  மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன்.  எது எப்படி இருந்தாலும்   சாணக்யன் சொன்னதாக  சில வார்த் தைகள்  நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது  புலப்படுகிறது.  அவனது சாணக்ய  நீதியைப் படிக்கும்போது  தான் அவனது  தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை,  நிர்வாக ஆற்றல்,  ராஜரீகம்  எல்லாம் புரிபடுகிறது.

जानीयात्प्रेषणे भृत्यान्बान्धवान् व्यसनागमे ।मित्रं चापत्तिकालेषु भार्यां च विभवक्षये ॥

Jānīyātprēṣaṇē bhr̥tyānbāndhavān vyasanāgamē. Mitraṁ cāpattikālēṣu bhāryāṁ ca vibhavakṣayē.


உனக்கு வேலை செய்யும் பணியாள் எப்படிப்பட்டவன் என்பதை அவனோடு பேசியோ, அவனைப் பற்றி விசாரித்தோ, மற்றவர் பரிந்துரையிலோ அறியக்கூடாது. அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் அவன் கவனம் எப்படி இருக்கிறது, எப்படி வேலையில் அக்கறை காட்டுகிறான், தன்னை யாரும் மேற்பார்வை பண்ணாவிட்டாலும் எப்படி சுத்தமாக சுறுசுறுப்பாக, எஜமானனின் நன்மைக்கு பாடுபட்டு உழைக்கிறான் என்பதில் தான் அடையாளம் காண வேண்டும்.  உன் கஷ்டகாலத்தில் தான் உனக்கு உண்மையான உறவினன் யார் என்று அடையாளம் புரிந்து கொள்ள முடியும். அதே போல் தான் உன் உற்ற நண்பனின் செய்கையும் உனக்கு விளக்கும். உன் மனைவி உன் கஷ்டங்களில் எவ்வாறு பங்கேற்கிறாள், என்ன தியாகம் செயகிறாள் என்றும் புரியும்.  சாணக்கியர் பெரிய  ஆள். விவரமானவர்.
नात्यन्तं सरलैर्भाव्यं गत्वा पश्य वनस्थलीम् । छिद्यन्ते सरलास्तत्र कुब्जास्तिष्ठन्ति पादपाः ॥ 1.11
nātyantaṃ saralairbhāvyaṃ gatvā paśya vanasthalīm। chidyante saralāstatra kubjāstiṣṭhanti pādapāḥ ॥

எல்லா விஷயங்களிலும் நான் வளைந்து கொடுக்க மாட்டேன் , நீதி நேர்மை, பிரகாரம் தான் நடப்பேன் என்று இருக்காதே. சில நேரங்களில் சந்தர்ப்பங்களில் கொஞ்சம் உன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். காட்டில் நேராக நிற்கும் மரங்கள் தான் முதலில் வெட்டப்படும். வளைந்த கோணல் மரங்கள் கோடாலிக்கும் அரிவாளுக்கும் கொஞ்சகாலமாவது தப்பும்.  பிடிவாதமாக நேர்மையாக நடப்பவன் வெற்றி பெறுவது ரொம்ப சந்தேகம் என்று அப்போதே  சாணக்கியன் அறிந்திருக்கிறான்.  காலத்துக்கேற்ப   கொஞ்சம் வளைந்து கொள்  ஆனால் நேர்மை நீதி நியாயம் இவற்றை விட்டு விடாதே. விட்டுப்பிடி.

आतुरे व्यसने प्राप्ते दुर्भिक्षे शत्रुसङ्कटे । राजद्वारे श्मशाने च यस्तिष्ठति स बान्धवः ॥ ०१-१२
Āturē vyasanē prāptē durbhikṣē śatrusaṅkaṭē. Rājadvārē śmaśānē ca yastiṣṭhati sa bāndhavaḥ.

உனக்கு துயர் சூழ்ந்த காலத்தில், பஞ்ச காலத்தில், யுத்தகாலத்தில்,  ராஜ்ய விவகா சிக்கலில் உன்னை விடாமல் உன்னுடனிருந்து உன்னை மீட்க பாடுபடுபவன் தான் உண்மை நண்பன்.  உன் உடல்  எரி  மேடையில்  தீக்கிரையாகும்போதும்  கூடவே  நிற்பவன்.

कः कालः कानि मित्राणि को देशः कौ व्ययागमौ । कश्चाहं का च मे शक्तिरिति चिन्त्यं मुहुर्मुहुः ॥ 1.12
kaḥ kālaḥ kāni mitrāṇi ko deśaḥ kau vyayāgamau ।kaścāhaṃ kā ca me śaktiriti cintyaṃ muhurmuhuḥ ॥

அடிக்கடி நீ  கவனிக்கவேண்டியது என்ன தெரியுமா? சரியான நேரம், சரியான நம்பகமான நண்பர்கள், சரியான தகுந்த இடம், சரியான முறையில் சம்பாதிக்கும்  வருமானம். சரியான விஷயத்துக்கு மட்டும் செலவு செய்தல், நமக்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது என்ற ஞானம். விழித்துக்கொண்டு  இப்படி செயல்பட்டால் நீ  கெட்டிக்காரன். உனக்கு பெருமை சேரும்.   இது ரொம்ப அவசியம்.

यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते । ध्रुवाणि तस्य नश्यन्ति चाध्रुवं नष्टमेव हि ॥ ०१-१३ 1.13
yo dhruvāṇi parityajya adhruvaṃ pariṣevate। dhruvāṇi tasya naśyanti cādhruvaṃ naṣṭameva hi॥

நிரந்தரமான விஷயத்தை விட்டு  மறைந்து போகும்  சமாச்சாரங்களில் ஈடுபடாதே. இதனால் நீ நிரந்தர மானதை மட்டும் இழக்கவில்லை, சந்தேகத்துக்கிடமில்லாமல்  டெம்போரரியாக,  தற்காலிகமான, நீ விரும்பிய, தேடிய, அநித்ய விஷயங்களையும்  இழந்துவிடுவாய். ஜாக்கிரதை.

1.14 वरयेत्कुलजां प्राज्ञो विरूपामपि कन्यकाम् ।रूपशीलां न नीचस्य विवाहः सदृशे कुले ॥ ०१-१४
Varayētkulajāṁ prājñō virūpāmapi kan’yakām. Rūpaśīlāṁ na nīcasya vivāhaḥ sadr̥śē kulē

ஒரு நல்ல குல த்தை சேர்ந்த   பெண்ணை  தேர்ந்தெடுத்து மணப்பவன் புத்திசாலி. அழகு முக்கியமல்ல. பணத்துக்காக, டாம்பீகத்துக்காக,  குணமற்ற  பொருந்தாத  வாழ்க்கைத்துணையைத் தேடி மணந்த அநேகர் வாழ்வு பாழாவதை நாம் பார்க்கிறோமே. சம அந்தஸ்து உள்ள குடும்ப  சம்பந்தம் சிலாக்கியம் என்கிறார் சாணக்கியர்.

नदीनां शस्त्रपाणीनांनखीनां श‍ृङ्गिणां तथा ।विश्वासो नैव कर्तव्यः स्त्रीषु राजकुलेषु च ॥ ०१-१५   1.15
ஆழம் தெரியாமல் காலை விடாதே.  வெளியூரில், நதிகளை முதலில் பார்க்கிறவன் அது எத்தாகியது. எங்கே  சுழல் இருக்கிறது, சாதுவாக  நம்மை வரவேற்கும் நதி எந்த இடத்தில் ஆழமானதோ ,  மடுவோ  5. Do not put your trust in rivers, men who carry weapons, beasts with claws or horns, women, and members of a royal family.

विषादप्यमृतं ग्राह्यममेध्यादपि काञ्चनम् । अमित्रादपि सद्वृत्तं बालादपि सुभाषितम् ॥ 1-16
விஷாத³ப்யம்ரு’தம் க்³ராஹ்யமமேத்⁴யாத³பி காஞ்சநம் ।அமித்ராத³பி ஸத்³வ்ரு’த்தம் பா³லாத³பி ஸுபா⁴ஷிதம் ॥

விஷம் தான் விஷத்தை முறிக்கும். நம்மைப் பிடித்து ரெண்டு டோஸ் கொரோனா வைரஸ் உள்ளே அனுப்புகிறார்கள். அது உள்ளேபோய் நமது உடலில் இடம்பிடித்து, கொரோனா நம்மை அணுகாது பாதுக்காக்கிறது. IMMUNITY. பாற்கடலை தேவர்கள் அசுரர்கள் கடைந்தபோது அம்ருதம் வரும் முன்பு வாசுகியின் விஷம் தான் ஹாலஹாலமாக வந்தது. அதை விழுங்க தான் சிவன் அகப்பட்டார் திரு நீலகண்டனாக. விஷத்திலிருந்து தான் அம்ருதம் .சேற்றில் விழுந்தால் தங்கத்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைக்கிறோம். தாழ் குலத்தில் பிறந்தாலும் ஒருவனுடைய அற்புதமான ஞானத்தை மெச்சி ஏற்கிறோம். மரியாதை, சமூக அந்தஸ்து, மதிப்பு இல்லாத குடும்பத்தில்பிறந்தாலும் அற்புதமான மெச்சக்கூடிய பெண்ணை ஸ்த்ரீ ரத்னமாக ஏற்கிறோம்..
विषादप्यमृतं ग्राह्यममेध्यादपि काञ्चनम् ।अमित्रादपि सद्वृत्तं बालादपि सुभाषितम् ॥ 1-16
விஷாத³ப்யம்ரு’தம் க்³ராஹ்யமமேத்⁴யாத³பி காஞ்சநம் ।அமித்ராத³பி ஸத்³வ்ரு’த்தம் பா³லாத³பி ஸுபா⁴ஷிதம் ॥

விஷம் தான் விஷத்தை முறிக்கும். நம்மைப் பிடித்து ரெண்டு டோஸ் கொரோனா வைரஸ் உள்ளே அனுப்புகிறார்கள். அது உள்ளேபோய் நமது உடலில் இடம்பிடித்து, கொரோனா நம்மை அணுகாது பாதுக்காக்கிறது. IMMUNITY. பாற்கடலை தேவர்கள் அசுரர்கள் கடைந்தபோது அம்ருதம் வரும் முன்பு வாசுகியின் விஷம் தான் ஹாலஹாலமாக வந்தது. அதை விழுங்க தான் சிவன் அகப்பட்டார் திரு நீலகண்டனாக. விஷத்திலிருந்து தான் அம்ருதம் .சேற்றில் விழுந்தால் தங்கத்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து வைக்கிறோம். தாழ் குலத்தில் பிறந்தாலும் ஒருவனுடைய அற்புதமான ஞானத்தை மெச்சி ஏற்கிறோம். மரியாதை, சமூக அந்தஸ்து, மதிப்பு இல்லாத குடும்பத்தில்பிறந்தாலும் அற்புதமான மெச்சக்கூடிய பெண்ணை ஸ்த்ரீ ரத்னமாக ஏற்கிறோம்.

स्त्रीणां द्विगुण आहारो लज्जा चापि चतुर्गुणा । साहसं षड्गुणं चैव कामश्चाष्टगुणः स्मृतः ॥ 1-17
ஸ்த்ரீணாம் த்³விகு³ண ஆஹாரோ லஜ்ஜா சாபி சதுர்கு³ணா । ஸாஹஸம் ஷட்³கு³ணம் சைவ காமஶ்சாஷ்டகு³ண: ஸ்ம்ரு’த: ॥ 01-17

சாணக்கியன் எங்கே தெரிந்து கொண்டானோ தெரியவில்லை. ஆண்களை விட பெண்களுக்கு பசி ரெண்டு மடங்கு, வெட்கம் நான்கு மடங்கு, தைர்யம் சாகசம் ஆறு மடங்கு , ஆசை எட்டு மடங்கு…இப்போது சாணக்கியன் இருந்து இதைச் சொன்னால் பெண்கள் சங்கம், மகளிர் அணி அவனை சும்மா விடுமா? கேட்டால் என்ன சொல்வான். ”நான் சொன்னது ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் எங்கள் காலப் பெண்களைப் பற்றி தானே”.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *