RASA AASWAADHA THARANGINI – J K SIVAN

ராம மஹிமை  அலைகள் –   நங்கநல்லூர்  J K   SIVAN 

 ”ரஸ நிஷ்யந்தினி –     பருத்தியூர் பிரம்மஸ்ரீ  கிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மஹான்  பாரத தேசத்தில் பல  இடங்களிலும் சென்று பிரசங்கம் நிகழ்த்திய  ஒரு அற்புத விஷயம்.   ஸமஸ்க்ரித  ஸ்லோகத்தில்  அற்புதமான  அர்த்தங்களை  வழங்கி .  அதை   நாடு பூரா எத்தனையோ  பாக்கியசாலிகள் நேரடியாக காது குளிர கேட்டிருக்கிறார்கள்.  பெரியவா போற்றி மதித்த  மஹான்களில் ஒருவர்  பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள்.  மன்னார்குடி பெரியவா ராஜு சாஸ்திரியின் சிஷ்யர்களில் ஒருவர்.  நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் குருவிடம் சென்று கல்வி கற்கும் பழக்கம் இருந்தது. அதற்கும் முன்பு குருகுல வாசம். குருவுடன் அவர் இல்லத்தில் தங்கி சேவை செய்து கல்வி பெறும் சம்ப்ரதாயம்.

 ”ரஸ நிஷ்யந்தினி”  பற்றி  சில  விஷயங்களை அறிவோம்.  மகரிஷி  விஸ்வாமித்ரர்  தசரதனிடம் சென்று ஸ்ரீ ராமனை என்னோடு அனுப்பு  என்கிறார்.   என்ன  காரியத்துக்கு, காரணத்துக்கு என்று மென்று விழுங்கி  தசரதர் கேட்க  தானொரு யாகம் காட்டில் பண்ணப்போகிறதாகவும், அதற்கு  ராக்ஷஸர்கள் தடை எதுவும் இல்லாமல்  காப்பதற்கும்  ராமனை அனுப்ப வேண்டும் என்கிறார்  மகரிஷி.  இவ்வளவு சிரிய  பாலகனால்  எப்படி கொடூர  ராக்ஷஸர்களை எதிர் கொள்ள முடியும் நான் வேண்டுமானால் வரட்டுமா  என்று கேட்கிறார்  தசரதர்.
அப்போது சிரித்துக்கொண்டே  மகரிஷி விஸ்வாமித்ரர் என்ன சொல்கிறார்? ”தசரதா,உன்னைப் பொறுத்தவரை ” ராமன்  என் மகன்” என்ற  ஒரே  நினைப்பு. உலகத்தில் எல்லா தந்தை மகன்களை போல் தான் உன் எண்ணம். நீ நினைப்பது போல் உன் மகனாக வந்த இந்த  ராமன் சாதாரண குழந்தை இல்லை.   உன் மகனாக  உள்ள  ஸ்ரீ ராமனை,ஸ்ரீ மஹா விஷ்ணுவின்   அவதார புருஷனை,  ”நான் அறிவேன்”    ”அஹம்  வேத்மி ”  உனக்குத் தெரியாது    என்று  ராமனின்  பராக்ரமத்தை  அவன் அவதார மஹிமையை  தசரதனுக்கு  சொல்கிறார்.
இதை   100  உதாரணங்கள் கொடுத்து விஸ்வாமித்ர மகரிஷி  தசரதனுக்கு எடுத்துச் சொல்வது போல்  ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள்  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களில் இயற்றி இருப்பதுவே  ‘ ரஸ நிஷ்யந்தினி ”
ரஸ நிஷ்யந்தினி பற்றி எனக்கு முதலில்  அறிவித்தவர்,   என்  நண்பர் காலஞ்சென்ற   ஸ்ரீ சுந்தர ராம மூர்த்தி. பருத்தியூர் சாஸ்திரிகளின் கொள்ளுப்பேரன்.   அவர்   எழுதிய  ”ரஸ ஆஸ்வாத தரங்கிணி”  என்ற  ஆங்கில புத்தகம்  மூன்று  பாகங்கள்  வெளியாக வில்லை.  அது வெளியானதும்  ஒரு செட் புத்தகங்களை  சிவனுக்கு என் அன்பளிப்பாக தந்துவிடு  என்று மகனிடம் சொல்லி மறைந்தவர்  என் நண்பர்.  அவர் மறைவு  எனக்கு தெரியாமல் போய்விட்டது.  ஒருநாள்  அவருடைய  நம்பருக்கு  போன் செய்தபோது  அவர் மனைவியார்  இந்த அதிர்ச்சி செயதியை சொனார்.    அவர் மகன்  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ( ஆஹா  என்ன பெயர் வைத்திருக்கிறார்  ஸ்ரீ சுந்தர ராமா மூர்த்தி… ராம பக்த குடும்பம் அல்லவா?)  என் தாத்தா அப்படித்தான்.  கம்பராமாயண சக்ரவர்த்தியாக  வாழ்ந்தவர்  குடும்பத்தில் எல்லா ஆண்குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு ராமன் பெயர் வைத்தவர்)
ஒரு நாள் காலை  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி  என் வீட்டுக்கு நங்கநல்லூர் வந்து  எனக்கு ஒரு செட்  (மூன்று பாகங்கள் ) ”ரஸ ஆஸ்வத தரங்கிணி” என்ற பொக்கிஷத்தை அளித்தார்.
”ஸ்ரீ சுந்தரராம மூர்த்தி,  தான் எழுதிய  ‘ரஸ ஆஸ்வாத தரங்கிணி ”   புத்தகத்தின்  3 பாகங்களை  யார்  ஐந்தாயிரம் ரூபாய்  நன்கொடையாக   அமெரிக்காவில்  காட்டப்படும், கட்டப்பட்ட,   SRI  MAHAA PERIYAVA MANIMANDAPAM  NJ USA ,  நிர்மாணத்துக்கு   காசோலையாகவோ,   காசாகவோ  ‘ SIVA SAGARAM TRUST ‘க்கு  அனுப்புகிறார்களோ அவர்களுக்கு அளிக்கவும் என்று  புத்தகத்தில்  குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த புத்தக  செட்டை  பெற ஆர்வமுள்ளவர்கள்  அவர் மகனை  9994836544 என்ற  டெலிபோனில்  தொடர்பு கொள்ளலாம்.
ரஸ ஆஸ்வாத தரங்கிணி ஸ்ரீ ராமனைப் பற்றிய  அற்புத  மகிமைகளை அலை அலையாக  ஒவ்வொரு பக்கத்திலும் நிரப்பி இருக்கிறார்  என் நண்பர்  சுந்தர ராம மூர்த்தி.  இந்த அலையில் சில திவலைகளை மட்டும்   உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம். ஸ்ரீ ராமனை அனுபவிப்போம்.
அந்த பெரியவா  பிரம்மஸ்ரீ  பருத்தியூர்  கிருஷ்ணசாஸ்திரிகள் . காலம் சென்ற  என் நண்பர் சுந்தரராமமூர்த்தியின்  தாய் வழி  கொள்ளு  தாத்தா.  சாஸ்திரிகளின்  குரு  ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் முன்னோர்  ஸ்ரீ  சேங்காலிபுரம்  வைத்யநாத சாஸ்திரி என்கிற  முத்தண்ணாவாள்.
பருத்தியூர்  கிருஷ்ண சாஸ்திரிகளை  எல்லோரும்  ராமாயண சாஸ்திரிகள் என்று தான் அறிவார்கள்.  அவர் மூச்சு  அவர் இருக்கும்போது  எல்லாமே  ”ராமா  ராமா”   மூச்சு  விட்டபிறகு பிடித்துக்கொண்டது ராமனையே.  எவ்வளவு தான தர்மங்கள் செய்தவர்.  எவ்வளவு இடங்களுக்கு  போக்குவரத்து இப்போது போல் இல்லாத காலத்திலேயே  சென்று ப்ரவசனங்கள்  நடத்தி இருக்கிறார். ஆயிரம் ரெண்டாயிரம் பக்த கோடிகளை  தன்னை மறந்து  (இப்போது கணக்குப்படி  லக்ஷக் கணக் கானோர்)   சிலையாக மணிக்கணக்கில் அம்ருத  ராம ரஸம் செவி வழியாக  பருக வைத்தவர்.  ராமாயணம் இப்போது போல்  அரைமணி, முக்கால்மணி, ஒருமணி நேரம் அல்ல.  வருஷக்கணக்கில்  நேரம் கணக்கில்லாமல்  சொல்வார்கள்.  நடுநடுவே  கோலாகலமாக கொண்டாட  ஜனனம், பட்டாபிஷேகங்கள், கல்யாணங்கள் வரும்.  சீதா கல்யாணம், சுக்ரீவ பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகம் கடைசியில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் எல்லாம்.  சீர் வரிசைகள், ஆசார்ய சம்பாவனைகள், தோடாக்கள் , சால்வைகள், வேஷ்டி புடவைகள், அரிசி, பருப்புகள்,  நெய் எண்ணெய் முதலான வருஷாந்த்ர  மளிகை  சாமான்,  பொற்காசுகள், முத்து நவரத்ன மாலைகள்  எல்லாம் குவியும்.    இது தான் ப்ரவசன கர்த்தாவின் வருஷாந்தர  வரும்படி.   என் தாய் வழி தாத்தா  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதிகள் ஒரு ராமாயண ப்ரவசன கர்த்தா.  சாஸ்திரிகளை நன்றாக தெரிந்தவர். கிருஷ்ண சாஸ்திரிகளின் சம காலத்தவர். என் முன்னோர்கள் ஸ்ரீ ராமனைப்பாடியே ஜீவித்த குடும்பத்தினர். ஜமீன்கள்,  மிராசுகள் , பிரபுக்கள், ஸமஸ்தானங்கள்  அவர்களை ஆதரித்து சம்பாவனை பரிசு கொடுத்து ராம நாமத்தால் வாழ்ந்தவர்கள்.
சம்பாவனையாக கிடைத்த  பணத்தை சாஸ்திரிகள்  அப்படியே  கோவில் கட்ட, புனருத்தாரணம் செய்ய, அன்ன தானம் செய்ய, வேத பரிபாலன, பாடசாலைக்கு என்று வாரி வழங்கியவர் .
அவர் முன்னோர்கள்  ஸ்ரீ ராமனைப் பாடியே  வாழ்ந்தவர்கள்.  அருணாச்சல கவிராயரின்  ராம நாடக கீர்த்தனைகளை பாடி ஜமீன்கள், சமஸ்தானங்களில் சம்பாவனை, பரிசு பெற்று அதில் வாழ்ந்த குடும்பங்கள்.

நான் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின்  ”ரஸ நிஷ்யந்தினி”  ஸ்லோகங்களை எனக்கு தெரிந்தவரை தமிழில் விளங்கியதைக்  கண்ணுற்ற  பருத்தியூர் கிருஷ்ண ஸாஸ்த்ரி  வம்சத்தில் இப்போது  அமெரிக்காவில்  இருக்கும் அவரது  கொள்ளுப்பேரன் பெயர்த்திகளில் ஒருவர் ஸ்ரீமதி சந்திரிகா ராமன் கெளஷிக் , என்னோடு தொடர்பு கொண்டார். நேரில் இன்னும் பார்த்ததில்லை.  எனக்கு ஆச்சரியமாக  இருந்தது.  பருத்தியூர் பாரம்பரியத்தை விடாது காத்து  வளர்த்து ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளை பற்றிய  நூல்களை வெளியிட்டு ஒரு அற்புத  நூல் ஒன்று எனக்கு பரிசாக அளித்தார்.
  ”ஸ்ரீ ராம ஜெயம் —  ஓம்  ஸர்வம்  ராம மயம் ” எனும் அந்த புத்தகத்தில் அற்புத  விஷயங்கள் பலவற்றை தேடிப் பிடித்து  ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இந்த நூல்  விற்பனைக்கல்ல. சாஸ்திரிகள் வாழ்க்கை,  பருத்தியூரில் அவர் நிர்மாணித்த ஆலயம், அதன் பராமரிப்பு, அவரது ப்ரவசனங்கள் பற்றி,  அவர் அடைந்த கபால மோக்ஷம் பற்றியும்  சொல்கிறது.    பருத்தியூர் குடும்பம் பெரிசு. நிறைய வாரிசுகள். ஒற்றுமையாக  இந்த விஷயத்தில் ஈடுபட்டு  ஸ்ரீ சாஸ்திரிகளின் (1842-1911)  நூற்றாண்டு விழா மலராக இந்த புத்தகம்  வெளிவந்தது.  அந்த புத்தகத்தை ஸ்ரீ  சுந்தரராம மூர்த்திக்கு அளித்தேன்.  மகிழ்ந்தார்.  எல்லாம் பகவான் ஸ்ரீ ராமன் அனுக்ரஹம், ஸ்ரீ க்ரிஷ்ணசாஸ்திரிகள் ஆசீர்வாதம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *