ABEETHISTHAVAM SLOKAS 11-15 – J K SIVAN

ஸ்ரீ அபீtதி ஸ்தவம் ஸ்லோகங்கள் 11-15 – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்

11. अपार्थ इति निश्चितः प्रहरणादियोगस्तव स्वयं वदसि निर्भयस्तदपि रङ्ग पृथ्वीपते । (वहसि)
स्वरक्षणमिवाभवत्प्रणतरक्षणं तावकं यदात्थ परमार्थविन्नियतमन्तरात्मेति ते ॥ 11॥

apArtha iti nishchitaH praharaNAdiyogastava svayaM vadasi nirbhayastadapi ra~Nga pR^ithvIpate | (vahasi)
svarakShaNamivAbhavatpraNatarakShaNaM tAvakaM yadAttha paramArthavinniyatamantarAtmeti te || 11||

11-அபார்த்த இதி நிச்சித ப்ரஹரணாதி யோக தவ ஸ்வயம் வஹசி நிர்பய தத் அபி ரங்க ப்ருத்த்வீ தர
ஸ்வ ரஷணம் இவ அபவத் ப்ரணத ரஷணம் தாவகம் யத் ஆத்த பரமார்த்த வித் நியதம் அந்தராத்மா இதி தே

ரங்கநாதா, நீ சிஷ்ட பரிபாலனன், துஷ்ட நிக்ரஹன், காக்கும் கடவுள் அல்லவா? ஆகவே அடியார்களை , பெற்ற தாயினும் ஆயின செய்து, பாதுகாக்க, பலம் மிக்க ஆயுதங்களை தரித்தவனாக எந்நேரமும் தயார் நிலையில் இருப்பவன். அந்த ஆயுதங்களே உனக்குத் திவ்ய சர்வாலங்கார ஆபரணமாக ஜொலிக்கிறது.

12. लघिष्ठसुखसङ्गतैः स्वकृतकर्मनिर्वर्तितैः (सङ्गदैः) कलत्रसुतसोदरानुचरबन्धुसम्बन्धिभिः ।
धनप्रभृतिकैरपि प्रचुरभीतिभेदोत्तरै- र्न बिभ्रति धृतिं बिभो त्वदनुभूतिभोगार्थिनः ॥ 12॥ (प्रभो)

laghiShThasukhasa~NgataiH svakR^itakarmanirvartitaiH (sa~NgadaiH) kalatrasutasodarAnucharabandhusambandhibhiH |
dhanaprabhR^itikairapi prachurabhItibhedottarai\- rna bibhrati dhR^itiM bibho tvadanubhUtibhogArthinaH || 12|| (prabho)

12-லகிஷ்ட ஸூ க சங்கதை ஸ்வ க்ருத கர்ம நிவர்த்திதை களத்ர ஸூத சோதர அனுசர பந்து சம்பந்திபி
தன ப்ரபருதிகை அபி பிரசுர பீத பேத உத்தரை ந பிப்ரதி த்ருதம் பிரபோ த்வத் அநுபூதி போக அர்த்திந

கர்ம பலனை நாம் அனுபவிக்காமல் தப்பவே முடியாது. நாம் புலன்களின் அடிமை. அவை இழுக்கும் பக்கம் எல்லாம் எளிதில் சிக்கி சென்று, அர்த்தமற்ற, அநித்ய மான சுக போகங்களில் திளைத்து மகிழ்பவர்கள். ஞானிகள் அப்படி அல்ல. இத்தகைய சுகங்கள், போகங்களை வெறுத்து ஒதுக்கி, சம்சார பந்த சாகரத்தில் இருந்து வெளியேறி, சாசுவதமான அரங்கா,உன்னையே சதா சர்வகாலமும் பஜித்து போற்றி சரணடைந்து பயன் பெறுபவர்கள்.

13. न वक्तुमपि शक्यते नरकगर्भवासादिकं वपुश्च बहुधातुकं निपुणचिन्तने तादृशम् ।
त्रिविष्टपमुखं तथा तव पदस्य देदीप्यतः (तथा दिवि) किमत्र न भयास्पदं भवति रङ्गपृथ्वीपते ॥ 13॥

na vaktumapi shakyate narakagarbhavAsAdikaM vapushcha bahudhAtukaM nipuNachintane tAdR^isham |
triviShTapamukhaM tathA tava padasya dedIpyataH (tathA divi) kimatra na bhayAspadaM bhavati ra~NgapR^ithvIpate || 13||

13- ந வக்தும் அபி சக்யதே நரகே கர்ப்ப வாச அதிகம் வபு ச பஹூ தாதுகம் நிபுண சிந்தநே தாத்ருசம்
த்ரிவிஷ்டப முகம் ததா தவ பதஸ்ய தேதீ பத கிம் அத்ர ந பய ஆஸ்பதம் பவதி ரெங்க ப்ருத்த்வீ பதே –

பிறந்தது முதல் இறக்கும் வரை நாம் பயத்திலேயே வாழ்கிறோம். சே வாழ்க்கையா இது. எப்போதும் நரகவாசம், கர்ப்ப வாசம் உலக வாழ்க்கை, இது பற்றியே எண்ணம். எதை தொட்டாலும் அதில் நிறைந்திருப்பது பயம் தான். பகவானைப் பற்றி நினைப்பது ஒன்றே பயமே இல்லாதது.

14. भवन्ति मुखभेदतो भयनिदानमेव प्रभो शुभाशुभविकल्पिता जगति देशकालादयः ।
इति प्रचुरसाध्वसे मयि दयिष्यसे त्वं न चे- त्क इत्थमनुकम्पिता त्वदनुकम्पनीयश्च कः ॥ 14॥

bhavanti mukhabhedato bhayanidAnameva prabho shubhAshubhavikalpitA jagati deshakAlAdayaH |
iti prachurasAdhvase mayi dayiShyase tvaM na che\- tka itthamanukampitA tvadanukampanIyashcha kaH || 14||
|
14-பவந்தி முக பேதத பய நிதானம் ஏவ பிரபோ சுப அசுப விகல்பிதா ஜகதி தேச காலாதய
இதி பிரசுர சாத்வசே மயி தயிஷ்யசே த்வம் ந சேத் க இத்தம் அனுகம்பிதா த்வத் அனுகம்பநீய ச க

பகவானே, எங்கு நோக்கினும் வெளியேயும் உள்ளேயும் பயம் தான் நிறைந்திருக்கிறது. நீ ஒருவனே பயம் எனும் இருட்டிலிருந்து ஒளி காட்டி மீட்பவன்.உன் அருளை வேண்டுகிறேன். உன்னைவிட்டால் வேறு எவரும் எனக்கு இல்லை. நீயும் பக்தர்களையே விரும்பும் பக்தவத்சலன் இல்லையா?

सकृत्प्रपदनस्पृशामभयदाननित्यव्रती न च द्विरभिभाषसे त्वमिति विश्रुतः स्वोक्तितः ।
यथोक्तकरणं विदुस्तव तु यातुधानादयः कथं वितथमस्तु तत्कृपणसार्वभौमे मयि ॥ 15॥

15. sakR^itprapadanaspR^ishAmabhayadAnanityavratI na cha dvirabhibhAShase tvamiti vishrutaH svoktitaH |
yathoktakaraNaM vidustava tu yAtudhAnAdayaH kathaM vitathamastu tatkR^ipaNasArvabhaume mayi || 15|

15- சக்ருத் பிரபதன ஸ்ப்ருசாம் அபய தான நித்ய வ்ரதீ ந ச தவி அபி பாஷசே த்வம் இதி விஸ்ருத ஸ்வ உக்தித
யத் உக்த கரணம் விது தவ து யாதுதான ஆதய கதம் விததம் அஸ்து தத் க்ருபண சார்வ பௌமே மயி

அப்பனே, நீ ஒரே சொல்,ஒரே பாணம் என்று ஸ்ரீ ராமனாக அவதரித்து ரக்ஷித்தவன். சரணடைந்தார்க்கு ஒரே அடைக்கலம். அடியேன் விஷயத்திலும் நீ கருணை கூர்ந்து என்னை அடிமையாக ஏற்று காப்பாற்றவேண்டும் . பயம் போக்க வேண்டும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *