GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்   –   நங்கநல்லூர்   J K   SIVAN 

பயம்… திகில்,  ஷாக்…..

என்  நண்பர்  மார்க்கண்டேயன் ரிஷி குமாரரும் இல்லை, .என்றும் பதினாறும்  இல்லை.   அதற்கு மேல்  60 வருஷங்கள் ஆன  ஒரு பிரைவேட் பேங்க்  மானேஜராக  ரிடையர்  ஆனவர்.  போனவாரம் ஒருநாள் ஒரு ஹோட்டலில்  பக்கோடா நிறைய சாப்பிட்டுவிட்டு மறுநாள்  காலை எழுந்திருக்க  மறந்து போய்விட்டார்.   படுத்தி விட்டு  ஒரு நாள் பக்கோடா நிறைய சாப்பிட்டு விட்டு படுத்தவர் அப்புறம் எழுந்திருக்க மறந்து விட்டார்.பதிமூன்று நாட்கள் ஆகிவிட்டது.  பிள்ளைகள் மூன்று பேர் ரெண்டு பெண்கள்.  சாஸ்த்ரோக்தமாக  வாத்தியார்  சொன்னபடி செய்து மொத்த செலவை பங்கிட்டுக்  கொண்டார்கள்.

இதில் யாருக்கும் சடங்குகளும் தெரியாது சாஸ்திரமும் தெரியாது.  விஞ்ஞான ரீதியாகவும் அதிகம் சொல்வதற் கில்லை.   நாம்  எல்லோரும் எப்போதும்  ஒழுக்கத்தோடு  நேர்மையாக இருக்கவேண்டும் என்று சாஸ்திரம் சொன்னால் அப்படி இருக்க முடியுமா?  முடியும் என்று சொல்பவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  பக்தி  கடவுள் நம்பிக்கை பெரியோரிடம் மதிப்பு, பயபக்தி எல்லாமும் இருக்கவேண்டுமே. நித்ய கர்மாநுஷ்டா னங்களை விடவே கூடாது.   நிறைய விஷயங்கள் நமது வாழ்க்கையில்  ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது. பரம்பரை பரம்பரையாக, காலா காலமாக இது தான் நடைமுறை. இதை மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. கூடவும் கூடாது. இதில் என்ன கஷ்டம்,  நஷ்டம்?

சில பழக்கவழக்கங்கள் அந்த காலத்தில் சௌகரிய மாக, எல்லோராலும் அனுஷ்டிக்கும் படியாகி இருந்தது. கொஞ்சம் காலத்திற்கு ஏற்றபடி  ”யதா சௌகர்யமாக ” சிறிது மாற்றிக் கொள்ளலாமே  தவிர நம்பிக்கை அதே.

அந்தணர்கள் நிறைய பேர் இதில் ஈடுபட்ட காலம் அது.  இப்போது அந்தணர்கள் வேறு உத்யோகங்களில் ஈடுபட்டு அவர் களுக்கு பதிலாக  யாரோ பேசிய  ஒலி  அவர்கள் அசரீரியாக பல இல்லங்களில் மந்திரங்க ளாகி,  அதை பின் பற்றி நிறைய சடங்குகள் நிறைவேறுகிறது.

முற்காலத்தில்  கொடுத்த மாதிரி  ப்ரோஹிதர்கள், வைதீகர்களின்  சேவைக்கு கொடுத்த தக்ஷணை களையும் சம்பாவனை, , தானங்களையும் இப்போதும் செய்ய வழியில்லை என்பது வாஸ்தவம்.  பசுவை தானமாக கொடுக்க முடிய வில்லை. ஸ்வர்ணத்தை
 தானமாக கொடுக்க முடியவில்லை.  இதை வியாபாரமாக்கி  அவர்கள் இப்போது பல மடங்கு பணமாக கேட்கிறார்கள் என்றும் குறை.   அவர்கள் பிழைக்க வழி என்ன?  என்பது ஒருபுறம் இருக்க  அவர்கள் உச்சரிக்கும் மந்திரம் பொருத்தமானதா
, சரியானதா? முழுதுமா?  தவறில்லாமலா?  என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாது ஏன் என்றால் அந்த மந்திரங் களோ அவற்றின் அர்த்தமோ தெரிந்து கொள்ள எவருக்கும் விருப்பமில்லை.  

கருட புராணம்  எழுதிக்கொண்டு வருகிறேன்.   அது  அநேக ஆச்சரியமான  சில விஷயங்களைச் சொல் கிறது.  இறந்தவன் செல்கிற  பாதை எப்படிப் பட்டது. அவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் என்ன?  இதெல்லாம் முதலில் கருடாழ்வாருக்கு ஸ்ரீமன் நாராயணனே  போதிக்கிறார்.  அது தான் கருட புராணம்.  அப்புறம்   ப்ரம்மா, கருடன்  ஆகியோர்  மற்றவர்களுக்கு, ரிஷிகளுக்கு  சொல்லி எங்கும் பரவி கடைசியில் புஸ்தகமாக நமக்கு  கிடைத்திருக்கிறது.

கர்ண பரம்பரை என்பது   ஒருவர் சொல்லி மற்றவர் கேட்டு, அவர் சொல்லி அதற்கு பின் பலர் கேட்டு மந்திரங்கள் கொஞ்சமும் மாறுபடாமல்,கெடாமல், கூட்டாமல், குறையாமல்  வழி வழியாக வந்து  அப்புறம் யாரோ  ஓலைச்சுவடியில் வடமொழியில் அல்லது கிரந்தம், தமிழ்  எதிலோ எழுதி, அதை சிலர் பாதுகாத்து, காகிதத்தில் எழுதி, அதை வெள்ளைக் காரன் அச்சு யந்திரம் கண்டுபிடித்து அது நமது நாட்டிலும் வந்தபின் தான் காகிதத்தில்  கருப்பு வெள்ளை யாகியது.

முதலில் ஆற்றங்கரையில், மரத்தடியில்  சொன்ன நேரம் காலம் சூழ்நிலை வேறு, அதை பல நூற்றாண்டுகள் கழித்து  ஒலி நாடாவில்  குளுகுளு அறையில்  சோபா வில் அமர்ந்தவாறு  கேட்கும் இக்காலம் வேறு. மாறுதலுக்கு காலம் ஒன்றே பொறுப்பு.   ஆனாலும் சில சடங்குகள் மாறவே மாறாது. மாற்றினால்  அவற்றை செய்வதில் அர்த்தம் இல்லை. பண விரையம், விளையும் பாபம்  ஒன்று தான் மிச்சம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ஒரு  ப்ரோஹிதர்,  வாத்யார் இருப்பார்.  அவர் தான் அந்த வீட்டில் நடக்கும்  சுப,  அசுப காரியங்கள் எல்லாவற்றையும் நடத்திக் கொடுப்பவர். அவர் மீது வீட்டுக்காரர்களுக்கும்,  வீட்டுக்காரர்கள் மீது அவருக்கும்  பரஸ்பர நம்பிக்கை இருக்கும்.  அவரைக்  கூப்பிட்டு  மார்க்கண்டேயன் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் நாங்கள் என்று கேட்டால் அவர் சொல்வது:

”வழக்கமாக  இந்த பன்னிரண்டு பதிமூன்று நாளும் செய்ய வேண்டிய சம்ப்ரதாயம் சொல்றேன். அதுக்கப் புறமும் ஒரு வருஷம் பூரா இருக்கு. அப்புறம் வருஷத் துக்கு ஒரு தடவை ஸ்ரார்த்தம் வரை சொல்றேன்”.

மார்க்கண்டேயன் வீட்டில் அவன் மறைந்த பின் ஏற்றப் பட்ட  தீபம் அடுத்த பன்னிரண்டு நாள் வரை தெற்கு பக்கத்தில் எரிந்து கொண்டே இருந்தது. அணையாமல் எண்ணை விட்டு கதவை காற்று படாமல் மூடி வைத்தார்கள். அந்த பன்னிரண்டு நாட்களிலும் பூஜை அறையில் விளக்கு எரியாது. பூஜை கிடையாது.  சில வீடுகளில்  இப்போதும் அந்த பன்னி ரெண்டு நாட்கள் சமையல் அறையிலும் பூனைக்குட்டி  படுத்திருக்கும். சமையல் கிடையாது. அடுப்பு எரியாது.  ஏன்? மார்க்கண்டேயன் இறப்பினால் விளைந்த துக்கம், துயரம். மகிழ்ச்சி இதர உணர்வுகளை மட்டுப் படுத்த .இறந்தவர் நினைவில்  இருக்க.  மார்க்கண்டேயன் இப்போது யமனின் ஆதிக்கத்தில்.

எதற்காக பூஜை செய்வதில்லை என்றால்  பூஜை செய்து விளக்கேற்றி நாமாவளி சொல்லி மனம் லயித்தால்  அங்கு தெய்வம் நிச்சயம் சாந்நித்தியம் ஆகும். நம் கண்ணுக்கு தெரியாததை மனம் அனுபவிக்கும்.   இதயம் அடையாளம் கண்டு கொள்ளும். அசுப காரியம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் சில  ஜீவன்கள் மறைந்த ஜீவனுடன் சம்பந்தப்பட்டவை உலவும். அவை இருக்குமிடத்தில் தெய்வத்தை அழைக்கக் கூடாது.  அந்த ஜீவன்களை முதலில்  அவை போக  வேண்டிய இடத்துக்கு வெளியேற்ற வேண்டும். அனுப்பவேண்டும். மார்க்கண்டேயன் ஜீவன் அங்கேயே ஏக்கத்தோடு, ஏமாற்றத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறதே.   அதனால் தான்  அவரோடு இத்தனை நாள் இருந்த குடும்பம் அவரை விட்டு வேறு மகிழ்ச்சி காரியங்களில் ஈடுபடுவ தில்லை. அசுப இடங்களில் தெய்வம் கிடையாது.

மார்க்கண்டேயன் செய்த பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்து அவனை யமனுலகுக்கு அனுப்பி வைக்க தான் சடங்குகள்.

ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும்  யமதர்மன் சந்நிதி பார்த்தது நினைவுக்கு வருகிறது.

”ஸ்ரீமந்  நாராயணா,  எந்தெந்த  பாவங்கள்  செய்வதால்  ஜீவர்கள்  அந்த கடின பாதையில் செல்ல வேண்டி இருக் கிறது.  எதற்கு அவர்கள்  வைதரணி எனும்  பாழும் நதியில்  விழவேண்டும்?எதற்கு நரகம் செல்ல வேண்டும்? இதெல்லாம் எனக்கு சொல்லவேண்டும்?”

”கருடா, தப்பான காரியங்கள் செய்துவிட்டு, நல்ல காரியங்களை செய்யாதவனுக்கு, தான் செய்வ தில்  சந்தோஷப் பட்டவனுக்கு இப்போது தண்டனை. ஒவ்வொரு நரகமாக அவன்  செல்லவேண்டியது தான். ஒன்றன் பின் ஒன்றாக துன்பம் அனுபவிக்கவேண்டியது தான். பயம் அவனை ஆட்கொள்கிறது.  நல்லது செய்த வன் நேராக யமனின் ராஜ்யத்தில் மூன்று வாசலில் எதிலாவது நுழைகிறான். தவறான ஆசாமிக்கு  தெற்கு வாசல் பிரயாணம்.
பிராமணனை கொன்றவன், மது போதையில் தவறி ழைக்கிறவன்,  பசுவதை செய்தவன், சிசுவதை செய்த வன், பெண்களை கொன்றவன்,  குருவின் சொத்தை திருடியவன்,  கருவை சிதைத்தவன் ரஹஸ்யமாக பாபங்களை செய்தவன்,கோவில் சொத்தை திருடியவன் கடனை திருப்பி கொடுக்காதவன்,  நம்பிக்கை துரோகி, விஷம் கொடுத்தவன், புராணங்கள் போன்ற  வேதாகம  நூல்களை இழிவாக பேசி அழித்தவன், இவர்களுக்கு போக்கிடம் வைதரணி ஆறு தான்.  இரவும் பகலும் அழ வேண்டியது தான். எம தூதர்களின் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியது தான். 

தாய் தந்தையை  குருவை, ஆச்சார்யர்களை   பழித்த வன், ஏமாற்றினவன்,தான தர்மம் கொடுப்பதை தடுத்தவன்,  வைதரணியில் விழுந்து தவிப்பதை தவிர்க்க முடியாது.  வைதரணி  ஒரு கொடுமையான நீர் நரகம். பொய் சாட்சி பூதலிங்கம்,  திருடன், கொள்ளை யன், ஆகியோருக்கு  உஷ்ணமான  முள் மரம் காத்திருக் கிறது. அதில் தலைகீழாய் கட்டி தொங்கவிட்டு  இரும்பு கம்பிகளால் அடிப்பார்கள்.  கீழே  கொதிக்கும்  எண் ணெய் போன்ற  திரவத்தில் –விழுந்து பொறிக்க ப்படுவார்கள்.
பொது இடத்தில் எல்லோருக்கும் நீர் கிடைக்கும் கிணற்றை அழித்தவன், மூடியவன்,  கோவில் குளங்கள் குட்டைகளை  நாசப்படுத்தியவன் கொதிக்கும் நீரிலேயே  வெந்து போகிறான்.  பித்ருக்களுக்கு ஸ்ராத்தம் , தர்ப்பணம் செய்யாதவன் இதே தண்டனையை அனுபவிக்கிறான். 

பதவி, அதிகாரம், துஷ்ப்ரயோகம் பண்ணி  பலரை துன்புறுத்தியவன்  பலவித கொடிய ஜந்துக்களின்  கடியிலிருந்து தப்ப முடியாது.

லிஸ்ட்  நீளமாக போகிறது……

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *