GARUDA PURANAM – J K SIVAN

கருட புராணம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN

மரணத்துக்கு அப்புறம்…..

நண்பர்களே  உங்களை பயமுறுத்துவது என் நோக்கமில்லை.  இப்படி ஒரு கருட புராணம் இருப்பதை நீங்களும் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு  எழுதியது.  எத்தனையோ  விஷயங்கள் பற்றி எழுதுகிறேன். ஆனால்  இந்த  மரணத்துக்கு அப்புறம்  கிடைக்கும்  தண்டனை பற்றி எழுதும்போது  கை  நடுங்குகிறது.. பயம் தான் காரணம். 

 உலகில் நாம்  வாழும்போது  நாமே  ஏற்படுத்திக் கொண்ட   கோர்ட்,  வக்கீல், தண்டனைகள் ;போலீஸ், சிறை, எல்லாமே  மனிதர்கள்  ஒழுக்கமாக வாழ வேண்டும், தவறுகள் செய்யக்கூடாது என்பதற்காகவே.   சவுதி அரேபியாவில் திருடினால் கையை வெட்டுவார் களாமே. இங்கே அந்த தண்டனை இருந்தால்  பாதி பேருக்கு கையே  இருக்காதே. ஆகவே இவைகளை நன்றாக  பரப்பி தண்டனைக்கு பயந்து தப்பு செய்யா மல் இருக்கட்டுமே. அதற்கு தான்  நம்மைப் படைத்து விட்டு  ஸ்ரீமந் நாராயணன்  கருடனுக்கு  இந்த புரா ணத்தை உபதேசித்தார்.  கருடன் வேகமாக  மேலே பார்ப்பவன். அவனிடம் சொன்னால் போதும் காற்றைக்காட்டிலும்  எல்லா  இடத்திலும் எல்லோரும்  இதை பரப்பிவிடுவானே… நல்ல  ஆளாக பார்த்து தான்  நாராயணன்  செலக்ட்  பண்ணி இருக்கிறார்.  கருடன் பார்த்தான். நாம் சொல்வதைக் காட்டிலும்  இந்த ரிஷிகள் சொல்வது தான் பொருத்தம். அவர்கள் தான் ஸ்லோகங்கள் மூலம்  நிறைய  எழுதி வைப்பவர்கள்  என்று  ப்ரம்மா  முதலாக பல ரிஷிகளுக்கு இது பரவ  நைமிசாரண்யத்தில் கருட  புராணத்தை  வியாசர் சிஷ்யர்  சுதர் , சௌனகர் மூலம்  பரவி பிற்காலத்தில் புஸ்தகமாகி  நம்மை  மிரள வைக்கிறது.   நல்லது தானே ?

கருட புராணம் பகவான் விஷ்ணு கருடனிடம் மக்களின் பாவங்களுக்கு ஏற்ப நரகத்தில் என்னென்ன தண்டனை கள் கொடுக்கப்படும் என்பது பற்றி நமக்கு கேட்கும் படியாக உரக்க சொன்னது

மகா ரௌரவ நரகம்:  இது யாருக்காக ஏற்பட்டது என்றால்,  தன்னலத்திற்காக, சுயநன்மைக்காக,கொடூர
மாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள்,  பேராசைப் பட்டு, பிறர் பொருளுக்காக அவர்கள் குடும்பங்களை நாசம் செய்தவர்கள் ஜாக்கிரதையாக  போய் சேர்வதற் காக.   அங்கே அவர்களுக்காக யார்  மரியாதையுடன் வரவேற்க  காத்திருப்பார்?   குரு என்ற பார்ப்பதற்கே கோரமான மிருகம் ஒன்று  . இப்படிப்பட்ட   பாபம் செய்தவர்களைச்  சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக  விரல்களை கடித்து சுவைத்து, மூக்கு காது கண் வயிறு எல்லாம் நிறைய பற்களோடு கடித்து சுவைத்து ருசித்து சாப்பிடும்.

கும்பி  பாகம்: இது  ஏதோ  நளபாகம் என்ற சிறந்த உணவு என்று நாக்கில் ஜலம் சொட்ட வேண்டாம்.   நரகத்தின் ஒரு பகுதி.   தனது  உணவுக்காக  பிற உயிர்களை துன்புறுத்துதல், கொல்லுதல்,    வதைத்தல் ஆகியவற்றை  செய்தவர் களுக்கு  மேலே  யமதர்ம ராஜன் ஏற்படுத்தியது.

தனது நோட்புக்கில்  எந்த தேதியில்  யார்  யாருக்கு என்னென்ன  கெடுதல்  கிடுதல் செய்தான்  என்று  விபரம் குறித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப  சரியான சைஸ் கொப்பரையில்  தாங்கமுடியாத கொதிக்கும் சூட்டில்  அப்பம், அப்பளம், சிப்ஸ்  வடை போல்  பொறித்து எடுப்பான்.   இது நமக்கு தெரிந்த ஒன்றுதான், எண்ணெய்க் கொப்பறையில் போட்டு துன்புறுத்தப் படுவோம் என்று நிறைய பேருக்கு தெரியுமல்லவா.  அப்பளம் சாப்பிடும்போது, வடை சாப்பிடும் போதெல்லாம் தப்பு செய்ய கூடாது என்றும்  நான்  நினைக்க வேண்டாமா?  எண்ணவேண்டாமா? இல்லையென்றால் நாமும் ஒருநாள்  இந்த வடை, அப்பளம் சிப்ஸ்   தான்.

காலகுத்திரம்:  இது ஒரு நன்றாக  அமைக்கப்பட்ட  டிபார்ட்மென்ட்.    பெரியோர்களையும், பெற்றோர் களையும் அவமதிப்பவர்கள், துன்புறுத்துபவர்கள் போன்ற குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை கொடுக்கும் இடம்.  இங்கே  அப்படி செய்தவர்கள்  மேலே சென்றதும், அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு பட்டினி போடப்படுவார்கள்.  தேவையா?

அசிபத்ரம்:  தெய்வ நிந்தனை செய்தல், அதர்ம வழியை கடைபிடிப்பவர்கள் போன்றவர்களுக்கான தண்டனை. பூதங்கள் மற்றும் பேயால் பயமுறுத்தப்பட்டு துன்புறு த்தப் படுவார்கள். நமக்கு தெரிந்தவர்கள்  நிறைய பேர் பெரிய கும்பலாக இந்த அறைக்கு செல்ல தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இது தெரியட் டுமே  என்றால்  அவர்களுக்கு தான் இதிலும் நம்பிக்கை இல்லையே. அனுபவம் சொல்லித்தரும்.  

பன்றிமுகம்:  இப்படி பெயர் கொண்ட ஒரு விசித்திர மிருகம்.  அதை ஸ்பெஷலாக வளர்க்கிறான் நரகத்தில் யமன். அதற்கு நிறைய தீனி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.  ஏனென்றால்  குற்றமற்ற எளியோர்களை தண்டிப்பவர்கள், நீதிக்குப் புறம்பாக நடக்கும் நபர்களை  நம்பி தான்  இந்த பன்றி முகம் கொண்ட கொடிய மிருகம் தனது கூர்மையான அநேக பற்களோடு  வாயைத் திறந்துகொண்டு  கடித்து  சுவைக்க  உட்கார்ந்து கொண்டிருக்கிறது.  அதன் வாயில் அகப்பட்டு,   அதன் கூரிய பற்களால்  சதக் சதக் என்று  கடிக்கப்பட்டு இப்படிப்பட்ட பாவம் செய்தவர்கள் அவதிப்படவேண்டும். கண்னை  ஒரு கணம் மூடிக்கொண்டு இப்படி ஒரு பெரிய கருப்பு மிருகம் கடித்தால் எப்படி இருக்கும் என்று  அடை வடை அவியல்  சாப்பிட்டு வளர்த்த  தொப்பையை தடவிப் பாருங்கள்.

அந்த கூபம்:   இது ஒரு பெரிய  அகல ஆழமான தொட்டி இருக்கும் இடம்.    இதில்  யாரை  தூக்கிப்  போட்டுவிடு வார்கள் தெரியுமா?  பிற  உயிர்களை கொடுமையாகக்  கொன்று சித்ரவதை செய்பவர்கள்,  துரோகம், கொலை, புரிவோர்களை. நரகத்தின் ஒரு தனிப்பகுதி  ”அந்த கூபம்”.  

 தொட்டியில்  பெரிய பெரிய   மாடுகள் போன்ற மிருகங்களால்  நசுக்கி, மிதிக்கப்பட்டு ‘ ஐயோ,  காள்  காள் ‘  என்று கத்தி எனாலும்   யாரும் கேட்கப் போவ தில்லை. அது வழக்கமான சத்தம் தானே என்று கவனிக்காமல் போய்விடுவார்கள்.

அக்னிகுண்டம்:  அர்த்தம் புரிகிறதா?  இங்கே    ஜிவ்வென்று   ஜ்வாலை வீசிக்கொண்டு  ஆயிரம் நாக்குகளோடு  அலையும் தீ நிறைந்த பெரிய  யாக குண்டம் போல்   எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.  நிறைய பேர்களை கொள்ளும். கவலை வேண்டாம்.  இடவசதி நெருக்கடி கிடையாது.    இதற்கு நெய்  நாம்  தான்.  பிறரின் பொருளை, சொத்தை,  உடைமைகளை தனது வலிமை,  அதிகாரம், பதவி, மூலம்  அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர், செல்வாக்காலும்  பலாத்காரத்தாலும்  மற்றவர்களுக்கு துன்பம்  தீங்கு  செய்தவர்களுக்காக   பிரத்யேகமான நரகம்.  என்ன  தண்டனையாம்?  இவர்கள் கை, கால் கட்டப்பட்ட நிலையில் நீண்ட தடியில் மிருகத்தைப் போல் தலை கீழாக   பிணைக்கப்பட்டு அக்னியில் வாட்டி எடுக்கப்படுவார்கள்– சுட்ட   அப்பளம்   சமாச்சாரம்  தான்.  ஆதிகாலத்தில் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்கள் அகப்பட்டால்  இப்படி  ரோஸ்ட்  பண்ணி சாப்பிடுவார்கள் என்று இங்கிலிஷ் படத்தில் பார்த்து  எனது  அரை நிஜார்  ஈரமாகி இருக்கிறது.  அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப் படும்போது நாம் எப்படி  இருப்போம் என்று யோசியுங்கள். தப்பு செய்யலாமா?

வஜ்ரகண்டம்:   கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம் தக்க ட்ரீட்மென்ட்  தரப்போகிறது.  சேரக்கூடாத ஆணையோ பெண் ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அங்கேயும் கட்டி தழுவ வசதி உண்டு.  ஆனால்  அப்படி யாரைக்  கட்டித்தழுவலாம் என்றால் நெருப்பால் செய்யப்பட்ட  சிகப்பாக ஒளிரும் பொம்மைகளை.  ஆணையோ பெண்ணையோ கூடி மகிழும் காம வெறியர்களுக்கான  குளுகுளு  வசதி இது.  சுலபமாக  இலவசமாக   ஒரு  AC  வசதி!!

இன்னும் அப்புறம் சொல்கிறேன். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *