SRI MADH BAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
10வது காண்டம்

பரீக்ஷித் இன்னும்  ஏழு நாளில் மரணமடைவதைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை.  அவன் மனம் பூரா  கிருஷ்ணனின்  சாகசம், சாமர்த்தியம், ஆளுமை, அழகு இதிலேயே லயித்திருக்கிறது.   கிருஷ்ணன் மனிதனா தெய்வமா?. தெய்வம் தான் மனித உருவில்.  எத்தனை வருஷங்கள் வ்ருஷ்ணி குலத்தவரோடு இருந்தான்? எவ்வளவு வருஷம் துவாரகையை ஆண்டான்?

”குருநாதா, சுகப்பிரம்ம ரிஷியே,  நீங்கள்   கிருஷ்ணனைப் பற்றி சகலமும் அறிந்தவர். எனக்கு தெரிந்தது, தெரியாதது எல்லாவற்றையும் நீங்கள் சொல்லி நான் கேட்க  ஆவலாக இருக்கிறது. சாகும் வரை நான் தண்ணீர் கூட பருகாமல் விரதம் இருப்பவன்.  க்ரிஷ்ணனைப் பற்றிய விஷயங்கள் தான் அம்ருத பானம் . அது பற்றி அறியவேண்டும் என்பதே என் பசி தாகம் எல்லாம். அது என்னால் தாங்கமுடியவில்லை  சீக்கிரம் சொல்லுங்கள்.”  என்கிறான் பரீக்ஷித்.

”அப்பனே ,  உலகமே  அந்த ஆன்மீக தாகத்தில் தவிக்கிறது. ஒவ்வொரு ஜீவனும்  பிரம்மம்.  கிருஷ்ண கதை தெரியாமல்  அதன் அருமையான ருசி தெரியாத துர்பாக்யம்  நிலவுகிறது.  ஆகவே  இது ஒரு அரிய  சந்தர்ப்பம். கிருஷ்ண சரித்திரம் அற்புதமானது.  ஜனன மரண  துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பது.கலியுகத்தில் மனித வாழ்வு  குறுகியது. அதை நேரம் வீணாகாமல் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் நாம் எதிர்கொள்ளும் சகல துன்பங்களிலிருந்தும் கலியுக வேதனைகளிலிருந்து தப்ப  கிருஷ்ணானுபவம் அவசியம். kali-kalmasha-ghnam . பரீக்ஷித் நீ புண்யவான், அதனால் உனக்கு கிருஷ்ணனைப் பற்றி அறியவேண்டும் என்ற ஆவல்  தோன்றியுள்ளது. அது ராஜ ரிஷிகள் விரும்பியது. ராஜரீகத்தில் அவசியமானதும் கூட.   yaya sammohito jiva atmanam tri-gunatmakam   என்றால் என்ன அர்த்தம்? இந்த உலகில், ஒவ்வொரு  ஜீவனும்  முக்குணங்களின்  சேர்க்கையாக தான் தன்னை எண்ணுகிறான். உடம்பு சம்பந்தமான முடிவு இது. குலாசார  குணம் என்று நினைக்கிறான். யாருமே எந்த குலமும் இல்லை. எல்லோரும் பகவானின் அம்சம். பகவானுக்கு குலம்  எது, ஏது? மாயையினால் இந்த  சிந்தனை உருவாகிறது. முக்தி மார்கத்தை நாடும்போது உண்மை புரிகிறது. கிருஷ்ணன்  Jivera ‘svarupa’ haya–krsnera ‘nitya-dasa.’ என்று சொல்வது  அப்படி ஒரு தன்மையை அவன் உணரும்போது யோகமாயையின் சக்தியால், புனிதமடைகிறான். கிருஷ்ணன் யோகமாயை சக்தி கொண்டவன். அவன் செயல்கள் அதை புரிய வைக்கிறது.மதுராபுரியாய்  யதுகுல ராஜா  சூரசேனன் ஆண்டுவந்தான். மதுராபுரியின் ஒரு பகுதி பிருந்தாவனம். சூர வம்சத்தை சேர்ந்தவன் வசுதேவன் சூரசேனன்  தேவகன் எனும் ராஜாவின்  மகள் தேவகியை
 மணந்தான். கல்யாண ஊர்வலத்தில் தேவகியின் சகோதரன் கம்சன் தேரை ஒட்டி வந்தான்.ஸ்ரீதனமாக  தங்க ஆபரணங்கள் அணிவித்து  400 யானை, 10,000குதிரைகள், 1800 தேர்கள்.  200 அழகிய பணிப்பெண்கள் அளித்தான்.  மேள  தாள, விளக்குகள், தோரணங்களோடு ஊர்வலம். தேரில் புது கல்யாண பெண் தேவகி மாப்பிள்ளை வசுதேவர், மைத்துனன்  ராஜா கம்சன் தேரோட்டுகிறான். திடீரென்று கம்சன் காதில் ஒரு அசரீரி ஒலிக்கிறது:’அடே , அடிமுட்டாள் கம்சா,  நீ தேரில் அழைத்துப் போகிறாயே தேவகி, அவள் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தான் உனக்கு ப்ரத்யக்ஷ யமன்,உன் உயிர் அதனால் தான் போகப்போகிறது”
கம்சனுக்கு  சகோதரி தேவகி மேல் கொள்ளை ஆசை அன்பு. கம்சன் காலநேமியாக  பூர்வ ஜென்மத்தில் விஷ்ணுவால் சம்ஹரிக்கப்பட்டவன்.  போஜ வம்சத்தில் அவனை எவருக்கும்  பிடிக்காது. கொடியவன், பாபி. ஆகவே  இந்த  அசரீரி வாக்கு அவனை ராக்ஷசனாக்கி  தேவகியை தேரிலிருந்து தலை முடி பிடித்து இழுத்தான் தள்ளினான். வாளை  உருவி ஓங்கி அவளை வெட்டப்போனான்.  வசுதேவன்  நிலைமை உணர்ந்து  கம்சனை சமாதானப்படுத்துகிறார். கோபத்தை தணிக்கிறார்.
”என் அன்பு மைத்துனா , கம்சா, நீ   போஜ குலத்தின்  திலகம்.  உலகமே உன்னை புகழ்கிறது.  உன்  அருமையான  பாசமிக்க சகோதரியை எதற்கு கொல்லவேண்டும் ? அபலைப் பெண். அதுவும் அவள் திருமணத்தன்றே.   பிராமணர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்,பசுக்கள் ஆகியோரை எந்த சந்தர்ப்பத்திலும் கொல்வது மஹா பாபம் என்று வேதம் சொல்கிறது. பிறந்தவர் எல்லோரும் ஒருநாள் இறப்பது நியதி. அநித்யமானது இந்த  உடல். புழுதியிலிருந்து வந்தது புழுதியையே அடைவது…. ‘ dust thou art,and unto dust shalt thou return.” என்பது ஆங்கில வாசகம். எவ்வளவோ உபதேசித்தும்  கம்சன் கொடிய கொலைவெறியை கைவிடமாட்டான் என்று நிச்சயித்த  வசுதேவன்  கடைசியாக உன் பிராண பயத்தை போக்க ஒரு சுலப வழியை சொல்கிறேன்.  எனக்கு பிறக்கப்போகும்  எட்டாவது பிள்ளையை விடு,  பிறக்கும் பிள்ளைகள்  அனைவரையும் உன்னிடம்  பிறந்தவுடனே ஒப்படைக்கிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் . தேவகிக்கு உயிர்ப்பிச்சை கொடு” என்று  கம்சனை  ஒப்புக்கொள்ள வைக்கிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *