VIVEKA CHOODAMANI SLOKAS 41-50 – J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகங்கள் 41-50 – நங்கநல்லூர் J K SIVAN

तथा वदन्तं शरणागतं स्वं संसारदावानलतापतप्तम् । निरीक्ष्य कारुण्यरसार्द्रदृष्ट्या दद्यादभीतिं सहसा महात्मा ॥ 41॥
Tathā vadantaṃ śaraṇāgataṃ svaṃ saṃsāradāvānalatāpataptam ।nirīkṣya kāruṇyarasārdradṛṣṭyādadyādabhītiṃ sahasā mahātmā ॥ 41॥
॥ ததா² வத³ந்தம் ஶரணாக³தம் ஸ்வம் ஸம்ஸாரதா³வாநலதாபதப்தம் । நிரீக்ஷ்ய காருண்யரஸார்த்³ரத்³ரு’ஷ்ட்யா த³த்³யாத³பீ⁴திம் ஸஹஸா மஹாத்மா ॥ 41॥
உலகம் எவரையும் சும்மா விடாது. தன்னுடைய மாயா ஜாலங்களை நிஜமாக காட்டி பயத்தை உண்டு பண்ணி, ஒவ்வொருவர் மனதையும் அடிமையாக்கி தனது ஈர்ப்புகளில் மனித மனம் சிக்கி தவிக்க வைக்கும். காட்டுத்தீ போல் அதன் சக்தி ரொம்ப ரொம்ப சீக்கிரமாகவே மனித மனதை தின்றுவிடும். ஞானி இதை ஜெயித்தவன். உலக ஈர்ப்புகளில் சிக்கி தவிப்பவர்களை ஞானி இரக்கத்தோடு கருணையோடு பார்க்கிறான். பயப்படாதே என்று தைர்யம் அளிக்கிறான்.

विद्वान्स तस्मा उपसत्तिमीयुषे मुमुक्षवे साधुयथोक्तकारिणे। प्रशान्तचित्ताय शमान्विताय तत्त्वोपदेशं कृपयैव कुर्यात् ॥42॥
vidvān sa tasmā upasattimīyuṣē mumukṣavē sādhu yathōktakāriṇē । praśāntachittāya śamānvitāya tattvōpadēśaṃ kṛpayaiva kuryāt ॥ 42॥
வித்³வாந் ஸ தஸ்மா உபஸத்திமீயுஷே முமுக்ஷவே ஸாது⁴ யதோ²க்தகாரிணே । ப்ரஶாந்தசித்தாய ஶமாந்விதாய தத்த்வோபதே³ஶம்
க்ரு’பயைவ குர்யாத் ॥ 42॥

ஞானிக்கு எந்த சாதகன் உண்மையில் முக்தியை தேடுகிறான், அதற்காக தன்னை வருத்திக் கொள்கிறான், எவன் வேத சாஸ்திரங்கள் சொற்படி பிறழாமல் நடக்கிறான் என்று அறிய முடியும். எவன் மனது தெளிவாக உள்ளதோ, எவன் அலைச்சல், உளைச்சல் இல்லாத மனத்தில் அமைதி கொண்டவனோ, அப்படிப்பட்ட சாதகனுக்கு சத்தியத்தை, பிரம்மத்தை அறிந்துகொள்ள உபதேசிக்கிறான், உதவுகிறான்.

मा भैष्ट विद्वंस्तव नास्त्यपायः संसारसिन्धोस्तरणेऽस्त्युपायः । येनैव याता यतयोऽस्य पारं तमेव मार्गं तव निर्दिशामि ॥43॥
mā bhaiṣṭa vidvaṃstava nāstyapāyaḥ saṃsārasindhōstaraṇē’styupāyaḥ । yēnaiva yātā yatayō’sya pāraṃ tamēva mārgaṃ tava nirdiśāmi ॥ 43॥
மா பை⁴ஷ்ட வித்³வம்ஸ்தவ நாஸ்த்யபாய: ஸம்ஸாரஸிந்தோ⁴ஸ்தரணேऽஸ்த்யுபாய: । யேநைவ யாதா யதயோऽஸ்ய பாரம் தமேவ மார்க³ம் தவ நிர்தி³ஶாமி ॥ 43॥

மனமே பயப்படாதே . மரணம் உன்னை அணுகாது. உனக்கு முன் பல ஞானிகள் சம்சார சாகரத்தை தாண்டியவர்கள் வழி காட்டுகிறார்கள். அவற்றை நீயும் எளிதில் அறிந்துகொண்டு பின் பற்றி பயனடையலாம். அவற்றை காட்டுகிறேன் என்கிறவர் குரு.

अस्त्युपायो महान्कश्चित्संसारभयनाशनः । तेन तीर्त्वाभवाम्भोधिं परमानन्दमाप्स्यसि ॥ 44॥
styupāyō mahānkaśchitsaṃsārabhayanāśanaḥ । tēna tīrtvā bhavāmbhōdhiṃ paramānandamāpsyasi ॥ 44॥
அஸ்த்யுபாயோ மஹாந்கஶ்சித்ஸம்ஸாரப⁴யநாஶந: । தேந தீர்த்வா ப⁴வாம்போ⁴தி⁴ம் பரமாநந்த³மாப்ஸ்யஸி ॥ 44॥

கவலையோ பயமோ துளியும் வேண்டாம், இந்த சம்சார சாகரத்தை கடப்பதற்கு ஒரு அருமையான வழி இருக்கிறது. மோக்ஷத்தை அடையும் மார்கம் அது.

वेदान्तार्थविचारेण जायतेज्ञानमुत्तमम्। तेनात्यन्तिकसंसारदुःखनाशो वत्यनु ॥45 ॥
vēdāntārthavichārēṇa jāyatē jñānamuttamam । tēnātyantikasaṃsāraduḥkhanāśō bhavatyanu ॥ 45॥
வேதா³ந்தார்த²விசாரேண ஜாயதே ஜ்ஞாநமுத்தமம் । தேநாத்யந்திகஸம்ஸாரது:³க²நாஶோ ப⁴வத்யநு ॥ 45॥

45.வேதாந்த உபநிஷத் சாரங்களை நன்றாக் கற்று அறிந்து ஆராய்ந்து பின்பற்றுவதன் மூலம் சம்சார துக்கங்கள் அடியோடு விலகும். அவற்றை மனதிலிருந்து அழிப்பதது சுலபமாகும்.

श्रद्धाभक्तिध्यानयोगान्मुमुक्षोः मुक्तेर्हेतून्वक्ति साक्षाच्छ्रुतेर्गीः । यो वा एतेष्वेव तिष्ठत्यमुष्य मोक्षोऽविद्याकल्पिताद्देहबन्धात् ॥ 46॥
śraddhābhaktidhyānayōgānmumukṣōḥ muktērhētūnvakti sākṣāchChrutērgīḥ । yō vā ētēṣvēva tiṣṭhatyamuṣya mōkṣō’vidyākalpitāddēhabandhāt ॥ 46॥
ஶ்ரத்³தா⁴ப⁴க்தித்⁴யாநயோகா³ந்முமுக்ஷோ: முக்தேர்ஹேதூந்வக்தி ஸாக்ஷாச்ச்²ருதேர்கீ:³ । யோ வா ஏதேஷ்வேவ திஷ்ட²த்யமுஷ்ய மோக்ஷோऽவித்³யாகல்பிதாத்³தே³ஹப³ந்தா⁴த் ॥ 46॥

46. எது ஒருவனுக்கு அத்தியாவசியம் தெரியுமா? நம்பிக்கை, ஸ்ரத்தை , பக்தி, யோகம், த்யானம், இதெல்லாம் தான் முக்தி பெற உதவுபவை. சாஸ்திரங்கள், வேதங்கள் இதை தான் திரும்ப திரும்ப சொல்கிறது. சாதகன் இவற்றை கைபிடிக்கவேண்டும். உடல் உலக பற்றுக்கள் நீங்கி அறியாமை அகன்று அவன் ஞானம் பெற உதவுபவை.

अज्ञानयोगात्परमात्मनस्तव ह्यनात्मबन्धस्तत एव संसृतिः । तयोर्विवेकोदितबोधवह्निः अज्ञानकार्यं प्रदहेत्समूलम् ॥ 47॥
ajñānayōgātparamātmanastava hyanātmabandhastata ēva saṃsṛtiḥ ।tayōrvivēkōditabōdhavahniḥ ajñānakāryaṃ pradahētsamūlam ॥ 47॥
அஜ்ஞாநயோகா³த்பரமாத்மநஸ்தவ ஹ்யநாத்மப³ந்த⁴ஸ்தத ஏவ ஸம்ஸ்ரு’தி: । தயோர்விவேகோதி³தபோ³த⁴வஹ்நி: அஜ்ஞாநகார்யம் ப்ரத³ஹேத்ஸமூலம் ॥ 47॥

47.அஞ்ஞானம், எனப்படும் அறியாமை தான் இயற்கையிலேயே ஆத்மாவான மனிதனை அவன் தான் ஆத்மா என்று உணராமல் தடுக்கிறது. அழியாத, சாஸ்வத சத்தியத்தை உணரவிடாமல் அழியும் உலக ஈர்ப்புகள், புலன்களின் ஆதிக்கம் இவற்றின் மேல் நாட்டம் கொள்ள செயகிறது. இதனால் ஜனனம் மரணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆத்ம ஞானத் தீ இப்படிப்பட்ட அஞ்ஞானத்தை, அறியாமையை சுட்டுக் பொசுக்கும் தன்மை கொண்டது. எது நிஜம் எது நிழல் என உணரவைக்கிறது.

शिष्य उवाच । कृपया श्रूयतां स्वामिन्प्रश्नोऽयं क्रियतेमया । यदुत्तरमहं श्रुत्वा कृतार्थः स्यां भवन्मुखात् ॥ 48॥
śiṣya uvācha । kṛpayā śrūyatāṃ svāminpraśnō’yaṃ kriyatē mayā ।yaduttaramahaṃ śrutvā kṛtārthaḥ syāṃ bhavanmukhāt ॥ 48॥
ஶிஷ்ய உவாச । க்ரு’பயா ஶ்ரூயதாம் ஸ்வாமிந்ப்ரஶ்நோऽயம் க்ரியதே மயா । யது³த்தரமஹம் ஶ்ருத்வா க்ரு’தார்த:² ஸ்யாம் ப⁴வந்முகா²த் ॥

48.குருநாதா, ப்ரபோ, என்மீது தயைவைத்து, என் மனதில் எழும் வினாக்களுக்கு விடையாக உபதேசிக்கவேண்டும். திருவாய் மலர்ந்தருள்வாய்..

को नाम बन्धः कथमेष आगतः कथं प्रतिष्ठास्य कथं विमोक्षः । कोऽसावनात्मा परमः क आत्मा तयोर्विवेकः कथमेतदुच्यताम् ॥ 49॥
kō nāma bandhaḥ kathamēṣa āgataḥ kathaṃ pratiṣṭhāsya kathaṃ vimōkṣaḥ ।kō’sāvanātmā paramaḥ ka ātmā tayōrvivēkaḥ kathamētaduchyatām ॥ 49॥
கோ நாம ப³ந்த:⁴ கத²மேஷ ஆக³த: கத²ம் ப்ரதிஷ்டா²ஸ்ய கத²ம் விமோக்ஷ: । கோऽஸாவநாத்மா பரம: க ஆத்மா தயோர்விவேக: கத²மேதது³ச்யதாம் ॥ 49॥

49. எது பந்தம்? எது பாசம்? எது பற்று? எது ஆத்மாவை பாதிக்க முயல்கிறது.? அதன் பிடியில் இருந்து எப்படி விலகுவது? அது ஏன் தொடர்கிறது? எது ஆத்மா சம்பந்தமில்லாதது? அசத்தியம்? எப்படி அஞ்ஞானத்தையும் ஞானத்தையும் பிரித்து உணரமுடியும்? இதெல்லாம் எனக்கு புரியும்படியாக விளக்க வேண்டுகிறேன்”, என்று சிஷ்யனாக வேண்டுகிறார் ஆதி சங்கரர். இப்படி ஞான குரு சிஷ்யனாக தன்னைக் காட்டிக் கொள்வது நமக்காகவே தான்.

50. श्रीगुरुवाच । धन्योऽसि कृतकृत्योऽसि पावितं ते कुलं त्वया । पावितं viveknew.pdf 5 ॥ विवेकचूडामणिः ॥ यदविद्याबन्धमुक्त्या ब्रह्मीभवितुमिच्छसि ॥ 50॥
śrīguruvācha । dhanyō’si kṛtakṛtyō’si pāvitaṃ tē kulaṃ tvayā । (pāṭhabhēdaḥ – pāvitaṃ) yadavidyābandhamuktyā brahmībhavitumichChasi ॥ 50
ஶ்ரீகு³ருவாச । த⁴ந்யோऽஸி க்ரு’தக்ரு’த்யோऽஸி பாவிதம் தே குலம் த்வயா । பாவிதம் யத³வித்³யாப³ந்த⁴முக்த்யா ப்³ரஹ்மீப⁴விதுமிச்ச²ஸி ॥ 50॥

50.குரு பதிலளிக்கிறார்: ”அப்பனே, நீ பாக்யசாலி. ஆசீர்வாதங்கள். வாழ்க்கை, சம்சாரம், என்றால் என்ன என்று அறிந்து கொண்டவன். பந்த பிணைப்புகள், பற்றுகளிலிருந்து விடுபட்டவன். உன்னால் உன் சந்ததியும் பலன் பெறும்.பந்தங்களிலிருந்து பற்றுக்களிலிருந்து தடை நீங்கியவனாக, அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்றவன். நீ ஞானவான்”என்கிறார் குரு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *