ASHTAPATHI – DASAVATHARA SLOKAS = J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN
கீதகோவிந்தம் – அஷ்டபதி

ஸ்லோகம் 6-7

6.क्षत्रियरुधिरमये जगदपगतपापम् । स्नपयसि पयसि शमितभवतापम्। केशव धृतभृघुपतिरूप जयजगदीशहरे॥ अ प १-६

kashtriya-rudhira-maye , jagad apagata-papam snapayasi payasi samita-bhava-tapam | kesava dhruta-bhrugu-pati-rupa jaya jagadisa hare ||5||

க்ஷத்ரிய-ருதிரமயே ஜகதபகதபாபம் ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தாபம் கேஸவ த்ருத-ப்ருகுபதி-ரூப ஜய ஜகதீஸ ஹரே!

ஹே ஜெகதீஸ்வரா, கேசவா, முதலில் நீ மீனாக உருவெடுத்து வேதங்களை மீது பிரம்மனிடம் ஒப்படைத்து மீண்டும் உயிர்கள் ப்ரளயத்துக்கு பிறகு உயிர் பெற்று வாழ வகை செயதாய். அடுத்தது கூர்மமாக அவதரித்து, முதுகில் மந்திரமலை சுமந்து, வாசுகி மத்தை கடையும் கயிறாக பங்கேற்க தேவர்களும் ராக்ஷஸர்களும் பாற்கடலைக் கடைந்து அம்ருதம் பெற செய்தாய், அப்புறம் ஹிரண்யாக்ஷன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்கடியில் மறைத்தபோது அவனை வதைத்து பூமியை மீட்டு கடலுக்கு வெளியே முன்போல் இயங்கச் செய்தாய். ஹிரண்யாக்ஷனின் சகோதரன் ஹிரண்ய கசிபு எவரும் நினைக்காத வரம் பெற்று தேவர்களை வாட்டியபோது அவன் மகன் சிறுவன் ப்ரஹ்லாதன் உயிர் காத்து ஹிரண்யனைக் கொள்ள நரசிங்க வடிவமெடுத்தாய்.

ப்ரஹ்லாதனுக்கு பின் வந்த அரசனாக மஹாபலி தவம் பெற்ற செறுக்கில் மூவுலகும் கட்டியாண்டு தேவர்களை அவமதித்தபோது வாமனனாக அவதரித்து மூன்றடி மண் வரம் பெற்று ஈரடியில் விண்ணையும் மண்ணையும் அளந்து மூன்றாமடியாக மஹாபாலி சிரத்தில் பாதம் பதித்து அவனை பாதாள லோக அரசனாக்கி சிரஞ்சீவியாக என்றும் வாழ வகைசெய்தாய். இதை ஜெயதேவர் இதுவரை அற்புத ஸ்லோகங்களில் பாடியதை ரசித்தோம்.

கேசவா,உனது அடுத்த அவதாரம் விசித்திரமானது. ப்ருகு வம்சத்தை சேர்ந்த ஜமதக்னி என்ற ரிஷியின் குமாரனாக வில்லுக்கு ஒரு வீரனாக பரசுராமன் என்ற பெயர் பெற்ற க்ஷத்ரியர்களை அழிக்கவென்றே பிறந்தவனாக உருவெடுத்தாய்.தந்தை சொல் மீறாத தனயனாக தாய் ரேணுகா தேவி சிரத்தை நீ கொய்து தந்தையிடமே வரம் பெற்று அவளை மீண்டும் உயிர்ப் பித்தாய்.

அரசர்களாக க்ஷத்ரியர்கள் நெறிமுறை பிறழ அவர்களை வென்று கொன்று, அவர்கள் செய்த பாபத்தை கறையை பூமியிலிருந்து அகற்றினாய். பிராமணனாக, ரிஷிகுமாரனாக இருந்தும் தனுர் வித்தையில் சிறந்தவனாக பரசுராமனை விளங்கச் செய்தாய்.

7. वितरसि दिक्षु रणे दिक्पतिकमनीयम् । दशमुखमौलिबलिम् रमणीयम्॥ केशव धृतरामशरीर जयजगदीशहरे॥ अ प १-७
vitarasi dikshu rane , dik-pati-kamaniyam dasa-mukha-mauli-bali ramaiyam | kesava dhruta- Raghupathi rupa jaya jagadisa hare ||7||
விதரஸி திக்ஷ¤ ரணே திக்பதிகமனீயம் தஸமுக-மெளலி-பலிம் ரமணீயம் கேஸவ த்ருத-ரகுபதி-ரூபா ஜய ஜகதீஸ ஹரே!

ஜெகதீசா, ஹரே, வாழ்க்கையில் ஒரே பெண், மனைவியாக, சீதையாக, ஒரே பாணம் , எதிரியைக் கொள்ள, சத்யம் தவறாத அருமை மகனாக, தந்தை தாய் சொல்லை மீறாத, வாக்கு பிறழாத தனயனாக, பதினான்கு வருஷங்கள் வனவாசம் கட்டளையிட்ட போது மனமகிழ்வோடு ஏற்று அடி பணிந்து, சீதையைக் கவர்ந்த சிறந்த சிவபக்தன் லங்கேஸ்வரன் ராவணனைக் கொன்று, அவன் படையில் அனைவரையும் அழித்து சீதையை மீட்ட வில்லுக்கு ராமன் என்ற பெயர் பெற்ற தர்ம பரிபாலனம் செய்தவனாக நீ எடுத்த அவதாரம் ஸ்ரீ ராமாவதாரம். தேவர்கள் பலர் வானரசேனையாக உனக்கு உதவினார்கள் இல்லையா? ராவணாதிகள் நவக்ரஹங்களுக்கும் இந்திராதி தேவர்களுக்கும் விளைவித்த கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா?
அயோத்தி ராமனை நினைக்காத,தெரியாத ஹிந்துக்கள் இல்லை, கருணாமூர்த்தியான ஸ்ரீ ராமனை சிலாரூபத்தில்,பட உருவத்தில் வணங்காத பக்தர்கள் இல்லை. அவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்களே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *