VIVEKA CHOODAMANI – SLOKAS 1-5 – J K SIVAN

விவேக சூடாமணி 1-5 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

सर्ववेदान्तसिद्धान्तगोचरं तमगोचरम् । गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम् ॥ 1॥
sarvavedāntasiddhāntagocaraṃ tamagocaram govindaṃ paramānandaṃ sadguruṃ praṇato’smyaham || 1 ||
சர்வ வேதாந்த சித்தாந்த கோசரம் தம கோசரம் கோவிந்தம் பரமானந்தம் ஸத் குரும் ப்ரணதோஸ்ம்யஹம்

என்னப்பனே, கோவிந்தா நீ எப்போதும் பரமானந்த ஸ்வரூபன். வேதாந்த சித்தாந்த முடிவானவன். நீ யே நல்ல குருநாதன் எனக்கு. உன்னை வணங்கி இதை சமர்ப்பிக்கிறேன். மனம் வாக்கு காயம் மூன்றாலும் சதா உன்னையன்றி நான் வேறு யாரை நினைப்பேன், தொழுவேன். வர்ணிக்க முடியாதவன் உன்னை நமஸ்கரித்து துவங்குகிறேன்.

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम्। आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः
मुक्तिर्नो शतजन्मकोटि सुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥१॥
jantūnāṃ narajanma durlabhamataḥ puṃstvaṃ tato vipratā tasmādvaidikadharmamārgaparatā vidvattvamasmātparam |
ātmānātmavivecanaṃ svanubhavo brahmātmanā saṃsthitiḥ muktirno śatajanmakoṭisukṛtaiḥ puṇyairvinā labhyate || 2 ||
ஐந்தூனாம் நரஜன்ம துர்லபமத: புஸ்த்வம் ததோ விப்ரதா தஸ்மாத்வைதிக தர்மம் மார்க்க பரதா வித்வத்வமஸ்மாத்பரம்
ஆத்மானாத்ம விவேசனம் ஸ்வனுபவோ ப்ரம்மாத்மனா ஸம்ஸ்திதி ; முக்தினோ சத ஜன்மகோடி சுக்ருதை ; புண்யைர் வினா லப்யதே:

அரிதான நமது இந்த மனிதப் பிறவி எடுக்க எப்போதோ நாம் பாக்கியம் செய்தவர்கள். அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது அல்லவா?. அப்படி மனிதனாக இருந்தும் அவர்களில் சாத்விக குணம் படைத்தவன் உன்னதமானவன். இதோடு அவனுக்கு பக்தியும் ஆன்மீக சிந்தனையும் வேறு சேர்ந்திருந்தால் வேதவழியில் நடப்பவனாக இருந்தால் அவன் கடவுளே தான். அவனுக்கு எது சாஸ்வதம் அநித்தியம் என்று தெரியும். ஆன்மசக்தி உணர்வு வேறு இருப்பதால் மோக்ஷபாதையில் செல்பவன். ஆயிரங்கோடி பிறவிகளில் கிடைக்கும் புண்யத்தை எளிதில் பெற்றவன்.

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ 3
durlabhaṃ trayamevaitaddevānugrahahetukam |manuṣyatvaṃ mumukṣutvaṃ mahāpuruṣasaṃśrayaḥ || 3 ||
துர்லபம் த்ரயமேவைத தேவானுக்கிரஹ ஹேதுகம் மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷ ஸம்ஸ்ரயா :3

ஐயா சாமி, ஒரு மூன்று முக்கிய அரிய விஷயங்கள் இறைவனருளால் நேர்ந்ததை தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று இந்த மானுட பிறவி, எளிதில் கிட்டாததை நாம் சுலபமாக நாம் வேண்டாமலேயே, கேட்காமலேயே, நினைக்கமாலேயே அடைந்துவிட்டோம். இது ரொம்ப ரொம்ப துர்லபமாச்சே என்கிறார் சங்கரர். இப்படி கிடைத்த மானுட ஜென்மத்தில் ரெண்டாவது நமக்கு வேண்டுவது முக்தியில் நாட்டம், மூன்றாவது மகான்களை போற்றி வணங்கி சேவை செய்வது. அது ஒரு அரும் பாக்யம். இதை மறவாமல் நினைவில் கொள்வோம்.

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम्। यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात्॥4॥
labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam | yastvātmamuktau na yateta mūḍhadhīḥ
sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4
லப் த்வா கதச்சிந் நரஜன்ம துர்லபம் தத்ராபி புஸ்த்வம் ஸ்ருதி பாரதர்சனம் யஸ்த்வாத்ம முக்தோ ன யதேத மூடதி
ஸ ஹ்யாத்மஹா ஸ்வம் விநிஹந்த்ய ஸத்கிரஹாத்

தம்பி, புரிந்துகொள், உனக்கு கிடைத்த இந்த மனுஷ பிறவி அரிதான அற்புதமான அதிர்ஷ்டம். கிடைத்த்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்களைத் தேடி பிடித்து கற்றுக்கொள். உன்னையே நீ அறிவாய் என்ற சிறந்த தத்துவத்தை துளியும் லக்ஷியம் பண்ணாமல் கோட்டை விடாமல் ஆத்ம விசாரத்தில் ஈடுபடு. கோட்டை விட்டவன் வடி கட்டிய முட்டாள். நிழலை நிஜமென்று தேடி ஓடாதே. தற்கொலை என்பது கயிற்றில் தொங்குவதோ, விஷத்தை குடிப்பதோ, நீரில் விழுந்து மிதப்பதோ அல்ல. அரிய மானுடப் பிறவி எடுத்தும் அதன் அருமை தெரியாமல், வேத சாஸ்திர ஞானம் இன்றி, ”தான்” யார் என்றே தெரியாமல் அறியாமல் நிழலை நிஜம் என்று தேடி ஓடி ஆடி மிருகமாக வாழ்வது. நிறைய பேர் நாம் மிருக வாழ்க்கையா, மெஷின் வாழ்க்கையா எதை வாழ்கிறோம் என்றே தெரியாதவர்கள். வேதம் சாஸ்திரம் ஞானம் இதற்கெல்லாம் அர்த்தம் கூட தெரியாத போது அதை எப்போது எப்படி அறிவது? அறியவேண்டும் என்ற எண்ணமாவது மனதில் உண்டாகுமா? அது போதுமே” என்கிறார் சங்கரர்

इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति । दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ 5 ॥
itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati | durlabhaṃ mānuṣaṃ dehaṃ prāpya tatrāpi pauruṣam || 5 ||
இத கோ ன்வஸ்தி மூடாத்மா யாசித்து ஸ்வார்த்தே ப்ரமாத்யதி ; துர்லபம் மானுஷம் தேகம் ப்ராப்ய தத்ராபி பௌருஷம் 5
மனிதனாக பிரததே அதிர்ஷ்டம். அதிலும் ஆணாக பிறந்தவன் ரொம்ப கொடுத்துவைத்தவன். அதிலும் அந்தணன் ரொம்ப விசேஷம். அதிலும் வேதம் தெரிந்தவன் புரிந்தவன். அதுவும் போதாது என்று ஆத்ம ஞானம் தேடுபவன் பாக்கியசாலி. இப்படி இல்லாமல் கிடைத்த மானுட தேஹத்தின் அருமை தெரியாதவன் சர்வ முட்டாள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *