VIVEKA CHOODAMANI SLOKAS 36-40- J K SIVAN

விவேக சூடாமணி – ஸ்லோகம் 36-40.- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

दुर्वारसंसारदवाग्नितप्तं दोधूयमानं दुरदृष्टवातैः । भीतं प्रपन्नं परिपाहि मृत्योः शरण्यमन्यद्यदहं न जाने॥ 36

durvārasaṃsāradavāgnitaptaṃ dōdhūyamānaṃ duradṛṣṭavātaiḥ । bhītaṃ prapannaṃ paripāhi mṛtyōḥ śaraṇyamanyadyadahaṃ na jānē ॥ 36॥ (pāṭhabhēdaḥ – anyaṃ)

து³ர்வாரஸம்ஸாரத³வாக்³நிதப்தம் தோ³தூ⁴யமாநம் து³ரத்³ரு’ஷ்டவாதை: । பீ⁴தம் ப்ரபந்நம் பரிபாஹி ம்ரு’த்யோ: ஶரண்யமந்யத்³யத³ஹம் ந ஜாநே ॥ 36

36. பரமேஸ்வரா, நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. குருவாக, ஞானியாக நீ வா. என்னை முதலில் மரண பயத்திலிருந்து காப்பாற்று. உலக வாழ்க்கை, சம்சாரம் எனும் இருண்ட திசை தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். எதிர்மறையான சக்திகள் ஈர்ப்புகள் பலத்த பேய்க்காற்று போல் என்னை பயங்கரமாக நிலை குலையச் செய்து ஆட்டி அலைக்கிறது. நீயே அடைக்கலம். வேறு எனக்கு உன்னைத் தவிர யார் இருக்கிறார்கள்?

अन्यं शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल्लोकहितं चरन्तः । तीर्णाः स्वयं भीमभवार्णवं जनानहेतुनान्यानपि तारयन्तः ॥ 37

śāntā mahāntō nivasanti santō vasantavallōkahitaṃ charantaḥ । tīrṇāḥ svayaṃ bhīmabhavārṇavaṃ janā- nahētunānyānapi tārayantaḥ ॥ 37॥

அந்யம் ஶாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ வஸந்தவல்லோகஹிதம் சரந்த: । தீர்ணா: ஸ்வயம் பீ⁴மப⁴வார்ணவம் ஜநாநஹேதுநாந்யாநபி தாரயந்த: ॥ 37॥

37 . நான் ஏன் ஞானியாக வா என்று சொன்னேன்? இன்னும் சில அற்புதமான நல்லாத்மாக்கள் இருக்கிறார்கள். அமைதியானவர்கள், தாராள, கருணையுள்ளம் கொண்டவர்கள். பிறர்க்கு உதவுவதற்கென்றே வாழ்பவர்கள். இதமாக மென்மையாக வீசும் தென்றல் காற்றைப் போன்றவர்கள் எந்த விதமான எதிர்பார்ப்பும் நோக்கமும் இல்லாதவர்கள். அவர்களில் ஒருவனாக நீ வா.

अयं स्वभावः स्वत एव यत्परश्रमापनोदप्रवणं महात्मनाम्। सुधांशुरेष स्वयमर्ककर्कशप्रभाभितप्तामवति क्षितिं किल ॥ 38

ayaṃ svabhāvaḥ svata ēva yatpara- śramāpanōdapravaṇaṃ mahātmanām । sudhāṃśurēṣa svayamarkakarkaśa- prabhābhitaptāmavati kṣitiṃ kila ॥ 38॥

அயம் ஸ்வபா⁴வ: ஸ்வத ஏவ யத்பரஶ்ரமாபநோத³ப்ரவணம் மஹாத்மநாம் । ஸுதா⁴ம்ஶுரேஷ ஸ்வயமர்ககர்கஶப்ரபா⁴பி⁴தப்தாமவதி க்ஷிதிம் கில ॥ 38॥

38. தயையும் இரக்கமும் கருணையும் நிறைய கொண்டு பிறர் துயர் தீர்க்க உதவுவதற்கென்றே வாழும் மஹான்கள் இருக்கிறார்கள். சூரியனின் வெம்மை, வெப்ப, உஷ்ணத்திலிருந்து ஆறுதல் அளிக்க குளுகுளுவென்று பால் வெண்ணிலவு பொழிந்து குளிர வைக்கும் சந்திரனைப் போன்றவர்கள் அவர்கள்.

ब्रह्मानन्दरसानुभूतिकलितैः पूतैः सुशीतैर्युतै – सुशीतैः सितैः र्युष्मद्वाक्कलशोज्झितैः श्रुतिसुखैर्वाक्यामृतैः सेचय । सन्तप्तं भवतापदावदहनज्वालाभिरेनं प्रभो धन्यास्तेभवदीक्षणक्षणगतेः पात्रीकृताः स्वीकृताः ॥ 39
brahmānandarasānubhūtikalitaiḥ pūtaiḥ suśītairyutai- (pāṭhabhēdaḥ – suśītaiḥ sitaiḥ) ryuṣmadvākkalaśōjjhitaiḥ śrutisukhairvākyāmṛtaiḥ sēchaya ।
santaptaṃ bhavatāpadāvadahanajvālābhirēnaṃ prabhō dhanyāstē bhavadīkṣaṇakṣaṇagatēḥ pātrīkṛtāḥ svīkṛtāḥ ॥ 39॥

ப்³ரஹ்மாநந்த³ரஸாநுபூ⁴திகலிதை: பூதை: ஸுஶீதைர்யுதை- var ஸுஶீதை: ஸிதை: ர்யுஷ்மத்³வாக்கலஶோஜ்ஜி²தை: ஶ்ருதிஸுகை²ர்வாக்யாம்ரு’தை: ஸேசய । ஸந்தப்தம் ப⁴வதாபதா³வத³ஹநஜ்வாலாபி⁴ரேநம் ப்ரபோ⁴ த⁴ந்யாஸ்தே ப⁴வதீ³க்ஷணக்ஷணக³தே: பாத்ரீக்ரு’தா: ஸ்வீக்ரு’தா: ॥ 39॥

39. பகவானே, உலக வாழ்க்கை, சம்சாரம் எனும் காட்டுத்தீயின் ஆயிரமாயிரம் செந்நாக்குகளில் சிக்கித் தவிக்கும் என்னை ப்ரம்மம் எனும் அம்ருத த்தால் இனிக்கும் உன் அமுதான ”அஞ்சேல்” எனும் உன் வாக்கினால், குளிர்வித்து, என் செவியில் தேனாக அம்ருத கலசத்தால் நிரப்பி, என் துன்பம் தீர்ப்பாய். உன் கடைக்கண் பார்வையின் பாக்யம் பெற்ற பக்தர்கள் அதிர்ஷ்ட சாலிகள் புண்யம் செய்தவர்கள். .

कथं तरेयं भवसिन्धुमेतं का वा गतिर्मेकतमोऽस्त्युपायः । जानेन किञ्चित्कृपयाऽव मां प्रभो संसारदुःखक्षतिमातनुष्व ॥ 40॥

kathaṃ tarēyaṃ bhavasindhumētaṃ kā vā gatirmē katamō’styupāyaḥ । jānē na kiñchitkṛpayā’va māṃ prabhō saṃsāraduḥkhakṣatimātanuṣva ॥ 40॥

கத²ம் தரேயம் ப⁴வஸிந்து⁴மேதம் கா வா க³திர்மே கதமோऽஸ்த்யுபாய: । ஜாநே ந கிஞ்சித்க்ரு’பயாऽவ மாம் ப்ரபோ⁴ ஸம்ஸாரது:³க²க்ஷதிமாதநுஷ்வ ॥ 40

40. நான் எவ்வாறு இந்த சம்சார சாகரத்திலிருந்து கரையேறுவேன்? எல்லையில்லாமல், முடிவில்லாமல் இருக்கிறதே. எனக்கு என்ன வழி இருக்கிறது இதிலிருந்து மீள? எதை நான் செய்து அதிலிருந்து விலக இயலும்? பகவானே, கருணாசாகரா , நீயே கதி. ஈஸ்வரா. எனக்கு தயை புரியவேண்டுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *