ASHTAPATHI – DASAVATHARA SLOKAM 10-11 J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN
கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 10-11

10. म्लेच्छनिवहनिधने कलयसिकरवालम् । धूमकेतुमिव किमपिकरालम्॥ केशव धृतकल्किशरीर जयजगदीशहरे॥ अ प १-१०
mleccha-nivaha-nidhane kalayasi karavalam dhuma-ketum iva kim api karalam | kesava dhruta-kalki-sharira jaya jagadisa hare
ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம் தூமகேதும் இவ கிம் அபி கராலம்! கேஸவ த்ருத-கல்கி-ஸரீர ஜய ஜகதீஸ ஹரே!

ஹே ஜெகதீசா, காலத்துக்கேற்ற கோலம். கலியுகத்தில் நீ துஷ்டர்களை அழிக்க, தர்மத்தை நீதியை நிலைநாட்ட அதர்ம அநீதி புரியும் கொடியவர்களை அழிக்க குதிரை மேல் வருவாய் அப்போது உன் பெயர் கல்கி (கல்கி பகவான் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒரு சாமியார் அல்ல) இந்த உண்மையான கல்கி பகவான் மஹாவிஷ்ணு இனிமேல் தான் சம்பலா என்ற கிராமத்தில் தோன்றப்போகிறார். அவர் கரத்தில் தங்கத்தில் பிடி போட்ட கூரிய வாள் ஒன்று தாங்கி வருவார் என்று ஸ்லோகம் சொல்கிறது. அதன் ஒளி வானில் தோன்றி மறையும் வால் நக்ஷத்ரம் போல் ஜொலிக்கும் என்கிறார் ஜெயதேவர்.

11. श्रीजयदेवकवेरिदमुदितमुदारम् । शृणु सुखदम् शुभदम् भवसारम्। केशव धृतदशविधरूप जयजगदीशहरे॥ अ प १-११
srl-jayadeva-kaver idam uditam uddram srnu sukha-dam subha-dam bhava-sdram kesava dhrta-dasa-vidha-rupa jay a jagadisa hare (11)
ஸ்ரீஜயதேவ-கவேர் இதம் உதிதம் உதாரம் ஸ்ருணு ஸு க-தம் ஸுப-தம் பவ-ஸாரம் ! கேஸவ த்ருத-தஸ-வித-ரூப ஜய ஜகதீஸ ஹரே
ஹே கேசவா, இப்படி நீ பத்து வித அவதாரங்களை எடுத்தது இந்த பூமியில் நீதி, நேர்மை நியாயம், தர்மம் நிலைநாட்டவும், அதை கெடுக்கும் கொடியவர்களை அழிக்கவும் அல்லவா? இந்த ஜெயதேவன் உன் பெருமையைப் பாட எனக்கு ஒரு பாக்யத்தை கொடுத்தவன், உனக்கு நமஸ்காரம். எங்கும் எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்யமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

वेदानुद्धरते जगन्निवहते भूगोलमुद्बिभ्रते दैत्यम् दारयते बलिम् छलयते क्षत्रक्षयम् कुर्‌वते। पौलस्त्यम् जयते हलम् कलयते कारुण्यमातन्वते म्लेच्छान्मूर्च्छयते दशाकृतिकृते कृष्णाय तुभ्यम् नमः॥ १-५
veddn uddharate jaganti vahate bhu-golam udbibhrate daityam ddrayate balirh chalayate ksatra-ksayarh kurvate
paulastyam jayate halarh kalayate kdrunyam dtanvate mlecchdn murcchayate dasdkrti-krte krsndya tubhyam namah

நீ கடலில் மறைந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தாய், பூமியை பாயை சுருட்டி பாதாளத்தில் மறைத்த ஹிரண்யாக்ஷனை கொன்று நீருக்கு மேலே மீண்டும் இயங்க வைத்தாய், தேவாசுரர்கள் பாற்கடலைக் கடடிந்தபோது ஆமையாக மந்திரமலையை முதுகில் சுமந்தாய். நரசிங்கமாக உருவெடுத்து ஹிரண்யகசிபுவை கொன்று ப்ரஹ்லாதனை காப்பாற்றினாய், வாமனனாக அவதரித்து மகாபலியின் பலத்தை ஒடுக்கி அவனை பாதாளத்தில் இருத்தினாய், பரசுராமனாக உருவெடுத்து க்ஷத்ரியர்கள் அக்கிரமத்தை தடுத்தாய், ராமனாக அவதரித்து ராக்ஷசர்களை, ராவணாதியரைக் கொன்றாய், பலராமனுடன் இணைந்து துவாபரயுகத்தில் ராக்ஷஸர்கள் பலரை அழித்தாய், புத்தராக தோன்றி அஹிம்சையை போதித்தாய். இனி கல்கியாக தோன்றி கலியுகத்தில் அக்கிரமங்களை அழிக்க ரெடியாகி விட்டாய்,உன்னை நானும் மற்ற எல்லோரும் வணங்குகிறோம் என்று தசாவதார ஸ்லோகத்தை ஜெயதேவர் முடிக்கிறார். !

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *