VIVEKA CHOODAMANI – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஸ்லோகங்கள் 103-110

अन्तःकरणमेतेषु चक्षुरादिषु वर्ष्मणि। अहमित्यभिधानेन तिष्ठत्याभासतेजसा 103

அந்த கரணமேதேஷு சக்ஷுராதி³ஷு வர்ஷ்மணி ।
அஹமித்யபி⁴மானேன திஷ்ட²த்யாபா⁴ஸதேஜஸா ॥ 1௦3॥

நமது உள்ளே ஒரு பிரபஞ்சமே தனியாக இயங்குகிறது. அதில் முக்கியமானது அந்தக்கரணம். அதில் தான் எண்ணங்கள், செயல்களை எப்படி செய்யலாம் என்ற உந்துதல், ஐம்புலங்களை எப்படி பயன்படுத்துவது என்ற தீர்மானம் எல்லாம் முடிவாகிறது. அந்தக்கரணம் என்பதே ஆத்மாவின் பிரதிபலிப்பு என்று கூட தைரியமாக சொல்லலாம். ஆத்மா எதிலும் ஒட்டிக்கொள்ளாது. மற்றவை மாயையில் கட்டுண்டவை..

अहंकारः स विज्ञेयः कर्त्ता भोक्ताभिमान्ययम्। सत्त्वादिगुणयोगेन चावस्थात्रयमश्नुते . 104

அஹங்கார: ஸ விஜ்ஞேய: கர்தா போ⁴க்தாபி⁴மான்யயம் ।
ஸத்த்வாதி³கு³ணயோகே³ன சாவஸ்தா²த்ரயமஶ்னுதே ॥ 1௦4॥

அகம்பாவம் தான் நம்மை புத்தி மயங்கச் செய்து ஆட்டிப்படைக்கிறது. நம்மை திசை மாறி செல்ல வழி வகுக்கிறது. உடலோடு நெருங்கிய சம்பந்தம் கொண்டது. அனுபவங்களைத் தருவது. குணங்களை ஆக்கிரமிப்பது.

विषयाणमानुकूल्ये सुखी दुःखी विपर्यये। सुखं दुःखं च तद्धर्म सदानन्दस्य नात्मनः 105

விஷயாணாமானுகூல்யே ஸுகீ² து³:கீ² விபர்யயே ।
ஸுக²ம் து³:க²ம் ச தத்³த⁴ர்ம: ஸதா³னந்த³ஸ்ய நாத்மன: ॥

எப்போது ஐம்புலன்களும் நல்ல வழியில் இயங்குகிறதோ அப்போது தான் ஆனந்தம். மற்றதெல்லாம் அல்ப சந்தோஷம் ஒன்றையே தரும். நல்வழியில் செல்லாவிட்டால் விபரீதம் தான். சந்தோஷம் விபரீதம் ரெண்டுமே அஹம்பாவத்தின் இரு கரங்கள். ஆத்மா இதில் சம்பந்தமில்லாதது. பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கும் சாக்ஷி பூதம். ஆத்மா எப்போதுமே ஸ்வானந்தத்திலே திளைப்பது.

आत्मार्थत्वेन हि प्रेयान्विषयो न स्वतः प्रियः। स्वत एव हि सर्वेषामात्मा प्रियतमो यतः तत आत्मा सदानन्दो नास्य दुःखं कदाचन 106

ஆத்மார்த²த்வேன ஹி ப்ரேயான்விஷயோ ந ஸ்வத: ப்ரிய: । ஸ்வத ஏவ ஹி ஸர்வேஷா மாத்மா ப்ரியத மோ யத: ।
தத ஆத்மா ஸதா³னந்தோ³ நாஸ்ய து³:க²ம் கதா³சன ॥ 1௦6॥

ஐம்புலன்களும் சுகத்தை தருவதை அனுபவித்து உடம்பு மட்டும் தான். அதற்கும் ஆத்மாவுக்கும் தொடர்பு இல்லை. ஆத்மா சுதந்திரமானது. உடல் ஐம்புலன்களுடன் இணைந்து மசால்வடைக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய எலி மாதிரி உடம்பு தான் அவஸ்தைப்படும். ஆத்மா இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்வதில்லை. அதனால் அதற்கு துக்கமோ, துயரமோ, சுகமோ எதுவுமே இல்லை. சதானந்தம் தான்.

यत्सुषुप्तौ निर्विषय आत्मानन्दोऽनुभूयते। श्रुतिः प्रत्यक्षमैतिह्यमनुमानं च जाग्रति 107

யத்ஸுஷுப்தௌ நிர்விஷய ஆத்மானந்தோ³னுபூ⁴யதே । ஶ்ருதி: ப்ரத்யக்ஷமைதிஹ்ய மனுமானம் ச ஜாக்³ரதி.107

மனிதனுக்கு மூன்று நிலை, விழிப்பு, கனவு, ஆழ்ந்த நித்திரை. இதில் மூன்றிலும் ஆத்மா உண்டு. ஆனால் விழிப்பை தவிர கனவில் மட்டுமே ஐம்புலன்கள் ஆதிக்கத்தில் உள்ள ஜீவன் அனுபவத்தை அடைகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அவை காணாமல் போகிறது. ஆத்மா ஒன்றே எப்போதும் இருப்பது. இதை தான் வேத அத்வைத சாஸ்திரங்கள் பக்கம் பக்கமாக சொல்கிறது. நமக்கு புரியவில்லை.

अव्यक्तनाम्नी परमेशशक्ति- रनाद्यविद्या त्रिगुणात्मिका परा। कार्यानुमेया सुधियैव माया यया जगत्सर्वमिदं प्रसूयते 108

அவ்யக்தனாம்னீ பரமேஶஶக்தி: அனாத்³யவித்³யா த்ரிகு³ணாத்மிகா பரா ।கார்யானு மேயா ஸுதி⁴யைவ மாயா
யயா ஜக³த்ஸர்வமித³ம் ப்ரஸூயதே ॥ 1௦8॥

ஆத்மாவை உணராத நிலையை அவித்யா, அஞ்ஞானம், மாயை, என்று சொல்கிறோம். ஆத்மாவின் நிலை தான் மாயை என்றும் சொல்லலாம். ஆரம்பமோ முடிவோ கிடையாது. குணங்கள் கொண்டது. ஆத்மாவை சத்குணம் நெருங்க செய்யும். பிரபஞ்சம் அவித்யையால் நிரம்பியது.

सन्नाप्यसन्नाप्युभयात्मिका नो भिन्नाप्यभिन्नाप्युभयात्मिका नो। सांगाप्यनंगाप्युभयात्मिका नो महाद्भुताऽनिर्वचनीयरूपा 109

ஸன்னாப்யஸன்னாப்யுப⁴யாத்மிகா நோ பி⁴ன்னாப்யபி⁴ன்னாப்யுப⁴யாத்மிகா நோ । ஸாங்கா³ப்யனங்கா³
ஹ்யுப⁴யாத்மிகா நோ (பாட²பே⁴த:³ – அனங்கா³ப்யுப⁴யாத்மிகா) மஹாத்³பு⁴தானிர்வசனீயரூபா ॥ 1௦9॥

இவ்வளவு தூரம் நமது வாழ்க்கையை தூக்கி சுழற்றி, பந்தாடும் மாயை என்பது உண்மையில் இருக்கிறதா, இல்லவே இல்லையா, இரண்டுமே வா? இரண்டும் ஒன்று தானோ? இல்லாவே இல்லையோ, வேறு வேறோ? அல்லது இருப்பதை கொஞ்சம் இல்லாததில் கொஞ்சம் என்று பாதி பாதி சேர்ந்ததோ? எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்டா இது ? அதற்கு தான் எத்தனை சக்தி!!! வார்த்தையே இல்லையே சொல்ல, விவரிக்க !

शुद्धाद्वयब्रह्मविबोधनाश्या सर्पभ्रमो रज्जुविवेकतो यथा। रजस्तमःसत्त्वमिति प्रसिद्धा गुणास्तदीयैः प्रथितैः स्वकार्यैः 110

ஶுத்³தா⁴த்³வயப்³ரஹ்மவிபோ³த⁴னாஶ்யா ஸர்பப்⁴ரமோ ரஜ்ஜுவிவேகதோ யதா² । ரஜஸ்தம:ஸத்த்வ மிதி ப்ரஸித்³தா⁴
கு³ணாஸ்ததீ³யா: ப்ரதி²தை: ஸ்வகார்யை: ॥ 11௦॥

ஆனாலும் இவ்வளவு சக்திகொண்ட மாயையை அகற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன? உண்மையான, என்றும் சாஸ்வதமான பிரம்மத்தை பற்றி சிந்தித்து, அதைத் தேடி அடைவது தான். இருட்டில் ஒரு நீளமான பாம்பு நெளிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்தது குலை நடுங்குகிறது. வாய் உளறி பேச்சு வரவில்லை, வியர்த்துக் கொட்டுகிறது.எங்கிருந்தோ ஒரு பயங்கர பிராண பயம் வந்து நடுங்க வைக்கிறது. ஆனால் கிட்டே போய் பார்க்கும்போது அது பாம்பு இல்லை, ஏதோஒரு பிளாஸ்டிக் வஸ்து நீளமாக பாம்பு போல் கயிறு ஒன்று. அது காற்றில் ஆடி நமக்கு கொடிய விஷப்பாம்பு என்கிற ப்ராண பயத்தையுண்டாக்கியது என்று தெரியும்போது பாம்பும் பொய் அதைப்பற்றிய ப்ராண பயமும் பொய் என்று நிரூபணமாகிறது இல்லையா?. மாயை – ப்ரம்மம் விஷயமும் அப்படித்தான் பாம்பு- பிளாஸ்டிக் கயிறு சமாசாரமும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *