VIVEKA CHUDAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர் – ஸ்லோகங்கள் 131-140

एषोऽन्तरात्मा पुरुषः पुराणो निरन्तराखण्डसुखानुभूतिः । सदैकरूपः प्रतिबोधमात्रो येनेषिता वागसवश्चरन्ति ॥ 131॥

ēṣō’ntarātmā puruṣaḥ purāṇō nirantarākhaṇḍasukhānubhūtiḥ ।sadaikarūpaḥ pratibōdhamātrō yēnēṣitā vāgasavaścharanti ॥ 131॥

ஏஷோऽந்தராத்மா புருஷ: புராணோ நிரந்தராக²ண்ட³ஸுகா²நுபூ⁴தி: । ஸதை³கரூப: ப்ரதிபோ³த⁴மாத்ரோ யேநேஷிதா வாக³ஸவஶ்சரந்தி ॥ 131॥

31 ஆத்மா என்றால் யார் என்ற கேள்வி எழும்புகிறதா? அது வேறு யாருமில்லை. ஆதி புருஷன். எங்கும் பிரம்மத்தை வியாபிக்கச் செய்யும் பரப்பிரம்மம். சதானந்தம். யார் அனுபவித்தாலும் அத்தனை பேருக்கும் பூரணமாக ஆனந்தத்தை கொடுப்பது. பிராணனை புலன்களை இயங்கச்செய்யும் சக்தி.

132 अत्रैव सत्त्वात्मनि धीगुहायां अव्याकृताकाश उशत्प्रकाशः । उरुप्रकाशः आकाश उच्चैरविवत्प्रकाशते स्वतेजसा विश्वमिदं प्रकाशयन्॥ १३२॥

atraiva sattvātmani dhīguhāyāṃ avyākṛtākāśa uśatprakāśaḥ । (pāṭhabhēdaḥ – uruprakāśaḥ) ākāśa uchchai ravivatprakāśatē
svatējasā viśvamidaṃ prakāśayan ॥ 132॥

அத்ரைவ ஸத்த்வாத்மநி தீ⁴கு³ஹாயாம் அவ்யாக்ரு’தாகாஶ உஶத்ப்ரகாஶ: । உருப்ரகாஶ: ஆகாஶ உச்சை ரவிவத்ப்ரகாஶதே ஸ்வதேஜஸா விஶ்வமித³ம் ப்ரகாஶயந் ॥ 132॥

32. மேலே எப்படி சூரியன் பிரகாசமாக உலகெங்கும் ஒளி வீசுகிறானோ, அதே போல மனதை நிறைத்து, அதில் சத்வத்தை திணித்து புத்தியை மனக்குகையில் நிறுத்தி ஞானகாசமாகி விளங்குவது ப்ரம்மம். ஆத்மா. எங்கும் எவருக்கும் பொதுவானது. அஞ்ஞானத்தை விலக்குவது .

133 ज्ञाता मनोऽहङ्कृतिविक्रियाणां देहेन्द्रियप्राणकृतक्रियाणाम् । अयोऽग्निवत्ताननुवर्तमानो न चेष्टतेनो विकरोति किञ्चन ॥ १३३॥

gñātā manō’haṅkṛtivikriyāṇāṃ dēhēndriyaprāṇakṛtakriyāṇām । ayō’gnivattānanuvartamānō na chēṣṭatē nō vikarōti kiñchana ॥ 133॥

ஜ்ஞாதா மநோऽஹங்க்ரு’திவிக்ரியாணாம் தே³ஹேந்த்³ரியப்ராணக்ரு’தக்ரியாணாம் । அயோऽக்³நிவத்தாநநுவர்தமாநோ ந சேஷ்டதே நோ விகரோதி கிஞ்சந ॥ 133॥

33. ஆத்மாவை உணர்ந்தவன்,தன்னுடையக புலன்கள், மனது, அகம்பாவம், ஆகியவை உடலோடு சேர்ந்து பலவித மாற்றங்களை உணர்வுகளை தருவதை நன்றாக கவனித்து அவற்றின் செயல்பாடுகளில் ஈடுபடாதவன். ஒரு இரும்புக் குண்டு நெருப்பில் வாட்டப்படும்போது செந்நிறத்தை அடைந்து நிறம் மாற்றிக் காட்டுகிறது. அதற்கு செந்நிறம் கிடையாது. நெருப்பினால் அதுவும் மாறுவது போல் உடல் மனது எல்லாம் மாற்றம் அடைவதை அடையாளம் காண்கிறான். ஆத்மாவுக்கு இவற்றோடு சேர்ந்திருந்தாலும் அதன் தன்மை மாறுவதில்லை.

134 न जायतेनो म्रियते न वर्धते न क्षीयतेनो विकरोति नित्यः । विलीयमानेऽपि वपुष्यमुष्मि न्न लीयतेकुम्भ इवाम्बरं स्वयम् ॥ १३४॥

na jāyatē nō mriyatē na vardhatē na kṣīyatē nō vikarōti nityaḥ । vilīyamānē’pi vapuṣyamuṣmi- nna līyatē kumbha ivāmbaraṃ svayam ॥ 134॥
ந ஜாயதே நோ ம்ரியதே ந வர்த⁴தே ந க்ஷீயதே நோ விகரோதி நித்ய: । விலீயமாநேऽபி வபுஷ்யமுஷ்மிந்ந லீயதே கும்ப⁴ இவாம்ப³ரம் ஸ்வயம் ॥ 134॥

ஆத்மாவுக்கு பிறப்போ,இறப்போ, வளர்ச்சியோ, அழிவோ, மாறுதலோ, எதுவும் இல்லை. சாஸ்வதமானது. உடல் பிரிந்தாலும் ஆத்மா அப்படியே தான் இருக்கிறது. ஒரு மண் குடத்தில் காற்று இருக்கிறது.குடம் உடைந்தாலும் காற்று அங்கேயே தான் இருக்கிறது. குடத்தோடு சேர்ந்தாலும் ஆகாசம் தனித்துவம் கொண்டது போல் ஆத்மாவுக்கு உடலுடன் உறவு.

135 प्रकृतिविकृतिभिन्नः शुद्धबोधस्वभावः सदसदिदमशेषं भासयन्निर्विशेषः । विलसति परमात्मा जाग्रदादिष्ववस्था स्वहमहमिति साक्षात्साक्षिरूपेण बुद्धेः ॥ १३५॥

prakṛtivikṛtibhinnaḥ śuddhabōdhasvabhāvaḥ sadasadidamaśēṣaṃ bhāsayannirviśēṣaḥ । vilasati paramātmā jāgradādiṣvavasthā- svahamahamiti sākṣātsākṣirūpēṇa buddhēḥ ॥ 135॥

ப்ரக்ரு’திவிக்ரு’திபி⁴ந்ந: ஶுத்³த⁴போ³த⁴ஸ்வபா⁴வ: ஸத³ஸதி³த³மஶேஷம் பா⁴ஸயந்நிர்விஶேஷ: ।விலஸதி பரமாத்மா ஜாக்³ரதா³தி³ஷ்வவஸ்தா²ஸ்வஹமஹமிதி ஸாக்ஷாத்ஸாக்ஷிரூபேண பு³த்³தே:⁴ ॥ 135॥

135. ஆத்மா ப்ரக்ருதி இல்லை. பூரண ஞானம். இணையில்லாதது. அண்டமோ பிண்டமோ அதன் அங்கம் இல்லை. ஜீவனின் மூன்று நிலைகளிலும், விழிப்பு,கனவு, தூக்கம், இதில் எல்லாம் இருப்பது. ஆனால் அதோடு சேராமல் தனித்து இருப்பது. சாக்ஷி பூதமாக புத்தி, மனசு ஐம்புலன்களின் ஈர்ப்பு எல்லாவற்றையும் கண்காணித்து வருவது.

136 नियमितमनसामुंत्वं स्वमात्मानमात्म न्ययमहमिति साक्षाद्विद्धि बुद्धिप्रसादात्। जनिमरणतरङ्गापारसंसारसिन्धुं प्रतर भव कृतार्थो ब्रह्मरूपेण संस्थः ॥ १३६॥

niyamitamanasāmuṃ tvaṃ svamātmānamātma-nyayamahamiti sākṣādviddhi buddhiprasādāt । janimaraṇataraṅgāpārasaṃsārasindhuṃ pratara bhava kṛtārthō brahmarūpēṇa saṃsthaḥ ॥ 136॥

நியமிதமநஸாமும் த்வம் ஸ்வமாத்மாநமாத்மந்யயமஹமிதி ஸாக்ஷாத்³வித்³தி⁴ பு³த்³தி⁴ப்ரஸாதா³த் । ஜநிமரண தரங்கா³பாரஸம்ஸாரஸிந்து⁴ம் ப்ரதர ப⁴வ க்ரு’தார்தோ² ப்³ரஹ்மரூபேண ஸம்ஸ்த:² ॥ 136॥

36. சீரான மனது, சரியான வழியில் செலுத்தப்பட்ட புத்தி, ஆகியவை ஆத்மாவை உணர மிகவும் பயன்படும். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டது. ப்ரம்மத்தோடு லயித்திருப்பது.

137अत्रानात्मन्यहमिति मतिर्बन्ध एषोऽस्य पुंसः प्राप्तोऽज्ञानाज्जननमरणक्लेशसम्पातहेतुः । येनैवायं वपुरिदमसत्सत्यमित्यात्मबुद्ध्या पुष्यत्युक्षत्यवति विषयैस्तन्तुभिः कोशकृद्वत् ॥ १३७॥
atrānātmanyahamiti matirbandha ēṣō’sya puṃsaḥ prāptō’jñānājjananamaraṇaklēśasampātahētuḥ । yēnaivāyaṃ vapuridamasat satyamityātmabuddhyā puṣyatyukṣatyavati viṣayaistantubhiḥ kōśakṛdvat ॥ 137॥

அத்ராநாத்மந்யஹமிதி மதிர்ப³ந்த⁴ ஏஷோऽஸ்ய பும்ஸ: ப்ராப்தோऽஜ்ஞாநாஜ்ஜநநமரணக்லேஶஸம்பாதஹேது: । யேநைவாயம் வபுரித³மஸத்ஸத்யமித்யாத்மபு³த்³த்⁴யா புஷ்யத்யுக்ஷத்யவதி விஷயைஸ்தந்துபி:⁴ கோஶக்ரு’த்³வத் ॥ 137॥

137. ஆத்மா, அது இல்லாத மற்றதோடு கலந்திருக்கும்போது தான் அறியாமை, பற்று, இன்ப துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறான். உடலை ஆத்மாவாக தப்பாக நம்புகிறான். சம்சார சாகரத்தில் மூழ்கி சகலத்தையும் தனக்கு வரவழைத்துக் கொள்கிறான். எப்படி புழு தன்னைச்சுற்றி இழைகளை பின்னிக்கொண்டு பட்டுப்பூச்சியாகி இருக்கிறதோ அது போல.

138 अतस्मिंस्तद्बुद्धिः प्रभवति विमूढस्य तमसा विवेकाभावाद्वै स्फुरति भुजगेरज्जुधिषणा । ततोऽनर्थव्रातो निपतति समादातुरधिकः ततो योऽसद्ग्राहः स हि भवति बन्धः शृणु सखे ॥ १३८॥

atasmiṃstadbuddhiḥ prabhavati vimūḍhasya tamasā vivēkābhāvādvai sphurati bhujagē rajjudhiṣaṇā । tatō’narthavrātō nipatati samādāturadhikaḥ
tatō yō’sadgrāhaḥ sa hi bhavati bandhaḥ śaṛṇu sakhē ॥ 138॥

அதஸ்மிம்ஸ்தத்³பு³த்³தி:⁴ ப்ரப⁴வதி விமூட⁴ஸ்ய தமஸா விவேகாபா⁴வாத்³வை ஸ்பு²ரதி பு⁴ஜகே³ ரஜ்ஜுதி⁴ஷணா । ததோऽநர்த²வ்ராதோ நிபததி ஸமாதா³துரதி⁴க: ததோ யோऽஸத்³க்³ராஹ: ஸ ஹி ப⁴வதி ப³ந்த:⁴ ஶ்ரு’ணு ஸகே² ॥ 138॥

138 இப்படி மாயையில் சிக்கியவன், இல்லாததை இருப்பதாக எண்ணுகிறான். ஒன்றை மற்றொன்றாக காண்கிறான். எது உண்மை எது பொய் என்ற பேதம் அறியாது தவிக்கிறான்.

139 अखण्डनित्याद्वयबोधशक्त्या स्फुरन्तमात्मानमनन्तवैभवम् । समावृणोत्यावृतिशक्तिरेषा तमोमयी राहुरिवार्कबिम्बम् ॥ १३९॥

akhaṇḍanityādvayabōdhaśaktyā sphurantamātmānamanantavaibhavam । samāvṛṇōtyāvṛtiśaktirēṣā tamōmayī rāhurivārkabimbam ॥ 139॥

அக²ண்ட³நித்யாத்³வயபோ³த⁴ஶக்த்யா ஸ்பு²ரந்தமாத்மாநமநந்தவைப⁴வம் । ஸமாவ்ரு’ணோத்யாவ்ரு’திஶக்திரேஷா தமோமயீ ராஹுரிவார்கபி³ம்ப³ம் ॥ 139॥

இப்படி உண்மையை மறைப்பதை திரை , அவ்ரித்தி என்கிறோம். ஆத்மாவை மறைந்துவிடுகிறது.

140 तिरोभूतेस्वात्मन्यमलतरतेजोवति पुमान् अनात्मानं मोहादहमिति शरीरं कलयति । ततः कामक्रोधप्रभृतिभिरमुंबन्धनगुणैः var बन्धकगुणैः परं विक्षेपाख्या रजस उरुशक्तिर्व्यथयति ॥ १४०॥

tirōbhūtē svātmanyamalataratējōvati pumān anātmānaṃ mōhādahamiti śarīraṃ kalayati । tataḥ kāmakrōdhaprabhṛtibhiramuṃ bandhanaguṇaiḥ (pāṭhabhēdaḥ – bandhakaguṇaiḥ) paraṃ vikṣēpākhyā rajasa uruśaktirvyathayati ॥ 140॥

திரோபூ⁴தே ஸ்வாத்மந்யமலதரதேஜோவதி புமாந் அநாத்மாநம் மோஹாத³ஹமிதி ஶரீரம் கலயதி । தத: காமக்ரோத⁴ப்ரப்⁴ரு’திபி⁴ரமும் ப³ந்த⁴நகு³ணை: var ப³ந்த⁴ககு³ணை: பரம் விக்ஷேபாக்²யா ரஜஸ உருஶக்திர்வ்யத²யதி ॥ 140॥

.இப்படி மனிதனின் அறிவை, புத்தியை,மனத்தை, அகம்பாவத்தை, மாயை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது தான் அவனுக்கு தனது உண்மை ஸ்வரூபமான ஆத்மா மறைந்து போகிறது. அறியாமை அவனை ஆட்கொள்கிறது. பொய்யான உடம்புக்கு மெய்யென்று பேர் கொடுத்து அதை வளர்க்கிறான். அது தான் என்றும் சாஸ்வதம் என்று நம்பி ஏமாந்து போகிறான். கோபம், தாபம், பொறாமை, ஆங்காரம், என்ற பல உணர்ச்சிகளுக்கு இரையாகிறான் .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *